தமிழ் நாடு அரசினால் நடைபெறும் உலக தமிழ் புலம்பெயர்ந்தோர் தினம் 2025 செல்வம் அடைக்கலநாதன் அவர்களுக்கு அழைப்பு

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் அவர்களுக்கு குடியுரிமை பெறாத தமிழர்களின் மறுவாழ்வு மற்றும் நலன் ஆணையர் அவர்களின் அழைப்பு.

உலக தமிழ் புலம்பெயர்ந்தோர் தினம் 2025

இம் மாதம் 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் தமிழ் நாடு அரசினால் சென்னையில் நடைபெறும் உலகத் தமிழ் புலம்பெயர்ந்தோர் தினத்திற்கு பங்குபற்றுவதற்கான அழைப்பிதழை குடியுரிமை பெறாதா தமிழர்களின் மறுவாழ்வு மற்றும் நலன் ஆணையர் அவர்கள் கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அவர்களுக்கு அனுப்பிவைத்துள்ளார்.

உலகெங்கிலும் வாழும் தமிழர்களின் பங்களிப்பைக் கொண்டாடவும், அங்கீகரிக்கவும், பாராட்டவும் மற்றும் அவர்களின் கலாச்சார அடையாளத்தை நிலைநிறுத்தவும் தமிழ்நாடு அரசு ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் 12 ஆம் திகதி “உலகத் தமிழ் புலம்பெயர்ந்தோர் தினத்தை” பல்வேறு நாடுகளில் உள்ள தமிழ் சங்கங்களின் ஒத்துழைப்புடன் கொண்டாட முடிவு செய்துள்ளது.

அந்த வகையில் முதலாவது உலகத் தமிழ் புலம்பெயர்ந்தோர் தினம் கடந்த 2022 ம் ஆண்டு நடத்தப்பட்டது. அவ்வாறே இம்முறையும் நான்காவது உலகத் தமிழ் புலம்பெயர்ந்தோர் தினம் இம்மாதம் 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் “எத்திசையும் தமிழணங்கே!” என்ற தொனிப்பொருளில் தமிழ்நாடு சென்னை வர்த்தக மையத்தில் நடைபெறவுள்ளது.

இவ்விரு நாட்களிலும் 60 நாடுகள் மற்றும் 17 மாநிலங்களில் இருந்து அதன் பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளதுடன் மேலும் இவ் உலகத் தமிழ் புலம்பெயர்ந்தோர் தின 2025 ம் ஆண்டிற்கான கூட்டத்தில் இணையுமாறு தமிழ்நாடு அரசு கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அவர்களை அன்புடன் அழைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

பயங்கரவாத தடைச்சட்டம் முழுமையாக ஒழிக்கப்பட வேண்டும் ;ரெலோ தலைவர் செல்வம்

வவுனியா பல்கலைக்கழக வளாகத்தை மன்னாரில் அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கான நிதியை வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்க வேண்டும்.

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கினால் புலம்பெயர் தமிழர்கள் இலங்கையில் முதலீடு செய்வார்கள் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (07-1-25) நடைபெற்ற மத்திய ஆண்டு நிதிநிலை அறிக்கை தொடர்பான சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

பயங்கரவாத தடைச்சட்டம் முழுமையாக ஒழிக்கப்பட வேண்டும் . அப்போதுதான் வெளிநாட்டிலுள்ள இலங்கை தமிழர்கள் இங்கு முதலீடு செய்வார்கள்.

கடந்த காலங்களில் முதலீடுகளை செய்தவர்கள் மீது பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்தும் சூழலே காணப்படுகிறது.

ஆகவே பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கி பொருளாதார மீட்சிக்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும்.

மன்னார் அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களில் வவுனியா பல்கலைக்கழக வளாகத்தினை மன்னாரில் அமைக்க அனுமதி வழங்கப்பட்டது.

இது தொடர்பில் ஏற்கனவே இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளன. எனவே இந்த வளாகத்தினை அமைக்க வரவு செலவுத்திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

முப்படைகளினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள மக்களின் நிலங்களை விடுவிப்பதாக ஜனாதிபதி வாக்குறுதியளித்துள்ளார்.

வன்னியில்தான் கூடுதலான மக்களின் நிலங்கள் முப்படைகளின் ஆக்கிரமிப்பில் உள்ளன. அவற்றை உடனடியாக விடுவிக்க வேண்டும். இதுதொடர்பில் அபிவிருத்திக்குக்குள்க் கூட்டத்தில் பேசியுள்ளோம்.

மன்னாரை எடுத்துக்கொண்டால் முள்ளிக்குளம், தலைமன்னார் பியர், மன்னார் போன்ற இடங்களை உதாரணமாக கூற முடியும்.

கிழக்கில் வாழைச்சேனையில் மக்களின் விவசாய காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன . இதனை பாராட்டுகின்றேன்

வன வளத் திணைக்களம், தொல்லியல் திணைக்களம் போன்றவையே மக்களின் காணிகளில் ஆதிக்கம் செலுத்துகின்றன.

இவர்களினால் தொடர்ந்தும் பிரச்சினைகள் ஏற்படுகின்றன . இந்தியாவிலுள்ள ஈழத்தமிழர்கள் இலங்கை திரும்ப விரும்பும் நிலையில் அவர்கள் கடவுச்சீட்டுக்களை பெறுவதில் சிக்கல் உள்ளது. எனவே அவர்களை கப்பலில் அழைத்து வரும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றார்.

Posted in Uncategorized

இனப்பிரச்சினை தீர்க்க அரசாங்கம் செயல்பட வேண்டும் நாங்களும் ஒத்துழைப்பு வழங்க தயாராக இருக்கிறோம் -ரெலோ

நாட்டில் ஏற்பட்டுள்ள இனப்பிரச்சினை தீர்க்கப்பட்டு, பயங்கரவாத தடைச்சட்டம் முற்றாக ஒழிக்கப்பட்டால் அநுர அரசாங்கம் பொருளாதார ரீதியில் அச்சப்பட வேண்டிய அவசியம் ஏற்படாது என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று (01) காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “புலம்பெயர்ந்துள்ள எம் உறவுகள், எம் நாட்டை உயர்த்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே, நாட்டில் ஏற்பட்டுள்ள இனப்பிரச்சினை தீர்க்கப்பட்டு பயங்கரவாத தடைச்சட்டம் முற்றாக ஒழிக்கப்பட்டால் வேண்டும்.

இந்திய – இலங்கை ஒப்பந்தம்

இதனை ஜனாதிபதி கருத்தில் கொள்ள வேண்டும். மேலும் 13ஆவது திருத்தச் சட்டம், இந்திய – இலங்கை ஒப்பந்தம் இவை அனைத்தையும் நடைமுறைப்படுத்தக் கூடிய வகையில், செயற்பாடுகள் அமைய வேண்டும்.

எனவே, இந்த புதிய ஆண்டில் எமது கிராம மக்கள் அனைத்து விதமான வசதிகளும் உள்ளது என்று கூறக்கூடிய வகையில் இந்த அரசாங்கம் செயல்பட வேண்டும். அதற்காக நாங்களும் ஒத்துழைப்பு வழங்க தயாராக இருக்கிறோம்.

இந்த வருடத்தில் பின்தங்கிய கிராமங்கள் முழுமையாக வளர்ச்சி பெற வேண்டும். அதற்கான செயற்பாடுகளை இந்த அரசாங்கம் ஏற்படுத்த வேண்டும். பிரிந்து செயல்படுகின்ற தமிழ் அரசியல் கட்சிகள் ஒன்றிணைய வேண்டும்.

நாங்கள் ஒற்றுமையாக செயல்படவில்லை என்றால் நம் மண்ணையும் மக்களையும் உதாசீனம் செய்யும் கட்சிகளாகவே நாம் இருப்போம். எதிர்வரும் காலங்களில் நாங்கள் ஒற்றுமையாக இல்லை என்றால் தேசியக்கட்சிகள் இல்லாது போகின்ற துர்பாக்கிய நிலை காணப்படும்.

எனவே, எதிர்வருகின்ற தேர்தல்களில் நாங்கள் ஒற்றுமையாக செயல்படவில்லை என்றால் தென்பகுதியில் ஏற்பட்டுள்ள அநுரவின் அழை வடக்கு கிழக்கிலும் ஏற்படும். இதனால் பாதிப்புகள் எமக்கு ஏற்படுத்தும் என்பது உண்மை.

மக்களின் எதிர்பார்ப்பு தமிழ் கட்சிகள் அனைத்தும் ஒற்றுமையாக செயல் படுங்கள் என்பதே. அந்த ஒற்றுமை இல்லை என்றால் நாங்கள் காணாமல் போய் விடுவோம்” என கூறியுள்ளார்.

முன்னாள் இந்திய பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங் அவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள் -ரெலோ

முன்னை நாள் இந்தியப் பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங் அவர்கள் 26/12/2024 வியாழக்கிழமை அன்று தனது 92 வது வயதில் காலமானார்.

அமரர் மன்மோகசிங் அவர்கள் பிரதமராக இருந்த காலத்தில் ஈழத் தமிழர்கள் விடயத்தில் மிகவும் காத்திரமான பங்களிப்பைச் செய்திருந்தமை மறக்கமுடியாததாகும்.

கடந்த 2011 ம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடனான அறிறிக்கையில் 13 ம் திருத்தத்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கும் அதில் இருந்தவாறே தொடர்ந்து அதனை கட்டியெழுப்பி எமது தாயகத்தில் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு முறமையும் ஏற்படுத்தப்படும் என்ற வாக்குறுதியைப் பெற்றிருந்தவராவார்.

அமரர் மன்மோகசிங் அவர்கள் கடந்த காலங்களில் ஆட்சியில் பிரதமராக இல்லாத சந்தர்ப்பத்திலும் தற்போதைய இந்திய பிரதமர் மோடியைச் சந்திக்கச் சென்ற போது நாம் தமிழ்தேசியம் சார்ந்த கட்சிகளின் சார்பில் மன்மோகன் சிங் அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்து நன்றி கூறி உரையாடியிருந்ததை நினைவுபடுத்த விரும்புகிறேன்.

இந்தியாவின் வளர்ச்சிக்கு குறிப்பாக பொருளாதாரத்தில் இந்தியா அடைந்த வளர்ச்சிக்கு காரணகர்த்தாவாக இருந்த முன்னாள் பிரதமர் மன்மோகசிங் அவர்களது மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அஞ்சலியையும் தெரிவித்துக்கொள்ளுகிறேன்.

அ.அடைக்கலநாதன்.
வன்னி பாராளுமன்ற உறுப்பினர்.
தலைவர்.
தமிழ் ஈழ விடுதலை இயக்கம் ரெலோ.

Posted in Uncategorized

இந்தியா காசி அமைந்துள்ள “centre for sanatan research சட்டத்தரணி துஷ்யந்தன் திருக்கோணேஸ்வர ஆலய ராஜகோபுர கட்டுமானம்தொல்லியல் துறையினரின் அத்து மீறல் தொடர்பாக வெளிப்படுத்தி இருந்தார்

இந்தியா, உத்திரபிரதேசம், வாரணாசியில் (காசி) அமைந்துள்ள “centre for sanatan research “ அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வுக்கு “ இலங்கையில் இந்து சமயம் “ ( HINDUSIUM IN SRILANKA) எனும் தலைப்பில் ரெலோ கட்சிசார்பில் கடந்த தேர்தலில் போட்டியிட்ட சட்டத்தரணி துஷ்யந்தன் ஆய்வினை சமர்ப்பித்து இருந்தார் ,அதன் பொருட்டு 30/11/2024 – 01/12/2024 இடம்பெற்ற மாநாட்டில் பங்குபற்றுமாறு அவருக்கும் அவரது குழுவினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.

இந்தியா, பங்காளதேஷ், பாக்கிஸ்தான், நேபாளம் ஆகிய நாடுகளில் உள்ள புகழ் பெற்ற இந்து ஆலய நிர்வாகிகள், இந்திய அரசின் முக்கிய பிரமுகர்கள், மற்றும் பத்திரிகையாளர்கள் உடனான மாநாட்டிலும் பங்குபற்றியதோடு

அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பிலும் பங்குபற்றி இலங்கையின் இந்து ஆலயங்களின் மீதான தொல்லியல் துறையினரின் அத்து மீறல் மற்றும் உரிய அரச திணைக்களங்களின் பாராமுகம் ஆகியன தொடர்பாக வெளிப்படுத்தியதோடு

எமது திருக்கோணேஸ்வர ஆலய சூழலில் அத்துமீறி அமைக்கப்பட்ட கடைகளை அகற்றுதல் தொடர்பிலும் ராஜகோபுர கட்டுமானம், மற்றும் தொல்லியல் துறையின் அனுமதி பெறல் போன்றவற்றில் இந்திய அரசானது காத்திரமான பங்களிப்பினை வழங்க வேண்டும் என்பதையும் இந்திய வடமொழி ஊடகங்களுக்கு தெரிவித்து இருந்தார்.

Posted in Uncategorized

பிறந்திருக்கும்  பாலக இயேசு அனைவருக்கும் சமாதானத்தையும், மகிழ்வையும் அளிப்பாராக.

பலருடைய மீட்புக்காக உலகில் மனித அவதாரம் எடுத்த இயேசுவின் அன்பை நினைக்கும் இவ் கிறிஸ்துபிறப்பு காலத்தில் நாம் அயலவர்களிடத்தில், மற்றும் மனித உறவுகளில் நம்பிக்கையையும், மன்னிப்பையும், சமாதானத்தையும் ஏற்படுத்துவதுடன் ,பலரின் மீட்புக்காகவும் நல்வாழ்வுக்காகவும் இறைமகன் இயேசு மனித அவதாரம் கொண்டு தனது மக்களை தேடி வந்தது போல நாமும் துன்புறும் நிலையில் உள்ள மனிதர்களை , அவர்களுடைய இக்கட்டான சூழ்நிலைகளில் தேடிச் செல்லவேண்டியவர்களாக இருக்கவேண்டும்.

மேலும் நமது அயலவர்கள் , குடும்பங்கள் மற்றும் சமூகங்களுக்குள் அன்புப் பிணைப்பை ஏற்படுத்தி எமக்குள்ள உறவுகளை வலுப்படுத்துவதுடன், எமக்கிடையே நாம் கொண்டிருக்கின்ற கசப்பான காழ்ப்புணர்வுகளை மறந்து மன்னிப்பின் மக்களாகி பாலக இயேசுவின் பிறப்பின் நற்செய்தி விழுமியங்களை வாழ்வில் கடைப்பிடித்து உலக மாயைக்குள் சிக்கி வன்முறைக்குள் வாழும் வாழ்வை வெறுத்து ஒளியின் மக்களாக வாழ பிறந்திருக்கும் பாலக இயேசு அருள்புரிய பிராத்திப்பதுடன் அனைத்து உறவுகளுக்கும் எனது கிறிஸ்துபிறப்பு நல் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்ளுகின்றேன்.

அ.அடைக்கலநாதன்.
வன்னி பாராளுமன்ற உறுப்பினர்.
தலைவர்.
தமிழ் ஈழ விடுதலை இயக்கம் ரெலோ.

ஈழமக்கள் மீதும் ஈழ விடுதலைமீதும் தனியாத ஈர்ப்புக்கொண்டு இதய தெய்வமாய் வாழ்ந்த எம் ஜி ஆர் அவர்கள் இறந்த  தினம் இன்று

எமது ஈழ தமிழ் மக்கள் மீதும் ,ஈழத்தின் மீதும் மிகுந்த ஈர்ப்பு கொண்டவராக மக்கள் மனதில் இதய தெய்வமாக போற்றப்படுகின்றவராக இன்றும் நினைவில் கொள்ளப்படுபவர் தமிழ்நாட்டின் மறைந்த முதல்வர் மக்கள் திலகம் எம் ஜி ஆர் அவர்கள் என்றால் அது மிகையாகாது.

ஈழமக்களின் மீது ஈழத்தின் மீதும் அவர் கொண்டிருந்த பற்றின் நிமித்தமாக பல்வேறுபட்ட உதவிகளை ஆற்றியிருந்தார். எமது தாயக மக்களுக்கு அவர்கள் மேல் சிங்கள அரசினால் கட்டவிழ்த்துவிட்ட ஒவ்வொரு இனக்கலவரங்களின் போதும் மக்கள் தமிழ்நாட்டில் தஞ்சம் கோரிய நிலையில் எமது மக்களுக்கு வாழ்வாதார உதவிகளை வழங்கிய வள்ளல் எமது எம் ஜி ஆர் அவர்கள்.

இந்திய மத்திய அரசாங்கத்திடமும், இலங்கையை ஆண்ட ஆட்சியாளர்களிடத்திலும் ஈழ மக்கள் சார்பான தொடர்ச்சியான கோரிக்கைகளை முன்னிறுத்தி மக்கள் மீது தொடுக்கப்படும் அத்துமீறல்களுக்கு எதிராகவும், இராணுவ நடவடிக்கைகளுக்கு எதிராகவும் குரல் கொடுத்தவர் எமது மக்கள் திலகம் எம் ஜி ஆர் அவர்களாவார்.

மக்கள் திலகம் எம் ஜி ஆர் அவர்கள் இறந்து 37 வருடங்கள் நிறைவுற்றாலூம் அவர்களின் இறந்ததினமாகிய இன்று அவர் ஈழ மக்கள் மீதும் ஈழ விடுதலைமீதும் கொண்டிருந்த அளவுகடந்த பற்றினை மீண்டும் நினைவில் கொள்வது இன்றைய நாளில் பொருத்தமானதே.

அ.அடைக்கலநாதன்.
வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்
தலைவர்
தமிழ் ஈழ விடுதலை இயக்கம் ரெலோ

Posted in Uncategorized

புதுடெல்லியில் நடைபெறும் தெற்காசிய பிராந்திய பாராளுமன்ற பொதுக்குழு ஒன்றுகூடலில் ரெலோ தலைவர் செல்வம்

தெற்காசிய பிராந்திய பாராளுமன்ற பொதுக்குழு ஒன்றுகூடலில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ செல்வம் அடைக்கலநாதன் அவர்கள் பங்கேற்பு.

எரிசக்தி ஒத்துழைப்புக்கான தெற்காசிய பிராந்தியத்தின் பாராளுமன்ற முதலாவது பொதுக்குழு ஒன்றுகூடல் இன்றைய தினம் 18/12/2024 புதன்கிழமை மாலை 05:00 மணி முதல் 06:00 மணி வரை ஹோட்டல் லீ மெரிடியன் புதுடெல்லி இந்தியாவில் நடைபெறுகிறது .

மேற்படி பொதுக்குழு ஒன்றுகூடலில் வன்னி பாராளுமன்ற உறுப்பினரும் ,தமிழ் ஈழ விடுதலை இயக்கம் ரெலோ தலைவருமான கெளரவ செல்வம் அடைக்கலநாதன் அவர்கள் பங்குபற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தீர்வு விடயத்தில் தேர்தல் வெற்றிகளை பார்க்க முடியாது: சுமந்திரனுக்கு பதிலளித்த செல்வம் அடைக்கலநாதன்

இனப்பிரச்சினை தீர்வு சார்ந்த விடயத்தில் ஒரு கட்சி எடுக்கும் முடிவுக்கு மற்றைய கட்சிகள் செல்ல வேண்டும் என்பது சாத்தியமற்ற செயல்.

ஒரே மேசையில் இருந்து எல்லோரும் கலந்துரையாடி இந்த புதிய அரசியல் சாசனத்திலே தமிழ் தரப்பிலே நாங்கள் என்ன கோரிக்கையை வைக்கலாம் என்பதை முடிவு செய்கின்ற கடமைப்பாடு எங்களிடம் இருக்கிறது.

ஆகவே தமிழரசு கட்சி கூடுதலான ஆசனங்களை பெற்றுவிட்டோம் என்பதற்காக வேண்டி அவர்கள் எடுக்கின்ற முடிவுக்கு மற்றவர்கள் ஒத்து வரவேண்டும் என்பது முறையற்ற செயல். அந்த வகையிலே ஒரு மேசையில் இருந்து நாங்கள் பேசி இந்த விடயங்களை கையாளுகின்ற போதுதான் ஒட்டுமொத்தமான ஒரு ஒற்றுமையான ஒற்றமையோடு கூடிய ஒரு தீர்வுத்திட்டத்தை வைக்கின்றபோது தான் எங்களுடைய மக்களும் அதை ஏற்றுக்கொள்வார்கள் கூடுதலாக விரும்புவார்கள் .

அதைவிட தென்னிலங்கையிலே இப்பொழுது இருக்கிற புதிய அரசாங்கமும் , ஜனாதிபதி அவர்களும் ஒரு பலமாக நாங்கள் ஒற்றுமையாகிவிட்டோம் என்ற ஒரு விடயத்திலே அவர்களும் இதை பரிசீலிக்கின்ற நிலையை உருவாக்க முடியும். ஆகவே நாங்கள் செய்வோம் நீங்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றல்லாம் சொல்வது அது ஒரு சாத்தியமற்ற ஒரு விடயமாகத்தான் நான் பார்க்கிறேன்.

சுமத்திரன் அவர்களுக்கு நன்றாக தெரியும் எல்லோரையும் இதிலே இணைத்து இந்த புதிய அரசியல் சாசனத்திலே எங்களுடைய தரப்பு சார்பாக நாங்கள் கொடுக்கின்ற விடயங்களை ஒற்றுமையாக கொடுக்கின்ற ஒரு சூழலை உருவாக்குவது அவரும் அதற்கு ஒத்தசவருவார் என்று நினைக்கின்றேன், தமிழரசு கட்சியும் அதற்கு ஒத்துவரும் என்று நான் நினைக்கின்றேன்.

ஆகவே நாங்கள் ஒன்றாக ஒரு மேசையில் இருந்து பொதுவான ஒரு தீர்வுத்திட்டத்தை நாங்கள் கொடுக்கின்ற போதுதான் அது வலுவாக பலமாக இருக்கும். இல்லை தனித்தனியாக கொடுத்தோம் என்றால் புதிய அரசாங்கம், புதிய ஜனாதபதி அதை வைத்துக்கொண்டு அரசியல் நடாத்துகின்ற வாய்ப்புகளை உருவாக்க கூடும். அந்தவகையிலே நாங்கள் பலமாக, நாங்கள் பிரிந்து சென்றதால் இந்த தேர்தலிலே பல பாடங்களை கற்றிருக்கிறோம்.

ஆகவே இந்த இனப்பிரச்சனை தீர்வு விடயத்தில் நாங்கள் ஒற்றுமையாக ஒரு பாரிய பிரச்சனை எங்களுடைய இனப்பிரச்சனை அது தீர்ப்பதற்கான ஒரு திட்டத்தை நாங்கள் வரயவேண்டுமாக இருந்தால் ஒரு ஒற்றுமையான ஒரே மேசையிலே இருந்து ஒற்றுமையாக நாங்கள் விவாதித்து ஒற்றுமையாக ஒரு தீர்வுத்திட்டத்தை புதிய அரசாங்கத்திடம் கொடுப்பதன் ஊடாகத்தான் எங்களுடைய மக்கள் அதை பெரீய பலமாக கருதுவார்கள், அதை ஏற்றுக்கொள்வார்கள். அரசாங்கமும் இந்த விடயத்திலே எல்லோரும் ஒன்றாக கொடுத்த அந்த தீர்வு திட்டம் சம்மந்தமான விடயத்திலே அக்கறை காட்டுவதற்கான சந்தர்ப்பங்களை உருவாக்கலாம், உருவாக்க வேண்டும் என்பதே எங்களுடைய நோக்கமாக இருக்க வேண்டும்.

ஆகவே இந்த இனப்பிரச்சனை பல வருடங்களாக இன்றைக்கு புரையோடிப்போய் இருக்கிற சூழலிலே தீர்வு , இனப்பிரச்சனை சார்ந்த விடயங்களில் இன்னும் எங்களுடைய மக்கள் சார்ந்த, எமது நிலம் சார்ந்த, காணாமல் ஆக்கப்பட்டோர் சார்ந்த, மனித உரிமை மீறல்கள் சார்ந்த, இப்படியான ஐ.நா. தீர்மானங்கள் எல்லாம் இன்றைக்கு எங்களுடைய பிரச்சனையிலே அக்கறை கொண்டிருக்கிற போது அது தீர்வில்லாத ஒரு சூழலிலே நாங்கள் கொடுக்கின்ற ஒற்றுமையான பலத்தோடு கொடுக்கின்ற அந்த தீர்வு திட்டம் என்பதுதான் வலுவாக இருக்கும்.

இலங்கை அரசாங்கம் அதை தட்டிக்களிக்க முடியாத ஒரு சூழலை நாங்கள் உருவாக்கலாம் என்று நான் கருதுகின்றேன்.

அ.அடைக்கலநாதன்.
வன்னி பாராளுமன்ற உறுப்பினர்.
தலைவர்
தமிழ் ஈழ விடுதலை இயக்கம் ரெலோ.

தமிழ் ஈழ விடுதலை இயக்கம் ரெலோ – தமிழ் தேசிய மக்கள் முன்னணி இடையே விசேட கலந்துரையாடல்

தமிழ் ஈழ விடுதலை இயக்கம் ரெலோ – தமிழ் தேசிய மக்கள் முன்னணி இடையே விசேட கலந்துரையாடல்.

தமிழ் ஈழ விடுதலை இயக்கம் ரெலோ தலைவர் கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர் கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களுக்குமிடையிலான விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

மேற்படி சந்திப்பின் போது தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் கெளரவ முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா. கஜேந்திரன் அவர்களும் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.