எதிர்வரும் மாகாண சபை தேர்தலில் தனி கட்சியாக போட்டியிட திட்டமிட்டுள்ளதாக ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் பேராசிரியர் ரோஹண லக்ஷமன் பியதாச தெரிவித்தார்.
ஸ்ரீ.ல.சு.க.வை வலுப்படுத்த கிராம மட்டத்தில் ஏற்கனவே பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது அவர் இதனை தெரிவித்தார்.
“ஒரு கட்சியாக எங்களுக்கு முக்கிய தேவை அதிகாரத்தைக் கைப்பற்றுவதாகும். மாகாண சபைத் தேர்தல் வரும்போது, நாங்கள் ஒரு கட்சியாக போட்டியிட தயாராக இருக்கிறோம்.