அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உலகளாவிய ஊழல் எதிர்ப்பு ஒருங்கிணைப்பாளர் ரிச்சர்ட் நெபிவ் இம் மாதம் 8 ஆம் திகதி முதல் 9 ஆம் திகதி வரை கொழும்பிற்கு விஜயம் செய்யவுள்ளதாக கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் அறிவித்துள்ளது.
.அவருடன் வருகை தரும் தூதுக்குழுவில் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் ஊழல் எதிர்ப்பு ஆய்வாளர் டிலான் ஐகென்ஸ் அடங்குவார்.
கொழும்பில் தங்கியிருக்கும் காலத்தில் அரசாங்கம், எதிர்க்கட்சி, சர்வதேச நாணய நிதியம், தனியார் துறை மற்றும் சிவில் சமூகம் ஆகியவற்றைச் சேர்ந்த பல்வேறு தரப்பினர்களையும் நெபிவ் சந்திப்பார்.
ஊழலை ஒழிப்பதற்கான முயற்சிகள், மற்றும் நாட்டிலுள்ள அரசியல் மற்றும் பொருளாதார நிலைமைகள் மற்றும் எதிர்கால ஒத்துழைப்பிற்கான சாத்தியக்கூறுகள் என்பன தொடர்பில் ஆராய்வதே அவரது வருகையின் நோக்கமாகும்.