எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத்தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் தராசு சின்னத்தில் மலையக அரசியல் அரங்கம் களமிறங்கவுள்ளதாக அரங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் திலகராஜா தெரிவித்துள்ளார்.
எண்பதாண்டு காலமாக உள்ளுராட்சியில் நீதி மறுக்கப்பட்டிருந்த மலையகப் பெருந்தோட்டத்துறை மக்களுக்கு பிரதேச சபைச் சட்டத்திருத்தின் ஊடாக வென்று எடுத்த நீதியை நிலைநாட்டவும் நுவரெலியா மாவட்டத்தில் வென்றெடுத்த புதிய பிரதேச சபைகளிலாவது திருத்தப்பட்ட பிரதேச சபைச் சட்டத்தை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவும் மக்களுக்கு நீதி வேண்டி தராசு சின்னத்தில் போட்டியிட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.