அரசியலில் ஈடுபடும் எண்ணம் தனது மகனுக்கு இல்லை – முன்னாள் ஜனாதிபதி

தனது மகன் அரசியலில் ஈடுபடவுள்ளதாக ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் வெளியாகும் செய்திகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பாக அறிக்கை ஒன்றினை வெளியிட்ட அவர், இவ்வாறான தவறான செய்திகள் மூலம் மக்கள் ஏமாற்றமடைய வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்.

அரசியலில் நுழைய விமுக்தி குமாரதுங்கவுக்கு ஆர்வமோ விருப்பமோ இல்லை என்றும் பண்டாரநாயக்கவின் தியாகங்களுக்கு உரிமை கோரும் எண்ணம் அவருக்கு இல்லை என்றும் சந்திரிக்கா குமாரதுங்க சுட்டிக்காட்டினார்.

இதேவேளை நாட்டுக்கு சேவை செய்யக்கூடிய அமைப்பு அரசியல் மட்டுமல்ல என்றும் அவர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

ஜெனிவா கூட்டத் தொடருக்கு முன்னர் பிரிட்டன் தூதுவருடன் பேச்சு நடத்த இலங்கை அரசு முடிவு

இலங்கையின் மனித உரிமை மீறல்கள் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட உயர்நீதிமன்ற நீதியரசர் நவாஸ் தலைமையில் விசேட ஜனாதிபதி ஆணைக் குழுவின் இடைக்கால அறிக்கையின் காரணிகளை ஜெனிவாக் கூட்டத் தொடருக்கு முன்னர் பிரிட்டன் தூதுவருக்குத் தெளிவுபடுத்த அரசு தயாராகியுள்ளது என வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

வடக்கு, கிழக்கு பகுதிகளில் உள்ள மக்களுக்கு அவர்களின் சொந்தக் காணிகளை மீள வழங்குவது உள்ளிட்ட மனிதாபிமான நடவடிக்கைகள் முடிந்தளவு முன்னெடுக்கப்பட்டுள்ளன எனவும், இவை தொடர்பில் சர்வதேச சமூகத்தைத் தெளிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் வெளிநாட்டு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் சுட்டிக் காட்டப்பட்டது.

வடக்கு, கிழக்கு பகுதிகளில் உள்ள மக்களுக்கு அவர்களின் சொந்தக் காணிகளை மீள வழங்குவது உள்ளிட்ட நடவடிக்கைகள் முடிந்தளவு முன்னெடுக்கப் பட்டிருக்கின்றன எனவும், இவை தொடர்பில் சர்வதேச சமூகத்தைத் தெளிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் வெளிநாட்டு அமைச்சின் செயலாளர் ஜயநாத் கொலம்பகே குறிப்பிட்டார்.

வடக்கு, கிழக்கில் முன்னெடுக்கும் அபிவிருத்திச் செயற்பாடுகள், காணி விடுவிப்புகள் மற்றும் இது தொடர்பில் கடந்த ஜெனிவா மனித உரிமைகள் சபையின் கூட்டத் தொடரில் இலங்கையின் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது எனவும் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன மேற்படி கூட்டத்தில் தெரிவித்தார்.

“உயர்நீதிமன்ற நீதியரசர் நவாஸ் தலைமையில் விசேட ஜனாதிபதி ஆணைக் குழுவொன்று அமைக்கப்பட்டு அதன் ஊடாக சாட்சிகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. இதன் இடைக்கால அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அதில் அவசியமான காரணிகள் உள்ளடக்கப்பட்டுள்ளன. இதே காரணிகளை ஜெனிவாக் கூட்டத் தொடருக்கு முன்னர் இலங்கையிலுள்ள பிரிட்டன் தூதுவருக்குத் தெளிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” எனவும் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன மேலும் கூறினார்

ஸ்ரீசபாரத்தினத்தினை விடுதலைப்புலிகளே கொன்றனர் வடுக்கள் எமது மனங்களில் இருந்தாலும், தேசத்தின் விடுதலைக்காக இணைந்து பணியாற்றினோம்

எமது ரெலோ அமைப்பின் தலைவர் சிறிசபாரத்தினம் அவர்களை விடுதலைப் புலிகளே கொன்றார்கள். வடுக்கள் மனதில் இருந்தாலும் கூட தேசத்தின் விடுதலைக்காக இணைந்து பணியாற்றினோம் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் இன்று (07) இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் பின் ஊடகவியலாளர் ஒருவர், ரெலோ அமைப்பின் தலைவரை கொன்றது யார் என்பதை வெளிபடுத்த முடியுமா என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் பாராளுமன்றில் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பில் உங்கள் கருத்து என்ன என கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், நாங்கள் ஏற்கனவே பகிரங்கமாகவே சொல்லி வந்திருக்கின்றோம். அது ஒரு சகோதரப் படுகொலை. விடுதலைப் புலிகள் தான் எமது ரெலோ இயக்கத்தின் தலைவர் சிறி சபாரத்தினம் அவர்களை கொலை செய்தார்கள்.

இது உலகறிந்த உண்மை. இதில் பாராளுமன்ற உறுப்பினர் திலீபன் அவர்களுக்கு புதிதாக சொல்ல வேண்டிய தேவை ஒன்றுமில்லை. நாங்கள் ஏற்கனவே அதனை சொல்லியிருக்கின்றோம். விடுதலைப் புலிகள் இருக்கின்ற போது கூட நாங்கள் வெளிப்படையாக சொல்லியிருக்கின்றோம். உண்மையை நாம் மறக்க முடியாது.

இதனை நாம் வெட்ட வெளிச்சமாக சொல்லிக் கொள்கின்றோம். அப்படி இருந்தும், வடுக்கள் எமது மனங்களில் இருந்தாலும் கூட இந்த தேசத்தின் விடுதலைக்காக நாங்கள் விடுதலைப் புலிகளுடன் இணைந்து பணியாற்றியும் இருந்தோம் எனத் தெரிவித்தார்.

Posted in Uncategorized

முன்னால் போராளிகளே சரியான பாதைநோக்கி பயணியுங்கள் யாழில் அறிவுரை கூறினார் இராணுவத்தளபதி!

சரியான பாதை நோக்கி நல்வழியில் பயணியுங்கள் என முன்னாள் போராளிகளுக்கு இராணுவத்தளபதிசவேந்திர சில்வா யாழில் அறிவுரை வழங்கியுள்ளார்.

இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் முன்னாள் போராளிகளுக்கு உதவித்திட்டம் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்ட பின் முன்னாள் போராளிகளை சந்தித்து கலந்துரையாடும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அண்மையில் அரசாங்கத்தினால் பொது மன்னிப்பின் அடிப்படையில் நீண்ட காலம் தடுத்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் போராளிகள் சிலர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள்
அவர்கள் இன்று சமூகத்தில் நல்லவர்களாக இருக்க வேண்டும் அவ்வாறு இருந்தால்தான் சிறையில் இருக்கும் ஏனையோரையும் விடுவிக்க கூடியதாக இருக்கும் உங்கள் விடுதலையைப் பற்றி பார்க்கிறார்கள், அவதானிக்கிறார்கள்

எனவே நீங்கள் சமூகத்தில் நல்ல பிரஜையாக செயற்பட வேண்டும் அதாவது முன்னரைப் போல பிழையான வழிகளில் செல்லாது சரியான பாதை நோக்கி செல்லுங்கள் நல்லதை சிந்தியுங்கள். அவார பிழையான பாதையில் சென்றால் உங்கள் எதிர்காலம் பூச்சியயமாகி விடும் எனவே நல்ல விஷயங்கள் பற்றி சிந்தித்து சமூகத்தில் உள்ளவர்கள் உங்களைப் பற்றி நல்லதாக சொல்லும் அளவுக்கு உங்களது வாழ்க்கையை கொண்டு செல்லுங்கள்.

ராணுவம் என்ற ரீதியில் நாங்கள் முன்னாள் போராளிகளாகிய உங்களுக்கு எங்களாலான உதவிகளை செய்ய தயாராக இருக்கின்றோம் அதாவது வீடு கட்டித் தருவது என்றாலும் சரி வேறு ஏதாவது உதவி என்றாலும் நாங்கள் அதை செய்யத் தயாராக உள்ளோம் ஏனென்றால் அது எமது கடமையாகும்

குறிப்பாக நீங்கள் முன்னாள் போராளிகள் நீங்கள் எமக்கு எதிராகத்தான் சண்டையிட்டீர்கள் நாங்கள் அதையெல்லாம் மறந்து ராணுவத்தினர் ஆகிய நாம் உங்களுக்கு உதவி செய்ய தயாராக இருக்கின்றோம்

அதாவது உங்களை எமது சகோதரர்களாக பார்க்கின்றோம் எனவே நீங்களும் அதேபோல் நேரான பாதையில் பயணியுங்கள் உங்களது விடுதலை அனைவராலும் பார்க்கப்படுகின்ற விடயம் ஆகும் எனவே நீங்கள் சமூகத்தில் நல்ல பிரஜையாக இருந்து செயற்படுவதன் மூலம் ஏனைய உங்களைப் போன்றவர்களையும் விடுவிப்பதற்கு ஏற்ற சூழ்நிலை உருவாகும் எனவும் தெரிவித்தார்.

வடக்கு மாகாண கல்வி திணைக்களத்தின் கணினிக் கொள்வனவில் 2 கோடியே 76 இலட்சம் முறைகேடு?

வடக்கு மாகாண கல்வி திணைக்களத்தினால் 240 கணினிகள் கொள்வனவு செய்வதற்கு மேற்கொள்ளப்பட்ட நடைமுறைகளில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக கூறுவிலை கோரல் வழங்கிய நிறுவனம் ஒன்று வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர்.

குறித்த கடிதத்தின் பிரதிகள் வடக்கு மாகாண ஆளுநர், பிரதம செயலாளர் உள்ளிட்ட ஐவருக்கு பிரதியிடப்பட்டுள்ளது. குறித்த கடிதத்தில் வடக்கு மாகாண கல்வித்திணைக்களம் கோரிய கூறு விலை பிரகாரம் 240 கணினிகள் கொள்வனவு செய்யும் கோரிக்கையினை நூறு வீதம் தமது நிறுவனம் நிறைவு செய்துள்ளதோடு, ஏனையவர்களை விட விலையும் தங்களுடையதே குறைவானதாகவும் இருந்ததாகவும். ஆனால் 16.07.2021 திகதிய கொள்வனவு கடிதத்திற்கு அமைவாக தங்களின் விலையினை விட ஒரு கணினிக்கு 11500.00 ரூபா அதிக விலையினை கொண்ட வழங்குனரிடம் கொள்வனவு செய்ய கொள்வனவு கட்டளை அனுப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் படி 11500 x 240 = 2760000.00 ரூபா அதிக விலை செலுத்தப்படவுள்ளதாகவும் அக் கடிதத்தில் சுட்டிக்காட்டுப்பட்டுள்ளது. எனவே இது தொடர்பில் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளருடன் ஒருவரை தொடர்பு கொண்டு வினவிய போது, குறித்த விடயம் தொடர்பில் எமக்கும் கடிதம் கிடைப்பெற்றது. எனவே இது தொடர்பான விளக்கம் ஆளுநருக்கு அனுப்பட்டுள்ளது. 240 கணினிகள் கொள்வனவு விடயத்தில் முறைப்பாடு செய்தவரிடம் கணினிகள் கொள்வனவு செய்வதற்கு பொருத்தமற்றவர் என தொழிநுட்ப குழு பரிந்துரைத்துள்ளது. எனவே தொழிநுட்ப குழுவின் பரிந்துரைக்கு அமைவாகவே மேற்கொள்வனவு இடம்பெற்றது எனத் தெரிவித்தார்.

Posted in Uncategorized

கொழும்பில் ‘குண்டு’ புரளி பற்றி பொலிசார் தீவிர விசாரணை

கொழும்பு நகரில், குறிப்பாக இரு நட்சத்திர ஹோட்டல்கள் மற்றும் வெள்ளவத்தை, பம்பலபிட்டி, தெஹிவளை, நுகேகொட உட்பட்ட பகுதிகளில் குண்டு வெடிப்பு இடம்பெறவுள்ளதாக சமூக வலைத்தளம் ஊடாக நேற்று மாலை பரவிய வதந்தி தொடர்பில் பொலிசார் தீவிர விசாரணை நடாத்தி வருவதாக தெரிவிக்கின்றனர்.

ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் பரப்பப்பட்ட சமூக வலைத்தள பதிவொன்றையே மீண்டும் எடிட் செய்து இவ்வாறு பகிர்ந்துள்ளதாக இராணுவ தளபதி விளக்கமளித்துள்ளார்.

இதேவேளை, இந்த தகவலில் எவ்வித உண்மையுமில்லையெனவும் தேசிய பாதுகாப்பு உறுதியாக உள்ளதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

நாட்டை உலுக்கும் கொரோனா! – மரணங்கள் குறித்து சற்றுமுன் வௌியான அறிவிப்பு!

நேற்றைய தினம் (05) நாட்டில் மேலும் 98 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,919 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 323,339 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து இதுவரை பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 288,307 ஆக அதிகரித்துள்ளது.

Posted in Uncategorized

COVID இரண்டாம் தடுப்பூசி வழங்கப்படும் இடங்களில் முதலாம் தடுப்பூசியையும் வழங்குமாறு ஜனாதிபதி ஆலோசனை

இரண்டாவது தடுப்பூசி ஏற்றப்படும் எந்தவொரு நிலையத்திலும் 30 வயது பூர்த்தியடைந்தவர்களுக்கு முதலாவது தடுப்பூசியை ஏற்ற நடவடிக்கை மேற்கொள்வதற்கான வசதிகளை ஏற்படுத்துவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தலைமையில் இன்று கூடிய COVID செயலணி கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

COVID செயலணி கூட்டம் ஜனாதிபதி தலைமையில் இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

கடந்த ஒரு மாதத்திற்குள் நாடளாவிய ரீதியில் 120 ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டுள்ளதுடன், அனைத்து ஆர்ப்பாட்டங்களிலும் குறைந்தபட்சம் 1500 பேரை விட அதிகமானோர் கலந்துகொண்டுள்ளதாக இன்றைய கலந்துரையாடலின் போது புலனாய்வு பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர்.

சுகாதார வழிமுறைகளை பின்பற்றாது மக்கள் ஒன்றுகூடியமை நாடளாவிய ரீதியில் COVID தொற்று துரிதமாக பரவுவதற்கு காரணமாக அமைந்துள்ளதாக புலனாய்வு பிரிவினர் தெரிவிப்பதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

நோய் அறிகுறிகள் காரணமாக கொழும்பு உள்ளிட்ட பிரதான நகரங்களிலுள்ள வைத்தியசாலைகளுக்கு செல்லும் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

அவ்வாறு நோய் அறிகுறிகளுடன் வைத்தியசாலைகளுக்கு செல்லும் நோயாளர்கள் அசௌகரியங்களை எதிர்நோக்குவதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்த வேண்டாம் எனவும் ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.

வைத்தியசாலைகளில் நோயாளர்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாவதை தடுப்பதற்கான திட்டங்களை ஏற்படுத்துவதற்காக, அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் சுகாதார அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.

நோய்த்தொற்றிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்குரிய ஆலோசனைகளை ஊடகங்களூடாக பொதுமக்களுக்கு வழங்க வேண்டியது சுகாதாரத்துறைசார் நிபுணர்களின் பொறுப்பு எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இதனிடையே, செப்டம்பர் மாதத்திற்கு முன்பாக, 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசிகள் முற்பதிவு செய்யப்பட்டுள்ளதாக இந்த கலந்துரையாடலில் தெரிவிக்கப்பட்டது.

Posted in Uncategorized

சாதாரண சேவையின் கீழ் கடவுச்சீட்டு வழங்கும் பணிகள் இடைநிறுத்தம்

சாதாரண சேவையின் கீழ் கடவுச்சீட்டு வழங்கும் பணிகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

கொழும்பு, பத்தரமுல்லவில் அமைந்துள்ள திணைக்களத்தின் தலைமை அலுவலகத்தில் பல அதிகாரிகள் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமையினால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எனினும் அத்தியாவசிய சேவை தேவைகளைக் கொண்ட தனிநபர்களுக்கு மாத்திரம் கடவுச்சீட் ஒரு நாள் சேவையின் கீழ் வழங்கப்படும்.

அதற்காக குறைந்த அளவிலான ஊழியர்கள் சேவையில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

திருமண வைபவங்கள் தொடர்பில் வௌியான புதிய சுகாதார நடைமுறைகள்

500 இருக்கைகள் கொண்ட திருமண மண்டபவங்களில் இடம்பெறும் திருமண நிகழ்வுகளில் 150 பேருக்கு மாத்திரமே கலந்து கொள்ள முடியும் என இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அத்துடன் 500 இருக்கைகளுக்கு குறைந்த திருமண மண்டபவங்களில் இடம்பெறும் திருமண நிகழ்வுகளில் 100 பேருக்கு மாத்திரமே கலந்து கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை மரண வீடொன்றில் ஒரு சந்தர்ப்பத்தில் 25 பேர் மாத்திரமே கலந்து கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.