வடக்கு மாகாண கல்வி திணைக்களத்தின் கணினிக் கொள்வனவில் 2 கோடியே 76 இலட்சம் முறைகேடு?

வடக்கு மாகாண கல்வி திணைக்களத்தினால் 240 கணினிகள் கொள்வனவு செய்வதற்கு மேற்கொள்ளப்பட்ட நடைமுறைகளில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக கூறுவிலை கோரல் வழங்கிய நிறுவனம் ஒன்று வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர்.

குறித்த கடிதத்தின் பிரதிகள் வடக்கு மாகாண ஆளுநர், பிரதம செயலாளர் உள்ளிட்ட ஐவருக்கு பிரதியிடப்பட்டுள்ளது. குறித்த கடிதத்தில் வடக்கு மாகாண கல்வித்திணைக்களம் கோரிய கூறு விலை பிரகாரம் 240 கணினிகள் கொள்வனவு செய்யும் கோரிக்கையினை நூறு வீதம் தமது நிறுவனம் நிறைவு செய்துள்ளதோடு, ஏனையவர்களை விட விலையும் தங்களுடையதே குறைவானதாகவும் இருந்ததாகவும். ஆனால் 16.07.2021 திகதிய கொள்வனவு கடிதத்திற்கு அமைவாக தங்களின் விலையினை விட ஒரு கணினிக்கு 11500.00 ரூபா அதிக விலையினை கொண்ட வழங்குனரிடம் கொள்வனவு செய்ய கொள்வனவு கட்டளை அனுப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் படி 11500 x 240 = 2760000.00 ரூபா அதிக விலை செலுத்தப்படவுள்ளதாகவும் அக் கடிதத்தில் சுட்டிக்காட்டுப்பட்டுள்ளது. எனவே இது தொடர்பில் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளருடன் ஒருவரை தொடர்பு கொண்டு வினவிய போது, குறித்த விடயம் தொடர்பில் எமக்கும் கடிதம் கிடைப்பெற்றது. எனவே இது தொடர்பான விளக்கம் ஆளுநருக்கு அனுப்பட்டுள்ளது. 240 கணினிகள் கொள்வனவு விடயத்தில் முறைப்பாடு செய்தவரிடம் கணினிகள் கொள்வனவு செய்வதற்கு பொருத்தமற்றவர் என தொழிநுட்ப குழு பரிந்துரைத்துள்ளது. எனவே தொழிநுட்ப குழுவின் பரிந்துரைக்கு அமைவாகவே மேற்கொள்வனவு இடம்பெற்றது எனத் தெரிவித்தார்.

Posted in Uncategorized

கொழும்பில் ‘குண்டு’ புரளி பற்றி பொலிசார் தீவிர விசாரணை

கொழும்பு நகரில், குறிப்பாக இரு நட்சத்திர ஹோட்டல்கள் மற்றும் வெள்ளவத்தை, பம்பலபிட்டி, தெஹிவளை, நுகேகொட உட்பட்ட பகுதிகளில் குண்டு வெடிப்பு இடம்பெறவுள்ளதாக சமூக வலைத்தளம் ஊடாக நேற்று மாலை பரவிய வதந்தி தொடர்பில் பொலிசார் தீவிர விசாரணை நடாத்தி வருவதாக தெரிவிக்கின்றனர்.

ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் பரப்பப்பட்ட சமூக வலைத்தள பதிவொன்றையே மீண்டும் எடிட் செய்து இவ்வாறு பகிர்ந்துள்ளதாக இராணுவ தளபதி விளக்கமளித்துள்ளார்.

இதேவேளை, இந்த தகவலில் எவ்வித உண்மையுமில்லையெனவும் தேசிய பாதுகாப்பு உறுதியாக உள்ளதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

நாட்டை உலுக்கும் கொரோனா! – மரணங்கள் குறித்து சற்றுமுன் வௌியான அறிவிப்பு!

நேற்றைய தினம் (05) நாட்டில் மேலும் 98 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,919 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 323,339 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து இதுவரை பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 288,307 ஆக அதிகரித்துள்ளது.

COVID இரண்டாம் தடுப்பூசி வழங்கப்படும் இடங்களில் முதலாம் தடுப்பூசியையும் வழங்குமாறு ஜனாதிபதி ஆலோசனை

இரண்டாவது தடுப்பூசி ஏற்றப்படும் எந்தவொரு நிலையத்திலும் 30 வயது பூர்த்தியடைந்தவர்களுக்கு முதலாவது தடுப்பூசியை ஏற்ற நடவடிக்கை மேற்கொள்வதற்கான வசதிகளை ஏற்படுத்துவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தலைமையில் இன்று கூடிய COVID செயலணி கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

COVID செயலணி கூட்டம் ஜனாதிபதி தலைமையில் இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

கடந்த ஒரு மாதத்திற்குள் நாடளாவிய ரீதியில் 120 ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டுள்ளதுடன், அனைத்து ஆர்ப்பாட்டங்களிலும் குறைந்தபட்சம் 1500 பேரை விட அதிகமானோர் கலந்துகொண்டுள்ளதாக இன்றைய கலந்துரையாடலின் போது புலனாய்வு பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர்.

சுகாதார வழிமுறைகளை பின்பற்றாது மக்கள் ஒன்றுகூடியமை நாடளாவிய ரீதியில் COVID தொற்று துரிதமாக பரவுவதற்கு காரணமாக அமைந்துள்ளதாக புலனாய்வு பிரிவினர் தெரிவிப்பதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

நோய் அறிகுறிகள் காரணமாக கொழும்பு உள்ளிட்ட பிரதான நகரங்களிலுள்ள வைத்தியசாலைகளுக்கு செல்லும் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

அவ்வாறு நோய் அறிகுறிகளுடன் வைத்தியசாலைகளுக்கு செல்லும் நோயாளர்கள் அசௌகரியங்களை எதிர்நோக்குவதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்த வேண்டாம் எனவும் ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.

வைத்தியசாலைகளில் நோயாளர்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாவதை தடுப்பதற்கான திட்டங்களை ஏற்படுத்துவதற்காக, அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் சுகாதார அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.

நோய்த்தொற்றிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்குரிய ஆலோசனைகளை ஊடகங்களூடாக பொதுமக்களுக்கு வழங்க வேண்டியது சுகாதாரத்துறைசார் நிபுணர்களின் பொறுப்பு எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இதனிடையே, செப்டம்பர் மாதத்திற்கு முன்பாக, 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசிகள் முற்பதிவு செய்யப்பட்டுள்ளதாக இந்த கலந்துரையாடலில் தெரிவிக்கப்பட்டது.

Posted in Uncategorized

சாதாரண சேவையின் கீழ் கடவுச்சீட்டு வழங்கும் பணிகள் இடைநிறுத்தம்

சாதாரண சேவையின் கீழ் கடவுச்சீட்டு வழங்கும் பணிகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

கொழும்பு, பத்தரமுல்லவில் அமைந்துள்ள திணைக்களத்தின் தலைமை அலுவலகத்தில் பல அதிகாரிகள் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமையினால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எனினும் அத்தியாவசிய சேவை தேவைகளைக் கொண்ட தனிநபர்களுக்கு மாத்திரம் கடவுச்சீட் ஒரு நாள் சேவையின் கீழ் வழங்கப்படும்.

அதற்காக குறைந்த அளவிலான ஊழியர்கள் சேவையில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

Posted in Uncategorized

திருமண வைபவங்கள் தொடர்பில் வௌியான புதிய சுகாதார நடைமுறைகள்

500 இருக்கைகள் கொண்ட திருமண மண்டபவங்களில் இடம்பெறும் திருமண நிகழ்வுகளில் 150 பேருக்கு மாத்திரமே கலந்து கொள்ள முடியும் என இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அத்துடன் 500 இருக்கைகளுக்கு குறைந்த திருமண மண்டபவங்களில் இடம்பெறும் திருமண நிகழ்வுகளில் 100 பேருக்கு மாத்திரமே கலந்து கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை மரண வீடொன்றில் ஒரு சந்தர்ப்பத்தில் 25 பேர் மாத்திரமே கலந்து கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.

ஆதரன வரி பதிவு நடவடிக்கைக்கு ஒத்துளைக்குமாறு ரெலோ தவிசாளர் கோரிக்கை!

முல்லைத்தீவுமாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேசத்திற்கு உட்பட்ட முல்லைத்தீவு பகுதியில் புள்ளிவிபரவியல் திணைக்களத்தினால் ஆதன வரி தொடர்பிலான பதிவு நடவடிக்கை 04.08.21 இன்று தொடக்கம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின்(ரெலோ) மத்திய குழு உறுப்பினரும் கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளருமான க.விஜிந்தன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு நகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் உள்ள வீடுகளின் ஆதன வரி தகவல்களை பெற்றுக்கொள்வதற்காக மக்களின் வீடுகளுக்கு செல்லும் அதிகாரிகளுக்கு மக்கள் ஒத்துளைப்பினை வழங்குமாறும் தவிசாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Posted in Uncategorized

அதிபர் ஆசிரியர்களின் போராட்டத்தை இந்த அரசு இரும்புக் கரம் கொண்டு அடக்குவதை நிறுத்த வேண்டும்- ரெலோ நிர்வாக செயலாளர் நித்தி மாஸ்டர்

சகல அரசியற் கட்சிகளும் ஆசிரியர்களின் போராட்டத்திற்கு ஆதரவு கொடுக்க வேண்டும்.

ஆசிரியர்கள் சமுதாயத்தில் மிகவும் முக்கியமான வகிபங்கைக் கொண்டிருப்பவர்கள். தனியாக ஊதியத்தை மட்டும் கருதாமல் சொந்த பந்தம் அல்லாத இன மதம் பாராத சகல பிள்ளைகளையும் தங்கள் மாணவச் செல்வங்களாக நினைத்து கல்வியைப் போதிப்பவர்கள். எனவே அவர்களின் சம்பள முரண்பாட்டிற்கான போராட்டம் நியாயமானது. இது ஒரு ஜனநாயக ரீதியான நியாயமான போராட்டம். காலங்காலமாக ஆட்சிக்கு வரும் அரசாங்கங்கள் ஆசிரியர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதாக வாக்குறுதிகளை மட்டும் வழங்கி விட்டு அதனை நிறைவேற்றாது கைவிடும் நிலையே தொடர்ந்து கொண்டிருக்கிறது.

கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக நாடு பூராகவும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆசிரியர்கள் அதிபர்களின் போராட்டங்கள் மிகவும் வலுப்பெற்று இருக்கும் நிலையில் ஆசிரியர்களைக் கைது செய்ததன் மூலமாக இந்த அரசாங்கமானது தனது இரும்புக் கரங்களைக் கொண்டு இப் போராட்டத்தை அடக்க முற்பட்டிருப்பதானது மிகவும் கண்டிக்கத்தக்கது. இவ் ஆசிரியர்களை உடனடியாக விடுவிக்க சகல அரசியற் கட்சிகளும் கட்சி பேதங்களை மறந்து குரல் கொடுக்க வேண்டும். இந்த இக்கட்டான சூழ்நிலையிலே அரச உயர் அதிகாரிகளிடம் தங்களுக்கு நற்பெயர்களை ஏற்படுத்திக் கொள்ளவும் எதிர்காலத்தில் பின்கதவால் சென்று முறையற்ற விதத்தில் பதவி உயர்வுகளைப் பெற்றுக்கொள்ளவும் பல அதிபர்கள் முற்படுவது இப் போராட்த்தைக் காட்டிக்கொடுப்பதற்கு ஒப்பானதாகும். எனவே கைது செய்யப்பட்ட ஆசிரியர்கள் எவ்வித நிபந்தனைகளும் இன்றி உடனடியாக விடுதலை செய்யப்பட அனைத்து அரசியற் கட்சிகளும் முன்வரவேண்டும் என தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ) வின் நிர்வாகச் செயலாளர் நித்தி மாஸ்டர் தெரிவித்துள்ளார்.

11 இளைஞர்கள் கடத்தல் ; சட்டமா அதிபர் திணைக்களம் முடிவை தெளிவுபடுத்த வேண்டும் என்கிறது சர்வதேச மன்னிப்புச் சபை

11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்டதாக கூறப்படும் வழக்கில் வசந்த கரன்னகொடவுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை தொடர வேண்டாம் என்ற சட்டமா அதிபர் திணைக்களத்தின் முடிவுக்கான காரணத்தை தெளிவுபடுத்த வேண்டும் என்று சர்வதேச மன்னிப்புச் சபை கோரியுள்ளது.

சர்வதேச மன்னிப்பு சபையின் ஆசிய -பசிபிக் பிராந்திய பணிப்பாளர் யாமினி மிஸ்ரா சட்டமா அதிபர் திணைக்களத்தின் இந்த முடிவுக்கு பதிலளிக்கையில் :

பல தசாப்தங்களாக பல்லாயிரக்கணக்கான மக்கள் வலுக்கட்டாயமாக காணாமல் போன நிலையில், உலகின் இரண்டாவது அதிக எண்ணிக்கையிலான கட்டாய காணாமல் ஆக்கங்களில் இலங்கை உள்ளது.

இந்த வழக்கு, சர்வதேச சட்டத்தின் கீழ் குற்றங்களுக்கு நீதி வழங்குவதற்கான வாய்ப்பாக இருந்தது, குற்றவியல் பொறுப்பில் சந்தேகத்திற்குரியவர்கள், உதவி மற்றும் ஊக்குவிப்பு மற்றும் கட்டளை பொறுப்பின் கீழ் சம்பந்தப்பட்டவர்கள் உட்பட விசாரணைக்கு கொண்டுவரப்படுவதை உறுதிசெய்தது.

இந்த வழக்கு ஏற்கனவே இலங்கை நீதிமன்றங்களில் உள்ள தடைகளால் சூழப்பட்டுள்ளது, இன்றைய (நேற்யை) முடிவு பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நீதியை மேலும் சென்றடைவதை தடுக்கிறது.

சட்டமா அதிபர் திணைக்களம் அதன் முடிவிற்கான காரணங்களை விளக்க வேண்டும், மேலும் இலங்கை அதிகாரிகள் கட்டாய காணாமல் போன அனைத்து பாதிக்கப்பட்டவர்களுக்கும் உண்மை, நீதி மற்றும் இழப்பீடுகளை வழங்க வேண்டும்.

பின்னணி

“கடற்படை 11” வழக்கு 2008-2009 இல் 11 தமிழ் இளைஞர்கள் கட்டாயமாக காணாமல் போனதைக் குறிக்கிறது. இதில் சிரேஷ்ட இராணுவத் தளபதிகள் சம்பந்தப்பட்டுள்ளனர்.

2018 ஆகஸ்டில் குற்றவியல் புலனாய்வுத் துறை (சி.ஐ.டி.) முக்கிய சந்தேகநபராக “நேவி சம்பத்” என்று அழைக்கப்படும் லெப்டினன்ட் கமாண்டர் சந்தனா பிரசாத் ஹெட்டியாராச்சியை கைதுசெய்தது.

முக்கிய சந்தேக நபர்களில் ஒருவரை பாதுகாப்புத் துறை தலைமை அதிகாரி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன பாதுகாத்தார் என்று சிஐடி குற்றம் சாட்டியது, மேலும் அவரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.

2019 பெப்ரவரியில், இலங்கை கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொட, இந்த வழக்கில் 14 ஆவது சந்தேக நபராகப் பெயரிடப்பட்டார். அவர் கடற்படை வீரர்களால் கட்டாயமாக காணாமல் போனது பற்றி அறிந்திருந்தார் என்று குற்றம் சாட்டப்பட்டார்.

இந் நிலையில் 2021 ஆகஸ்ட் 4 அன்று, சட்டமா அதிபர் திணைக்களம் கரன்னகொடவுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை தொடர வேண்டாம் என்று கொழும்பு மேல் நீதிமன்றின் சிறப்பு ட்ரயல் அட்பார் நீதிமன்றுக்கு அறிவித்தது.

ராணுவ ‘ஹெல்மெட்’ டெண்டர் சீனாவுக்கு! உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு ஆப்பு!

இலங்கை இராணுவத்திற்கு தலைக்கவசங்களை (HELMET) வழங்குவதற்கான ஒப்பந்தம் சீன நிறுவனத்திற்கு அரசாங்க நிறுவனம் மூலம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

22/04/2020 அன்று திகதியிடப்பட்ட டெண்டரை வழங்க அரசாங்க வர்த்த நிறுவனத்தின் கொள்முதல் குழு (State Trading Corporation) நிறுவனத்திற்கு 29 ஜூலை 2021 அன்று ஒப்புதல் அளித்துள்ளது.

ஏலம்.அமெரிக்க டொலர்களில்!

நாட்டின் ஒரே ஒரு அனுபவம் வாய்ந்த ஹெல்மெட் உற்பத்தி நிறுவனமான ஹர்ஷ இன்டர்நேஷனல் (பிரைவேட்) லிமிடெட், டெண்டரை பெற்றுக்கொள்வதில் கடுமையான அநீதிக்கு உள்ளாக்கப்பட்டதாக ஜனாதிபதியிடம் எழுத்துப்பூர்வமாக அறிவித்துள்ளது.

வடக்கில் போரின் போது கூட, இந்த நிறுவனம் அரச படைகளுக்கு கிட்டத்தட்ட 75,000 தலைக்கவசங்களை (HELMET) வழங்கியுள்ளது.

இந்நிறுவனத்தின் நிர்வாக பணிப்பாளர் ஹிமாலி விஜேதுங்க, ஜனாதிபதிக்கு எழுதியயள்ள கடிதத்தில், நிறுவனம் புதிய இயந்திரங்களை இறக்குமதி செய்துள்ளதாகவும் அதனது தொழில்நுட்பத்தை மேலும் விரிவுபடுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஒப்பந்தம் மூலம் நம் நாட்டில் மேலும் பல தொழிற்சாலைகள் வளர வழிவகுக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

தனது கடிதத்தில், 15 ஆண்டுகளுக்கும் மேலாக உற்பத்தியில் இருக்கும் மற்றும் சோதனையில் தேர்ச்சி பெற்ற தனது நிறுவனத்தின் தலைக்கவசம் நிராகரிக்கப்பட்டது “வருத்தத்திற்குரியது” என்று அவர் கூறினார்.

ஹிமாலி விஜேதுங்க ஜனாதிபதியிடம் இந்த விவகாரம் குறித்து விசேட விசாரணை நடத்தி, நாட்டின் வெளிநாட்டு செலாவணியை மிச்சப்படுத்தும் மற்றும் அதிக எண்ணிக்கையிலான ஊழியர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கும் ஒரே ஒரு உள்ளூர் உற்பத்தியாளரான தனது நிறுவனத்திடம் ஒப்பந்தத்தை ஒப்படைக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.