பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் பயங்கரவாத தடை பிரிவு பொலிஸாரினால் 19 ஆம் திகதி கைது செய்யப்பட்டு கால வரையறையின்றி சிறைகாவலில் தடுத்து வைக்கப்பட்ட ரெலோ முல்லைத்தீவு மாவட்ட பொறுப்பாளர் கமலநாதன் விஜிந்தன் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் உறுப்பினருமான க.விஜிந்தன் அவர்களை கொழும்பில் உள்ள பயங்கரவாத குற்றத்தடுப்பு விசாரணைப்பிரிவினர் விசாரணைக்கு அழைத்து அங்கு வைத்து விசாரணை மேற்கொண்ட பின்னர்,21ஆம் திகதி கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு கால வரையறையின்றி சிறைகாவலில் தடுத்து வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
“நாளை முல்லைத்தீவு“ எனும் அமைப்பை ஆரம்பித்து சமூக அபிவிருத்தி செயல்பாடுகளில் ஈடுபட்ட முன்னாள் அபிவிருத்தி சங்கத் தலைவர் கமலநாதன் விஜிந்தன், அவரின் அரசியல் வளர்ச்சியை பொறுக்க முடியாத காழ்ப்புணர்ச்சி கொண்ட சிலர் முகநூல் பதிவுகளை அனுப்பி மொட்டை கடிதம் அனுப்பியிருந்தனர்,முகநூலில் விடுதலைப் புலிகளின் அமைப்பை மீள் உருவாக்கும் வகையிலான விடயங்களை பதிவு செய்ததன் மூலம் நாட்டில் இனப்பிரச்சினை மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளை தூண்டும் வகையில் செயல்பட்டதாக குற்றம் சுமத்தி, பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் பயங்கரவாத தடை பிரிவு பொலிஸாரினால் கடந்த 19ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.
இதனூடாக ரெலோவின் முல்லைத்தீவு மாவட்ட செயற்பாடுகளை முடக்க எடுக்கப்பட்ட சதிமுயற்சிகளை முறியடித்து அவரின் கட்சியான தமிழ் ஈழ விடுதலை இயக்கம் முயற்சியால் ஏழு நாட்களில் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
