ஜெனீவாவில் இலங்கை குறித்த பிரேரணை இன்று பலப்பரீட்சை!

ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது அமர்வில் முன்வைக்கப்பட்டுள்ள இலங்கை குறித்த பிரேரணை இன்று(22) விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

பெரும்பாலும் பிரேரணை மீதான வாக்கெடுப்பும் இன்றைய தினமே நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கையின் பொறுப்புக்கூறல், நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகள் பாதுகாப்பு எனும் தலைப்பிலான குறித்த யோசனை, பிரித்தானியா, ஜேர்மனி, கனடா, வடக்கு மெஸிடோ னியா, மொன்டினீக்ரோ மற்றும் மலாவி ஆகிய நாடுகளால் முன்வைக்கப்பட்டுள்ளது.

விவாதத்தின் இடைநடுவே சில நாடுகள் தலையீடும் செய்யும் என எதிர்பார்க்கப்படுவதால் பிரேரணை மீதான வாக்கெடுப்பு செவ்வாய்க்கிழமை வரை பிற்போடப்படலாம் என வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவின் பிரேரணைக்கு கனடா, ஜெர்மனி, மொன்டினிக்ரோ, வடக்கு மெசிடோனியா, மலாவி ஆகிய நாடுகள் இணை அனுசரணை வழங்கியுள்ள நிலையில் பிரேரணையைத் தோற்கடிக்க இலங்கை அரசாங்கம் இராஜதந்திர ரீதியிலான முயற்சிகளை மேற்கொண்டு வருவதோடு அங்கத்துவ நாடுகளுடன் பேச்சுநடத்தி வருகிறது.

ஐக்கிய நாடுகள் அமைப்பில் பிரதிநிதித்துவப்படுத்தும் 193 நாடுகள் மத்தியில் ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் வாக்களிக்கும் அதிகாரத்தைக் கொண்ட நாடுகள் 47 இடம்பெற்றுள்ளன.

இதேவேளை, பிரேரணையை வெற்றிபெற வைப்பதற்கு அனுசரணை நாடுகள் ஆதரவு திரட்டி வருகின்றன. இதில் இந்தியாவின் ஒத்துழைப்பை பெற இருதரப்பும் முயன்று பெறுகிறது. இந்நிலையில் இந்தப் பிரேரணை வெற்றி பெறும் என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு நம்பிக்கை வௌியிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் பொதுச் செயலாளருக்கும் ஜனாதிபதிக்குமிடையில் தொலைபேசி உரையாடல்

இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் (OIC) பொதுச்செயலாளர் டாக்டர் யூசெப் பின் அகமட் அல்-ஒத்தெய்மினுக்கு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுக்குமிடையிலான தொலைபேசி உரையாடலொன்று நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது.

இந்த உரையாடலின் போது, அவர்கள் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்புக்கும் இலங்கைக்கும் இடையிலான தற்போதைய உறவுகள் மற்றும் இலங்கையில் உள்ள முஸ்லிம் சமூகத்தின் நிலைமை குறித்து கவனம் செலுத்தியுள்ளனர்.

இஸ்லாமிய சடங்குகளின்படி இறந்தவர்களை அடக்கம் செய்வதற்கான முஸ்லிம்களின் உரிமை குறித்து இலங்கை அரசாங்கத்தின் முடிவை வரவேற்று, சர்வதேச அமைப்புகளை அணுகவும், அணுகவும் இலங்கை ஜனாதிபதியின் விருப்பத்தை அல்-ஓதமைன் இதன்போது பாராட்டினார்.

முஸ்லிம் சமூகங்களின் நிலைமைகளைப் பின்பற்றுவதற்கும், இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு அல்லாத உறுப்பு நாடுகளில் அவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் ஆர்வத்தை அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.

திங்கட்கிழமை (22-03-21) ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இலங்கைப் பிரேரணை மீதான வாக்களிப்பு நடைபெற உள்ளதும், ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவில் பல முஸ்லிம் நாடுகள் வாக்களிக்கும் தகுதியை கொண்டிருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

முல்லைத்தீவில் 13 கடைத்தொகுதி பிரதேச சபையிடம் கையளிக்காமல் நகரசபை கோள்விகோரல் அறிப்பு? ரெலோ விஜிந்தன்

முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச சபை ரெலோ கட்சியின் உறுப்பினர் க.விஜிந்தன் அவர்கள் ஊடக சந்திப்பு ஒன்றினை 20.03.21 அன்று நடத்தியுள்ளார்.

இதன் போது அவர் தெரிவிக்கையில். முல்லைத்தீவு நகரில் கரைதுறைப்பற்று பிரதேச சபையின் ஆழுகையின் கீழ் உள்ள பேருந்து தரிப்பிட நிலையத்தில் நகர அபிவிருத்தி அதிகாரசையினால் 13 கடை தொகுதிகள் கட்டப்பட்டு பிரதேச சபையிடம் கையளிக்க்பபடவுள்ளதாக மாவட்ட ஒருங்கிணைப்பு கூட்டத்திலும் தெரிவிக்கப்பட்ட நிலையில் குறித்த கட்டடங்கள் சபையிடம் கையளிக்காத நிலையில் கடந்த 15 ஆம் திகதி கொழும்பில் இருந்து நகர அபிவிருத்தி அதிகார சபையினால் கேள்விகோரல் அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பிரதேச சபைக்கு வழங்கப்படஇருந்த கடைத்தொகுதி யாருக்கும் தெரியாத இடத்தில் மாவட்ட செயலாளர்,ஆழுனர்,பிரதேச சபைக்கு தெரியாத நிலையில் இதன் உள்நோக்கம் என்ன என்று தெரியாத நிலை காணப்படுகின்றது

போருக்கு பின்னர் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு வருகின்ற எந்த அரசியல் பிரமுகர்களாக இருந்தாலும் எவராக இருந்தாலும் சரி மாவட்டத்தினை மேம்படுத்த வேண்டும் மக்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்த வேண்டும் என்று பேச்சளவில் அள்ளி வீசுகின்றார்கள் ஆனால் நகரசபையினால் கட்டப்பட்ட கடைத்தொகுதி கேள்விகோரலுக்கு விடப்பட்டுள்ளமையானது வசதிபடைத்த வேறு மாவட்டத்தனை சேர்ந்த தென்னிலங்கையனை சேர்ந்தவர்கள்தான் இதனை பெற்றுக்கொள்ளக்கூடிய நிலை உள்ளது.

இதனை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று கோரி உரிய தரப்பினருக்கு எழுத்துமூலம் சமர்ப்பித்துள்ளோம் இது ஊடகங்களில் வெளிப்படுத்த வேண்டும் கடந்த வாரம் நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திக்குழுக்கூட்டத்தில் குறித்த கடைத்தொகுதி பிரதேச சபைக்கு வழங்கப்பட்டுள்ளது என்பதை மாவட்ட நகர அபிவிருத்தி சபையின் முகாமையாளர் தெளிவாக சொல்லி உள்ளார்.

இந்த குத்ததைக கோரலை நகரஅபிவிருத்தி சபை நிறுத்தி அதனை பிரதேச சபையிடம் ஒப்படைத்து உரியமுறையில் இந்த நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம் இது தொடர்பில் ஆளுனர்,பிரதம செயலாளர்,நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளோம்.
இதை பிரதேச சபையிடம் ஒப்படைத்து பிரதேசத்திற்கு உட்பட்ட மக்களுக்கு பயன் கிடைக்கப்பெறாத சந்தர்ப்பத்தில் சட்ட நடவடிக்கையினையும் எடுப்போம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கைக்கு கரைதுறைப்பற்று பிரதேச சபை ரெலோ உறுப்பினர் க.விஜிந்தன் கண்டனத்தினையும் எதிர்ப்பினையும் தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் நடவடிக்கை சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியுள்ளதாகவும் நடவடிக்கை எடுக்காத நிலையில் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பூகோள அரசியல்நிலையில் வடகிழக்கிற்கு ஒரு தீர்வு கிடைக்கக்கூடிய சூழ்நிலை உருவாகிறது’ ரெலோ செயலாளர் ஜனா எம்.பி

பூகோள அரசியல்நிலையில் தமிழ்மக்களுக்கு வடக்கு – கிழக்கு ஆகிய மாகாணங்களுக்கு ஒரு தீர்வு கிடைக்கக்கூடிய சூழ்நிலை உருவாகிக்கொண்டிருப்பதாக, தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ரெலோ கட்சியின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் ((ஜனா)) தெரிவித்தார்.

முல்லைத்தீவில் புதுக்குடியிருப்பில் ரெலோ கட்சியின் மாவட்ட அலுவலகத்தில், நேற்று (20) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்துக்கு, ஒரு முக்கியமான காலட்டமாக இந்தக் காலகட்டம் இருப்பதாகவும் கட்சியை பலப்படுத்திக்கொள்ளும் போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ்த் தேசியக் கட்சிகள், தமிழ் மக்களின் அரசியல் என்பவற்றின் பலம் தானாகவே பலப்படுமெனவும் கூறினார்.

தமிழ் ஈழ விடுதலை இயக்கம் இன்றும் கூட்டமைப்புக்குள்ளேயே போராடிக்கொண்டிருப்பதாக் தெரிவித்த அவர் கூட்டமைப்பில் இருந்து பிரிநித்து சென்றவர்கள் இன்று 10 தமிழ் கட்சிகளை உருவாக்கி, தங்களையும் சேர்த்துகொண்டு, சில விடயங்களில் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றார்களெனவும் கூறினார்.

இந்த கட்சிகள் அனைத்தும் இணைந்து, “தமிழ்த் தேசிய பேரவை” என்று ஒன்றை உருவாக்க முயற்சித்துக்கொண்டிருப்பதாகத் தெரிவித்த அவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பலப்பட வேண்டுமெனவும் பதிசெய்யப்பட வேண்டுமெனவும் அதற்கான கட்டமைப்பொன்றை உருவாக்க வேண்டுமெனவும் கூறினார்.

அத்துடன், தமிழ் மக்களுக்கான, தமிழ்த் தேசியகத்துக்கான ஒரே குரலாக பிரிந்து சென்ற கட்சிகளையும் நபர்களையும் இணைத்து தமிழ் மக்களின் போராட்டத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னெடுக்க வேண்டுமென்றும், அவர் வலியுறுத்தினார்.

தற்போதைய நிலையில், பூகோள அரசியல்நிலையில், தமிழ் மக்களுக்கு வடகிழக்கிற்கு ஒரு தீர்வு கிடைக்கக்கூடிய சூழ்நிலை உருவாகிக்கொண்டிருப்பதாகத் தெரிவித்த அவர், மாகாணசபை தேர்தல் மிகவிரைவில் வரக்கூடிய நிலையில், ஐக்கிய நாடுகள் சபையில் மனித உரிமைகள் ஆணைக்குழு கூட்டத்தொடர் நடைபெற்றுக்கொண்டிருப்பதாகவும் கூறினார்.

“அந்தவகையில், நடைபெற்றுக்கொண்டிருப்பவை அனைத்தும் நமக்கு சாதகமாக நடந்து கொண்டிருக்கின்றது. இதனை நாங்கள் சரியாக பயன்படுத்துவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பலப்படுத்தி, ஒரே குரலாக மக்களின் உரிமைகளை பெறுவதற்கு முயற்சிக்க வேண்டும்” என்றும் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.

Posted in Uncategorized

நான்கு சகோதரர்களும் முக்கிய மந்திராலோசனை

அரசாங்கத்தின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து ஒரு முக்கியமான கலந்துரையாடல் கடந்த வாரம் ராஜபக்ஷ குடும்பத் தலைவர்களிடையே நடைபெற்றது என்று நம்பகமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ராஜபக்ஷ குடும்பங்கள் சார்பில் நடைபெற்ற கலந்துரையாடலில் ஜனாதிபதி கோதபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அமைச்சர் சாமல் ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ ஆகியோர் கலந்து கொண்டனர்.

இது தொடர்பாக எதிர்காலத்தில் அரசாங்கம் செயல்பட வேண்டிய விதம் உட்பட பல முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன என தெரியவருகின்றது.

Posted in Uncategorized

ஐ.நா.தீர்மானத்தை நிராகரித்தால் நெருக்கடிகள் அதிகரிக்கும் : 3 தெரிவுகளே அரசுக்கு உள்ளன என்கிறார் தயான்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தற்போதைய பிரேரணையில் இலங்கை பற்றி மீளாய்வுக்காலம் ஆறுமாதங்களாக சுருக்கப்பட்டுள்ள நிலையில் அப்பிரேரணை தீர்மானமாக நிறைவேற்றப்பட்டதன் பின்னர் தொடர்ச்சியாக நிரகாரித்தால் மேலும் மேலும் நெருக்கடிகளே அதிகரிக்கும் என்று ஐ.நா.வுக்கான முன்னாள் வதிவிடப்பிரதிநிதியும் எதிர்க்கட்சித்தலைவரின் சர்வதேச உறவுகளுக்கான சிரேஷ்ட ஆலோசகருமான கலாநிதி.தயான் ஜயத்திலக தெரிவித்திருந்தார்.

தற்போதைய நிலையில் இலங்கை அரசாங்கத்திற்கு மூன்று தெரிவுகளே காணப்படுகின்றன என்றும் அதில் எதனைத் தெரிவு செய்யப்போகின்றது என்பதிலேயே இலங்கையின் எதிர்காலம் உள்ளதெனவும் அவர் குறிப்பிட்டார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது அமர்வில் நிறைவேற்றப்படும் இலங்கை பற்றிய தீர்மானத்தினை நிராகரிக்கவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன, வெளிவிவகார செயலாளர் ஜெயநாத் கொலம்பகே ஆகியோர் தெரிவித்துள்ளமை தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் விடயங்கள் சம்பந்தமாக ஆராய்ந்து அறிவதற்காக நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை முறையாக நடைமுறைப்படுத்தியிருந்தால் தற்போது நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது அமர்வில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பிரேரணை உள்ளிட்ட நெருக்கடிகள் ஏற்படுவதற்கு வாய்ப்புக்கள் ஏற்பட்டிருக்காது.

துரதிஷ்டவசமாக, தற்போது பதவியில் உள்ள ஆளும் தரப்பினருக்கு அவ்விதமான சமிக்ஞைகள் எதனையும் கடந்த காலத்திலும் சரி தற்போதும் சரி வெளிப்படுத்தவில்லை. இந்நிலையில் தற்போது ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் தீர்மானத்தினை நிறைவேற்றுவதற்கு முன்னதாகவே அதனை எதிர்ப்பதாக கருத்தக்களை வெளியிட்டு வருகின்றார்கள்.

இந்நிலையில் தற்போதைய பிரேரணை நிறைவேற்றப்படுமாக இருந்தால் இலங்கை முன்னெடுக்கப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பாக கூறப்பட்டுள்ளது. அந்த விடயங்களை மேற்கொண்டே ஆக வேண்டும்.

ஏனெனில் இலங்கை பற்றிய மீளாய்வு அறிக்கையினை சமர்ப்பிக்கும் காலம் ஆறு மாதங்களாக சுருக்கப்பட்டுள்ளது. ஆகவே அரசாங்கம் நல்லிணக்க, மற்றும் பொறுப்புக்கூறல் விடயங்களுக்கான செயற்பாடுகளைக் காண்பிக்க வேண்டும் அவ்வாறு இல்லாது விட்டால் மேலும் மேலும் நெருக்கடிகளே ஏற்படுவதற்கான வாய்ப்புக்களே அதிகரிக்கும்.

தற்போதை நிலையில் ஆட்சியாளர்களுக்கு மூன்று தெரிவுகளே காணப்படுகின்றன. முதலாவதாக முற்றாக ஐ.நா.தீர்மானத்தினை எதிர்த்து சர்வதேசத்தினைப் பகைத்துக்கொண்டு நடைபெறுவைக்கு முகங்கொடுப்பதாகும்.

இரண்டாவதாக, மாகாண சபைமுறைகளின் அதிகாரங்களை நீக்கி தேர்தலை நடத்தவிட்டு பின்னர் புதிய அரசியலமைப்பின் பெயரில் 13ஆவது திருத்தச்சட்டத்தினை முழுமையாக நீக்கிவிட்டு அதிகாரக்குவிப்பைச் செய்து இந்தியா உள்ளிட்ட சர்வதேசத்தினை காலங்கடத்தி ஏமாற்றுவதோடு அவ்வப்போது நெருக்கங்களையும் விரிசல்களையும் காண்பித்து சீரற்ற நிலைமைகளை பேணுதல். அதுமட்டுமன்றி இனக்குழுமங்களை மையப்படுத்திய நெருக்கடிகளை ஏற்படுத்துதல் மூன்றாவதாக, நிலைமைகளைப் புரிந்து ஐ.நா.தீர்மானத்திற்கு அமைவாக உள்நாட்டில் தேசிய ரீதியிலான வெளிப்படைத்தன்மையுடனான பொறிமுறையொன்றை ஏற்படித்தி ஒவ்வொரு ஆறுமாதகாலத்திற்கும் மீளாய்வு செய்யப்படும்போது முன்னேற்றகரமான நிலைமைகளை வெளிப்படுத்தல்.

இந்தத் தெரிவுகளுக்குள் ஒன்றை கையிலெடுக்கும் போது அதற்கான பிரதிபலன்களும் உடனுக்குடனே கிடைக்கும் என்றார்.

Posted in Uncategorized

ஊடக நிறுவனங்களின் உரிமையாளர்களிற்கும் ஊடகவியலாளர்களிற்கும் ஜனாதிபதி கடும் எச்சரிக்கை

ஊடக நிறுவனங்களின் உரிமையாளர் தான் நினைக்கும் விதத்தில் நாட்டை கொண்டு செல்வதற்கு அனுமதிக்கப்போவதில்லை என தெரிவித்துள்ள ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச ஊடக சுதந்திரத்தை தவறாக பயன்படுத்துவது குறித்தும் எச்சரித்துள்ளார்.

வலப்பனையில் இடம்பெற்றுள்ள கலந்துரையாடல் ஒன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.ஊடகங்க நிறுவனங்களின் உரிமையாளர்கள் ஊடக சுதந்திரம் குறித்து ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளதாவது

ஊடக நிறுவனங்களில் புதுமையானவர்களே உள்ளனர். ஊடக சுதந்திரம் என்பது ஊடக நிறுவனத்தின் உரிமையாளரின் சுதந்திரம் அல்ல. அதுவல்ல ஊடக சுதந்திரம். அது ஒரு மாஃபியா. ஊடக உரிமையாளருக்கு தேவையான விதத்தில் நாட்டைக் கொண்டு செல்வதற்கு முயல்வதாக இருந்தால் அது ஒரு மாஃபியா. அதுவே இடம்பெறுகின்றது.

நாட்டில் அரசர்கள் இல்லை. மகாராஜாக்களும் இல்லை. மகாராஜாக்கள் இந்தியாவில் இருந்தார்கள். இங்கு மாஃபியாவே இடம்பெறுகின்றது. மன்னர் நிர்வாகிகள் நாட்டை நிர்வகிக்க முயல்வதாக இருந்தால், அது என்னுடன் முடியாது.

அதற்கு பாடம் கற்பிக்க எனக்குத் தெரியும். தேவையெனின் கற்பிக்கும் முறையும் எனக்குத் தெரியும். நான் ஊடக சுதந்திரத்தை வழங்கியுள்ளேன். 14 மாதங்கள் நான் நாட்டை நிர்வகித்துள்ளேன். எந்தவொரு ஊடகத்திற்கும் எந்தவொரு அழுத்தத்தையும் விடுக்கவில்லை. எனினும், அவர்கள் இதனை தவறாக பயன்படுத்தினால் அதற்கும் சட்டங்கள் உள்ளன. செய்ய முடியுமான முறைகளும் உள்ளன. அதனை நான் செயற்படுத்துவேன்.

அந்த ஊடகம் மாத்திரம் அல்ல தேசிய சிந்தனையில் உள்ள ஊடகங்களிலும் சிலர் கும்புக் மரங்களை வெட்டியதாக பொய்யான தகவல்களை வௌியிட்டிருந்தனர். யார் என்று நான் தேடிப் பார்த்தேன். அந்த ஊடகமே யுத்த காலத்தில் எமக்கு எதிராக செயற்பட்டது. அவர்களே தற்போது நுழைந்து இவ்வாறான பிரச்சாரங்களை முன்னெடுக்கின்றனர். யுத்தம் இடம்பெற்ற காலத்தில் எமக்கு எதிராக செயற்பட்ட குழுவினரே மீண்டும் எழுந்துள்ளனர்.

Posted in Uncategorized

இலங்கையின் பொறுப்புக்கூறலுக்கான இலக்கை அடைய ஜெனிவா முக்கிய பங்காற்றும் – பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் தெரிவிப்பு

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையானது இலங்கை அரசாங்கத்தின் பொறுப்புக்கூறலுக்கான இறுதி இலக்கினை எட்டுவதற்கான முக்கிய பங்காற்றும் என்று இலங்கை மற்றும் மாலைதீவுக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் வீரகேசரிக்கு தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஊடாக பொறுப்புக்கூறல் இலக்குகளை அடைய முடியுமா ?,

ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பில் பிரித்தானியாக கொண்டுவந்துள்ள பிரேரணை நிறைவேற்றப்படுமா?,

இலங்கை அரசாங்கம் அதனை நிராகரித்தால் பிரித்தானியாவின் அடுத்த கட்ட செயற்பாடு என்னவாக இருக்கும் என்பது தொடர்பில் கொழும்பில் உள்ள இலங்கை மற்றும் மாலைதீவுக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகராலத்திடம் மின்னஞ்சல் மூலமாக வினவியபோது, அதன் பேச்சாளர் ஒருவர் வழங்கிய பதிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்பதிலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

நல்லிணக்கத்தை அடைவதற்கும், நீதியினைப் பெற்றுக்கொள்வதற்கும், அதேபோன்று உண்மையினைக் கண்டறிவதற்குமான சிறந்த வழியாக ஐ.நா.மனித உரிமைகள் பேரவை என்ற கட்டமைப்பு என்பதே சரியான வழியாக இருக்குமென 2020பெப்ரவரி, ஜுன், செப்டம்பர், ஆகிய மாதங்களில் நடைபெற்ற ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் அமர்வுகளுக்காக சமர்ப்பிக்கப்பட்ட எமது அறிக்கைகளில் இணை அனுசரணை வழங்கும் குழுவானது மிகவும் தெளிவாக குறிப்பிட்டுள்ளது.

உள்ளுரில் வினைத்திறன் மிக்க பொறிமுறைகள் தோற்றம் பெறாதிருக்கும் நிலையில் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக் கூறுதலை அடைவதற்கான இறுதி வழிமுறையை எட்டுவதற்கு ஐ.நா.மனித உரிமைகள் பேரவையானது தொடர்ந்தும் மிக முக்கியமான பங்கினைக் கொண்டிருக்கும் என்று நாம் நம்புகின்றோம்.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் நிகழ்ச்சி நிரலுக்குள் இலங்கையை தொடர்ந்தும் வைத்திருத்தல் இலங்கையின் பொறுப்புக்கூறும் கடப்பாடு மீதான சர்வதேச சமூகத்தின் தொடர்ச்சியான கவனத்தினை சமிக்ஞையிடுதல், ஐ.நா.மனித உரிமைகள் பேரவை உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் பிரசன்னத்தை உறுதிப்படுத்தி தொடர்ச்சியான அறிக்கையிடலை மேற்கொள்வதற்கும் சாட்சியங்களை சேகரித்து பேணுதல், ஆகிய விடய ங்கள் தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவை உயர்ஸ்தானிகரின் அலுவலகத்தினை கோருவதற்கான புதிய தீர்மானமொன்றிற்கு ஆதரவினைப் பெற்றுக்கொள்வதற்காக நாம் மிகவும் கடினமாக செயற்பட்டு வருகின்றோம். இதுவரையிலான பொறுப்புக்கூறும் கடப்பாட்டின் பலாபலன்களை பாதுகாப்பதற்கு இது மிகவும் முக்கியமானதாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் பதவிக்கு கோவிந்தன் கருணாகரம் தெரிவு!

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் பதவிக்கு வாக்கெடுப்பில் வெற்றியீட்டிய கோவிந்தன் கருணாகரம் தெரிவு,

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் பொதுக்குழு கூட்டம் இன்று மாலை 2 மணியளவில் புதுக்குடியிருப்பு பகுதியில் ஆரம்பமானது,

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன்,வினோ நோகராதலிங்கம், கோவிந்தன் கருணாகரம் மற்றும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டு பொதுக்குழு கூட்டம் இடம்பெற்றது.

இதில் செயலாளர் பதவிக்கு கோவிந்தன் கருணாகரன் (ஜனா) மற்றும் கென்றி மகேந்திரன் ஆகியோர் இருவர் தெரிவு செய்யப்பட்ட நிலையில் இறுதியில் வாக்கெடுப்பில் வெற்றியீட்டிய பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் அவர்கள் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

புதுக்குடியிருப்பில் ரெலோ கட்சியின் மாவட்ட அலுவலகம் திறந்துவைப்பு!

தமிழ் ஈழ விடுதலைஇயக்கம் (ரெலோ) கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட அலுவலகம் 20.03.21 அன்று புதுக்குடியிருப்பில் திறந்துவைக்கப்பட்டுள்ளது.கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் அவர்களினால் கட்டத்தின் பெயர்பலகையினை திரைநீக்கம் செய்துவைத்துள்ளதுடன் கட்டத்தினை நாடாவெட்டி திறந்துவைத்துள்ளார்.

இதன்போது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன்,விநோநோகராதலிங்கம்,கோவிந்தன் கருணாகரம்,மற்றும் முன்னால் மாகாணசபை உறுப்பினர்கள் பிரதேச சபை உறுப்பினர்கள் கட்சியின் ஆதரவாளர்கள் என பெருமளவானவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார்கள்.

Posted in Uncategorized