வடக்கு கிழக்கு காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளால் ஐ.நா. ஆணையாளருக்கு கடிதம் அனுப்பிவைப்பு!

வடக்குக் கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களால், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட்டுக்கு கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

‘வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு விரைவான நீதி’ என்ற தலைப்பிடப்பட்டு இன்று (சனிக்கிழமை) இந்தக் கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இன்று கிளிநொச்சியில் தீச்சட்டிப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். இதன்பின்னர் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தினை அவர்கள் ஊடகங்களுக்கு வழங்கியிருந்தனர்.

குறித்த கடிதத்தில்,

20.02.2021

Hon.Ms.Michelle Bachelet Jeria.
The High Commissioner.
Human Rights Commission.
Geneva.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு விரைவான நீதி

வடக்குக் கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கபட்டோரின் உறவினர்களாகிய நாம் சர்வதேசத்திடம் நீதி கேட்டுப் போராடத் தொடங்கிய போராட்டம் இன்று ஐந்தாவது வருடத்தை எட்டுகின்றது. 1,462 நாட்காளாக தொடர்ந்து போராடும் நாங்கள் எங்களுடன் சேர்ந்து போராடத்தொடங்கிய 83 தாய் தந்தையினரின் இறப்பையும் தாங்கியவண்ணம்; தொடர்கின்றது. இப்போராட்டமானது எங்களுக்கு நீதி கிடைக்கும் வரை அல்லது எமது இறப்பு வரை தொடரும்.

சிறிலங்கா அரசின் கபடத்தனத்தைப் புரிந்துகொள்ளாத சர்வதேசம் எமது எதிர்ப்பையும் மீறி பொறுப்புக்கூறலுக்கான கால அவகாசங்களை நீடித்து சிறிலங்கா அரசிற்குத் துணைபோனது. சிறிலங்காவானது பொறுப்புக்கூறலுக்கான இணை அனுசரணையிலிருந்து தன்னிச்சையாக விலகியதுடன் “நாம் உள்ளகப் பொறிமுறையை மேற்கொள்வோம் உள்நாட்டுப் பிரச்சனையை நாமே தீர்த்துக்கொள்வோம்” என்று அறிவித்தவுடன் தான் சர்வதேசம் இலங்கையின் கபடத்தனத்தைப் புரிந்து கொண்டிருக்கின்றது.

எமதருமை உறவுகளான இளம்பிஞ்சுப் பாலகர்களும் மகன்களும், மகள்களும் கணவன்மார்களும், மதகுருக்களும், இளைஞர் யுவதிகளும் இறுதி யுத்தத்தின் முன்னரும் பின்னரும் அரசபடைகளினாலும் வெள்ளை வான்களினாலும் பாதுகாப்பு அரண் பகுதிகளிலும், கடலிலும், வீடுகளிற்கு நேரடியாக வந்தும் கைதுசெய்து கொண்டுபோனது மட்டுமல்லாது யுத்த இறுதி நாட்களில் விசாரணைக்காக அழைத்துச் சென்றவர்களையும், சரணடைந்தவர்களையும் இது நாள் வரை காணாது அவர்கள் நிலைகளை அறியாது வீதிகளில் அலைத்தழிக்கப்பட்டோம். 29 இற்கு மேற்பட்ட, பெற்றோருடன் சரணடைந்த, கைக்குழந்தைகள் மற்றும் சிறார்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டிருக்கின்றார்கள்.

இவர்களையும், இவர்களின் பெற்றோரையும் மற்றும் உறவுகளையும் தேடிப் போராடிவரும் நாங்கள் நாளுக்கு நாள் நலிவடைந்து வருகிறோம். இந்தச் சிறுவர்கள் செய்த குற்றம்தான் என்ன? தமிழனாகப் பிறந்ததா? இந்தப் பிள்ளைகளில் அக்கறை காட்ட எவரும் இல்லையா? சிறுவர்களின் நலனைப் பாதுகாக்கவென உருவாக்கப்பட்ட Save the Children, Children Fund, UNICEF என்பவற்றிற்கும் இவை தெரியாதா? இதுவரை இந்தச் சிறுவர்கள் பற்றி எவராவது அக்கறை கொண்டார்களா? உலகிலே மனிதம் மரணித்து விட்டதா?

யுத்தம் முடிவடைந்த பின் கையிலே ஒப்படைக்கப்பட்டவர்கள் போரிலே கொல்லப்பட்டுவிட்டார்கள் என்று நாட்டின் ஜனாதிபதி தொடக்கம் பாராளுமன்ற உறுப்பினர்கள்வரை காணாமல் ஆக்கப்பட்டவர்கள் என்று எவரும் இல்லைஇ அனைவரும் போரில் கொல்லப்பட்டுவிட்டார்கள் என்று சொல்கிறார்கள். யுத்தம் முடிவடைந்த பிற்பாடு கையளிக்கப்பட்டவர்களும் சரணடைந்தவர்களும் எப்படி யுத்தத்தில் கொல்லப்படுவார்கள்? உயிர் வாழும் சாட்சியங்களாக நாம் இருக்கும் போது, சிறிலங்கா அரசானது தொடர்ச்சியாக பொய் உரைப்பதின் காரணம் என்ன? தொடர்ச்சியாக எமது உறவுகளை எம்மிடமிருந்து பிரித்து வைப்பதற்காகவா?

ஐ.நா.மனித உரிமை ஆணையாளரால் பாராட்டப்பட்ட OMP சாதித்தது என்ன? கலந்தாலோசனைச் செயலணியின் பரிந்துரைகள் எவற்றையுமே உள்வாங்காமல் தன்னிச்சையாக ஸ்தாபிக்கப்பட்ட OMP யிற்கு செயல்திறன் அறவே இல்லை. எமது எட்டு மாவட்டத்தின் பிரதிநிதிகள் அடங்கிய குழு 17.10.2019 அன்று OMP ஆணையாளரிடம் வலுவான சாட்சிகள், ஆதாரங்கள் உள்ள ஐந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விபரங்களைக் கையளித்திருந்தது. அதில் ஒன்றுக்காவது மூன்று மாதத்திற்குள் தீர்வைக் கண்டு தந்தால் நாம் OMP-ஐ ஏற்றுக்கொள்கிறோம் என்று தெரிவித்திருந்தோம்.

21 மாதங்கள் கடந்தும் கூட அவர்களால் ஒப்புக்கொண்டபடி நிருபிக்க முடியவில்லை என்றால் OMP-ஐ செயல்திறன் அற்றது என நிராகரிப்பதற்கு இதைவிட வேறு என்ன ஆதாரம் வேண்டும்.? OMP சிங்கள அரசின் ஒரு கண்துடைப்பு ஆணைக்குழுவாகவே இயங்குகின்றது. ஒரு முன்னாள் இராணுவ அதிகாரி உட்பட பெரும்பான்மையாக சிங்கள ஆணையாளர்களை கொண்ட OMP ஒருபோதும் எமது பிரச்சனைக்கு தீர்வாக அமையாது என்பதை நிரூபித்துள்ளது. அத்துடன் எமது பிரச்சனைக்கான தீர்வு உள்ளுர் பொறிமுறைகளில் இல்லை என்பதையும் தொடர்ச்சியாக நிறுவி வருகின்றது.

ஐ.நா ஆணையாளர் தனது அறிக்கையில் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் (ICC) பாரப்படுத்துவது தொடர்பில் குறிப்பிட்டுள்ளார். இதனை நாம் வரவேற்பதுடன், இணைத்தலைமை நாடுகளான பிரித்தானியா, கனடா, ஜெர்மனி, மொண்டினிகிக்றோ, வட மாசடோனிய ஆகிய நாடுகளிடம், நீங்கள் சமர்ப்பிக்கும் வரைவில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றதிற்கான (ICC) பரிந்துரையை உட்படுத்துமாறு பாதிக்கப்பட்ட தரப்பாக வேண்டி நிற்கின்றோம்.

கடந்த பெப்ரவரி 3ம் திகதி தொடங்கி 7ம் திகதி முடிவுற்ற பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் எழுச்சிப் பேரணியில் கலந்து கொண்ட சுமார் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கூட்டம் சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்குப் பாரப்படுத்துவதை வலியுறுத்தியவர்களே. எனவே இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் பாரப்படுத்தி எமக்கான நீதியைப் பெற்றுத்தர சர்வதேசமும் ஐ.நாவும் விரைந்து செயற்படவேண்டும் என்பதே எமது வேண்டுகோள். எமது உறவுகளைத் தேடும் போராட்டம் கூட அடக்குமுறைக்குள் உள்ளாக்கப்பட்டு மன உளைச்சலுக்குள்ளாகியிருக்கின்றோம்.

கோவிட்-19ஐக் காரணம் காட்டி எம்மை ஒன்றுகூட விடாது தடுக்கின்றனர். மீறினால் தனிமைப்படுத்தல் என்று அச்சுறுத்துகின்றனர். நினைவுகூரல், தன்னெழுச்சிப் போராட்டங்களுக்குக் கலந்துகொள்ள தடைவிதித்து நீதிமன்ற உத்தரவைப் பெற்று வழங்குகின்றனர். அதற்கு மேலாக காரணம் எதுவுமின்றி பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் கொழும்புக்கு விசாரணைக்கு வருமாறு பணிக்கின்றர்கள். இதனாலே எமக்கு மன உளைச்சல் அதிகரிக்கின்றது.

இதற்கெல்லாம் காரணமாக இருப்பது இந்தப் போராட்டத்தைப் பயங்காட்டி நிறுத்த வேண்டும் என்ற நோக்கமே. தொடர்ச்சியாக இராணுவமயப்படும் தற்போதைய சிறிலங்கா ஆட்சி அதிகாரம், சிவில் நிர்வாகங்களை இனவழிப்பிலும், போர்குற்றங்களிலும் ஈடுபட்ட இராணுவ அதிகாரிகளை கொண்டு நிரப்பி வருகின்றது. இதன் மூலம் தமிழ் மக்களின் வாழ்வியலுக்கு தொடர்ச்சியாக அச்சுறுத்தல்களை விடுப்பத்துடன் ஜனநாயக வெளிகளை ஒடுக்கி வருகின்றது.

உதாரணமாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரான முன்னாள் கடற்படை அட்மிரல் பொது ஊடகங்களில் தமிழர் விரோத இனவாதத்தை கக்குவதுடன், ஜனநாயக போராட்டங்களில் ஈடுபடும் தமிழர்களை மட்டும் நோக்கி நேரடியாகவே அச்சுறுத்தல் விடுகின்றார். ஆகவே இவரால் வழிநடத்தப்படும் சிறிலங்கா போலீசாரும், மற்றய அரச படைகளும் எவ்வாறு நடந்து கொள்வார்கள் என்பதை சர்வதேசம் உன்னிப்பாக கரிசனை செலுத்த வேண்டும்.

எனவே நாம் சர்வதேச சமூகத்திடமும் ஐ.நாவிடமும் கோருவதாவது, எமது உறவுகளுக்கான நீதி விரைவாகக் கிடைக்க வேண்டும். அதற்கு ஏதுவாக இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு (ICC) பாரப்படுத்த வேண்டும். உறவுகளைத் தேடும் எமக்கு அரச புலனாய்வினரால் விடுக்கப்படும் அச்சுறுத்தல்கள் நிறுத்தப்பட்டு எமது பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படவேண்டும் என்பதாகும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசாங்கம் விவசாயிகளின் தேவைகளை பூர்த்தியாக்கிய பின் நெல்லை கொள்வனவு செய்வது பொருத்தமாக இருக்கும் – ரெலோ தலைவர் செல்வம் எம்.பி

விவசாயிகள் தொடர்ந்தும் பல்வேறு அசௌகரியங்களுக்கும், அழிவுகளுக்கும் முகம் கொடுத்து வருகின்ற நிலையில் விவசாயிகளுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் அரசாங்கம் செய்து கொடுத்த பின் விவசாயிகளிடம் இருந்து தேவையான நெல்லை கொள்வனவு செய்வது பொருத்தமாக இருக்கும் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

மன்னாரில் இன்று சனிக்கிழமை(20.02.2021)காலை இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் அவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

விவசாயிகள் அனைவரும் இரவு பகல் பாராமல் தூக்கத்தை தொலைத்து, கடன் பட்டு நகைகளை அடகு வைத்து விவசாயத்தை மேற்கொண்டு வருகின்றார்கள். இவர்களிடம் உரமானியத்தை காரணம் காட்டி குறிப்பிட்ட அளவு நெல் கொள்வனவு செய்வது விவசாயிகளை மீண்டும் எழ்மை நிலைக்கு தள்ளி விடும் செயற்பாடாகும்.

விவசாயிகளின் நலனில் அக்கறை இருந்தால் உரமானியத்தை காரணம் காட்டி அவர்களிடமிருந்து நெல் கொள்வனவு செய்வது தற்போது கைவிடப்பட வேண்டும். ஏனெனில் விவசாய பயிர்ச் செய்கையின் ஆரம்ப காலங்களில் பெய்த மழை காரணமாக அதிக அளவில் அழிவுகளும் இழப்புக்களும் விவசாய செய்கைக்கு ஏற்பட்டுள்ளது.

-எதிர்பார்த்த அளவில் விளைச்சலும் இல்லை. நெல் சந்தைப்படுத்தல் சபை கேட்பது போல் காய வைக்கும் அளவிற்கு தள வசதிகள் இல்லை. அதிகளவான விவசாயிகள் வீதி ஓரங்களிலே நெல்லை காய வைக்கும் நிலையை நாங்கள் பார்க்கின்றோம்.

அத்துடன் அதிகளவான நெல்லை பாதுகாத்து வைக்கும் களஞ்சியங்கள் இல்லை. மேலும் விவசாயிகள் நெல் வைக்கப்பட்ட இடத்திலிருந்து நெல் கொடுக்கப்படும் இடங்கள் வெகு தூரத்தில் உள்ளது.

இதனால் போக்குவரத்து செலவு இரட்டிப்பாகின்றது. இதே நேரம் தனியார் அறுவடை செய்யும் வயல் அருகில் வந்து பச்சையாக நெல் கொள்வனவு செய்வதால் விவசாயிகளின் சுமை ஓரளவிற்கேனும் குறைக்கப்படுவதாக பெருமளவிலான விவசாயிகள் தெரிவிக்கின்றார்கள்.

எனவே விவசாயிகளுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுத்த பின் விவசாயிகளிடம் இருந்து தேவையான நெல்லை கொள்வனவு செய்வது பொருத்தமாக இருக்கும்.என அவர் மேலும் தெரிவித்தார்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தீச்சட்டி ஏந்தி போராட்டம்

வடக்கு கிழக்கு வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்று காலை ஒன்பது மணிக்கு தீச் சட்டி போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கறுத்த ஆடைகளை அணிந்து சர்வதேசமே இலங்கை அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் பாரப்படுத்து என்ற பிரதான கோசமாக முன் வைத்து போராட்டத்தை மேற்கொண்டிருந்தனர்.

இப்போராட்டமானது கிளிநொச்சி பிள்ளையார் ஆலய முன்றலில் ஆரம்பமாகி ஏ -9 வீதி வழியாக கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் வரை சென்றடைந்தது.

வடக்கு கிழக்கு விலந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கிளிநொச்சி மாவட்டத்தில் தொடர் கவன ஈர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்து இன்றுடன் (20.02.2021) நான்கு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் தீச்சட்டி போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்

உண்மைக்கு நீதிக்குமான குறித்த போராட்டம் சர்வதேசத்தின் ஊடாக நீதியை பெற்றுக்கொள்வதற்காக தொடர் போராட்டத்தை ஆரம்பித்திருந்தோம். எங்களுடைய உறவுகள் எமக்கு கிடைக்கும்வரையும், அவர்களிற்கான நீதி கிடைக்கும்வரையிலும் நாம் எமது போராட்டத்தை கைவிடப்போதில்லை என சங்கத்தின் தலைவி கனகரஞ்சினி தெரிவித்தார்.

Posted in Uncategorized

தமிழ் தேசியக் கூட்டமைப்பும் முஸ்லிம் காங்கிரஸூம் புதிய அரசியலமைப்பிற்கான யோசனைகளை முன்வைத்தன

புதிய அரசியலமைப்பைத் தயாரிப்பதற்காக கருத்துக்களைக் கேட்டறியும் நிபுணர் குழுவிடம் இன்று பல கட்சிகள் தமது யோசனைகளை முன்வைத்துள்ளன.

புதிய அரசியலமைப்பைத் தயாரிப்பதற்காக கருத்துக்களைக் கேட்டறியும் நிபுணர் குழு, பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்றும் கூடியது.

இதன்போது, தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமது யோசனைகளை முன்வைத்துள்ளது.

கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் உள்ளிட்ட சிலர் அங்கு சென்றிருந்தனர்

இதேவேளை, ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸூம் புதிய அரசியலமைப்பு தொடர்பிலான தமது நிலைப்பாட்டை இன்று நிபுணர் குழுவிடம் தெரிவித்துள்ளது.

கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் உள்ளிட்ட சிலர் இன்று அங்கு சென்றிருந்தனர்.

இலங்கை தொடர்பான தீர்மானத்தின் உத்தேச வரைவு!

இலங்கை தொடர்பான தீர்மானத்தின் உத்தேச வரைவு சர்வதேச நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் உள்ளடக்கங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த வரைவில் தமிழர் தரப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சர்வதேச நீதிமன்றம் தொடர்பான விடயங்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை.

தீர்மானத்தின் வடிவம்.

இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை ஊக்குவித்தல்

மனித உரிமைகள் பேரவை

பிபி 1: ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தின் நோக்கங்கள் மற்றும் கொள்கைகளால் வழிநடத்தப்பட்டு, மனித உரிமைகளுக்கான உலகளாவிய பிரகடனத்தை மீண்டும் உறுதிப்படுத்துதல் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கைகள் மற்றும் பிற தொடர்புடைய கருவிகளை நினைவுபடுத்துதல்,

பிபி 2: இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவது தொடர்பான மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்களை 19/2, 22/1 25/1, 30/1, 34/1 மற்றும் 40/1 நினைவு கூர்ந்து.

பிபி 3: இலங்கையின் இறையாண்மை, சுதந்திரம், ஒற்றுமை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு ஆகியவற்றுக்கான அதன் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறது,

பிபி 4: ஒவ்வொரு மாநில மரியாதையின் முதன்மை பொறுப்பு, மனித உரிமைகளை மேம்படுத்துதல் மற்றும் நிறைவேற்றுவதுடன், அனைத்து மனித உரிமைகள் மற்றும் அதன் முழு மக்கள்தொகையின் அடிப்படை சுதந்திரங்களையும் முழுமையாக அனுபவிப்பதை உறுதிசெய்து,

பிபி 5: இலங்கையில் அதிக உயிரிழப்புகள் மற்றும் காயங்களை ஏற்படுத்திய ஏப்ரல் 2019இல் நிகழ்ந்த பயங்கரவாத செயல்கள் தொடர்பில் கண்டறிதல்.

பிபி 6: நவம்பர் 2019 மற்றும் ஆகஸ்ட் 2020 இல் சுதந்திரமான மற்றும் வெளிப்படையான ஜனநாயகத் தேர்தல்களை நடத்தியதை ஒப்புக்கொள்வது,

பிபி 7: இலங்கை அரசியலமைப்பின் 20ம் திருத்தத்தை நிறைவேற்றுவதையும் செயல்படுத்துவதையும் கவனத்தில் எடுத்துக்கொள்வதுடன், ஜனநாயக நிர்வாகத்தின் முக்கியத்துவத்தையும் முக்கிய நிறுவனங்களின் சுயாதீன மேற்பார்வையையும் வலியுறுத்துகிறது,

மேலும் மாகாண சபைகளுக்கான தேர்தல்களை நடத்துதல் உள்ளிட்ட உள்ளாட்சி நிர்வாகத்தை மதிக்க அரசாங்கத்தை ஊக்குவித்தல், இலங்கை அரசியலமைப்பின் 13வது திருத்தத்தின் மூலம் அனைத்து மாகாண சபைகளும் திறம்பட செயல்பட முடியும்,

பிபி 8: அமைதியான மற்றும் ஒருங்கிணைந்த நாட்டில், மதம், நம்பிக்கை அல்லது இன தோற்றம் போன்ற எந்த வேறுபாடும் இல்லாமல் அனைத்து இலங்கையர்களும் தங்கள் மனித உரிமைகளை முழுமையாக அனுபவிக்க உரிமை உண்டு என்பதை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

பிபி 9: உள்கட்டமைப்பை புனரமைத்தல், பணமதிப்பிழப்பு செய்தல், உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களை மீளக்குடியமர்த்தல் மற்றும் வாழ்வாதாரங்களை மேம்படுத்துவதில் இலங்கை அரசு மேற்கொண்ட முன்னேற்றத்தை ஒப்புக்கொள்வது, இந்த பகுதிகளில் மேலும் முயற்சிகளை ஊக்குவித்தல்,

பிபி 10: திறன் மேம்பாடு மற்றும் தொழில்நுட்ப உதவிகளில் மனித உரிமைகள் ஆணைகள் மற்றும் வழிமுறைகள் உள்ளிட்ட ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அதன் முகவர்களின் உதவியைப் பெற இலங்கை அரசாங்கத்தின் தொடர்ச்சியான உறுதிப்பாட்டை வரவேற்கிறது.

பிபி 11: பயங்கரவாதத்தை எதிர்ப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் சர்வதேச சட்டத்தின் கீழ், குறிப்பாக சர்வதேச மனித உரிமைச் சட்டம், சர்வதேச அகதிகள் சட்டம் மற்றும் சர்வதேச மனிதாபிமானச் சட்டத்தின் கீழ் மாநிலங்களின் கடமைகளுக்கு இணங்க வேண்டும் என்பதையும் மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

பிபி 12: பொறுப்புணர்வை உறுதிப்படுத்துவதற்கும், நீதிக்கு சேவை செய்வதற்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கு தீர்வுகளை வழங்குவதற்கும், மனித உரிமை மீறல்கள் மீண்டும் வருவதைத் தவிர்ப்பதற்கும், நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதற்கும், கடந்த காலத்தை கையாள்வதற்கான ஒரு விரிவான அணுகுமுறையின் முக்கியத்துவத்தை வலியுறுத்துதல்.

பிபி 13: கடந்தகால துஷ்பிரயோகங்கள் மற்றும் மீறல்கள் ஆகியவற்றை சுயாதீனமான, பக்கச்சார்பற்ற மற்றும் வெளிப்படையானதாக இருக்கும்போது சிறந்த முறையில் நிவர்த்தி செய்வதை அங்கீகரித்தல்; பாதிக்கப்பட்டவர்கள், பெண்கள், இளைஞர்கள், பல்வேறு மதங்கள், இனங்கள் மற்றும் பிரதிநிதிகள் மற்றும் ஓரங்கட்டப்பட்ட குழுக்களின் மக்கள் உள்ளிட்ட அனைத்து தொடர்புடைய பங்குதாரர்களின் பார்வைகளையும் உள்ளடக்கிய ஆலோசனை மற்றும் பங்கேற்பு முறைகளைப் பயன்படுத்துங்கள்.

பிபி 14: மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் கடுமையான மீறல்களுக்கு காரணமானவர்கள் மீது வழக்குத் தொடர அவர்களின் பொருத்தமான கடமைகளுக்கு இணங்க பொறுப்பை நினைவுபடுத்துதல்,

பிபி 15: இலங்கையில் மனித உரிமைகள் மற்றும் உண்மை, நீதி, நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கும் பாதுகாப்பதற்கும் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் அலுவலகத்தின் பணிகள் பாராட்டுதலுடன் குறிப்பிடுகின்றன.

OP1: ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகர் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அதன் 43வது அமர்வில் வழங்கிய வாய்வழி புதுப்பிப்பு மற்றும் மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகராலயத்தின் அலுவலக அறிக்கையை அதன் 46வது அமர்வில் வரவேற்கிறது;

OP2: இலங்கை அரசாங்கத்திற்கும் 2015 மற்றும் 2019 க்கு இடையில் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் அலுவலகத்திற்கும் இடையிலான நேர்மறையான ஈடுபாட்டை வரவேற்கிறது,

இதுபோன்ற ஈடுபாட்டைத் தொடர வலியுறுத்துகிறது மற்றும் மனித உயர் ஸ்தானிகர் அலுவலகத்தின் பரிந்துரைகளை அமல்படுத்த இலங்கைக்கு அழைப்பு விடுக்கிறது

OP3: காணாமல்போனோர் அலுவலகம் மற்றும் இழப்பீடுகளுக்கான அலுவலகம் அடைந்த முன்னேற்றத்தை ஒப்புக்கொள்கிறது மற்றும் இந்த நிறுவனங்களுக்கு ஆதரவைப் பேணுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது, அவற்றின் சுயாதீனமான மற்றும் பயனுள்ள செயல்பாட்டைப் பாதுகாத்தல், இரு அலுவலகங்களுக்கும் போதுமான கட்டளைகளையும் தொழில்நுட்ப வழிகளையும் வழங்குவதன் மூலம் அவர்களின் ஆணைகளை திறம்பட நிறைவேற்ற அனுமதிக்கிறது, அவற்றை அனுமதிக்கிறது பாதிக்கப்பட்ட பாதிக்கப்படக்கூடிய குடும்பங்களுக்கான இடைக்கால நிவாரண நடவடிக்கைகளை, பாலின கவனம் செலுத்துவதோடு, காணாமல் போனவர்களின் குடும்பங்கள் அவர்களின் தலைவிதியையும், இருக்கும் இடத்தையும் அறிந்து கொள்ளும் வகையில் பலவிதமான காணாமல் போன வழக்குகளைத் தீர்ப்பது;

OP4: செப்டம்பர் 2015 OISL அறிக்கையில் சிறப்பிக்கப்பட்டுள்ளபடி, தமிழீழ விடுதலைப் புலிகள் உட்பட இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட அனைத்து மீறல்கள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கும் ஒரு விரிவான பொறுப்புக்கூறல் செயல்முறையின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது;

OP5: உள்நாட்டு பொறிமுறைகள் மூலம் பொறுப்புணர்வின் தொடர்ச்சியான குறிப்பைக் குறிப்பிடுகிறது மற்றும் உள்நாட்டு விசாரணை ஆணையம் 22 ஜனவரி 2021 அன்று அறிவித்தது. சுதந்திரம் மற்றும் கடந்தகால மனித உரிமை மீறல்களுக்கு அல்லது சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் கடுமையான மீறல்களுக்கு பொறுப்புக்கூறலைத் தொடர ஒரு ஆணையும் இல்லை.

OP6: பொறுப்புணர்வை முன்னெடுக்கும் நோக்கில் இலங்கையில் மனித உரிமை மீறல்கள் மற்றும் அது தொடர்பான ஆதாரங்களை பாதுகாத்தல் மற்றும் பகுப்பாய்வு செய்வதன் முக்கியத்துவத்தை அங்கீகரிக்கிறது, தகவல் மற்றும் ஆதாரங்களை ஒருங்கிணைப்பதற்கும் பகுப்பாய்வு செய்வதற்கும் பாதுகாப்பதற்கும் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் அலுவலகத்தின் திறனை வலுப்படுத்த முடிவு செய்கிறது.

மனித உரிமைகள் மீறல்கள் அல்லது சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் கடுமையான மீறல்களுக்கான எதிர்கால பொறுப்புக்கூறல் செயல்முறைகளுக்கான சாத்தியமான உத்திகளை உருவாக்குதல், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிர் பிழைத்தவர்களுக்காக வாதிடுவது மற்றும் உறுதியான அதிகார வரம்புடன் உறுப்பு நாடுகளில் தொடர்புடைய நீதித்துறை நடவடிக்கைகளை ஆதரித்தல்;

OP7: கடந்த கால போக்குகள் குறித்த வெளிப்படையான அக்கறை, இது இலங்கையில் மோசமடைந்து வரும் மனித உரிமை நிலைமைகளின் தெளிவான எச்சரிக்கை அறிகுறிகளைக் குறிக்கிறது, இதில் சிவில் அரசாங்க செயல்பாடுகளை விரைவாக இராணுவமயமாக்குதல், நீதித்துறையின் சுதந்திரம் மற்றும் பதவி உயர்வுக்கு பொறுப்பான முக்கிய நிறுவனங்கள் மனித உரிமைகளைப் பாதுகாத்தல், குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கான பொறுப்புக்கூறலுக்கான அரசியல் தடைகள், “அடையாள வழக்குகளில்”, மதம் அல்லது நம்பிக்கையின் சுதந்திரத்திற்கான உரிமையை மோசமாக பாதிக்கும் கொள்கைகள், சிவில் சமூகத்தின் கண்காணிப்பு மற்றும் அச்சுறுத்தல் மற்றும் ஜனநாயக இடத்தை சுருக்கி, தன்னிச்சையான தடுப்புக்காவல்கள் , சித்திரவதை மற்றும் பிற கொடூரமான, மனிதாபிமானமற்ற இழிவான அல்லது தண்டனை மற்றும் பாலின மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறைகள் பற்றிய குற்றச்சாட்டுகள், மேலும் இந்த போக்குகள் சமீபத்திய ஆண்டுகளில் செய்யப்பட்ட வரையறுக்கப்பட்ட ஆனால் முக்கியமான ஆதாயங்களை மாற்றியமைக்க அச்சுறுத்துகின்றன மற்றும் கொள்கைகள் மற்றும் நடைமுறைகள் மீண்டும் மீண்டும் நிகழும் அபாயத்தை ஏற்படுத்துகின்றன.

COVID-19 தொற்றுநோய் மதம் அல்லது நம்பிக்கையின் சுதந்திரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது மற்றும் முஸ்லிம் சமூகம் அனுபவிக்கும் ஓரங்கட்டப்படுதல் மற்றும் பாகுபாட்டை அதிகப்படுத்தியுள்ளது என்பதையும், COVID-19 இலிருந்து இறந்த அனைவருக்கும் தகனங்களை கட்டாயப்படுத்த இலங்கை அரசு எடுத்த முடிவையும் OP8 மேலும் வெளிப்படுத்துகிறது. முஸ்லிம்களையும் பிற மதங்களின் உறுப்பினர்களையும் தங்களது சொந்த அடக்கம் செய்யும் மத சடங்குகளை செய்வதிலிருந்து தடுத்துள்ளது, மேலும் மத சிறுபான்மையினரை அளவுக்கு மீறி பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது மற்றும் துன்பம் மற்றும் பதட்டங்களை அதிகப்படுத்தியுள்ளது.

OP9: உடனடி, முழுமையான மற்றும் பக்கச்சார்பற்ற விசாரணையை உறுதி செய்ய இலங்கை அரசாங்கத்திடம் அழைப்பு விடுக்கிறது, உத்தரவாதம் அளிக்கப்பட்டால், மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் கடுமையான மீறல்கள் தொடர்பான அனைத்து குற்றச்சாட்டுகளையும் வழக்குத் தொடரவும், நீண்டகால அடையாளச் சின்ன வழக்குகள் உட்பட,

OP10: தேசிய மனித உரிமைகள் ஆணையம், காணாமல்போனோர் அலுவலகம் மற்றும் இழப்பீடு வழங்குவதற்கான அலுவலகம் ஆகியவற்றின் திறம்பட மற்றும் சுயாதீனமான செயல்பாட்டை உறுதிப்படுத்த இலங்கை அரசாங்கத்தையும் கோருகிறது;

OP11: சிவில் சமூக செயற்பாட்டாளர்களை பாதுகாக்கவும், எந்தவொரு தாக்குதல்களையும் விசாரிக்கவும், சிவில் சமூகம் தடையின்றி, பாதுகாப்பின்மை மற்றும் பழிவாங்கல்களிலிருந்து விடுபடக்கூடிய பாதுகாப்பான மற்றும் செயல்படுத்தக்கூடிய சூழலை உறுதிசெய்யவும் இலங்கை அரசாங்கத்தின் மீது மேலும் அழைப்பு விடுக்கிறது;

OP12: பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை இலங்கை அரசு மறுஆய்வு செய்யுங்கள், பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கான எந்தவொரு சட்டமன்றமும் அதன் சர்வதேச மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான சட்டக் கடமைகளுக்கு இணங்குவதை உறுதிசெய்க;

OP13: அனைத்து மத சமூகங்களும் தங்கள் மதத்தை வெளிப்படுத்தும் திறனை ஊக்குவிப்பதன் மூலம் மத சுதந்திரத்தையும் பன்மைத்துவத்தையும் வளர்க்கவும், சமூகத்திற்கு வெளிப்படையாகவும் சமமாகவும் பங்களிக்கவும் இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்துகிறது;

OP14: நிலுவையில் உள்ள கோரிக்கைகளுக்கு முறையாக பதிலளிப்பது உட்பட சிறப்பு நடைமுறைகள் கட்டளைதாரர்களுடன் தொடர்ந்து ஒத்துழைக்க இலங்கை அரசை ஊக்குவிக்கிறது;

OP15: இலங்கை அரசாங்கத்தின் ஆலோசனையுடனும் மேற்கூறிய நடவடிக்கைகளைச் செயல்படுத்த ஆலோசனை மற்றும் தொழில்நுட்ப உதவிகளையும் வழங்க உயர் ஸ்தானிகர் அலுவலகம் மற்றும் தொடர்புடைய சிறப்பு நடைமுறைகளை வைத்திருப்பவர்களை ஊக்குவிக்கவும்.

OP16: இலங்கையில் மனித உரிமைகள் நிலைமை, அதன் முன்னேற்றம் மற்றும் பொறுப்புக்கூறல் உள்ளிட்ட கண்காணிப்பு மற்றும் அறிக்கையிடலை மேம்படுத்தவும், மனித உரிமைகள் பேரவையில் அதன் 49வது அமர்வில் எழுதப்பட்ட புதுப்பிப்பை முன்வைக்கவும், ஒரு விரிவான அறிக்கையும் உட்பட உயர் ஸ்தானிகர் அலுவலகத்தை கோருகிறது. அதன் 51வது அமர்வில் பொறுப்புணர்வை மேம்படுத்துவதற்கான கூடுதல் விருப்பங்கள், இரண்டும் ஊடாடும் உரையாடல்களில் விவாதிக்கப்பட வேண்டும் என அவ் உத்தேச வரைபில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

சிறுபான்மையினருக்கு எதிரான அடக்குமுறையை இலங்கை உடனடியாக நிறுத்த வேண்டும் – ஐ.நா.முன்னாள் அதிகாரிகள், மனித உரிமை அமைப்புக்கள்

பயங்கரவாதத்தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகத்தின் மீது பிரயோகிக்கப்படும் அடக்குமுறைக் கொள்கைகளை இலங்கை அரசாங்கம் உடனடியாக நிறுத்தவேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் அதிகாரிகள் மற்றும் மனித உரிமை அமைப்புக்களின் பிரதிநிதிகள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் வன்முறைகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் ஆகியவற்றை முடிவிற்குக் கொண்டுவந்து நீதி மற்றும் பொறுப்புக்கூறலை நிலைநாட்டுவதற்கான நடவடிக்கைகளை சர்வதேச சமூகம் விரைந்து மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தி ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் அதிகாரிகள் மற்றும் விசேட நிபுணர்கள் இணைந்து கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

நீதி மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றை உறுதிப்படுத்துவதில் இலங்கையின் மந்தகரமான செயற்பாடுகள் தொடர்பில் அண்மையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் மீண்டும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஆணையாளரின் அறிக்கை குறிப்பாக சில முக்கிய விடயங்கள் தொடர்பில் கரிசனையை வெளிப்படுத்தியிருக்கிறது.

போர்க்குற்றங்களை புரிந்ததாக ஏற்கனவே ஐக்கிய நாடுகள் சபையினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் பெயரிடப்பட்ட இராணுவ அதிகாரிகளுக்குப் பதவியுயர்வுகள் வழங்கப்படல் உள்ளடங்கலாக சிவில் அரச நிர்வாகத்தில் அதிகரித்து வரும் இராணுவமயமாக்கம், சுயாதீன நீதித்துறையில் தலையீடுகள் மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழு, பொலிஸ் ஆணைக்குழு உள்ளடங்கலாக அரசியலமைப்பின் ஊடாக உருவாக்கப்பட்ட கட்டமைப்புக்கள் வலுவிழக்கச்செய்யப்பட்டுள்ளமை, மனித உரிமை மீறல் குற்றங்கள் தொடர்பில் நீதியை நிலைநாட்டுவதற்கான விசாரணைகளில் புதிய அரசியல் தலையீடுகள் ஏற்படல், சிறுபான்மை தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களை இலக்குவைத்து மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள், சிவில் சமூக அமைப்புக்கள் மீதான அநாவசியமான கண்காணிப்புக்கள் ஆகிய விடயங்கள் தொடர்பில் விசேடமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இத்தகைய சம்பவங்கள் மீள நிகழாதிருப்பதை உறுதிப்படுத்துவதே ஆணையாளரால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் நோக்கமாக இருப்பது பாராட்டப்பட வேண்டியதாகும். கடந்த 2009 ஆம் ஆண்டில் இலங்கை தொடர்பில் செயலாற்றுவதற்கு சர்வதேச சமூகம் தவறிவிட்டது.

எனினும் நாம் மீண்டும் தோற்கக்கூடாது. இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்கான நீதியையும் பொறுப்புக்கூறலையும் உறுதிசெய்யும் நோக்கில் கடந்த 2015 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் 30 1 தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அந்தத் தீர்மானத்தில் உள்ளடக்கப்பட்ட விடயங்களை அமுல்படுத்துவதென்பது சற்று மந்தகரமான முறையில் இடம்பெற்றாலும் குறிப்பாக காணாமல்போனோர் பற்றிய அலுவலகம், இழப்பீட்டுக்கான அலுவலகம் ஆகியவை ஸ்தாபிக்கப்பட்டன.

எனினும் உண்மைக்கான அலுவலகம் மற்றும் சர்வதேச குற்றங்களை விசாரணை செய்வதற்கான நீதிமன்றம் என்பன ஸ்தாபிக்கப்படும் என வாக்குறுதியளிக்கப்பட்டிருந்தாலும், அவை நடைமுறைப்படுத்தப்படவில்லை. எனினும் பொறுப்புக்கூறவேண்டிய அவசியத்தை ஏற்படுத்தும் குற்றங்கள் எதனையும் இலங்கை மேற்கொள்ளவில்லை என்று கூறி, ஏற்கனவே உடன்பட்ட கடப்பாடுகளைத் தற்போதைய அரசாங்கம் நிராகரித்துள்ளது.

அதுமாத்திரமன்றி மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஏற்கனவே இடம்பெற்றுவரும் விசாரணைகள் பூர்த்தியடைவதற்கு முன்னரே, கடந்தகால விசாரணை அறிக்கைகள் மற்றும் பரிந்துரைகள் தொடர்பில் ஆராய்வதற்கென ஜனாதிபதி விசேட ஆணைக்குழுவொன்றை நியமித்துள்ளார்.

இந்நிலையில் குறிப்பாக பயங்கரவாதத்தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி சிறுபான்மை தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகத்தின் மீது பிரயோகிக்கப்படும் அடக்குமுறைக் கொள்கைகளை நிறுத்துமாறு ஏற்கனவே வலியுறுத்தப்பட்டுள்ளமையை நாம் மீள நினைவுறுத்துகின்றோம் என்று அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் கொலம்பியாவின் முன்னாள் ஜனாதிபதியும் அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றவருமான ஜுவான் மனுவேல் சான்ரோஸ், ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பிரதி பொதுச்செயலாளர் ஜான் எலியசன், அயர்லாந்தின் முன்னாள் ஜனாதிபதி மேரி ரொபின்சன், முன்னாள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை, முன்னாள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல்-ஹுசைன் உள்ளிட்ட 18 பேர் கையெழுத்திட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

ஜெனிவாவில் ஆதரவைக் கேட்டு இலங்கை, மோடிக்கு கடிதம் – இதுவரை பதில் இல்லை

மனித உரிமைகள் பேரவையின் 46 வது மாநாட்டில், இலங்கைக்கு ஆதரவு வழங்குமாறு கோரி, வெளிவிவகார அமைச்சு மூலமாக இந்தியப் பிரதமர் மோடிக்கு, கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு தேவையான ஒத்துழைப்பை, வழங்குமாறு அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், இதுவரை இந்திய அரசாங்கத்திடம் இருந்தோ, அல்லது பிரதமர் மோடி அல்லது இந்திய வெளிவவிகார அமைச்சிடமிருந்தோ எந்தவித பதிலும் கிடைக்கவில்லை என, இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Posted in Uncategorized

பாகிஸ்தான் பிரதமரின் பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் இலங்கை வருகை

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை இலங்கைக்கு 2 நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பாகிஸ்தான் பிரதமரை வரவேற்பதற்காக விசேட இராணுவ மரியதை அணிவகுப்பு நடத்தப்படவுள்ளது. இதுதொடர்பான ஒத்திகை நிகழ்வு கட்டுநாயக்க விமான நிலையத்தில் தற்போது இடம்பெறுகின்றது.

சுற்றுலா துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இன்று அங்கு சென்று ஒத்திகை நிகழ்வு வேலைத்திட்டத்தை பார்வையிட்டார்.

பாகிஸ்தான் பிரதமரின் விஜய செயற்பாடுகளுக்காக இலங்கை வந்துள்ள பாகிஸ்தான் பாதுகாப்பு மற்றும் அரச அதிகாரிகளுடன் அமைச்சர் இன்று கலந்துரையாடினார்.

Posted in Uncategorized

பாரதிய ஜனதா கட்சியின் இலங்கை பிரதிநிதிகளாக தமிழ் தேசிய கூட்டமைப்பினர் உருவாகலாம்

பாரதிய ஜனதா கட்சியின் இலங்கை பிரதிநிதிகளாக தமிழ் தேசிய கூட்டமைப்பினர் உருவாகலாம். விடுதலைப் புலிகளின் அரசியல் அஸ்திரமாக இன்னமும் தமிழ் தேசிய கூட்டமைப்பு செயற்படுகின்றது என்பதில் மாற்றுக்கருத்தில்லை என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

இந்திய பாரதிய ஜனதா கட்சி இலங்கையிலும் ஆதிக்கம் செய்யும் என அமைச்சர் அமித் சஹா கூறியதாக வெளிவரும் செய்திகளில் உத்தியோகபூர்வ அறிவிப்புகள் என எதுவும் இல்லை. நிகழ்வொன்றில் அவர் உணவு உட்கொண்ட வேளையில் அருகில் இருந்தவர்களுக்கு கூறியதாக தெரிவிக்கப்படுகின்றது. அதற்காக நாம் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை.

ஆனால் எனது தனிப்பட்ட நிலைப்பாட்டை என்னால் கூற முடியும். பாரதிய ஜனதா கட்சியினால் நேரடியாக இலங்கையில் அரசியல் செய்ய முடியாது. அதற்கான அரசியல் அமைப்பு ரீதியிலான அனுமதியும் இல்லை

தேர்தல்கள் திணைக்களமும் அதற்கு அனுமதிக்க வாய்ப்புகள் இல்லை. எனவே இது ஒரு கதையாக வேண்டுமானால் கூறலாம்.

ஆனால் அவர்களினால் மறைமுக அரசியலில் ஈடுபட முடியும். அதற்கு அனுமதி இலங்கையில் உள்ளது.

எவ்வாறெனின், இலங்கையில் உள்ள அரசியல் கட்சிகளில் ஏதேனும் ஒரு கட்சியினூடாக இலங்கையில் அவர்களின் கொள்கையை பரப்பி அவர்களின் இலங்கை பிரதிநிதிகளாக இங்கு ஒரு கட்சி இயங்க முடியும். தமிழ் தேசிய கூட்டமைப்பு போன்றொரு கட்சியை அவர்களின் பிரதிநிதிகளாக வைத்துக்கொள்ள முடியும்.

தமிழ் தேசிய கூட்டமைப்பை பொறுத்தவரை அவர்கள் இன்றுவரை இந்தியா மற்றும் ஏனைய நாடுகளின் பிரதிநிதிகளாக இலங்கையில் செயற்பட்டு வருகின்றனர். அவர்களுக்கான முழு நிதியும் மேற்கு நாடுகள் மற்றும் புலம்பெயர் அமைப்புகளின் மூலமாகவும், புலிகளை ஆதரிக்கும் அமைப்புகள் மூலமாகவும் கிடைத்து வருகின்றது என்றார்.

சரத் வீரசேகரவின் செயற்பாடுகளே எமக்கு தனித் தமிழீழத்தைப் பெற்றுத் தந்துவிடும்- ரெலோ தலைவர் செல்வம் எம்.பி.

பொதுமக்கள் பாதுகாப்புத் தொடர்பான அமைச்சர் சரத் வீரசேகரவின் செயற்பாடுகளே எமக்கு தனித் தமிழீழத்தைப் பெற்றுத் தந்துவிடும் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

அத்துடன், சரத் வீரசேகரவின் கருத்து வடக்கு கிழக்கு தமிழர்களை இல்லாதொழிக்க வேண்டும் என்ற நோக்குடையது என்பதால் தமிழீழம் கிடைப்பதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாகவே தான் கருதுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் தெரிவிக்கையில், “பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான ஆர்ப்பாட்டத்தில் மக்கள் எழுச்சியாகக் கலந்து கொண்டிருந்தனர். இந்நிலையில், போராட்டத்தில் கலந்துகொண்ட இளைஞர்கள், பொதுமக்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பொலிஸார் தேடித்தேடி விசாரிக்கிறார்கள்.

நீதிமன்ற உத்தரவை மீறியதாகவும், நீதிமன்றத்தை தமிழர்கள் அவமதித்துள்ளார்கள் எனவும் காட்டுவதற்காகவே இந்த முயற்சி நடைபெறுகின்றது.

ஆனால், இலங்கை அரசாங்கத்தினால் எமது மக்களுக்கு செய்யப்பட்ட அநீதிக்கு எதிராகவும் தமிழ் மக்கள் வாழ்கின்ற இடங்களை புறக்கணிக்கின்ற அல்லது சிங்களக் குடியேற்றங்களை உட்சேர்க்கின்ற செயற்பாட்டையும் வன விலங்கு பறவைகள் சரணாலயம், மகாவலி வலயம், புதைபொருள் ஆராய்ச்சி என்ற பெயரில் தமிழரின் மரபுகளை அழித்தல் போன்றவற்றிற்கு எதிராகவுமே மக்கள் கிளர்ந்தெழுந்துள்ளார்கள்.

இதேநேரம், ஐ.நா. மனித உரிமை ஆணையாளரினால் கொடுக்கப்பட்டுள்ள அறிக்கையானது மிகவும் வலுவான அறிக்கையாக இருக்கிறது. இதனால், மக்கள் புரட்சிகளைத் தடைசெய்வதும் அவர்களை அச்சமூட்டுவதும் இந்த ஆர்ப்பட்டத்தில் கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் உறுப்புறுரிமைகளை இல்லாது செய்கின்ற வன்முறையாகத்தான் பொலிஸாரின் நடவடிக்கை உள்ளது.

பொதுமக்கள் பாதுகாப்புத் தொடர்பான அமைச்சர் சரத் வீரசேகரவின் செயற்பாடுகள் எமக்கு தனித் தமிழீழத்தைப் பெற்றுத் தந்துவிடும். ஏனென்றால், தீர்மானம் நிறைவேற்றினால் ஐ.நா. சபை இரண்டாக உடையும் என்று கூறியிருக்கிறார்.

சரத் வீரசேகரவின் கருத்து, வடக்கு கிழக்கு தமிழர்களை இல்லாதொழிக்க வேண்டும் என்ற நோக்கமே. ஆகவே, தமிழீழம் கிடைப்பதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாகவே நான் கருதுகின்றேன்.

அதேநேரம், பொலிஸாரின் நடவடிக்கையானது நீதிமன்ற ஆணையை நாம் புறக்கனிக்கின்றோம் என்ற அச்சத்தைக் கொண்டுவந்து எமது மக்கள் போராட்டத்தை மழுங்கடிக்கின்ற மற்றும் ஐ.நா. சபையில் எமது கோரிக்கைகளை இல்லாது செய்கின்ற முயற்சியாகும். இதனால்தான் எமது இளைஞர்களிலும், நாடாளுமன்ற உறுப்பினர்களிலும்,பொதுமக்களிலும் கை வைக்கின்றார்கள்.

பொலிஸாரின் அடக்கு முறைகளை கிழக்கு மாகாணம் பொத்துவிலில் உடைத்தெறிந்து அதே எழுச்சியானது பொலிகண்டிவரை இருந்துள்ளது. அது எங்களுடைய வெற்றி.

மக்கள் ஜனநாயக முறையில் கொரோனா தொடர்பான சமூக இடைவெளியைக் கடைப்பிடித்துப் போரட்டத்தை மேற்கொண்டிருக்கின்றார்கள். ஆகவே, இந்தப் போராட்டம் என்பது ஜனநாயக ரீதியில் செய்யப்பட்ட ஒரு விடயம். இந்நிலையில், தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் எந்தவொரு அச்சுறுத்தல்களுக்கும் அடக்கு முறைகளுக்கும் எமது மக்கள் அடிபணிய மாட்டார்கள்.

இலங்கை தேசம் இறுதி யுத்த வெற்றியை பயங்கரவாதத்தை அழித்து விட்டோம் என்று கொண்டாடியது. அத்துடன் பயங்கரவாதத்தை அழிப்பது எப்படி என்று பாடம் எடுக்கப்போவதாகவும் கூறப்பட்டது.

ஆனால், தமிழ் மக்களோ, அழிக்க அழிக்க மீண்டெழுவோம் என்ற செய்தியை சரியான நேரத்தில் எழுச்சி ஊர்வரத்தின் மூலம் இலங்கைக்கும் உலகத்திற்கும் சொல்லியுள்ளார்கள்.

ஆகவே, எமது மக்களை யாரும் அடக்க முடியாது. எங்களுடைய பிரச்சினைகளை இந்த ஜனநாயகப் போராட்டத்தின் ஊடாகத் தெரிவிப்போம். இந்நிலையில், உலக நாடுகளும் இந்தியாவும் தமிழர்களுடைய பக்கம் நிற்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும் என்பது இந்த எழுச்சிப் பேரணியின் நோக்கமாக இருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.