எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி ரணில் நாளை இங்கிலாந்து பயணம்

இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாளை சனிக்கிழமை இங்கிலாந்து செல்லவுள்ளார்.

நாளை அதிகாலை இலங்கையிலிருந்து புறப்படும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க , எதிர்வரும் திங்கட்கிழமை லண்டன் வெஸ்ட்மினிஸ்டர் மண்டபத்தில் நடைபெறும் இறுதிச் சடங்குகளில் பங்கேற்பார்.

இங்கிலாந்தின் மிக நீண்ட காலம் ராணியாக பதவி வகித்த இரண்டாம் எலிசபெத் மகாராணி 70 ஆண்டுகள் ஆட்சி செய்த பின்னர், 96 வயதில் பால்மோரலில் உயிரிழந்தார்.

மறைந்த ராணிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அரச நிறுவனங்கள் மற்றும் பாடசாலைகளுக்கு எதிர்வரும் திங்கட்கிழமை விடுமுறை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையுடன் ஐந்தாண்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் USAID

USAID நிர்வாகி சமந்தா பவர் சமீபத்திய விஜயத்தின் தொடர்ச்சியாக, அமெரிக்காவானது USAID ஊடாக இலங்கைக்கு மேலதிகமாக 65 மில்லியன் டொலர்களை (23 பில்லியன் இலங்கை ரூபாவிற்கும் அதிகமாக) ஒரு ஐந்தாண்டு காலப்பகுதியில் உதவியாக வழங்கும் என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜுலீ சங் இன்று அறிவித்தரர்.

இது தொடர்பாக கொழும்பிலுள்ள ஐக்கிய அமெரிக்க தூதரகம் விடுத்துள்ள ஊடக அறிக்கை இணைக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு மேலும் நிதியுதவி வழங்கும் திட்டம் இந்தியாவுக்கு இல்லை

இலங்கைக்கு சுமார் நான்கு பில்லியன் அமெரிக்க டொலர்களை இந்தியா நிதியுதவியாக வழங்கியுள்ளதாகவும் தொடர்ந்தும் புதிய நிதியுதவியை வழங்கும் திட்டம் இந்தியாவுக்கு இல்லை எனவும் சர்வதேச செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவே அதிகளவில் நிதியுதவி வழங்கியது

இறக்குமதிகளுக்கு செலுத்த அந்நிய செலாவணி இல்லாது பொருளாதார நெருக்கடியால் கஷ்டங்களை அனுபவித்து வந்த இலங்கைக்கு இந்தியாவே அதிகளவில் உதவியுள்ளது.

இந்தியா, இலங்கைக்கு 3.8 பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளது. நாடு என்ற வகையில் இப்படியான உதவியை தொடர்ந்தும் வழங்க முடியாது என இந்திய அரசின் தகவல்கள் கூறுகின்றன.

தற்போதை அனைத்தும் சர்வதேச நாணய நிதியத்தின் கடன் உதவியிலேயே தங்கியுள்ளது எனவும் அந்த சர்வதேச செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

இந்தியாவின் முடிவு ஆச்சரியத்திற்குரிய விடயமல்ல

எவ்வாறாயினும் இந்தியாவின் இந்த தீர்மானம் ஆச்சரியத்திற்குரிய விடயம் அல்ல. இதற்கு முன்னர் இந்தியா தொடர்பான சமிக்ஞை ஒன்றை வழங்கி இருந்தது என இலங்கை அரசின் தகவல்கள் கூறியதாகவும் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் நிலவிய கடும் அந்நிய செலாவணி தட்டுப்பாடு காரணமாக அத்தியவசிய உணவு, எரிபொருள் மற்றும் மருந்து போன்றவற்றை இறக்குமதி செய்ய முடியாத நிலைமை காணப்பட்டது.

இதனையடுத்து இந்தியா, அத்தியவசியமாக தேவைப்படும் இந்த பொருட்களை இறக்குமதி செய்ய இலங்கைக்கு கடன் வசதிகளை வழங்கியது.

Posted in Uncategorized

நினைவேந்தல் நிகழ்வுகளை வைத்து அரசியல் செய்ய வேண்டாம்- மாவீரர்களின் பெற்றோர் கோரிக்கை!

நினைவேந்தல் நிகழ்வுகளில் கட்சி அரசியலை கலந்து அவற்றின் புனிதத்தை மாசுபடுத்த வேண்டாம் என அனைத்து மாவீரர்களின் பெற்றோர் சார்பிலும் அறிவிழியின் தந்தையான முத்துக்குமார் மனோகர் அறிக்கை ஒன்றின் ஊடாக கோரிக்கை விடுத்துள்ளார்.

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பமான வேளை அங்கு வந்திருந்த அரசியல் கட்சி ஒன்றினை சார்ந்தவர்கள் பிற கட்சியினருடன் முரண்பாடுகளை ஏற்படுத்தும் முகமாக செயற்பாடுகளில் ஈடுபட்டதுடன், அங்கிருத்தவர்களுடன் வாய்த்தர்க்கத்திலும் ஈடுபட்டனர்.

அந்நிலையில் அது தொடர்பாக அனைத்து மாவீரர்களின் பெற்றோர் சார்பிலும் அறிவிலியின் தந்தையான முத்துக்குமார் மனோகர் ஊடக அறிக்கை ஒன்றினை ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ளார்

அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

தியாக திலீபனின் நினைவேந்தல் மட்டுமல்ல எந்த நினைவேந்தல்களிலும் கட்சி அரசியலை கலந்து அவற்றின் புனிதத்தை மாசுபடுத்த வேண்டாம்.

இந்த ஆண்டின் திலீபன் நினைவு ஆரம்ப நிகழ்வு தொடங்கும் முன்னர் பிறிதொரு அணியினரை சாடும் வகையில் சட்டத்தரணி சுகாஷ் உரையாற்றியமை எமக்கு வேதனையை உண்டாக்குகிறது.

நேற்று இவர் சார்ந்த கட்சியின் ஏற்பாட்டாளரும் திலீபனை நேரில் கண்டவர்களில் ஒருவருமாகிய பொன் மாஸ்டரிடம் இந்நிகழ்வை பொது நிகழ்வாக நடத்துவதில் உங்களுக்குள்ள சங்கடங்கள் என்னவென்று கேட்டேன். எதுவும் இல்லை என பதிலளித்தார். அது திருப்தி அளித்தது.

அந்த நம்பிக்கையை சிதறடிக்கும் விதத்தில் சட்டத்தரணி சுகாஷ் இன்று நடந்து கொண்டார்.
ஏற்கனவே மாவீரர் நாள் நிகழ்வுகளை ஏனைய கட்சிகளை தாக்கும் களமாக பயன்படுத்த வேண்டாம் என அக்கட்சியின் தலைவர் கஜேந்திரகுமாரை நேரில் சந்தித்து வேண்டுகோள் விடுத்திருந்தேன். அதனை கடைபிடிப்பதாக அவர் என்னிடம் உறுதியளித்தார்.

எனினும் கிளிநொச்சியில் நிகழ்ந்த மாவீரர்களின் பெற்றோருடைய கௌரவிப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பை சாடியமை பற்றி செய்தி பத்திரிகையில் வெளியான போது மிகவும் வேதனைப்பட்டேன்.

அவ்வாறான நிலைமை மீண்டும் ஏற்படக்கூடாது என்பதற்காக பொன் மாஸ்டரை சந்தித்து உரையாடினேன்.

எனவே இவ்வாண்டு திலீபனின் நினைவு நிறைவடையும் வரைக்கும் அரசியலை கலக்காமல் ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு மன்றாட்டமாக அனைத்து கட்சிகளையும் கேட்டுக்கொள்கிறேன்.

எமது உணர்வுகளை எதிர்காலத்தில் மதிப்பார்கள் என நம்புகிறேன் – என குறிப்பிடப்பட்டுள்ளது.

வன்னி அமைச்சர் மூலம் கிராம புறங்கள் வலுப்பெற வேண்டும்-ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன்

வன்னி அமைச்சர் மூலம் கிராம புறங்கள் வலுப்பெற வேண்டும். அதே அமைச்சர் பிழைவிடின் அதனை தட்டி கேட்க வேண்டிய பொறுப்பும், கடமையும் இருக்கின்றது என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சராக காதர் மஸ்தான் பதவியேற்றபோது தாங்கள் அங்கு இருந்ததாக ஊடகங்களில் செய்தி வெளியாகியிருந்தமை தொடர்பாக வினவிய போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

கிராமிய அபிவிருத்தி அமைச்சராக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பதவியேற்கின்ற சூழலிலே நானும் அங்கு சென்றிருந்தேன். பொருளாதார அபிவிருத்தி என்று கூறிக்கொண்டு அதில் கலந்து கொள்ளாமல் இருப்பது நல்லதல்ல.

வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரே பதவி ஏற்றிருக்கின்றார். இதிலே குறிப்பாக கூற வேண்டிய விடயம் என்னவெனில் எங்களுடைய கிராம புறங்கள் இதனூடாக வலுப்பெற வேண்டும் என்பது என்னுடைய கருத்து.

இதே அமைச்சர் பிழைவிடின் அதனை தட்டி கேட்க வேண்டிய பொறுப்பும், கடமையும் இருக்கின்றது.நிச்சயமாக தட்டி கேட்போம். வன்னி பிரதேசத்தில் ஒரு அமைச்சு பதவி கிடைத்திருக்கின்றது என்ற காரணத்திற்காக நாங்கள் சென்றிருக்கின்றோம்.

ஜனாதிபதியை நாங்கள் சந்தித்த போதும் இவ்வாறு விமர்சனங்கள் வந்தது. மக்களுடைய நலன் கருதி அபிவிருத்தி சம்பந்தமாக இருக்கின்ற விடயங்களிலே நாங்கள் கவனம் செலுத்த வேண்டும்.

எங்களுடைய மக்களும் பட்டினியை சந்தித்து கொண்டிருக்கின்றார்கள். ஆகவே இவ்வாறான விடயங்களை பயன்படுத்த வேண்டும். அந்தவகையில் வன்னி பிரதேச பாராளுமன்ற உறுப்பினருக்கு அமைச்சு பதவி கிடைத்த காரணத்தினால் வாழ்த்த சென்றிருந்தேன் அவ்வளவு தான் என்றும் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

ராஜபக்ஸ குடும்ப ஆட்சி தொடர்பில் சர்வதேச விசாரணையைக் கோரியுள்ள அமெரிக்க செனட்டர்கள்

ராஜபக்ஸ குடும்பத்தின் மோசமான ஆட்சி மற்றும் பொருளாதார கொள்கைகள் தொடர்பான சவால்கள் உட்பட இலங்கையின் தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண விரிவான சர்வதேச அணுகுமுறையைக் கோரும் பிரேரணை அமெரிக்க செனட் சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த பிரேரணையை அமெரிக்க செனட் சபையின் வெளியுறவுக் குழுவின் தலைவர் உள்ளிட்ட நான்கு செனட்டர்கள் முன்வைத்துள்ளனர்.

ராஜபக்ஸவின் ஆட்சி மிகவும் ஊழலான குடும்ப ஆட்சி என்பதுடன், வெளிப்படைத்தன்மையற்றது என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அந்த ஆட்சியில், மனித உரிமை ஆர்வலர்கள், சட்டத்தரணிகள், ஊடகவியலாளர்கள் மற்றும் அரசாங்கத்தின் பணிகளை சவாலுக்கு உட்படுத்துவோரை அச்சுறுத்தும் நடவடிக்கைகள் 2020 ஆம் ஆண்டு முதல் முன்னெடுக்கப்பட்டதாக செனட்டர்கள் தமது பிரேரணையில் குறிப்பிட்டுள்ளனர்.

ராஜபக்ஸ குடும்ப ஆட்சியில் விவசாயம் தொடர்பான தவறான கொள்கைகளை நடைமுறைப்படுத்தியமை, நீடித்து நிலைக்க முடியாத மாபெரும் திட்டங்களுக்காக சீனாவிடம் பில்லியன் கணக்கான டொலர்களை கடனாகப் பெற்றமை, பொது வளங்களை தனிப்பட்ட நோக்கங்களுக்காக பயன்படுத்தியமை என்பனவும் அதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

மோசடி மற்றும் ஊழல் தொடர்பான வெளிப்படையான, பொறுப்பான விசாரணைகளை நடத்துவது உள்ளிட்ட பொதுமக்களின் கோரிக்கைகளை ரணில் விக்கிரமசிங்கவின் நிர்வாகம் பரிசீலிக்கத் தவறிவிட்டதாக நான்கு அமெரிக்க செனட்டர்களும் குறிப்பிட்டுள்ளனர்.

அமைதியான அரசியல் போராட்டங்களை நசுக்குவதற்கு பயங்கரவாத தடைச் சட்டத்தை பயன்படுத்துவது குறித்து கவனம் செலுத்தி, இலங்கையில் மனித உரிமைகளை பாதுகாப்பதற்காக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை முன்வைத்துள்ள பிரேரணைகளுக்கு ஆதரவளிக்குமாறு அமெரிக்க செனட் சபையிடம் செனட்டர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Posted in Uncategorized

கசூரினா கடற்படை முகாமை அகற்ற பணம் கோரியுள்ள கடற்படை

கசூ­ரினா கடற்­க­ரை­யின் சுற்­றுலா மையத்­தில் 4 பரப்பு விஸ்­தீ­ர­ணத்­தில் உள்ள கடற்­படை முகாமை அகற்­று­வ­தற்குக் கடற்­ப­டை­யி­னர் இணக்­கம் தெரி­வித்­துள்­ள­னர். அதற்­காக கடற்­ப­டை­யி­னர் கோரிய பணம் இன்று பிர­தேச சபை­யால் காசோலை மூலம் வழங்­கப்­ப­டும் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

கசூ­ரினா கடற்­கரை சுற்­றுலா மையத்­தில் கடற்­படை முகாம் அமைக்­கப்­பட்­டி­ருந்­த­தால், அந்­தப் பகு­தியை அபி­வி­ருத்தி செய்ய முடி­யாத நிலைமை காணப்­பட்­டது. அத்து­டன் சுற்­று­லா­வி­க­ளும் அசௌ­க­ரி­யங்­களை எதிர்­கொள்ள வேண்­டி­யி­ருந்­தது. அத­னால் அங்­கி­ருந்து கடற்­படை முகாமை அகற்ற வேண்­டும் என்று பிர­தேச சபை கோரிக்கை விடுத்­தி­ருந்­தது.

நேற்று பிர­தேச சபை மாதாந்த அமர்வு கசூ­ரினா பொது­நோக்கு மண்­ட­பத்­தில் நடைபெற்ற நிலை­யில், காரை­ந­கர் கடற்­க­ரைப் பொறுப்­ப­தி­கா­ரி­கள் இரு­வர் கலந்து கொண்­ட­னர்.

கடற்­ப­டை­யி­ன­ரால் அமைக்­கப்­பட்­டுள்ள நிரந்­தக் கட்­ட­டத்­துக்­கான பெறு­ம­தி­யைச் செலுத்­து­வ­து­டன், பிறி­தொரு காணி­யை­யும் வழங்­கி­னால் அந்­தப் பகு­தி­யில் இருந்து உட­ன­டி­யாக வில­கிக் கொள்­ள­வோம் என்று கடற்­படை அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர். கடற்­ப­டை­யி­னர் அமைத்­துள்ள நிரந்­த­ரக் கட்­ட­டத்­தின் பெறு­மதி 13 லட்­சத்து 20 ஆயிரம் ரூபா என்று விலை மதிப்­பீட்­டுத் திணைக்­க­ளம் மதிப்­பிட்­டி­ருந்­தது.

பணத்­தை­யும், சுற்­றுலா மையத்­துக்கு வெளியே காணி­யொன்றை வழங்­க­வும் பிர­தேச சபைக் கூட்­டத்­தில் நேற்று முடி­வெ­டுக்­கப்­பட்­டது. அதை­ய­டுத்து நேற்று முதல் அந்த இடத்­தில் இருந்து கடற்­படை முகாமை அகற்­று­வ­தற்­கான நட­வ­டிக்­கை­கள் ஆரம்பிக்கப்­ப­டும் என்று கடற்­ப­டைப் பொறுப்­ப­தி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர்.

கடற்­ப­டைக்கு வழங்­கும் பணத்தை ஏற்­க­னவே ஒதுக்­கப்­பட்ட நிதி­யொ­துக்­கத்­தில் மீதமாக உள்ள தொகை­யில் இருந்து பயன்­ப­டுத்­து­வது என்று தீர்­மா­னிக்­கப்­பட்டு, இன்று அதற்­கான காசோலை கடற்­ப­டை­யி­ன­ருக்கு வழங்­கப்­ப­டும் என்று தெரிவிக்கப்பட்­டது.

Posted in Uncategorized

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் யாழ் பல்கலையில் உணர்வுபூர்வமாக முன்னெடுப்பு!!

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் இன்று காலை யாழ் பல்கலைக்கழகத்தின் பிரதான தூபி வளாகத்தில் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது.

பல்கலைக்கழகத்தின் பிரதான வாயில் முதல் தேசிய எழுச்சிக்கொடி கட்டப்பட்டு பிரதான தூபியில் மாணவர்களால் அமைக்கப்பெற்ற நினைவாலயத்தில் போரால் பாதிக்கப்பட்ட மாணவனால் பொதுச்சுடரேற்றப்பட்டு மாணவர்களால் ஈகை சுடரும் ஏற்றப்பட்டு தொடர்ச்சியாக தியாக தீபம் திலீபனின் நினைவுருவ படத்திற்கு மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது.

இதன் பொழுது யாழ் பல்கலைக் கழக தமிழ் மாணவர்களுடன் இஸ்லாமிய சிங்கள மாணவர்களும் இம்முறை உணர்வுபூர்வமாக கலந்து கொண்டிருந்ததோடு மேலும் யாழ் பல்கலை கல்விசாரா ஊழியர்கள்,யாழ் பல்கலை மாணவர் ஒன்றியத்தினர் என பலரும் கலந்து கொண்டிருந்தனர் தொடர்ச்சியாக எதிர்வரும் 26ம் திகதி வரை மாணவர்களால் நினைவேந்தல் முன்னெடுக்கபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது..

Posted in Uncategorized

வடமாகாண முஸ்லீம் மக்களின் பிரச்சினை: ஐக்கியநாடுகள் சபையின் செயலாளருக்கு மகஜர்

சுவிற்சர்லாந்தின் ஜெனீவாவில் தற்போது இடம்பெற்று வரும் ஜக்கியநாடுகள் சபையின் 51 ஆவது மனித உரிமைகள் கூட்டத் தொடரின் இறுதித் தீர்மான அறிக்கையில் இலங்கை விவகாரத்தில் வடமாகாண முஸ்லீம்களின் பிரச்சினைகள் தொடர்பிலும் கவனம் செலுத்துமாறு வலியுறுத்தி வடமாகாண முஸ்லீம்கள் சார்பில் மக்கள் பணிமனை அமைப்பினரால் ஐக்கியநாடுகள் சபையின் செயலாளருக்கான கோரிக்கைகள் அடங்கிய மகஜர் கையளிக்கப்பட்டது.

நேற்றுச் செவ்வாய்க்கிழமை(13.9.2022) மாலை-4 மணியளவில் யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் அமைந்துள்ள அகதிகளுக்கான ஐக்கியநாடுகளின் உயர்ஸ்தானிகர் கள அலுவலகத்தில் வைத்து
மக்கள் பணிமனைத் தவிசாளரும், வடக்கு முஸ்லீம்களின் உரிமைக்கான அமைப்பின் செயலாளருமான சுபியான் மெளலவி மற்றும் அமைப்பாளர் ஏ.சி.எம்.கலீல் ஆகியோர் இணைந்து மகஜரினை ஐக்கியநாடுகள் சபையின் யாழ்ப்பாணப் பிரதிநிதி திருமதி.காயத்திரி குமரனிடம் நேரடியாகக் கையளித்தனர்.

இதேவேளை, மகஜரினைப் பெற்றுக் கொண்ட ஐக்கியநாடுகள் சபையின் யாழ்ப்பாணப் பிரதிநிதி ஐக்கியநாடுகள் சபையின் கொழும்பு அலுவலகம் மூலம் குறித்த மகஜரினை உடனடியாக ஜெனீவாவுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

குருந்தூர் மலையில் நீதிமன்ற உத்தரவுக்கு முரணாக விகாரை கட்டுமானப் பணி – தமிழ் தரப்புக்கள் விசனம்

தமிழர்களின் பூர்வீக இடமான குருந்தூர் மலை விவகாரம் தொடர்பில் 19.07.2022 அன்று திருத்தத்துடன் முல்லைத்தீவு நீதிமன்றம் வழங்கிய கட்டளைகளை உதாசீனம் செய்து கட்டுமானங்கள் தொடர்ந்து இடம்பெற்று விகாரை கட்டுமானப்பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

19.07.2022 அன்று திருத்தத்துடன் முல்லைத்தீவு நீதிமன்றம் வழங்கிய வழங்கிய திருத்திய கட்டளையிலே .தொல்லியற் சின்னங்கள் பாதுகாப்பதாக கூறி தொல்லியற் சின்னங்கள் மூடிமறைக்கப்பட்டு புனரமைப்புச் செய்யப்பட்டுள்ளதாகவும் 14.07.2022 ஆம் திகதிய கட்டளையில் புதியவிகாரைகள் மற்றும் கட்டடங்கள் நீக்கப்பட வேண்டும் என்ற கட்டளையின் பால் அவற்றை நீக்கும் போது தொல்லியற் சின்னங்களும் நீக்கப்படும் என்பதால் தொல்லியற் சின்னங்களை பாதுகாக்க வேண்டிய நிலை காணப்படுவதால் குறித்த புதிய விகாரைகள் கட்டடங்கள் நீக்கப்படவேண்டும் என்ற கட்டளை கை வாங்கப்படுகின்றது.எனவும் தெல்லியற் திணைக்களம் 12.06.2022 இல் இருந்தது போலவே குறித்த பிரதேசத்தை பாதுகாக்க வேண்டும்.எனவும் கட்டளை வழங்கியிருந்தது.

இந்நிலையில் குறித்த கட்டளையை மீறி அங்கு அமைக்கப்பட்ட விகாரை கட்டுமான பணி தொடர்ந்து இடம்பெற்று விகாரை கட்டுமான பணி நிறைவடையும் தருவாயில் உள்ளது எனவும் பொலிசார் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்க வில்லை எனவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

தமிழர்களின் பூர்வீக வழிபாட்டிடமான முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு, குருந்தூர் மலை ஆதி சிவன் அய்யனார் ஆலய வளாகத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரை உள்ளிட்ட அனைத்து கட்டுமானங்களையும் அகற்றுமாறும் குறித்த கட்டுமானங்களை அகற்றி நீதிமன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறும் குறித்த பகுதியில் ஆதி சிவன் அய்யனார் ஆலயத்தினர் தங்களுடைய வழிபாடுகளை மேற்கொள்வதற்கு எந்த விதத்திலும் தடை விதிக்க கூடாது எனவும் இந்த இடத்தில் அமைதி குலைவினை ஏற்படாத வகையில் பொலிசார் உரிய பாதுகாப்பினையும் வழங்க வேண்டும் எனவும் முல்லைதீவு நீதிமன்றம் கடந்த 14.07.2022 அன்று அதிரடி உத்தரவை பிறப்பித்திருந்தது.

குருந்தூர் மலை தொடர்பான AR 673/18 என்ற குறித்த வழக்கு நீதிமன்றில் முல்லைதீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா அவர்கள் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட்டபோது ஆதிசிவன் ஐயனார் ஆலய நிர்வாகத்தினர் மற்றும், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களும் இவர்கள் சார்பில் சட்டத்தரணி வி எஸ் எஸ் தனஞ்சயன் மற்றும் சட்டத்தரணி கெங்காதரன் அவர்களும் முன்னிலையாகியதோடு எதிர்தரப்பிலே பொலிசார் மன்றில் முன்னிலையாகினர் இதன்போது முல்லைதீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா அவர்கள் வழக்கினுடைய தீர்ப்பை வழங்கினார்.

இந்த நிலையில் நீதிமன்று வழங்கிய கட்டளையை நடைமுறைபடுத்துவதில் சிக்கல் இருப்பதாகவும் இதனை நடைமுறை படுத்தினால் இனங்களுக்கிடையில் குழப்ப நிலை தோன்றும் வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்து முல்லைத்தீவு பொலிஸார் சட்டமா அதிபர் திணைக்களத்திடம் தெரிவித்த நிலையில் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் நகர்தல் பத்திரம் ஒன்றை தாக்கல் செய்து 19.07.2022 அன்று குறித்த வழக்கு மீண்டும் விளக்கத்துக்கு வந்த நிலையில் இந்த வழக்கில் சட்டமா அதிபர் திணைக்கள பிரதி சொலிசிட ஜெனரல் மற்றும் தொல்லியல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் உள்ளிட்டவர்கள் மன்றில் முன்னிலையாகியிருந்தனர்.

குருந்தூர் மலையில் புதிய பௌத்த கட்டுமானங்கள் எவையும் அமைக்கப்படவில்லை எனவும் மாறாக தொல்லியல் திணைக்கள சட்டத்துக்குட்பட்டு புராதன சின்னங்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளே முன்னெடுக்கப்படுவதாகவும் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் முன்னிலையான சட்டமா அதிபர் திணைகள பிரதி சொலிசிட ஜெனரல் தெரிவித்துள்ளார்.

கௌரவ முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி .சரவணராஜா முன்னிலையில் நடைபெற்ற வழக்கு விசாரணையில் தொல்லியல் திணைக்களம் சார்பில் பிரதி சொலிசிட ஜெனரல் மற்றும் இரு சட்டத்தரணிகள் ஆஜராகியிருந்தனர். அய்யனார் ஆலய நிர்வாகம் சார்பில் மூத்த சட்டதரணி அன்டன் புனிதநாயகம் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட சட்டதரணிகள் சங்கத்தை சேர்ந்த சட்ட தரணிகள் ஆஜராகியிருந்தனர்.

இதன்போது வாதிட்ட பிரதி சொலிசிட ஜெனரல் குருந்தூர்மலை ஒரு பௌத்த தொல்லியல் இடம் எனவும் அங்கே புதிய கட்டுமானங்கள் எவையும் இடம்பெறவில்லை எனவும் மாறாக தொல்லியல் சட்டங்களுக்கு உட்பட்டு தொல்லியல் சின்னங்களை பராமரித்து பாதுகாக்கும் செயற்பாடே முன்னெடுக்கப்படுவதாகவும் . அய்யனார் ஆலயம் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் நீதிமன்றை தவறாக வழிநடத்தி இந்த தீர்ப்பை பெற்றுள்ளதாகவும் இந்த ஆலய விவகாரம் தொடர்பில் உச்ச நீதிமன்றில் இன்னொரு வழக்கு தாக்கல் செய்யப்ட்டுள்ளதாகவும் அந்த வழக்கு தொடர்பில் மன்றின் கவனத்துக்கு கொண்டுவராது அய்யனார் ஆலய நிர்வாகம் சார்பில் வாதிட்ட சட்ட தரணிகள் நடந்துகொண்டுள்ளதாகவும் மன்றில் தெரிவித்தார்.

அய்யனார் ஆலயம் சார்பில் வாதிட்ட மூத்த சட்டதரணி அன்ரன் புனிதநாயகம் உள்ளிட்ட சட்ட தரணிகள் குருந்தூர்மலையில் அமைக்கப்பட்டுவருவது புதிய கட்டுமானங்கள் தான் எனவும் தொல்லியல் சின்னங்களை பாதுகாக்கின்றோம் என்ற போர்வையில் புதிய கட்டுமானங்களை அமைத்துள்ளதாகவும் அதற்க்கான ஆதாரங்களை ஏற்கனவே மன்றின் கவனத்துக்கு கொண்டுவந்துள்ளதாகவும் அத்தோடு இந்த கட்டுமானங்கள் ஏற்கனவே மன்று 2018 இல் வழங்கிய கட்டளையை மீறி அமைக்கபட்டுள்ளதாகவும் மன்றில் சுட்டிகாட்டியதோடு குருந்தூர் மலைக்கு நேரடியாக சென்று இடம்பெற்றுவரும் புதிய கட்டுமானத்தை பார்க்க முடியும் எனவும் எனவே கௌரவ மன்று மற்றும் சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகள் இதனை நேரில் சென்று பார்க்க வேண்டும் என கேட்டு கொண்டதற்கு இணங்க வழக்கு விசாரணைகள் இடைநிறுத்தப்பட்டு நீதவான் மற்றும் சட்டமா திணைக்கள அதிகாரிகள் சட்டதரணிகள் கட்டுமானம் இடம்பெற்றுவரும் குருந்தூர் மலைக்கு கள விஜயம் அய்யனார் ஆலயம் சார்பில் வாதிட்ட மூத்த சட்டதரணி அன்ரன் புனிதநாயகம் உள்ளிட்ட சட்ட தரணிகள் குருந்தூர்மலையில் அமைக்கப்பட்டுவருவது புதிய கட்டுமானங்கள் தான் எனவும் தொல்லியல் சின்னங்களை பாதுகாக்கின்றோம் என்ற போர்வையில் புதிய கட்டுமானங்களை அமைத்துள்ளதாகவும் அதற்கான ஆதாரங்களை ஏற்கனவே மன்றின் கவனத்துக்கு கொண்டுவந்துள்ளது.

அத்தோடு இந்த கட்டுமானங்கள் ஏற்கனவே மன்று 2018 இல் வழங்கிய கட்டளையை மீறி அமைக்கபட்டுள்ளதாகவும் மன்றில் சுட்டிகாட்டியதோடு குருந்தூர் மலைக்கு நேரடியாக சென்று இடம்பெற்றுவரும் புதிய கட்டுமானத்தை பார்க்க முடியும் எனவும் எனவே கௌரவ மன்று மற்றும் சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகள் இதனை நேரில் சென்று பார்க்க வேண்டும் என கேட்டு கொண்டதற்கு இணங்க வழக்கு விசாரணைகள் இடைநிறுத்தப்பட்டு நீதவான் மற்றும் சட்டமா திணைக்கள அதிகாரிகள் சட்டதரணிகள் கட்டுமானம் இடம்பெற்றுவரும் குருந்தூர் மலைக்கு கள விஜயம் மேற்கொண்டனர்.

இங்கு நிலைகளை பார்வையிட்டதன் பின்னர் மீண்டும் நீதிமன்றிலே வருகை தந்து குறித்த வழக்கிற்கான புதிய திருத்திய கட்டளையை நீதிபதி பிறப்பித்திருந்தார்.

முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் வழங்கிய திருத்திய கட்டளையிலே. தொல்லியற் சின்னங்கள் பாதுகாப்பதாக கூறி தொல்லியற் சின்னங்கள் மூடிமறைக்கப்பட்டு புனரமைப்புச் செய்யப்பட்டுள்ளதாகவும் 14.07.2022 ஆம் திகதிய கட்டளையில் புதியவிகாரைகள் மற்றும் கட்டடங்கள் நீக்கப்பட வேண்டும் என்ற கட்டளையின் பால் அவற்றை நீக்கும் போது தொல்லியற் சின்னங்களும் நீக்கப்படும் என்பதால் தொல்லியற் சின்னங்களை பாதுகாக்க வேண்டிய நிலை காணப்படுவதால் குறித்த புதிய விகாரைகள் கட்டடங்கள் நீக்கப்படவேண்டும் என்ற கட்டளை கை வாங்கப்படுகின்றது.

எனவும் தெல்லியற் திணைக்களம் 12.06.2022 இல் இருந்தது போலவே குறித்த பிரதேசத்தை பாதுகாக்க வேண்டும்.எனவும் கட்டளை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது