பாராளுமன்ற உறுப்பினர் கைது விவகாரம் – இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை

பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன்உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டமை மற்றும் மன்னாரில் கடற்படையினரால் பொதுமக்கள் தாக்கப்பட்மை தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் சொந்த பிரேரணை அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் வட மாகாண மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் த. கனகராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,

“யாழ்ப்பாணத்தில் கடந்த 23-09.2021 அன்று பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டமை தொடர்பில் வெளிவந்த செய்திகளின் அடிப்படையில், அவர்களது கைதுக்குரிய காரணம், கைது செய்யப்ப்ட்டமைக்கான ரசீது வழங்கப்பட்டனவா, கைது செய்யப்பட்டப்போது கைப்பற்றப்பட்ட பொருட்கள் எவை, நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட பீ அறிக்கைகள் உள்ளடங்களாக விரிவான அறிக்கை ஒன்றினை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகத்திற்கு சமர்ப்பிக்குமாறு யாழ்ப்பாண காவல்துறை நிலைய தலைமை காவல்துறைப் பரிசோதகருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

அதேவேளை மன்னார் பேசாலை காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட, வங்காலைபாடு கிராமத்தில் உள்ள கடற்றொழிலாளர் சங்கத்தை சேர்ந்த கடற்றொழிலாளிகள் 24.09.2021 (வெள்ளி) அன்று கடலுக்கு தொழிலுக்கு சென்று வீடு திரும்பிய வேளையில் கடற்படையினரால் தாக்குதல் நடத்தியமை தொடர்பில் வெளிவந்த செய்திகளை அடிப்டையாக கொண்டும் எம்மால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதன் முதல் கட்டமாக சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பிலான பூரண விளக்க அறிக்கை ஒன்றினை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு சமர்ப்பிக்குமாறு பேசாலை காவல்துறை நிலைய பொறுப்பதிகாரிக்கு அறிவறுத்தல் வழங்கப்பட்டது.

அது தொடர்பில் பேசாலை காவல்துறை நிலைய பொறுப்பதிகாரியின் அறிககையும் பெற்றுக்கொள்ளப்பட்டது. அந்த அறிக்கையின் பிரகாரம் மேலதின விசாரணைகள் இடம்பெறும்.

மேற்படி இரு முறைப்பாடுகளும் 1996 ஆம் ஆண்டு 21 இலக்க இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு சட்டத்தின் பிரவு 14 இன் பிரகாரம் ஆணைக்குழுவின் சொந்த பிரேரணயான பதிவுசெய்யப்பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

லசந்த படுகொலை வழக்கு ஹெய்க் மக்கள் தீர்பாயத்துக்கு; ஊடக சுதந்திர அமைப்புக்கள் கொண்டு செல்கின்றன

இலங்கையின் புகழ்பெற்ற ஊடகவியலாளரும், சன்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியருமான லசந்த விக்கிரமதுங்க படுகொலை வழக்கு விவகாரத்தை உலகின் முன்னணி ஊடக சுதந்திர அமைப்புகள் ஹேய்க்கிற்கு கொண்டு சென்றுள்ளன. இதற்காக மக்கள் தீர்ப்பாயம் ஒன்றும் உருவாக்கப்படவுள்ளது.
லசந்தகொலை குறித்து விசாரணை செய்து அதற்கு காரணமானவர்களை நீதியின் முன் நிறுத்தும் நோக்கத்துடன் முன்னணி ஊடக சுதந்திர அமைப்புகள் மக்கள் இந்தத் தீர்ப்பாயத்தை உருவாக்கியுள்ளதாகவும், தீர்ப்பாயத்தின் விசாரணைகள் நவம்பர் இரண்டாம் திகதி ஹேய்க்கில் ஆரம்பமாகவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பிரான்ஸிலிருந்து செயற்படும் எல்லைகளற்ற பத்திரிகையாளர் அமைப்பு, பத்திரிகையாளர்களை பாதுகாப்பதற்கான அமைப்பு, Free Press Unlimited ஆகிய அமைப்புகள் பத்திரிகையாளர்கள் படுகொலை தொடர்பில் மக்கள் தீர்ப்பாயத்தை ஆரம்பிக்குமாறு நிரந்தர மக்கள் தீர்ப்பாயத்தை கேட்டுக்கொண்டுள்ளன.

பொதுமக்கள் தீர்ப்பாயங்கள் பொதுமக்கள் விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலமும் நியாயபூர்வமான ஆதாரங்களை உருவாக்குவதன் மூலம் நாடுகளை பொறுப்புக்கூறலிற்கு உட்படுத்துகின்றன. பொதுமக்கள் தீர்ப்பாயங்கள் பாதிக்கப்பட்டவர்களை வலுப்படுத்துவதுடன் அவர்களுடைய வாக்குமூலங்களை பதிவுசெய்கின்றன.

பத்திரிகையாளர்கள் தொடர்பான மக்கள் தீர்ப்பாயம் இலங்கையின் லசந்த விக்கிரமதுங்க மெக்சிக்கோவின் மிகுவல் ஏஞ்சல் லோபஸ் வெலாஸ்கோ சிரியாவின் நபில் அல்சர்பார்ஜி கொலைகள் தொடர்பில் நீதியை வழங்க தவறியமை தொடர்பில் இந்த நாடுகளிற்கு எதிராக குற்றச்சாட்டுகளை தாக்கல்செய்யும்.

இதேவேளை, லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலை குறித்து விசாரணைகளை முன்னெடுக்கவுள்ள மக்கள் தீர்ப்பாயத்திற்கு லசந்த விக்கிரமதுங்கவின் மகள் அஹிம்ஸா விக்கிரமதுங்க தனது முழு ஆதரவையும் வெளியிட்டுள்ளார்.

சிறிலங்காவில் தலைதூக்கியுள்ள சீன ஆதிக்கம்- இந்திய வெளிவிவகார செயலாளர் சிறிலங்காவிற்கு அவசர விஜயம்!

இந்தியா – சிறிலங்காவுக்கு இடையில் ஏற்பட்டுள்ள அழுத்தங்களுக்கு மத்தியிலும் இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா சிறிலங்காவிற்கு அவசர விஜயம் மேற்கொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்காவில் சீனாவின் ஆதிக்கம் தலைதூங்கியுள்ள நிலையில், இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளரின் விஜயம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும் எனவும் தகவலகள் வெளியாகியுள்ளன.

ஒக்டோபர் 2ம் திகதி முதல் 5ம் திகதி வரை அவர் சிறிலங்காவில் தங்கிருப்பார் என புது டில்லி அரச வட்டாரங்களிலிருந்து தகவல் வெளியாகியுள்ளது. இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட உயர்மட்ட தரப்புகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் மற்றும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் ஆகியோர் நியூயோர்க்கில் நடந்த ஐ.நா அமர்வின் போது சந்தித்து பேசியிருந்தனர். இந்நிலையிலேயே, இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஹர்ஷ வர்தன் ஷ்ரிங்லா இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Posted in Uncategorized

இலங்கையுடன் முக்கிய உடன்படிக்கையில் இந்திய நிறுவனம் கைச்சாத்து

கொழும்பு துறைமுகத்தின் மேற்கு கொள்கலன் முனையத்தை  கூட்டாக அபிவிருத்தி செய்யும் உடன்படிக்கை ஒன்றில்  இந்தியாவின் அதானி குழுமம் அதன் உள்ளூர் வர்த்தக பங்காளியான ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் இலங்கை துறைமுக ஆணையகம் ஆகியவற்றுடன் இன்று (வியாழக்கிழமை) கையெழுத்திட்டுள்ளது.

குறித்த உடன்படிக்கை  700 மில்லியன் அமெரிக்க டொலர்களை தாண்டிய முதலீடாகும் என கூறப்படுகின்றது.

மேலும், மேற்கு முனையம் 35 வருட கட்டுமானம் மற்றும் பரிமாற்றம்  ஆகியவற்றின் அடிப்படையில் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.

அதானி குழுமத்தின் அறிக்கையின்படி, மேற்கு துறைமுக முனையம்  ஆயிரத்து 400 மீற்றர் நீளம் மற்றும் 20 மீற்றர் ஆழம் கொண்டதாக இருக்கும் என்பதுடன் பெரிய கொள்கலன்களை கையாள இது ஒரு பிரதான தளமாக  அமையும் என கூறப்பட்டுள்ளது.

இலங்கையில் முதல்  முறையாக  இந்தியத் துறைமுக நிறுவனம் ஒன்று கூட்டு முயற்சியில் 51  வீதமான  பங்கைக் கொண்டிருக்கும் திட்டமாக  இது அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பொது போக்குவரத்து தொடர்பிலான அறிவிப்பு!

நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் நாளை (01) அதிகாலை 4 மணியுடன் தளர்த்தப்படவுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்த நிலையில் , பொது போக்குவரத்து தொடர்பிலான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, மாகாணங்களுக்கு இடையிலான பொது போக்குவரத்துக்கள் எதிர்வரும் சில வாரங்களுக்கு இடம்பெற மாட்டாது என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம  தெரிவித்துள்ளார்.

எனினும், பேருந்து சேவைகளை மாகாணங்களுக்கு இடையில் முன்னெடுக்க தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இதன்படி, தனியார் மற்றும் அரச போக்குவரத்து சேவைகள் மாகாணங்களுக்கு இடையில் வழமை போன்று முன்னெடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

பேருந்துகளின் ஆசன எண்ணிக்கைக்கு அமைய மாத்திரமே, பயணிகளை ஏற்றிச் செல்ல முடியும் எனவும், இந்த நடைமுறையை மீறும் பேருந்துகளை தமது வசப்படுத்திக் கொள்ள பொலிஸார் நடவடிக்கை எடுப்பார்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.

எனினும், ரயில் போக்குவரத்துக்களை எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு தொடர்ந்தும் நடத்தாதிருக்க தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அத்தியாவசியமற்ற எந்தவொரு செயற்பாடுகளும் இரவு 10 மணி  முதல் அதிகாலை 4 மணி வரை அனுமதி வழங்கப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நாளை முதல் 15ஆம் திகதி வரை பதிவுத் திருமணங்களில் 10 பேர் மாத்திரம் கலந்துகொள்ள முடியுமெனவும் அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் உற்சவங்கள், கேளிக்கை நிகழ்வுகள் மற்றும் விருந்துபசார நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

Posted in Uncategorized

சிறிலங்கா தொடர்பில் ஐ.நா. சபை தயாரித்துள்ள அறிக்கை

சிறிலங்காவில் சிவில் சமூக அமைப்புகள், மனித உரிமைகள் பாதுகாப்பாளர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் மீது தீவிர கண்காணிப்பு மற்றும் துன்புறுத்தல் போன்ற முறைமை இருப்பதாக ஐ.நா தெரிவித்துள்ளது.  இது தொடர்பில் அறிக்கை ஒன்றும் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ், சிறிலங்கா உட்பட 45 நாடுகளிலுள்ள சுமார் 240 சிவில் சமூக உறுப்பினர்கள், ஆர்வலர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீதான பழிவாங்கும் செயற்பாடுகள் மற்றும் மிரட்டல் குற்றச்சாட்டுகளை ஆவணப்படுத்தியுள்ளார்.

இந்த சம்பவங்களை ஆவணப்படுத்தும் அறிக்கை, ஜெனீவாவிலுள்ள ஐ.நா மனித உரிமைகள் சபையில் ஐ.நா. மனித உரிமைகளுக்கான உதவி பொதுச் செயலாளர் ஐல்ஸ் பிராண்ட்ஸ் கெஹ்ரிஸால் நேற்று வழங்கப்பட்டது.

சிறிலங்கா குறித்து கடந்த பெப்ரவரி 9 ஆம் திகதி  மனித உரிமைகள் சபைக்கு மனித உரிமைகள் ஆணையாளர், அளித்த அறிக்கையில், சிவில் சமூக அமைப்புகள், மனித உரிமைகள் பாதுகாப்பாளர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் மீது தீவிர கண்காணிப்பு மற்றும் துன்புறுத்தல் போன்ற செய்பாடுகள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

“இதேவேளை இந்த நிலைமை குடிமை மற்றும் ஜனநாயக இடத்தில் ஒரு குளிர் விளைவை உருவாக்குகிறது மற்றும் சுய தணிக்கைக்கு வழிவகுக்கிறது என உயர் ஆணையாளர் கவலை வெளியிட்டுள்ளார்.

ஆகவே அரசு முகவர்களின் மிரட்டல் மற்றும் மனித உரிமை பாதுகாவலர்களுக்கு எதிரான துன்புறுத்தல் உள்ளிட்ட அனைத்து வகையான கண்காணிப்புகளையும் உடனடியாக முடிவுக்கு கொண்டுவருமாறு அதிகாரிகளை மனித உரிமைகள் ஆணையாளர் வலியுறுத்தினார்.

Posted in Uncategorized

சிறிலங்காவில் ஐரோப்பிய ஒன்றியக் குழு – நெருக்கடியில் அரசாங்கம்

ஐரோப்பிய ஒன்றியத்தின் விசேட தூதுக் குழுவினர் சிறிலங்காவுக்கு விஜயம் செய்துள்ள சந்தர்ப்பத்தில் பிரதான பத்திரிகைகளின் ஆசிரியர்களை விசாரணைக்காக குற்றப் புலனாய்வுப் பிரிவு அழைத்திருக்கும் சம்பவத்தினால் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை மீள இழக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

கண்டியில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட தென்னிலைங்கையின் பிரபல சட்டத்தரணியான லால் விஜேநாயக்க, பயங்கரவாத தடைச் சட்டமும் சர்வதேச தரத்திற்கு மாற்றுவதை அரசாங்கம் இழுத்தடிப்பதாக விமர்சித்துள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

ஜனநாயகத்தை பாதுகாத்தல், மனித உரிமைகளைப் பாதுகாத்தல், நாட்டின் தொழிலாளர்களின் உரிமையை பாதுகாப்பு செய்தல் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையைப் பெற்றுக்கொள்ள சிறிலங்கா அரசாங்கம் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வாக்குறுதியளித்திருந்தது.

எனினும் இந்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத காரணத்தினால் இந்த சலுகை நிறுத்தப்பட்டதோடு நல்லாட்சி அரசாங்கம் மீண்டும் பல வாக்குறுதிகளை அளித்து மீளப்பெற்றுக்கொடுத்தது. பயங்கரவாத தடைச் சட்டத்தை மாற்றுதல் உள்ளிட்ட பல விடயங்கள் இந்த வாக்குறுதிகளில் உள்ள நிலையில் அவற்றை மூன்று வருடங்களுக்குள் நிறைவேற்றும்படி தெரிவிக்கப்பட்டதோடு அவற்றின் தற்போதைய நிலைமை குறித்து ஆராய்வதற்கே விசேட குழு விஜயம் செய்துள்ளது.

பயங்கரவாத் தடைச் சட்டம் உலகின் பல நாடுகளிலும் உள்ளது. மக்களின் உரிமையை பாதுகாப்பதற்காக இது பயன்படுத்தப்படுகின்றது. எனினும் போர்க்காலத்திலிருந்து இந்த சட்டம் எமது நாட்டில் நடைமுறையில் இருந்து வருகின்றது. உலகம் ஏற்றுக்கொண்ட ரீதியாக பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை இலங்கையிலும் நடைமுறைப்படுத்தும் வகையிலான வரைபு தயாரிக்கப்பட்ட போதிலும் அது இன்று முதல் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

ஐரோப்பிய ஒன்றியத் தூதுக்குழு தற்சமயம் இலங்கையில் இருக்கின்ற நிலையில்தான் இரண்டு பிரதான சிங்களப்பத்திரிகை நிறுவனங்களின் ஆசிரியர்கள் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டிருக்கின்றனர்.

ஆகவே ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகைக்கு இப்படியான சம்பவங்கள் பாரிய தாக்கத்தை செலுத்தும். எனவே சலுகையை தக்கவைத்துக்கொள்ள இதுபோன்ற சம்பவங்கள் மீள்நிகழாமைக்கான வாக்குறுதியை சிறிலங்கா அரசாங்கம் சர்வதேசத்திற்கு மீண்டும் வழங்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியக் குழுவினருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்குமிடையிலான சந்திப்பு

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐரோப்பிய ஒன்றியக் குழுவினருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்குமிடையிலான சந்திப்பு நேற்றைய தினம் இடம்பெற்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் அவர்களின் கொழும்பிலுள்ள இல்லத்தில் நேற்று மாலை இச்சந்திப்பு இடம்பெற்றது.

இச்சந்திப்பில் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களான இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், தமிழீழ விடுதலைக் கழகத்தின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகம் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது இலங்கையில் தமிழர்கள் தற்போது எதிர்நோக்கும் பிரச்சினைகள், பயங்ககரவாதத் தடைச்சட்டம் நீக்கம், அரசியல் கைதிகளின் பிரச்சினை போன்றன தொடர்பிலும் சமகால அரசியல் தொடர்பாகவும் பேசப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

இலங்கை கோயிலில் பல நூற்றாண்டு தமிழ், தெலுங்கு செப்பேடு – யாழ். பல்கலை பேராசிரியர் கண்டுபிடிப்பு

இலங்கையின் வடமத்திய மாகாணத்தையும், கிழக்கு மாகாணத்தையும் இணைக்கும் பகுதியில் அமைந்துள்ள பாரம்பரிய தமிழ் பிரதேசமொன்றுக்கான சான்றுகளை யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வரலாற்றுத்துறை தலைவர் பேராசிரியர் ப.புஸ்பரட்ணம் கண்டுபிடித்துள்ளார்.

பொலநறுவை – மட்டக்களப்பு பிரதான வீதியுடன் இணைந்திருக்கும் மன்னம்பிட்டிப் பிரதேசம் ,வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஓர் இடமாகும்.

வரலாற்றுத் தொடக்க காலத்தில் இருந்து கிழக்கிலங்கைக்கு உட்பட்டிருந்த இந்த பாரம்பரிய பிரதேசமானது, ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இருந்து நிர்வாக வசதிக்காக பொலநறுவை மாவட்டத்துடன் இணைந்து செயற்பட்டுள்ளது.

இந்த பிரதேச எல்லைக்குள் முக்துக்கல், சமணன்பிட்டி, தம்பன்கடவை, கருப்பளை கண்டக்காடு, சொரிவில், திரிகோணமடு, கல்லூர், பிள்ளையாரடி ஆகிய பழம்பெரும் தமிழ்க் கிராமங்கள் காணப்படுகின்றன.

மக்கள் வாழாத இந்த கிராமங்கள் சிலவற்றின் ஒதுக்குப்புறங்களில் கைவிடப்பட்ட வயல் நிலங்கள், காடுகள், சிறு மலைகள், ஆதிகால மக்கள் வாழ்ந்த கற்குகைள் என்பன காணப்படுகின்றன.

இந்த ஆதாரங்கள் இக்கிராமங்களுக்கு தொன்மையான தொடர்ச்சியான வரலாற்று மரபு இருப்பதை உறுதி செய்வதாக உள்ளன. இந்த உண்மையை இக்கிரமங்களில் ஆங்காங்கே காணப்படுகின்ற இந்து, பௌத்த ஆலயங்கள், ஆலய எச்சங்கள் மேலும் உறுதி செய்கின்றன.

தமிழர் வரலாறு: ‘மன்னர் மனைவியின் சாபம் பெற்ற‘ பகுதியில் நடக்கவுள்ள தொல்லியல் ஆய்வு
தமிழ்நாடு தொல்லியல் துறை வெளிநாடுகளில், வெளி மாநிலங்களில் அகழாய்வு செய்ய விரும்புவது ஏன்?
அவ்வாறான வரலாற்றுப் பழைமைவாய்ந்த ஆலயங்களில் ஒன்றே தற்காலத்திலும் வழிபாட்டிலிருந்து வரும் தம்பன்கடுவையில் உள்ள சித்திரவேலாயுதர் கோயிலாகும்.

வரலாற்றுக் கதைகளில் இருந்து…
இந்த ஆலயம் தோன்றிய காலத்தை துல்லியமாகக் கணிக்கக் கூடிய நம்பகரமான ஆதாரங்கள் இதுவரை கிடைக்கவில்லை. ஆயினும் இந்த பிரதேச மக்களிடையே நிலவிவரும் வாய்மொழி வரலாற்றுக் கதைகளின் மூலம், இந்த ஆலயம், முன்பொரு காலத்தில் ஆகம மரபு சாராத கிராமிய ஆலயமாக இருந்துள்ளதாக தெரிய வருகிறது.

வேல் சின்னத்தை கொண்டிருந்த இந்த ஆலயம், காலப்போக்கில் ஆகம மரபில் கற்கள் கொண்டு கட்டப்பட்ட ஆலயமாக வளர்ந்துள்ளதை உறுதிப்படுத்த முடிவதாக பேராசிரியர் ப.புஸ்பரட்ணம் கூறுகிறார்.

அண்மை காலங்களில் இந்த ஆலய கட்டமைப்பில் மேலும் விரிவாக்கம் செய்யப்பட்டு மிகப் பெரிய ஆலயமாக மீள் உருவாக்கம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த மீள் உருவாக்கப் பணிகளின் போது கிடைத்த பழைய ஆலயத்தின் கட்டடப்பாகங்களும், சில வழிபாட்டுச் சின்னங்களும் புதிய ஆலயத்தில் வைத்துக் கட்டப்படாது அவை ஆலயத்தின் ஒரு பகுதியில் வைத்துப் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

அவற்றுள் ஒன்றே பழைய ஆலயத்தின் மூலஸ்தானத்தில் வைக்கப்பட்டிருந்த செப்பு பட்டயத்துடன் கூடிய அலங்காரத் தூணாகும்.

மன்னம்பிட்டி பிரதேசத்தில் காணப்படும் தொல்லியல், வரலாற்றுச் சின்னங்களை தேடிக் கண்டறிந்து அவற்றைப் பதிவு செய்து வரும் இப்பிரதேசத்திற்குரிய வரலாற்று ஆர்வலர் நகுலேஸ்வரன் பிரவின் என்பவர், இவ்வாலயத்தில் காணப்படும் செப்பு பட்டயத்தின் புகைப்படப் பிரதியொன்றை ஊடகவியலாளரும், அரசியல்வாதியுமான உமாச்சந்திரா பிரகாஷின் ஊடாக தனக்கு அனுப்பி வைத்ததாக பேராசிரியர் ப.புஸ்பரட்ணம் தெரிவிக்கின்றார்.

இந்த செப்பு பட்டயம் ஏறத்தாழ ஐந்தடி நீளமான தூணில் பொருத்தப்பட்டுள்ளது. தூணின் தொடக்கத்திலும், முடிவிலும் அரைவட்ட தாமரை வடிவம் புடைப்புச் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது.

வலப்பக்கமாக தெலுங்கு மொழியிலும், இடப்பக்கமாக தமிழ் மொழியிலும் தூணின் நடுப்பகுதில் முழுவடிவத்தில் வடிவமைக்கப்பட்ட தாமரை புடைப்புச் சிற்பத்திற்கு வலப்பக்கமாக தெலுங்கு மொழியிலும், இடப்பக்கமாக தமிழ் மொழியிலும் சாசனங்கள் எழுதப்பட்டிருப்பதை அவதானிக்க முடிகின்றது.

‘உலகின் முதல் கோயில்’: மனித வரலாற்றை மாற்றி எழுதும் 11,000 ஆண்டுகளுக்கு முந்தைய கட்டுமானம்
தமிழ்நாடு சிவகளை அகழாய்வில் கிடைத்த நெல்லின் வயது சுமார் 3,200 ஆண்டுகள்
சாசனம் அக்கால மொழிவழக்கில் பின்வருமாறு எழுதப்பட்டுள்ளது:

“(1) திருமுருக்கர் ஆலியம் ஆரு (2) முக சுவாமி மூலஸ்த் (3) தானம் வெங்கப்படி (4) பலபேர் செத்து யா (5) சக தற்மம்” என முடிகின்றது. தெலுங்கு வரிவடிவத்திலும் தெலுங்கு மொழியிலும் எழுதப்பட்ட சாசனத்தைப் படிப்பதற்கு அம்மொழியில் புலமையுடைய அறிஞர்களான பேராசிரியர் வை. சுப்பராயலு, பேராசிரியர் பொ. இரகுபதி, கலாநிதி சு.இராஜகோபால் ஆகியோருக்கு சாசனத்தின் புகைப்படங்களை பேராசிரியர் ப.புஸ்பரட்ணம் அனுப்பி வைத்துள்ளார்.

அவர்கள் மூவரும் தமிழ்ச் சாசனத்தில் சொல்லப்பட்ட செய்தியையே பெரும்பாலும் அக்கால மொழிநடைக்கு ஏற்ப தெலுங்கு மொழியிலும் எழுதப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளதாக பேராசிரியர் குறிப்பிடுகின்றார்.

அதன் வாசகம் பின்வருமாறு எழுதப்பட்டுள்ளது: “(1) திருமுருகா ஆலயம் ஆரு (2) முகசுவாமி மூலஸ்த் (3) தானம் வெங்கலப்படி (4) பலபேர் சேர்த்து யா (5). சக தற்மம்” என முடிகின்றது.

இரு மொழிச் சாசனங்களும் சொல்லும் செய்தி தம்பன் கடுவையில் உள்ள சித்திர வேலாயுத கோயில் கற்பக்கிரகத்தில் உள்ள மூலஸ்தானத்திற்கு வெங்கலப் படியை அமைப்பதற்கு பலரும் ஒன்று சேர்ந்து மக்களிடம் இரந்து (யாகசம் செய்து) பெற்றதை தானமாக வழங்கியது பற்றிக் கூறுகின்றன.

18ஆம் நூற்றாண்டு அல்லது 19ஆம் நூற்றாண்டின் முற்பகுதி
பேராசிரியர் இரகுபதி தமிழில் உள்ள சாசனத்தின் தொடக்க நிலை வரிவடிவங்களில் புள்ளியிடாமலும், தொடர்ந்து வரும் வரிவடிவங்களில் புள்ளியிடப்பட்டும் சாசனம் எழுதப்பட்டிருப்பதால் இச்சாசனம் எழுதப்பட்ட காலம் 18ஆம் நூற்றாண்டு அல்லது 19ஆம் நூற்றாண்டின் முற்பகுதியாக இருக்கலாம் எனக் கருதுகின்றார்.

இக்காலப் பகுதியில் மட்டக்களப்பு தேசத்துக் கோயில்களின் வரலாறு கூறும் கல்வெட்டுக்கள் சில பொறிக்கப்பட்டதற்கு ஆதாரங்கள் காணப்படுகின்றன.

அவை பெரும்பாலும் தமிழில் எழுதப்பட்டவை. ஆனால் தம்பன்கடவை சித்திரவேலாயுதர் ஆலயத்து செப்புபட்டயத்தில் தமிழோடு தெலுங்கு மொழியிலும் எழுதப்பட்டுள்ளமை புதிய வரலாற்றுச் செய்தியாகக் காணப்படுகின்றது. இதற்கான காரணங்கள் வரலாற்று ரீதியாக நோக்கப்படவேண்டியவை.

15ஆம் நூற்றாண்டிலிருந்து கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு தேசம் பெரும்பாலும் கண்டி அரசின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட பிராந்தியமாகவே இருந்துள்ளது.

இவ்வரசின் ஆதிக்கம் அநுராதபுரம், பொலநறுவை இராசதானியின் எல்லை வரை பரந்திருந்தது. கண்டியின் கடைசி சிங்கள மன்னன் ஸ்ரீவீரபராக்கிரம நரேந்திர சிங்கனுக்குப் பின்னர் அவ்வரசில் ஆட்சி புரிந்த ஸ்ரீவிஜயராஜசிங்கன் (1739- 1747), கீர்த்தி ஸ்ரீஇராஜசிங்கன் (1747-1782), ராஜாதிராஜசிங்கன் 1782-1798), ஸ்ரீவிக்கிரம ராஜசிங்கன் (1798- 1815) ஆகியோர் தமிழக மதுரை நாயக்க வம்சத்தை சேர்ந்தவர்கள்.

இவர்களின் ஆட்சி மொழி தமிழக இருப்பினும் ஆட்சியாளர்கள், அதிகாரிகள் என்பவர்களில் தாய் மொழி தெலுங்காகவும் இருந்துள்ளது.

இதனால் இவ்வரச அதிகாரிகளின் பங்களிப்பால் தம்பன்கடவை சித்தியவேலாயுதர் ஆலயத்து வெண்கலப்படி அமைக்கப்பட்டிருக்கலாம் எனக் கூறுவதற்கும் இடமுண்டு. ஆனால் ஆலயத்தில் உள்ள செப்பு பட்டயம் அவ்வாலய வெண்கலப் படியானது பலர் ஒன்று கூடி பல இடங்களுக்கு சென்று மக்களிடம் இரந்து (யாசகம் பெற்று) பெற்ற நிதி உதவியைக் கொண்டே வெண்கலப் படி அமைக்கப்பட்டதாகக் கூறுவதால் இப்பணியைக் கண்டி ஆட்சியாளர்களுடன் தொடர்புபடுத்துவது பொருத்தமாகத் தோன்றவில்லை.

தெலுங்கைத் தாய் மொழியாகக் கொண்ட மக்கள் ஆனால் இலங்கையில் கண்டி இராசதானிக்கு முன்னரே தெலுங்கைத் தாய் மொழியாகக் கொண்ட மக்களும் வாழ்ந்ததற்கு ஆதாரங்கள் காணப்படுகின்றன.

சிறப்பாக யாழ்ப்பாண இராசதானி காலத்தில் இருந்த படைப்பிரிவுகளில் சுதேச தமிழ்ப்படை வீரர்களுடன் பிறநாட்டுப் படைவீரர்களும் இணைந்து பணியாற்றியமைக்குப் பல சான்றாதாரங்கள் காணப்படுகின்றன.

அவர்களுள் தென்னிந்திய கன்னட, தெலுங்குப் படைவீரர்கள் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கனர். இவ்வரசின் வீழ்ச்சியைத் தொடர்ந்து இப்படை வீரர்களில் ஒரு பிரிவினர் தமிழ் பேசும் மக்களாக இங்கேயே நிரந்தரமாகத் தங்கியுள்ளனர்.

இவர்களில் சிலர் தமிழர்களுடன் இணைந்து வட இலங்கையில் உள்ள ஆலயங்கள் சிலவற்றில் பண்டாரம் என்ற பெயரில் அவ்வாலயங்களை மேற்பார்வை செய்பவர்களாகவும், பூசகர்களாகவும், மாலைகட்டுபவர்களாகவும் கடமையாற்றி வருகின்றனர்.

இவர்களை கோயில் பண்டாரம் என்ற பெயரில் தனியொரு சமூகமாகவும் அழைக்கப்படுகின்றது. அவர்களின் வழிவந்தவர்கள் தற்காலத்தில் மொழியால் தமிழ்ச் சமூகங்களுடன் இரண்டறக் கலந்திருந்தாலும் பண்பாட்டால் சில தனித்துவமான அம்சங்களுடன் யாழ்ப்பாணத்தின் சில ஊர்களில் வாழ்ந்து வருவதைக் காணமுடிகின்றது. இது கிழக்கிலங்கைக்கும் பொருந்தும்.

கிழக்கிலங்கையில் அதிலும் குறிப்பாக மட்டக்களப்பின் வரலாற்றுப் பழமைவாய்ந்த ஆலயங்களின் தோற்றப் பின்னணிகள், மக்களின் சமய நம்பிக்கைகள், சடங்குகள், கிரிகை முறைகள், வழிபாட்டு மரபுகள் என்பவை சில தனித்துவமான அம்சங்களைக் கொண்டவை. இங்கு தோன்றிய பாசுபத சமயத்திற்கு தொன்மையான, தொடர்ச்சியான வரலாறு உண்டு.

இவ்வாலயங்களில் நீண்ட காலமாக பிராமணர்கள் அல்லாதவர்களே பூஜைசெய்து வந்துள்ளனர். இதற்கு கோணேஸ்வரர் கல்வெட்டே சிறந்த ஆதாரமாகக் காணப்படுகின்றது. மேலும் இங்கிருக்கும் ஆலயங்களை நிர்வகிப்பவர்கள், மேற்பார்வை செய்பவர்கள் பொதுவாக வண்ணக்கர் என்றே அழைக்கப்படுகின்றனர்.

இம்மரபு 2200 ஆண்டுகளுக்கு முன்பிருந்து தோன்றி வளர்ந்ததை அண்மையில் மட்டக்களப்பில் கண்டுபிடிக்கப்பட்ட பிராமி எழுத்துப் பொறித்த மட்பாண்டச் சாசனமும் உறுதிப்படுத்துகின்றது.

இந்நிலையில் மட்டகளப்பு பூர்வசரித்திரம் என்ற மூல நூலில் இங்குள்ள ஆலயங்களில் பணி செய்த சமூகங்களில் ஒன்றாக பண்டாரத்தையும் குறிப்பிடுகின்றது. அப்பண்டாரங்களில் தெலுங்கைத் தாய் மொழியாகக் கொண்டவர்களும் இருந்திருக்க வாய்ப்புண்டு. ஆயினும் அதை உறுதிபடுத்த மேலும் ஆய்வுகள் முன்னெடுக்கப்பட வேண்டும். இருப்பினும் இப்பிரதேசத்தில் தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட சில சமூகங்கள் நீண்ட காலமாக வாழ்ந்து வருவதற்கு சில ஆதாரங்கள் காணப்படுகின்றன.

மட்டகளப்பு தேசத்து வாய்மொழி வரலாற்றுக் கதைகள் அப்பிரதேசத்தில் தோன்றிய புராதன ஆலயங்கள் சிலவற்றை அங்கு வாழ்ந்து வரும் வேடர் அல்லது பழங்குடி மக்களுடன் தொடர்புடுத்திக் கூறுகின்றன. நீண்டகாலமாக ஏனைய சமூகங்களில் இருந்து விலகி காடுகளிலும், மலைகளிலும், இயற்கையான குகைகளிலும் வாழ்ந்த இம்மக்களில் ஒரு பிரிவினர் அண்மைக்காலத்தில் நடைபெற்ற யுத்தங்களுக்கு அஞ்சி நகரங்களை நோக்கி இடம்பெயர்ந்த போது ஏனைய மக்கள் தொடர்ந்தும் தமது பூர்வீக இடங்களிலேயே வாழ்ந்து வருகின்றனர்.

பெரும்பாலும் தெலுங்கு மொழிச் சொற்கள் இங்குள்ள இம்மக்களின் தனித்துவமான வாழ்வியல் அம்சங்கள் பற்றி அண்மையில் விரிவாக ஆராய்ந்த பேராசிரியர் கா.குகபாலன் அம்மக்களின் பேச்சு மொழியில் உள்ள பல சொற்களைப் புரிந்து கொள்வதற்காக அம்மொழியைப் பதிவு செய்து தமிழக அறிஞர்களான பேராசிரியர் வை.சுப்பராயலு, பேராசிரியர் விஜயவேணுகோபால் ஆகியோருக்கு அனுப்ப வைத்தார். அம்மொழிப் பதிவை விரிவாக ஆராய்ந்த இரு அறிஞர்களும் அம்மொழியில் பெரும்பாலும் தெலுங்கு மொழிச் சொற்களே காணப்படுவதாக அடையாளப்படுத்தியிருந்தமை இவ்விடத்தில் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது.

2017 ஆம் ஆண்டுகாலப் பகுதியில் இப்பழங்குடி மக்கள் வாழ்ந்து வரும் மட்டக்களப்பின் வாகரை போன்ற இடங்களில் பேராசிரியர் ப.புஸ்பரட்ணம் தலைமையிலான குழு களவாய்வு மேற்கொண்ட சந்தர்ப்பத்தில், அம்மக்கள் சிறு குடிசைகளிலும், குகைளிலும் வாழ்ந்து வருவதைக் காணமுடிந்தது.

இந்நிலையில் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழ்ந்து வரும் மன்னம்பிட்டி தம்பன்கடுவையில் பண்டைய குடியிருப்புகள், வயல் நிலங்கள் இருந்த இடங்கள் அண்மைக்காலங்களில் கைவிடப்பட்டு அவ்விடங்களின் ஒருபகுதி காடுகள், மலைகள், குகைகள் என்பவற்றைக் கொண்ட பிரதேசமாகக் காணப்படுகின்றது.

அத்துடன் அங்குள்ள குகைகளில் செயற்கையான சில மாற்றங்களைச் செய்து அண்மைக்காலம் வரை பழங்குடி மக்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் காணப்படுவதுடன், அச்சமூகத்தினரைச் சார்ந்த சில குடும்பங்கள் தற்காலத்திலும் வாழ்ந்து வருவதாக அறிய முடிகின்றது.

இதனால் அவர்களின் தாய் மொழி தெலுங்காக இருந்திருக்கலாம். இவ்வரலாற்றுப் பின்னணியில் இங்கிருக்கும் சித்திரவேலாயுதர் ஆலயத்தில் காணப்படும் தெலுங்கு மொழிச் சாசனத்தை இங்கு வாழ்ந்த, வாழ்ந்து வருகின்ற பழங்குடி மக்களுடனும் தொடர்புபடுத்திப் பார்க்கவும் இடமுண்டு.

இருப்பினும் இக்கருத்தை உறுதிப்படுத்த மேலும் ஆய்வுகள் செய்யப்படுவது அவசியமாகும் என யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வரலாற்றுத்துறை தலைவர் பேராசிரியர் ப.புஸ்பரட்ணம் தெரிவித்துள்ளார்.

Thanks – https://www.bbc.com/tamil

அழைத்தது மனித உரிமை ஆணைக்குழு! ஓடி ஒளிந்த “லொகான் ரத்வத்த”

அநுராதபுரம் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகளை துப்பாக்கி காண்பித்து முழந்தாளிட வைத்து மிரட்டிய சம்பவம் தொடர்பாக சிறைச்சாலைகள் புனர்வாழ்வு முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்தவை இலங்கை மனித உரிமை ஆணைக்குழு விசாரணைக்காக அழைந்திருந்தது. இவரை நேற்றைய தினம் விசாரணைக்காக அழைத்திருந்தது.

எனினும் அவர் மனித உரிமை ஆணைக்குழுவில் முன்னிலையாகவில்லை என தெரியவருகிறது.

வேறொரு தினத்தில் தனக்கு அனுமதி அளிக்கும்படி அவர் கேட்டுக்கொண்டதாக தென்னிலங்கைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறைச்சாலைகள் முன்னாள் சிறைச்சாலைகள் புனர்வாழ்வு அமைச்சராக இருந்த லொகான் ரதவத்த அநுராதபுரம் சிறைச்சாலைக்கு மதுபோதையில் சென்று தமிழ் கைதிகளை முழந்தாளிட வைத்து தலையில் துப்பாக்கி வைத்து மிரட்டிய சம்பவம் அரசியலில் பெரும் சர்ச்சையினை ஏற்படுத்தயிருந்தது.

அதன் பின்னர் அரசியல் அழுத்தங்கள் அதிகரிக்க சிறைச்சாலைகள புனர்வாழ்வு இராஜங்க அமைச்சர் பதவியினை விலகியிருநதார்.

இத்தாலிக்கு பயணமாகியிருந்த சிறிலங்கா பிரதமர் மகிந்த ராஜபக்ச நாட்டிற்கு திரும்பியதும் அவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சிறிலங்கா பொதுசன பெரமுனவின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சாகர காரியவசம் தெரிவித்திருந்தார்.