நிறைவேற்று அதிகாரம்  மடத்தனமாகச் சிந்திக்கக் கூடியவர்களின் கைகளிலே இருக்கிறது  –  செயலாளர் நாயகம் ஜனா

பாராளுமன்ற முறைமையிலேயே தந்தை செல்வாவுடனான ஒப்பந்தங்கள் கிழித்தெறியப்பட்டன. அதேபோன்று நிறைவேற்று அதிகார முறைமையினாலேயே ஸ்ரீ எழுத்து நீக்கப்;பட்டது. எனவே நிறைவேற்ற அதிகாரம் என்பது இங்கு பிரச்சiனை இல்லை. அது நல்லவர்களிடமிருந்தால் சில வேளைகளில் எமது மக்களுக்கு நன்மையாகவும் இருக்கலாம். ஆனால், கோட்டபாய போன்ற மடத்தனமாகச் சிந்திக்கக் கூடியவர்களின் கைகளிலே இவ்வாறான அதிகாரம் இருப்பதனாலேயே நாங்கள் இன்று அதனை இல்லாமல் செய்ய வேண்டும் என்று விரும்புகின்றோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் ஜனா தெரிவித்தார்.

எமது மக்கள் பற்றி ஆழமாகச் சிந்திக்காது 21வது திருத்தத்தை ஆதரிக்கவும் முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டின் பொருளாதார நிலை மிக மோசமாக இருக்கின்றது. மட்டக்களப்பு மாவட்ட நிலைமை சம்பந்தமாகவும் பேசவேண்டியுள்ளது.  உண்மையில் உணவுப் பொருட்களுக்கு மாத்திரமல்ல உணவை உற்பத்தி செய்யும் மூல காரணங்களான எரிபொருளுக்கும் மிகவும் தட்டுப்பாடான நிலையில் இருக்கிறது. ஒட்டு மொத்த நாட்டிலும் தட்டுப்பாடு நிலவினாலும் விவசாயத்தை மீன்பிடியை நம்பியிருக்கும் மட்டக்களப்பு மாவட்டம் மிகவும்; கஸ்டமான நிலையில் இருக்கின்றது. இந்தப் போகத்தின் அறுவடை நடைபெறவிருக்கிறது. மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்ல முடியாத நிலை இருக்கிறது.

எரிவாயுப்பிரச்சினையால் மண்ணெண்ணெய் தட்டுப்பாடான நிலையில் ஒவ்வொருவருடைய வீட்டிலும் அடுப்பு எரிவதற்கு கூட சிரமமாக இருக்கின்றது. இந்த வகையில் நீண்ட வரிசைகளைத்தான் ஒவ்வொரு எரிபொருள் நிலையங்களிலும் பார்க்கக் கூடியதாக இருக்கின்றது.

இந்த நாட்டின் நிலைமையைப் பொறுத்தமட்;டில் தற்போதைய ஜனாதிபதி நாட்டின் பொருளாதார நிலைக்கு முழுமுதல் காரணமானவர் அவர் ஆட்சி அதிகாரத்தைப் பெற்றவுடன் தேர்தல் வாக்குறுதிக்காக வருமான வரியை மிகவும் கூடுதலாகக் குறைத்தார். 8 சதவீதத்துக்குக் கொண்டுவந்தார். விவசாய நாடான இலங்கையின் இரசாயன உர இறக்குமதியை நிறுத்தினார். 2 வருடங்களுக்குள் இந்த நாடு எப்படியிருக்கும் என்பதனை சிந்திக்காத மடத்தனமானதொரு ஜனாதிபதியாக சர்வதேச நாயண நிதியத்தை நாடாதிருந்தார். அந்த வகையில் இந்த நாடு இப்படியானதொரு பொருளாதார நெருக்கடிக்குள் இன்று சிக்கியிருக்கிறது.

கோட்டா கோ ஹோம் என்று நாடு முழுவதிலுமே போராட்டங்கள் வெடித்தது பிரதமராக இருந்த மஹிந்த பதவி விலகும் அளவிற்கு போராட்டம் உக்கிரமடைந்தது. அவர் விலகியவுடன் இந்த நாட்டை மீட்டெடுப்பேன் என்று ரணில் விக்கிரமசிங்க பிரதமராகப் பதவியேற்றாhர். அவர் பதவியேற்றதும் போராட்டக்காரர்கள் உரத்த குரலில் கோட்டபாய ராஜபக்ச அவர்களை காப்பாற்றுவதற்காகத்தான் பிரதமர் பதவியை ஏற்றதாகக் கூறினார்கள். கிட்டத்தட்ட அது உண்மைபோலவே தற்போது இருக்கின்றது. ஏனென்றால் கிட்டத்தட்ட அவர் பதவியேற்று 2 மாதங்களாகிவிட்ட போதும் நாட்டில் எந்தவிதமான மாற்றமுமில்லை. பொருளாதார நெருக்கடி கூடிக்கெண்டே செல்கின்றது. சில வேளைகளில் அனைத்துக் கட்சிகளின் கூட்டு அரசாங்கம் ஏற்பட்டிருந்தால் சர்வதேச நாடுகள் நம்பிக்கையுடன் உதவி செய்திருப்பார்கள். தேசியப்பட்டியல் உறுப்பினராக பாராளுமன்றத்துக்கு வந்த ஒருவர் பிரதமராகப் பதவியேற்ற காரணத்தினால் சஜித் பிரேமதாச அவர்களது அணி அவருக்கு ஆதரவு கொடுக்கவில்லை. ஜே.வி.பி. ஆதரவு கொடுக்கவில்லை. இதர கட்சிகளும், ஏன் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் கூடுதலான உறுப்பினர்களும் அவருக்கு ஆதரவு கொடுக்காத நிலையில், இன்று சர்வதேசத்தின் ஒரு நம்பிக்கையான பிரதமராக அவர் இருப்பார் என்று நினைத்துக் கெண்டிருந்தாலும் கூட சர்வதேசம் அவரரை நம்பி இந்த நாட்டுக்கு உதவி செய்ததாகத் தெரியவில்லை.

நாட்டின் பொளாதாரம் வர வர மிக மோசமடைந்து கொண்டு செல்வது மாத்திரமல்ல. அவரது உரைகள் கூட இரண்டு மாதத்துக்குத்தான் உணவு இருக்கிறது. இந்திய உதவித்திட்டத்தின் கீழ்; இன்றுதான் இறுதி எண்ணைக்கப்பல் வருகின்றது என்கின்ற அறிவுறுத்தல்களினால் மக்கள் மேலதிகமாக எரிபொருளை உணவுகளைச் சேகரிப்பதனால் பெரும் நெருக்கடியை இந்த நாடு சந்தித்துக் கொண்டிருப்பது மாத்திரமல்ல. எதிர்காலத்திலும் இiதைவிட அதிகமான நெருக்கடியைச் சந்திப்பதற்கும் சந்தர்ப்பம் இருக்கிறது.

அது மாத்தரமல்லாமல் ஒரு விலைக்கட்டுப்பாடு இல்லாதமையினால் நாட்டிலுள்ள பெரு முதலாளிகள் தொடக்கம் சிறு வியாபாரிகள் வரை பொருட்களின் விலைகளை அவரவர் நினைத்தபடி நிர்ணயிக்;கின்றமையால் மக்களின் கஸ்டம் மேலும் மேலும் பெருகிக் கொண்டே வருகின்றது. கோட்டபாய ராஜபக்சவை நம்பி சர்வதேசம் ஒருபோதும் உதவி செய்வதாக இல்லை. நாட்டின் அரசாங்கத்தில் ஒரு மாற்றம் ஏற்படாதவரை இந்த நாட்டின் பொருளாதாரம் தற்போதிருக்கின்ற நிலைமையை விட மோசமாக செல்லும் என்பதுதான் தற்போது வெளிப்படையாக இருக்கின்றது.

தற்போது அரசியமைப்பின் 21வது திருத்தச் சட்டம் தொடர்பில் கதைகள் இருக்கின்றன. இந்த 21வது அரசியலமைப்புத் திருத்தத்தினால் எமது மக்களுக்கு வடக்கு கிழக்கு பிரதேசங்களுக்கு என்ன நன்மை இருக்கின்றது என்பதை நாங்கள் சிந்திக்க வேண்டும். இதற்கு எட்டு திருத்தங்களுக்கு முன்பு வந்த 13வது திருத்தச் சட்டத்தின் ஊடாகக்கொண்டு வரப்பட்ட சட்ட மூலங்கள் கூட இன்னும் நிறைவேற்றப்படாமல் இருக்கின்றது. 13வது திருத்தச் சட்டத்தில் இருக்கின்ற காணி மற்றும் பொலிஸ் அதிகாங்கள் இன்றும் நிறைவேற்றப்படாமல் இருக்கின்றன. அதனூடாக இந்த அரசு அரசியலமைப்பை மீறுகின்றதாகவே கருதப்படுகின்றது.

21வது திருத்தச் சட்டத்தை நாங்கள் ஆதரிக்க வேண்டும் என்ற நிலைப்பாடு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலுள்ள ஒரு சாராருக்கு இருக்கின்றது. இந்த 21வது திருத்தச் சட்ட வரைபிலும் அவர்கள் மிக முக்கிய பங்காற்றியிருப்பதாகக் கூடக் கூறியிருக்கின்றார்கள். ஆனால் இந்த 21வது திருத்தச் சட்டத்தின் மூலம் நிறைவேற்று ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைத்து பாராளுமன்றத்திற்கு அதிகாரங்களைக் கொடுத்து பாராளுமன்ற ஜனநாயக முறையைக் கொண்டு வர வேண்டும் என்று கூறப்படுகின்றது.

இவ்வாறான பாராளுமன்ற ஜனநாயக முறை இருக்கும் போதுதான் பண்டா செல்வா, டட்லி செல்வா ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன. கைச்சாத்திடப்பட்ட அந்த ஒப்பந்தங்கள் இந்த பாராளுமன்ற ஜனநாயக முறைமையிலே கிழித்தெறியப்பட்ட வரலாறுகளே இருக்கின்றது.  நிறைவேற்ற அதிகார ஜனாதிபதி முறை 1977ம் ஆண்டுக்குப் பின்னர் ஜே.ஆர்.ஜெயவர்த்தனா அவர்களினாலேயே முதல் முறையாகக் கொண்டு வரப்பட்டது. இதற்கு முன்னர் பிறேமதாசா ஜனாதிபதியாக இருந்த காலத்தில் இலங்கையில் கொழுந்து விட்டெரிந்த ஸ்ரீ பிரச்சனை இரவோடு இரவாக பாராளுமன்றத்திற்கு சட்டமூலம் கொண்டு வரப்படாமல் நிறைவேற்று அதிகார முறையினால் இல்லாமலாக்கப்பட்ட வரலாறும் உண்டு.

எனவே நிறைவேற்ற அதிகாரம் என்பது இங்கு பிரச்சiனை இல்லை. அது நல்வர்களின் கைகளில் இருந்தால் சில வேளைகளில் எண்ணிக்கையில் சிறுபான்மையாக இருக்கும் எமது மக்களுக்கு நன்மையாகவும் இருக்கலாம். ஆனால், கோட்டபாய ராஜபக்ச போன்ற மடத்தனமாகச் சிந்திக்கக் கூடியவர்களின் கைகளிலே இவ்வாறான நிறைவேற்று அதிகாரம் இருக்கின்ற காரணத்தினாலே தான் நாங்கள் இன்று அந்த அதிகார முறைமையை இல்லாமல் செய்ய வேண்டும் என்று விரும்புகின்றோம். இந்த நிலைப்;பாட்டினால் எமது மக்களுக்கு என்ன பயன் என்பதையும் மிக முக்கியமாகச் சிந்திக்க வேண்டும்.

21வது திருத்தச் சட்டத்திற்கு தமிழ்த் தேசியப் பரப்பிலே இருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் நாங்கள் ஆதரவு கொடுக்க வேண்டும் என்றால் 13வது திருத்தச் சட்டத்திற்குள் இருக்கும் அதிகரங்களை முழுமையாகப் பரவலாக்க வேண்டும் என்ற திருத்தம் 21வது திருத்தச் சட்டத்திற்குள்ளே உள்வாங்கப் பட வேண்டும். அதற்கும் மேலாக நிதி அதிகாரங்கள் மாகாணசபைகளுக்குப் பகிரப்பட வேண்டும். என்கின்ற சரத்துக்கள் கூட 21வது திருத்தச் சட்டத்திற்குள் வரவேண்டும்.

இன்று அரசாங்கமும், அரசாங்கத்திற்குள் இருப்பவர்களும் புலம்பெயர் தேசங்களில் வாழும் தமிழ் மக்களை இங்கு முதலிடுமாறு கோரிக்கை விடுக்கின்றார்கள். அவர்கள் முதலீட்டுக்காக் கொண்டு வரும் பணத்தற்கு இங்கு உத்தரவாதம் இருக்க வேண்டும். அந்த அடிப்படையில் இங்கு மாகாணங்களுக்கு நிதி அதிகாரங்கள் இருக்கும் பட்சத்தில் அவர்கள் குறிப்பிட்ட மாகாணசபைகளினூடாக அந்த அந்த மாகாணங்களிலே முதலீடுகளைச் செய்வார்கள். புலம்பெயர் தேசங்களிலே தமிழர்கள் மாத்திரமல்ல சிங்களவர்கள் கூட தனவந்தர்களாக இருக்கின்றார்கள். அவர்களும் அவர்களது மாகாண அரசுகளுடன் ஒப்பந்தங்களைச் செய்து அந்த அந்த மாகாணங்களுக்குரிய நிதியைப் பாதுகாப்பாகக் கொண்டு வந்து முதலிடுவார்கள். அவ்வாறாக மாகாணசபைகளுக்குரிய நிதி அதிகாரங்கள் கூட 21வது திருத்தச் சட்டத்தலே கொண்டு வரப்பட வேண்டும்.

புலம்பெயர் உறவுகள் தங்கள் நிதிகளை அவர்;கள் விரும்பியவாறு பாதுகாப்பாக முதலீடுகளை மேற்கொள்வதன் மூலம் இந்த நாட்டிற்கு தேவையான அளவிற்கு ஏன் தேவைக்கு மேலதிகமாகவும் டொலர்களைக் கொண்டு வருவதற்குரிய சாத்தியம் ஏற்படும். எனவே 21வது திருத்தச் சட்டத்தை ஆதரிப்பதாக நாங்கள் இருந்தால் இவ்வாறான விடயங்கள் அதில் உள்வாங்கப் படவேண்டும் என்பது என்னுடைய உறுதியான நிலைப்பாடு என்று தெரிவித்தார்.

Posted in Uncategorized

ராஜபக்சவினர் இருக்கும் வரை சர்வதேச உதவிகள் கிடைக்காது:ரணிலின் இறுதி அரசியல் அத்தியாயம்:ராஜித சேனாரத்ன

ராஜபக்சவினரின் கீழ் தற்போதைய அரசாங்கத்தை பொறுப்பேற்பதில்லை என்று ஐக்கிய மக்கள் சக்தி எடுத்த முடிவு எந்தளவுக்கு சரியானது என்பதை நாட்டு மக்கள் புரிந்துக்கொண்டுள்ளனர் என நம்புவதாக அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

கோட்டாபய ராஜபக்சவின் தலைமையின் கீழ் ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தை பொறுப்பேற்றிருந்தால், எங்கிருந்தும் உதவிகள் கிடைக்காது.

எமது கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசவின் தூரநோக்கு சிந்ததனை காரணமாக அவர் அரசாங்கத்தை பொறுப்பேற்கவில்லை. ராஜபக்சவினர் இருக்கும் வரைக்கும் நாட்டை கட்டியெழுப்ப சர்வதேச உதவிகள் கிடைக்காது.

மத்திய கிழக்கு நாடுகள் ஒரு சொட்டு எரிபொருளையும் வழங்காது
ராஜபக்சவினர் இருக்கும் வரை சர்வதேச உதவிகள் கிடைக்காது:ரணிலின் இறுதி அரசியல் அத்தியாயம்:ராஜித சேனாரத்ன

ஐரோப்பா உட்பட வளர்ச்சியடைந்த நாடுகளிடம் இருந்து எமக்கு எப்போதும் உதவிகள் கிடைக்காது. ராஜபக்சவினர் பரப்பிய முஸ்லிம் எதிர்ப்பு காரணமாக நிவாரண உதவியாக மத்திய கிழக்கு நாடுகளிடம் இருந்து ஒரு சொட்டு எரிபொருள் கூட கிடைக்காது.

எனினும் எமது எதிர்க்கட்சித் தலைவரின் தலைமையின் கீழ் சரியான முறையில் சர்வக்கட்சி அரசாங்கம் ஒன்று அமைக்கப்படுமாயின் மத்திய கிழக்கு நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, பின்னர் செலுத்தும் கடன் அடிப்படையில் எரிபொருள் மற்றும் எரிவாயுவை இறக்குமதி செய்ய முடியும்.

ஜனாநாயக ஆட்சி நிர்வாக வரைவை முன்வைப்பதன் மூலம் ஐரோப்பா உட்பட மேற்குலக நாடுகள் இலங்கைக்கு உதவும். தற்போதைய அரசாங்கத்திற்கு உதவ எவரும் முன் வர மாட்டார்கள் என்பது தெளிவானது.

இறுதியில் ஒரு நபர் காரணமாக முழு நாடும் துன்பத்தை அனுபவித்து வருகிறது. இதனால், நாங்கள் கோட்டாபய ராஜபக்சவை பதவியில் இருந்து வெளியேறுமாறு கூறுகின்றோம்.

ராஜபக்சவினர் இருக்கும் வரை சர்வதேச உதவிகள் கிடைக்காது:ரணிலின் இறுதி அரசியல் அத்தியாயம்:ராஜித சேனாரத்ன இன்னும் ஒரு வாரத்திற்குள் ரணில் விக்ரமசிங்கவையும் விரட்ட வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்னிடம் கூறினர்.

இதுதான் தற்போது அரசாங்கத்திற்குள் இருக்கும் நிலைமை. ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் இருந்து வெளியேறியுள்ளார். ரணில் விக்ரமசிங்க கூறுவதை ஜனாதிபதி கவனத்தில் கொள்வதில்லை என்பதே இதற்கு காரணம்.

இப்படியான துயரமான நிலைமைக்கு அவர் தள்ளப்பட்டுள்ளார். முழு ஐக்கிய தேசியக் கட்சியையும் அழித்த ரணில், தற்போது நாட்டுக்கும் மக்களுக்கும் துரோகமிழைத்து விட்டு, தனது அரசியலில் இறுதி அத்தியாயத்தில் இருந்து வருகிறார் எனவும் ராஜித சேனாரத்ன கூறியுள்ளார்.

பிரதமரின் வீட்டுக்கு அருகில் பதற்றம்!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வீட்டுக்கு முன்னால் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்படுகின்றது.

ஐக்கிய மக்கள் சக்தியின் மகளிர் அமைப்பின் ஏற்பட்டில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

ஹிருணிகா பிரேமசந்திர உள்ளிட்டோர் அங்கு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கும் நிலையில், அந்தப் பகுதில் பெருமளவு பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை கொழும்பு கோட்டை பகுதியில் இளைஞர்கள் பலர் தற்போது ஆர்ப்பாட்டப் பேரணியொன்றை நடத்தி வருகின்றனர்.

Posted in Uncategorized

தம்மிக்க பெரேரா பாராளுமன்ற உறுப்பினரானார்!

வர்த்தகர் தம்மிக்க பெரேரா சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்றார்.

இன்று முற்பகல் 10 மணிக்கு பாராளுமன்றம் கூடிய போது, அவர் பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமானம் செய்துகொண்டார்.

முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்‌ஷவின் இராஜினாமவை தொடர்ந்து வெற்றிடமாகிய ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டில் ஆசனத்திற்கே தம்மிக்க பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார்.

இவருக்கு, பொருளாதார விடயம் தொடர்பான முக்கிய அமைச்சுப் பதவி வழங்கப்படவுள்ளது.

மலையக தொழிலாளர் சம்பளத்தை அதிகரிக்கவும்-மனோ கணேசன் வலியுறுத்தல்

மலையகத் தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பளத்தை அதிகரிக்குமாறு நாம் அரசாங்கத்தை கேட்டுக்கொள்கின்றோம். அதேவேளை பெருந்தோட்டப் பகுதிகளில் பயன்படுத்தப்படாத காணிகளை தோட்டத் தொழிலாளர்களுக்கு விவசாயத்துக்காக வழங்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளோம் என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான  மனோ கணேசன் சபையில் வலியுறுத்தியுள்ளார்.

பிரதமரிடம் நாம் முன்வைத்துள்ள வேண்டுகோளுக்கு இதுவரை பதில் கிடைக்கவில்லை என்பதால் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கூட்டங்களில் இனி தாம் பங்கேற்கப் போவதில்லையெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தைப் பகிஷ்கரிப்பது தொடர்பில் நேற்றைய தினம் எதிர்க்கட்சியினர் பலரும் சபையில் கருத்துக்களை முன்வைத்தனர்.

இதன்போது  உரையாற்றிய அவர்,

“மிக மோசமான பொறுப்பற்ற அரசாங்கமே தற்போது நாட்டில் உள்ளது. தான் பிரதமர் பதவியை கேட்டுப் பெறவில்லை. தன்னை அழைத்தே ஜனாதிபதியே அப் பதவியை வழங்கினாரென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்து வருகிறார்.

ஆனால் விமல் வீரவன்சவோ ரணில் பெயரை சில தரப்பினர் பெயரிட்டதாக சபையில் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை ஒரே விடயத்துக்காக ஜனாதிபதியும் பிரதமரும் வேறு வேறாக அதிகாரிகளுக்கு அழைப்பு விடுத்து பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றனர். மிக மோசமான மடத்தனமாக அரசாங்கத்தையே அவர்கள் நடத்திக் கொண்டிருக்கின்றனர்.

கொழும்பு மாவட்டத்தில் மக்கள் எரிபொருள், மண்ணெண்ணெய், எரிவாயு நெருக்கடி தட்டுப்பாடு காரணமாக  பெரும் கஷ்டப்படுகின்றனர். மலைநாட்டில் தோட்டத் தொழிலாளர்கள் பெரும் கஷ்டங்களை அனுபவித்து வருகின்றனர்.

தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பளத்தை அதிகரிக்குமாறு நாம் அரசாங்கத்தை கேட்டுக்கொள்கின்றோம். அதேவேளை பெருந்தோட்டப் பகுதிகளில் பயன்படுத்தப்படாத காணிகளை தோட்டத் தொழிலாளர்களுக்கு விவசாயத்துக்காக வழங்குங்கள் என மேலும் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

”சிங்கள தலைவர்களே வெட்கமாக இல்லையா?”: சபையில் கேள்வியெழுப்பிய சிறீதரன் எம்.பி!

நீதிமன்ற உத்தரவுகளை மதிக்காத நாட்டில் எப்படி நீதியை பெற்றுக்கொள்ள முடியும்?
கருணை, காருண்யம் போதித்த புத்தபகவான், இன்று ஒரு ஆக்கிரமிப்பு கருவியாக பயன்படுத்தப்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் நாடாளுமன்றில் கருத்து தெரிவித்தார்.
முல்லைத்தீவு, குருந்தூர் மலையில் புத்தபகவானின் சிலை நிறுவப்பட்ட சம்பவம் மற்றும் விஸ்வமடு பகுதியில் படையினரால் பொதுமக்கள் தாக்கப்பட்டமை தொடர்பில் சிறீதரன் வெளியிட்ட கருத்துக்களுக்கு சரத் வீரசேகர பதிலளித்து பேசிய நிலையில், அதற்கு எதிர் கருத்து வெளியிட்ட போதே சிறீதரன் இந்த விமர்சனத்தை வெளியிட்டார்.
இலங்கையில் சிங்கள மக்களுக்கும், தமிழ் மக்களுக்கும், முஸ்லிம் மக்களுக்கும் தனித்தனி சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.
தென்னிலங்கையில் சிங்கள இளைஞர்கள் போராடும்போது, அவர்களை தமது பிள்ளைகளாக பார்க்கும் அரசாங்கம், தமிழர்களை மாற்று முகமாக பார்ப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

ஜி எல் பீரிஸின் உருவ பொம்மையை எரித்து யாழில் போராட்டம்

வெளிவிவகார அமைச்சர் ஜி எல் பீரிஸின் உருவபொம்மை எரித்து யாழ்ப்பாணத்திலுள்ள அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஸ்தானிகரின் அலுவலகத்திற்கு முன்பாக போராட்டம் இடம்பெற்றது.

அரசாங்கம் தவறான கருத்துக்களை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் தெரிவித்துள்ளதாக கூறி அதற்கு எதிராக நல்லூர் கைலாச பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாக ஒன்றுகூடிய போராட்டக்காரர்கள் பேரணியாக ஜ.நா.அலுவலகத்திற்கு வந்தடைந்தனர்.

இதன் போது இலங்கை வெளிவிவகார அமைச்சர் பீரிஸ்,ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் தெரிவித்துள்ள கருத்துக்களை கண்டித்து அதற்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

மேலும் அமைச்சரின் உருவ பொம்மையை தீயிட்டுக் கொளுத்திய போராட்டக்காரர்கள் ஐக்கிய நாடுகள் அலுவலகத்திற்கு தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரினை கையளித்தனர்.

போராட்டத்தில் அரசியல் கைதிகளின் உறவுகள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், சிவில் சமூகத்தினர் அரசியல் கட்சி உறுப்பினர்கள் பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

தனியார் துறையினருக்கு அரசாங்கம் விடுத்துள்ள கோரிக்கை

எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில், வீடுகளில் இருந்து வேலை செய்யும் முறைமையை பின்பற்றுமாறு அரசாங்கம் தனியார் பிரிவினரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பில் அரசாங்கத்தினால் எடுக்கப்பட்ட தீர்மானத்தை தனியார் துறையினரும் பின்பற்றுவதில் எவ்வித பாதிப்பும் ஏற்படாதென தொழில் அமைச்சின் செயலாளர்  தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், நாட்டில் நிலவும் தற்போதைய நெருக்கடி நிலை வழமைக்கு திரும்பும் வரை அரசாங்கத்திற்கு தேவையான ஒத்துழைப்பினை வழங்குமாறு தனியார் பிரிவினரிடம் கோரிக்கை விடுக்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இறக்குமதி செயற்பாடுகளை முன்னெடுத்து செல்வதற்கு இடையூறுகள் ஏற்படாத வண்ணம் உரிய வேலைத்திட்டங்களை பின்பற்றுமாறு அரசாங்கத்தினால் தனியார் பிரிவினரிடம் கேட்டுக்கொள்ளப்படுவதாக தொழில் அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமான முறையில் செல்ல முற்பட்ட 41 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டனர்

அவுஸ்திரேலியாவிற்கு படகு மூலம் சட்டவிரோதமான முறையில் செல்ல முற்பட்ட 41 பேர் கொண்ட இலங்கையர்கள் குழுவொன்று அவுஸ்திரேலிய கரையோரப் பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்டவர்கள் கிறிஸ்மஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டு மீண்டும் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

100க்கும் மேற்பட்ட அவுஸ்ரேலியப் படை வீரர்கள் அடங்கிய விமானத்தில், கிறிஸ்மஸ் தீவில் இருந்து இலங்கைக்கு குறித்த 41 பேரும் நாடு கடத்தப்பட்டது.மேலதிக விசாரணைகளுக்காக இவர்கள் நேற்று இரவு விமான நிலையத்தில் குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டனர்.இதனை அடுத்து நேற்றிரவு நீர்கொழும்பு மேலதிக நீதவான் மர்லன் ஜயசூரிய முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்களில் 37 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

இவர்கள் நீர்கொழும்பு, முல்லைத்தீவு, சிலாபம், உடப்புவ, தொடுவாவ மற்றும் மாரவில ஆகிய பிரதேசங்களை சேரந்தவர்களாகும். . இவர்களில் 35 பேர் பெரியவர்களாகும், மற்ற ஆறு பேர் 16 வயதுக்குட்பட்டவர்களாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை பொருளாதார நெருக்கடி குறித்து ஆராய்வு

பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இலங்கையில், உணவு, மருந்துகள், சமையல் எரிவாயு மற்றும் எரிபொருள் போன்ற அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் பற்றாக்குறை காணப்படுவதால் அந்நாட்டு பொதுமக்கள் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இலங்கைக்கு கடன் உதவித் திட்டத்தின் கீழ், எரிபொருள், எரிவாயு, உரம் மற்றும் உணவு பொருள்களை வழங்கி இந்தியா உதவி வருகிறது.

இந்நிலையில் இலங்கை நிலைமை குறித்து வெளியுறவுத் துறை மந்திரி எஸ் ஜெய்சங்கர் தலைமையில் டெல்லியில் இன்று வெளியுறவு விவகாரங்களுக்கான ஆலோசனைக் குழு கூட்டம் நடைபெற்றது. இதில் வெளியுறவுத் துறை இணை மந்திரிகள் முரளீதரன், மீனாட்சி லேகி, ராஜ்குமார் ரஞ்சன் சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் பாஜகவை சேர்ந்த ராஜ்தீப் ராய் மற்றும் ஜிவி எல் நரசிம்மராவ் சிவசேனாவின் பிரியங்கா சதுர்வேதி, திமுக எம்பி திருச்சி சிவா, பிஜு ஜனதா தளம் சார்பில் சுஜீத் குமார் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இலங்கை பொருளாதார நெருக்கடி, அந்நாட்டில் வெளியேறி இந்தியாவிற்கு வருவோர் உள்ளிட்டவை குறித்து அரசு உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் இந்த ஆலோசனை கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

பல்வேறு விவகாரங்கள் மற்றும் இலங்கைக்கு உதவுவதில் இந்தியாவின் பங்கு குறித்த சாதகமான சூழ்நிலை குறித்து விவாதம் நடைபெற்றதாக மத்திய மந்திரி ஜெய்சங்கர் தமது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டார்.

இந்த கடினமான நேரத்தில் நமது அண்டை நாடான இலங்கையுடன் நிற்பதன் அவசியத்திற்கு இந்த ஆலோசனை கூட்டத்தில் ஒருமித்த ஆதரவு தெரிவிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Posted in Uncategorized