ராஜபக்ஸ குடும்பத்தினர் திருகோணமலையில் தஞ்சம்?

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் திருகோணமலை கடற்படை தளத்தில் விசேட பாதுகாப்பிற்கு மத்தியில் தங்கியுள்ளனர்.

அண்மைய நாட்களாக திருகோணமலையில் இந்தியா முன்னெடுக்கும் நடவடிக்கைகள் தொடர்பில் நியூஸ்ஃபெஸ்ட் தொடர்ச்சியாக சுட்டிக்காட்டியதுடன், திருகோணமலை மற்றும் அதனை சூழவுள்ள பல முக்கிய இடங்களில் இந்தியா தனது ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தியுள்ளது.

முன்னாள் பிரதமரும் அவரது குடும்பத்தவர்களும் திருகோணமலை கடற்படை தளத்தில் தங்கியுள்ள நிலையில், கடற்படை தளத்திற்கு முன்பாகக் கூடிய மக்கள் எதிர்ப்பில் ஈடுபட்டனர்.

கடற்படை தளத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்ததுடன், தளத்தை அண்டிய கடற்பகுதியிலும் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.

தனது தந்தையும் குடும்பத்தினரும் நாட்டிலிருந்து தப்பிச்சென்றுள்ளதாகக் கூறப்படும் தகவல் உண்மைக்கு புறம்பானது என பிரான்ஸ் செய்தி சேவையொன்றுக்கு முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

நாட்டிலிருந்து தாம் தப்பிச்செல்லப் போவதில்லையெனவும் அவர் கூறியுள்ளார்.

Posted in Uncategorized

போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு அமெரிக்க இராஜாங்கத்திணைக்களம் கண்டனம்

அமைதியான முறையில் போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் மீது நிகழ்த்தப்பட்ட வன்முறைத்தாக்குதல்கள் குறித்து தாம் மிகுந்த கவலையடைவதாகத் தெரிவித்திருக்கும் அமெரிக்க இராஜாங்கத்திணைக்களம், தற்போது நாட்டில் நிலவிவரும் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகளுக்கு நீண்டகால அடிப்படையிலான தீர்வுகளைக் கண்டறிவதில் விசேட அவதானம் செலுத்துமாறு இலங்கை மக்களிடம் வேண்டுகோள்விடுத்திருக்கின்றது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவாக நேற்று திங்கட்கிழமை அலரி மாளிகையில் ஒன்றுதிரண்ட குழுவினர், அலரி மாளிகைக்கு முன்பாக காலி வீதியில் நிர்மாணிக்கப்பட்டிருந்த ‘மைனா கோ கம’ கூடாரங்களை இடித்து, அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களையும் கடுமையாகத் தாக்கினர். அதனைத்தொடர்ந்து காலி வீதியின் ஊடாக காலிமுகத்திடலில் அமைக்கப்பட்டிருந்த ‘கோட்டா கோ கம’விற்குச் சென்று அங்கு நிர்மாணிக்கப்பட்டிருந்த கூடாரங்களை எரித்து, போராட்டக்காரர்கள்மீது தாக்குதல் நடத்தினர். அதனையடுத்து நாடளாவிய ரீதியில் வன்முறைகள் வெடித்து அமைதியற்ற நிலையொன்று தோற்றம்பெற்றது.

இதுகுறித்து அமெரிக்க இராஜாங்கத்திணைக்களத்தின் உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்யப்பட்டிருக்கும் பதிவிலேயே மேற்கண்டவாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. அப்பதிவில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

‘இலங்கையின் தற்போதைய நிலைவரத்தை உன்னிப்பாக அவதானித்து வருகின்றோம். அமைதியான முறையில் போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் மீதும், அவ்விடங்களில் இருந்தவர்கள் மீதும் நிகழ்த்தப்பட்டிருக்கும் வன்முறைத்தாக்குதல்கள் குறித்து நாம் மிகுந்த கவலையடைகின்றோம்.

அதேவேளை தற்போது நாட்டில் நிலவிவரும் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகளுக்கு நீண்டகால அடிப்படையிலான தீர்வுகளைக் கண்டறிவதில் விசேட அவதானம் செலுத்துமாறு நாம் இலங்கை மக்களைக் கேட்டுக்கொள்கின்றோம்’ என்று அமெரிக்க இராஜாங்கத்திணைக்களம் தெரிவித்திருக்கின்றது.

அதேவேளை இச்சம்பவம் தொடர்பில் சர்வதேச ஜுரர்கள் ஆணைக்குழுவும் அதன் கண்டனத்தை வெளியிட்டிருக்கின்றது. அதன்படி சர்வதேச ஜுரர்கள் ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்யப்பட்டிருக்கும் பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:

‘இலங்கையில் அமைதியான முறையில் போராட்டங்களில் ஈடுபட்டவர்கள்மீது நடத்தப்பட்டிருக்கும் வன்முறைத்தாக்குதல்களைக் கடுமையாகக் கண்டனம் செய்யும் அதேவேளை, தொடர்ச்சியாக மோசமடைந்துவரும் நிலைவரம் குறித்துக் கவலையடைகின்றோம். மேலும் குறித்த வன்முறைச்சம்பவத்துடன் தொடர்புபட்டவர்கள் குறித்து விசாரணைகளை முன்னெடுப்பதுடன் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுமாறு இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம்’ என்று கூறப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

வன்முறைகளில் ஈடுபடாமல் பொதுமக்கள் அமைதியாக இருக்க வேண்டும் – ஜனாதிபதி கோட்டாபய

மக்களுக்கு எதிரான வன்முறை மற்றும் பழிவாங்கும் செயல்களை நிறுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கேட்டுக்கொண்டுள்ளார்.ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையிலும் பலவேறு இடங்களில் வன்முறை சம்பவங்கள் தொடர்ந்தும் பதிவாகி வருகின்றன.இந்நிலையில் வன்முறைகளில் ஈடுபடாமல் பொதுமக்கள் அமைதியாக இருக்க வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கேட்டுக்கொண்டுள்ளார்.

பொருளாதார நெருக்கடியை தீர்க்கவும் அரசியல் ஸ்திரத்தன்மையை மீட்டெடுக்கவும் அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

58 கைதிகள் காணாமல்போயுள்ளனர் – சிறைச்சாலைகள் ஆணையாளர்

புனர்வாழ்வுத் திட்டத்தின் ஒரு பகுதியாக கட்டுமானப் பணிகளுக்குச் சென்ற 58 கைதிகள் காணாமல் போயுள்ளனர்.சிறைச்சாலைக்கு மீண்டும் திரும்பும் வழியில் அவர்கள் காணாமல்போனதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.

கைதிகளுக்கான புனர்வாழ்வு திட்டத்தின் ஒரு அங்கமாக இடம்பெறும் வெளிப்புற கட்டுமானப்பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்த குறித்த கைதிகள், நேற்றைய தினம் மீண்டும் வட்டரக்க சிறைச்சாலைக்கு அழைத்துவரப்பட்டனர்.

இதேவேளை, குறித்த கைதிகள் பயணித்த பேருந்துகள் மீது, ஆர்ப்பாட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாகவும், அதனையடுத்து, 58 கைதிகள் காணாமல்போயுள்ளதாகவும் சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்

துப்பாக்கிச் சூடு நடத்த முப்படையினருக்கும் பாதுகாப்பு அமைச்சு அனுமதி!

பொதுச் சொத்துக்களை திருடுபவர்கள் மற்றும் நபர்கள் மீது தாக்குதல் நடத்துபவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துமாறு முப்படையினருக்கு பாதுகாப்பு அமைச்சு உத்தரவிட்டுள்ளது.

இன்று மாலை பாதுகாப்பு அமைச்சு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

நேற்று முதல் நாட்டில் அரசுக்கு எதிரான வன்முறை தீவிரம் அடைந்துள்ள நிலையில் மக்கள் அரசியல்வாதிகளின் வீடுகள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இந்நியிலேயே முப்படையினருக்கு துப்பாக்கி சூடு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

முன்னாள் ஜனாதிபதி விடுத்துள்ள கோரிக்கை!

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தனது டுவிட்டர் பக்கத்தில் விசேட கோரிக்கை ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில், இராணுவ ஆட்சிக்கு வழிவகுத்து விடவேண்டாம் என அனைத்து பிரஜைகளிடமும் கோரிக்கை விடுப்பதாக முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

மேலும், இராணுவ ஆட்சிக்கு வழி வகுப்பதற்காக நாசகார சக்திகள் வன்முறையை தூண்டுவதற்கு சந்தர்ப்பத்தை பயன்படுத்தலாம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் எனவும், இதை தடுப்பதற்காக மக்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் எனவும் முன்னாள் ஜனாதிபதி தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

தந்தை நாட்டைவிட்டு ஓட மாட்டார் – மகன் நாமல் அதிரடி அறிவிப்பு

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாட்டை விட்டு ஓடவில்லை என அவரது மகன் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

வௌிநாட்டு ஊடகம் ஒன்றிற்கு கருத்து வௌியிட்ட அவர், ““எனது தந்தை பாதுகாப்பாக இருக்கிறார், அவர் பாதுகாப்பான இடத்தில் இருக்கிறார், அவர் குடும்பத்துடன் தொடர்பு கொள்கிறார், நாட்டை விட்டு செல்லமாட்டார்” என்று கூறியுள்ளார்.

ஊரடங்கு உத்தரவு வியாழன் வரை நீட்டிப்பு

நாடளாவிய ரீதியில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் வியாழன் 12 ஆம் திகதி காலை 7.00 மணி வரை தொடரும்.
முன்னதாக புதன்கிழமை காலை 7.00 மணிக்கு ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது

திருகோணமலையில் பதற்றம்! மஹிந்த குடும்பத்துடன் அங்குதான் உள்ளாராம்.!

திருகோணமலையில் உள்ள கடற்படை முகாம் பொது மக்களால் முற்றுகையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்று அதிகாலை பாதுகாப்புத் தரப்பினரால் அலரி மாளிகை அருகில் இருந்து போராட்டக்காரர்களை அகற்றிய பின்பு மஹிந்த அலரிமாளிகையில் இருந்து தனது விஜேராம உத்தியோகபூர்வ இல்லத்துக்கு பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டிருந்தார்.

அதன் பிறகு இன்று அதிகாலை இருள் விலக முன்னரே விமானப்படை ஹெலிகொப்டர் ஒன்றில் மஹிந்த, ஷிரந்தி, மஹிந்தவின் இரண்டாம் புதல்வன் யோஷித்த அவனது மனைவி மற்றும் இன்னும் சிலரும் திருகோணமலைக்குத் தப்பிச் சென்றுள்ளனர்.

திருகோணமலை கடற்படை முகாமில் இருக்கும் கடற்படைத் தளபதிக்கான விருந்தினர் மாளிகையில் தற்போது அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சர்வதேச நாடு ஒன்றின் ஒத்துழைப்புடன் இன்னும் ஒரு நாட்டில் தஞ்சம் அடைவதற்கு ஏற்பாடுகள் நடைபெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.

Posted in Uncategorized

மஹிந்தவின் மெதமுலன இல்லமும் தீக்கிரை

மஹிந்த ராஜபக்ஷவின் பரம்பரை இல்லமான வீரக்கெட்டிய, மெதமுலன இல்லமும் தீக்கிரையாகியுள்ளது.

ஆர்ப்பாட்டகாரர்கள் சிலரினால் இவ்வாறு தீ வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, வீரகெட்டியவில் அமைந்துள்ள டி.எ.ராஜபக்ஷ உருவச்சிலைக்கும் மக்கள் தீ வைத்துள்ளனர்.