ராஜபக்ஷக்களுக்கு மீண்டும் உயிர்கொடுக்க விரும்பவில்லை – கஜேந்திரகுமார்

ராஜபக்ஷக்களுக்கு மீண்டும் உயிர்கொடுக்க முடியாது என்பதனால் சர்வகட்சி மாநாட்டை புறக்கணிக்க போவதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்தரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

ராஜபக்ஷ அரசாங்கம் ஆட்சிக்கு வந்து இரண்டு வருடங்கள் கடந்துள்ளபோதும் தமிழ் மக்களின் இனப் பிரச்சினைக்கான தீர்வு குறித்து கலந்துரையாட தொடர்ந்தும் தயக்கம் காட்டுவதாக குறிப்பிட்டார்.

இதேவேளை காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுக்கு ஒரு இலட்சம் ரூபாய் வழங்கப்படும் என கூறி உறவுகளின் வேதனையுடன் அரசாங்கம் விளையாடியுள்ளது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

அதேபோன்று பயங்கரவாத தடைச்சட்டத்தினை திருத்துவதாக கூறினாலும், நீண்டகாலத்திற்கு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தாது தடுத்து வைக்கும் முறையினை கைவிடும் எண்ணம் இந்த அரசாங்கத்திற்கு இல்லை என்றும் ஜேந்தரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

தற்போதைய நெருக்கடி காரணமாக அரசாங்கத்தின் மீது அனைத்து மக்களும் வெறுப்பினை வெளிப்படுத்திவரும் சூழலில் மாநாட்டில் பங்கேற்பதானது வீழ்ச்சி கண்டிருக்கும் ராஜபக்ஷ குடும்பத்திற்கு மீண்டும் புத்திதுயர் அளிப்பதாக மாறிவிடும் என கூறினார்.

ஆகவே, இவ்விதமான பினனணிகளைக் கொண்டவர்கள் கூட்டும் சர்வகட்சி மாநாட்டில் பங்கேற்பதில் தமிழ் மக்களுக்கு எவ்வதமான நன்மைகளும் கிடைக்கப்போதில்லை என கஜேந்தரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

சர்வ கட்சி மாநாட்டை நிராகரித்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்

எதிர்வரும் புதன்கிழமை(23) இடம்பெறவுள்ள சர்வ கட்சி மாநாட்டில் கலந்துகொள்ளாதிருப்பதற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தீர்மானித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் நீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, குறித்த சர்வ கட்சி மாநாட்டில் கலந்துகொள்ளாதிருக்க தீர்மானித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி இன்று(21) அறிவித்துள்ளது.

Posted in Uncategorized

தமிழ் முற்போக்கு கூட்டணி சர்வ கட்சி மாநாட்டில் கலந்துக்கொள்ளாது

பொருளாதார துறையில் மட்டுமல்லாது, பொருளாதார வீழ்ச்சியின் தொடர்ச்சியாக நம் நாடு அரசியல், சமூக, கலாச்சார துறைகள் உள்ளிட்ட சகல துறைகளிலும் அதல பாதாளத்தில் விழுந்துள்ள பின்னணியில், சர்வகட்சி மாநாட்டில் கலந்துக்கொள்ளுமாறு விடுக்கப்பட்ட அழைப்பை கவனமாக பரிசீலித்து, இம்மாநாட்டில் கலந்துக்கொள்வதில்லை என தமிழ் முற்போக்கு கூட்டணி முடிவு செய்துள்ளதாக கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி மேலும் கூறியுள்ளதாவது, அரசாங்கத்தின் தோல்வியை எதிரணியின் தலைகளில் சுமத்துவதற்கான முயற்சியாகவும், அரசாங்கத்தின் பங்காளி கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை திருப்தி படுத்த அரசாங்கம் செய்யும் முயற்சியாகவும், இந்த அழைப்பை, பிரதான எதிரணியான ஐக்கிய மக்கள் கூட்டணி கட்சியாக நாம் கணிக்கிறோம்.

Posted in Uncategorized

ஜனாதிபதியின் அழைப்பை கூட்டமைப்பினர் நிராகரிக்க வேண்டும் – யோகராசா கனகரஞ்சினி

ஜனாதிபதியுடனான சந்திப்பினை தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் புறக்கணிக்க வேண்டும் என காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க தலைவி யோகராசா கனகரஞ்சினி தெரிவித்துள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் அரசியல்வாதிகள் ஓர் அணியில் திரண்டு எமக்காக பேச வேண்டும். எமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும்.

ஜனாதிபதியை சந்திக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளதாக நாங்கள் அறிகிறோம். அதனை அவர்கள் புறக்கணிக்க வேண்டும் என கோருகிறோம்.

அரசாங்கம் ஆட்டம் கண்டுள்ள இந்த நிலையில் அவர்களுடன் பேச்சுக்களை நடத்துவதனை விட இந்த சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி எமக்கான உரிமைகளையும் , எமக்கான நீதியையும் பெற அவர்கள் அணிதிரள வேண்டும்.

குறிப்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தன் , நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் ஆகியோர் ஜனாதிபதியுடான பேச்சுக்களை புறக்கணிக்க வேண்டும்.

ஜனாதிபதியுடன் பேச்சுக்கு செல்வார்கள் ஆயின் அது எமக்கு இழைக்கப்படும் அநீதி மாத்திரமல்ல , துரோகமும் கூட என மேலும் தெரிவித்தார்.

டெலோ சர்வகட்சி மாநாட்டைப் புறக்கணிக்கின்றது – செல்வம் அடைக்கலநாதன் பா.உ

சர்வகட்சி மாநாட்டை தமிழீழ விடுதலை இயக்கம் டெலோவும் புறக்கணிக்கின்றது என அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் மட்டக்களப்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

சர்வகட்சி மாநாட்டை தமிழீழ விடுதலை இயக்கம் டெலோ புறக்கணிக்கின்றது. ஏற்கனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஜனாதிபதிக்கிடையிலான சந்திப்பு தொடர்பில் ஜனாதிபதியிடம் நல்லிணக்க சமிஞ்சையைக் காட்டும்படியான கோரிக்கையை நாங்கள் முன்வைத்திருக்கின்றோம். தற்போதும் அவ்வாறான நல்லிணக்க சமிஞ்சையைக் காட்டுகின்ற பட்சத்திலே மேற்கொண்டு சிந்திக்கலாம் என்றும் தெரிவித்திருக்கின்றோம்.

தற்போது சர்வகட்சி மாநாட்டைக் கூட்டியிருக்கினற இந்த தருணத்திலே நாங்கள் அதனையும் புறக்கணிக்கின்ற சூழ்நிலை ஏற்பட்டிருக்கின்றது. நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தில் எங்களுடைய காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டத்தின் போது அங்கிருக்கின்ற பொலிசாரால் மிக மோசமான மனித உரிமை மீறல் செயற்பாடுகள் நிகழ்த்தப்பட்டுள்ளன.

தற்போது வடக்கு கிழக்கை நோக்கியே அமைச்சர்களின், அரச பிரதிநிதிகளின் பயணங்கள் இருக்கின்றது. காரணம் சிங்கள மக்கள் அவர்களைப் புறக்கணித்துள்ளார்கள். இத்தருணத்தில் தமிழ் மக்கள் மத்தியிலே வந்து தங்களுடைய கருத்துகளைச் சொல்லுகின்ற போது சிங்கள மக்கள் தங்களுக்குச் சார்பாக மாறுவார்கள் என்ற யுத்தியோடு தமிழ்ப் பிரதேசங்களிலே வந்து புத்த கோயில்களை அமைப்பதும், எமது மக்களின் போட்டங்களை மழுங்கடிக்கும் செயற்பாடுகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

இவை நிறுத்தப்பட வேண்டும். இந்த அரசாங்கம் அடிப்படையாகப் பொருளாதார ரீதியிலே தன்னை ஒருபோதும் நிவர்ததி செய்ய முடியாத நிலையில் இருக்கின்றது. வெளிநாடுகளில் இவ்வாறான நிலைமைகள், தேர்தல் தோல்விகள் என்பன ஏற்பட்டால் அதன் தலைவர்கள் தங்கள் பதவிகளை இராஜினாமா செய்து விடுவார்கள். இதேபோல் இன்றைக்கு மிகவும் மோசமான பின்னடைவைக் கண்டிருக்கின்ற இந்த நாட்டின் தலைவர்கள் இராஜினாமா செய்வதுதான் சாலச் சிறந்தது என்பதோடு தமிழீழ விடுதலை இயக்கம் டெலோ இந்த சர்வகட்சி மாநாட்டை புறக்கணிக்கின்றது என்று தெரிவித்தார்.

Posted in Uncategorized

களுதாவளையில் சிறி சபாரெத்தினம் ஞாபகாத்த பயணிகள் நிழற்குடை திறந்து வைப்பு

தமிழீழ விடுதலை இயக்கத்தின் முன்னாள் தலைவர் சிறி சபாரெத்தினம் அவர்களின் ஞாபகார்த்தமாக மட்டக்களப்பு மண்முனை தென்எருவில் பற்றுப் பிரதேச சபை பிரிவிற்குட்பட்ட களுதாவளை பிரதேசத்தில் பயணிகள் நிழற்குடையொன்று அமைக்கப்பட்டு இன்றைய தினம் மக்கள் பாவனைக்காகத் திறந்து வைக்கப்பட்டது.

மண்முனை தென்எருவில் பற்றுப் பிரதேச சபைத் தவிசாளரும் ரெலோவின் மத்திய குழு உறுப்பினருமான ஞா.யோகநாதன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில்,

தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், கட்சியின் செயலாளர் நாயகமும் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினருமான கோ.கருணாகரம் (ஜனா), உபதலைவர் இந்திரகுமார் பிரசன்னா, மட்டக்களப்பு மாநகரசபைப் பிரதி முதல்வர் க.சத்தியசீலன், களுதாவளை தேசியப் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாநகரசபை மற்றும் பிரதேசசபை உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டிருந்தனர்.

களுதாவளை தேசியப் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பிரதேச மக்களின் நன்மை கருதி அவர்கள் பயன்பெறும் வகையில் களுதாவளை தேசியப் பாடசாலைக்கு அருகாமையில் இப் பயணிகள் நிழற்குடை கட்சியின் சுவிஸ் கிளையின் நிதியுதவியில் அமைக்கப்பட்டு இன்றைய தினம் அவர்களுக்கு பயனளிக்கும் முகமாகத் திறந்து வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

முஸ்லிம்களின் ஜனாஸாக்களை கதரக்கதர எரித்த சாபத்தையே இந்த ஆட்சியாளர்கள் அனுபவித்து வருகிறார்கள் – ரவூப் ஹக்கீம்

கொரோனா வைரஸால் உயிரிழந்த முஸ்லிம்களின் ஜனாஸாக்களை கதரக்கதர எரித்த சாபத்தையே இந்த ஆட்சியாளர்கள் அனுபவித்து வருகிறார்கள் என்று ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

நாட்டினுடைய பொருளாதார நெருக்கடியால் நாட்டு மக்களை படுபாதாளத்துக்குள் அரசாங்கம் தள்ளியுள்ளது. நாட்டு மக்களின் சாபத்தைப் பெற்ற அரசாங்கமாக இது இருக்கிறது. வீட்டுக்குப் போங்கள் என்று சொல்லுமளவுக்கு இன்றைய ஆட்சியாளர்கள் மாறியுள்ளதென்றும் அவர் தெரிவித்தார்.

முஸ்லிம் காங்கிரஸின் சம்மாந்துறை இளைஞர் காங்கிரஸின் 5ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நேற்று மாலை இளைஞர் ஒன்றுகூடல் நிகழ்வில் கலந்து கொண்டு தொடர்ந்து உரையாற்றிய அவர், அங்கு மேலும் தெரிவிக்கையில்,

“இன்றைய ஆட்சியாளர்கள் ஒவ்வொரு நாட்டுக்கும் சென்று பிச்சை வாங்கிக் கொண்டிருக்கின்றார்கள். அண்மையில் இந்தியா ஒரு பில்லியன் டொலர்களை வழங்கியுள்ளது. இது இன்னும் இரண்டு மாதத்திற்குள் முடிந்து விடும். அதற்கு பிறகு எந்த நாட்டில் போய் வாங்குவது.

மீண்டும் இவ்வாறான நெருக்கடி ஏற்படும். இவ்வாறான நிலைமை கடந்த காலங்களில் கிரேக்கத்திலும், லெபனான் போன்ற நாடுகளில் ஏற்பட்டிருந்தன. அந்த நாடுகளில் அரசாங்கங்கள் மாறி மாறி ஆட்சியை அமைத்தாலும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருந்தன. அவ்வாறான நிலைமைதான் எமது நாட்டுக்கும் ஏற்படப் போகின்றது” என்றார்.

Posted in Uncategorized

இலங்கைக்கு தொடர்ந்து எரிபொருளை விநியோகிக்க முடியாது: இந்திய நிறுவனமான IOC அறிவிப்பு

இலங்கைக்கு தொடர்ச்சியாக எரிபொருளை வழங்க முடியாது என இந்திய எண்ணெய் நிறுவனம்(IOC) இலங்கைக்கு அறிவித்துள்ளது.

இந்தியாவின் கடன் உதவியின் கீழ் தொடர்ந்து இந்திய எண்ணெய் நிறுவனத்திடம் எரிபொருளை கொள்வனவு செய்ய முன்னர் எதிர்பார்த்து இருந்ததாக எரிசக்தி அமைச்சின் செயலாளர் கே.டி. ஆர்.ஒல்கா தெரிவித்துள்ளார்.

எனினும் இந்திய எண்ணெய் நிறுவனத்தின் இந்த அறிவிப்பு காரணமாக வேறு விநியோகஸ்தரிடம் இருந்து எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கான விலை மனு கோரப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மசகு எண்ணெய் பற்றாக்குறையால் மூடப்பட்டுள்ளதாகவும் மசகு எண்ணெய் மற்றும் எரிபொருளை இந்திய நிறுவனம் வழங்காததால், கூட்டுத்தாபனமே கொள்வனவு செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

“ஜனாதிபதியுடன் பேசுவதன் மூலம் எதுவும் நடைபெறப்போவதில்லை”-ஜனா

பாராளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை இல்லாத நிலையில், ஜனாதிபதியினால் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் பேசி எவ்வாறு ஒரு அரசியல் தீர்வினை முன்வைக்கமுடியும் எனதமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) கேள்வி எழுப்பியுள்ளார்.

மட்டக்களப்பு,திருப்பழுகாமத்தில் வைத்தியர் க.விஸ்வலிங்கம் அவர்களின் ‘நோய் நிவாரணி’ நூல் வெளியீடும்,சித்த வைத்திய முகாமும்  நடைபெற்றது.

இந்த நிகழ்வில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் கருணாகரம், தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களை அழைத்துப்பேசுகின்றேன் என்று எங்களை அழைத்து எங்களை பகடைக்காய்களாக மாற்றி சர்வதேச அழுத்தங்களை குறைப்பதற்காக ஜனாதிபதி இவ்வாறான நாடகத்தினை நடாத்துகின்றார் என்பதில் தமிழீழ விடுதலை இயக்கம் உறுதியாகயிருக்கின்றது.

இதேபோல சர்வகட்சி மாநாட்டை கூட்ட நடவடிக்கையெடுக்கப்படுகின்றது. சர்வகட்சி மாநாடும் ஒன்றுதான் பாராளுமன்றமும் ஒன்றுதான்.அதில் பங்குபற்றுவது குறித்து தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானிப்பார்கள். ஜனாதிபதி தமிழ் மக்களுக்கான தீர்வுக்கான ஒரு பேச்சுவார்த்தையினை நடாத்தவேண்டுமானால் முதலில் தமிழ் மக்களுக்கு இனப்பிரச்சினையுள்ளது அதற்கு தீர்வு வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்ளவேண்டும். ஏற்றுக்கொண்டன் பின்னரே அரசியல் தீர்வு குறித்து பேசமுடியும்.

மேலும் ஒரு அரசியல் தீர்வினை இந்த பாராளுமன்றம் ஊடாக கொண்டு வர வேண்டுமானால், அரசியலமைப்பில் மாற்றத்தினை ஏற்படுத்தவேண்டுமானால் பாராளுமன்றத்தின் மூன்றிலிரண்டு பெரும் பான்மையிருக்கவேண்டும். ஜனாதிபதியுடன் இருந்த 30க்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் விலகிச்சென்றுள்ள நிலையில் பாராளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையும் இல்லை. எனவே ஜனாதிபதியினால் ஒரு அரசியலமைப்பினை கொண்டுவரமுடியாது.

இந்நிலையில், தமிழ் தேசிய கூட்டமைப்புடன் பேசி எவ்வாறு ஒரு அரசியல் தீர்வினை முன்வைக்கமுடியும். அவருடன் பேசுவதன் மூலம் எதுவும் நடைபெறப்போவதில்லை” என்றார்.

ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பற்றி எதுவும் தெரியாது- ஓ.பன்னீர்செல்வம்

ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இன்று ஆஜராகி வாக்குமூலம் அளித்தார்.

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா உடல்நிலை சரியில்லாமல் அப்பல்லோ மருத்துவமனையில் சேர்த்த விபரத்தை நான் சொந்த ஊரில் இருந்த போது தெரிந்து கொண்டேன். அவருக்கு சர்க்கரை வியாதி உள்ளதை தவிர வேறு எந்த உடல் உபாதைகள் உள்ளது என்று எனக்கு தெரியாது.

அவருக்கு என்ன சிகிச்சை வழங்கப்பட்டது, எந்த மருத்துவர் சிகிச்சை அளித்தார் என்றும் எனக்கு தெரியாது. மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை விபரங்களை தலைமை செயலாளரிடம் தான் கேட்டு தெரிந்துக் கொள்வேன்.

சிகிச்சை பெற்ற போது ஒருமுறை கூட ஜெயலலிதாவை நான் நேரில் பார்த்ததில்லை. கடைசியாக மெட்ரோ ரெயில் திறப்பு விழாவில் தான் கடைசியாக பார்த்தேன். அதன் பின் அவரை பார்க்கவில்லை என அவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார்.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் சசிகலாவின் அண்ணன் மனைவி இளவரசி இன்று ஆஜரானார்.

அப்போது அவர் கொடுத்த வாக்குமூலத்தில், “அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற போது 75 நாட்களும் நான் மருத்துவமனைக்கு சென்றேன். அதில் ஓரிரு முறை மட்டுமே கண்ணாடி வழியாக ஜெயலலிதாவை பார்த்தேன். சசிகலா தான் உடன் இருந்து கவனித்துக்கொண்டார் என வாக்குமூலம் அளித்தார்.