கல்முனையில் ஊடுறுவிய கடல் நீர் – ரெலோ பிரதி தலைவர்ஹென்றி மகேந்திரன் தலைமையில் நீர் வெட்டும் பணி!

கடல் அரிப்பு கல்முனை பாண்டிருப்பு பகுதிகளில் அதிகமாக காணப்படுகின்றது. நேற்று இரவு கடல் அலை பாண்டிருப்பு வீதியை தாண்டி பாய்ந்தது பாண்டிருப்பு மஹா விஷ்ணு ஆலயம் கல்முனை மாமாங்க விநாயகர் ஆலயம் பகுதிகளில் கடல் நீர் புகுந்தது.

கல்முனையில் மக்கள் குடியிருப்பு பகுதியில் கடல் நீர் தேங்கி நின்றதால் மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கினர். தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் பிரதி தலைவரும் கல்முனை மாநகர சபை உறுப்பினருமான ஹென்றி மகேந்திரன் தலைமையில் மாநகரசபை ஊழியர்கள் மற்றும் மாநகரசபை இயந்திரங்களின் உதவியுடன் நீர் கடலுக்குள் வெட்டிவிடப்பட்டன. இந்தப்பணி நேற்றும் இன்றும் இடம்பெற்றது. கல்முனை மாநகரசபை மேயர் ஆணையாளர் ஊழியர்களுக்கு உறுப்பினர் கென்றி மகேந்திரன் நன்றிகளை தெரிவித்தார்.

Posted in Uncategorized

நல்லூர் பிரதேச சபை உறுப்பினர் ரெலோ மதுசுதனின் முயற்சியில் புதிய ஒரு வீடு கையளிப்பு!

நல்லூர் பிரதேச சபைகுட்பட்ட வட்டாரம் இரண்டில் ஜே-119 கிராம சேவகர் பிரிவில் கோண்டாவில் சென் செபஸ்ரியார் வீதியில் கடந்த மாதம் ஏற்பட்ட மழைக்குள் மண்வீட்டில் குழந்தைகளுடன் வசித்த குடும்பம் ஒன்று மண்வீடு விழுந்து, சுவர் இடிந்து வீழ்ந்து இருக்க இடமின்றி பாதுகாப்பற்று வாழ்ந்து வந்தது.

இந் நிலைமைகளினை நேரடியாக அவதானித்த வட்டார நல்லூர் பிரதேச சபை உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் நல்லூர் அமைப்பாளருமாகிய மதுசுதன் உலர் உணவுகளையும் தகரங்களையும் தற்காலிகமாக வழங்கி வைத்த போதும் பின்னர் அவர்களின் அவல நிலை நீக்க நடவடிக்கை எடுத்ததன் விளைவாக

ஒரு கொடையாளரான கோடாவில் பிரதேச சமூக சேவககர் ஆன சுராங்கனி அவர்களின் பல லட்ச நிதியுதவி மூலம் ஒரு மாதத்திற்குள்ளாகவே புதிய கல் வீடு அமைக்கப்பெற்று இன்று 07.11.2021 அன்று திறந்து வைக்கப்பட்டு பயனாளிகளான செல்லத்துரை நிசாந்தன் குடும்பத்திடம் மங்கல நிகழ்வுடன் கையளிகப்பட்டது.

இந்நிகழ்வில் பேராடிரியர் க. தேவராஜா , ஆசிரியர் ஞான திருக்கேதீஸ்வரன், முன்னாள் அதிபர் சண் வாமதேவன் ஆகியோர் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தனர்.

Posted in Uncategorized

ஆர்ப்பாட்டம் செய்த எதிர்க்கட்சிக்கு பிரதமர் கூறிய நக்கல்

பாதுகாப்பை உறுதிசெய்யுமாறு கோரி பாராளுமன்ற வளாக நுழைவாயிலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் சென்ற பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (06) முற்பகல் அவர்களுடன் சுமூகமான கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

ஆர்ப்பாட்டமொன்றை ஏற்பாடு செய்யும் போது இதனைவிட அதகளவிலான உறுப்பினர்களை ஈடுபடுத்த வேண்டும் என பிரதமர் இதன்போது ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்களிடம் தெரிவித்தார்.

வரலாற்றில் தன்னுடன் இணைந்து அரசியல் போராட்டங்களில் ஈடுபட்ட உறுப்பினர்களை பார்த்த பிரதமர், கடந்த காலங்களில் இவ்வாறான போராட்டங்களில் ஈடுபட்ட விதம் குறித்து அவர்களுடன் நினைவுகளை பகிர்ந்துக்கொண்டு அவ்விடத்திலிருந்து விலகிச் சென்றார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களான ராஜித சேனாரத்ன, இம்தியாஸ் பாகிர் மாகர், பாட்டலி சம்பிக்க ரணவக்க உள்ளிட்ட பலர் இவ்வாறு பிரதமருடன் சுமூகமான கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

வெளிநாட்டு பயண கடவுச்சீட்டு அச்சிடும் பணி அரசு அச்சகத்திற்கு!

கடவுச்சீட்டை அச்சிட்டு வழங்குவதற்கு அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும கோரிக்கை விடுத்துள்ளார்.

வெகுஜன ஊடகம் மற்றும் தகவல் அமைச்சு மற்றும் அரசாங்க அச்சகத்தின் செயலாளருக்கு அறிவுறுத்தப்பட்டது.

தற்போது இலங்கை கடவுச்சீட்டுகள் இந்தோனேசிய நிறுவனத்தினால் அச்சிடப்பட்டு வழங்கப்படுகின்றன.

வெளிநாட்டு நிறுவனம் சுமார் ஒரு மில்லியன் கடவுச்சீட்டுகளை அச்சிடுவதற்கு சுமார் 1 பில்லியன் ரூபாவை செலுத்த வேண்டியிருந்தது மற்றும் ஒரு மில்லியன் கடவுச்சீட்டுகள் ஒன்றரை வருடத்திற்கு மட்டுமே போதுமானதாக இருக்கும்.

தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தால் கடவுச்சீட்டை அரசாங்க அச்சகத்தினால் அச்சிட முடியும் எனவும், அவ்வாறான வசதிகளை வழங்குவதற்கு சுமார் 700 மில்லியன் ரூபா செலவாகும் எனவும் வெகுஜன ஊடக மற்றும் தகவல் அமைச்சு அரசாங்கத்திற்கு சுட்டிக்காட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

64 பக்கங்களைக் கொண்ட கடவுச்சீட்டை அரசாங்க அச்சகத்தில் 350 முதல் 450 ரூபாவிற்கு அச்சிட முடியும் என அமைச்சு தெரிவித்துள்ளது.

டொலர் கையிருப்பு நெருக்கடிக்கு தீர்வு!

முன்னாள் ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவும் கடந்த வருடம் (2020) செப்டெம்பர் மாதம் அமைச்சரவையில் வெளிநாட்டு நிறுவனமொன்றுக்கு வழங்கப்பட்ட கடவுச்சீட்டுகளை அச்சிடுவதை அரசாங்க அச்சகத்திடம் ஒப்படைப்பதற்கான யோசனையொன்றை முன்வைத்திருந்தார்.

கடவுச்சீட்டு அச்சிடுவது வெளிநாட்டு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டதுடன், உடன்படிக்கையின் பிரகாரம் வெளிநாட்டு நிறுவனம் இன்னும் இரண்டரை வருடங்களுக்கு கடவுச்சீட்டை அச்சிடுவதாகக் கூறி பிரேரணை புறக்கணிக்கப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும், இலங்கை டொலர் கையிருப்பு மட்டுப்படுத்தப்பட்டு பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கும் இவ்வேளையில் கடவுச்சீட்டுகளை அச்சிட்டு அரச அச்சகத்திற்கு வழங்குவதன் மூலம் வருடத்திற்கு பல பில்லியன் ரூபாவை சேமிக்க முடியும் என ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும அரசாங்க அதிகாரிகளிடம் சுட்டிக்காட்டியுள்ளார். .

பாகிஸ்தானிலுள்ள அனைத்து இலங்கையர்களையும் மீள அழைக்க வேண்டும் ! மத வெறியும், மதத் தீவிரவாதமும் அனுமதிக்கப்படக் கூடாது

பாகிஸ்தானில் பணிபுரியும் இலங்கையர்களின் பாதுகாப்பை பாகிஸ்தான் அரசாங்கம் உறுதிப்படுத்தா விட்டால், அங்கு பணிபுரியும் அனைத்து இலங்கையர் களையும் திரும்ப அழைக்க வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித் துள்ளார்.

இலங்கைப் பிரஜை கொல்லப்பட்டதையடுத்து பாகிஸ்தானில் வாழும் இலங்கையர்களின் பாதுகாப்பில் பாகிஸ்தான் அரசாங்கம் தலையிட வேண்டும் எனவும், குற்றவாளிகளைத் தண்டிக்க பாகிஸ்தான் அரசாங்கம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவிய லாளர் சந்திப்பில் கட்சியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.

உலகில் எங்கும் மத வெறியும், மதத் தீவிரவாதமும் அனுமதிக்கப்படக் கூடாது என்றும் அவர் கூறினார்.

Posted in Uncategorized

பேராயர் மல்கம் ரஞ்சித் கண்டனம்

பாகிஸ்தானின் சியால்கோட்டில் படுகொலை செய்யப்பட்ட பிரியந்த குமாரவின் மறைவுக்கு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் இரங்கல் தெரிவித்ததுடன், கொடூரமான மற்றும் மனிதாபிமானமற்ற கொலைக்கு தனது கண்டனத்தையும் தெரிவித்தார்.

மதம் என்ற போர்வையில் இழைக்கப்படும் இதுபோன்ற கொடூரமான, குற்றச்செயல்களால் ஏற்படும் அவலங்களை தடுத்து நிறுத்த அனைத்து நாடுகளின் தலைவர்களும் முனைப்புடன் செயல்பட வேண்டும் என தனது இரங்கல் செய்தியில் பேராயர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் கொலைக்கு எதிராக பாகிஸ்தான் தலைமை உடனடியாக நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

Posted in Uncategorized

பிரியந்த குமாரவின் படுகொலையைக் கண்டித்து பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகராலயத்திற்கு முன்பாக போராட்டம்

கொழும்பிலுள்ள பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகராலயத்திற்கு முன்பாக இன்று திங்கட்கிழமை அமைதியான முறையில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

பாகிஸ்தான் சியல்கோட் நகரில் இலங்கைப்பிரஜையொருவர் மிகமோசமாக எரித்துக் கொலைசெய்யப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்புத்தெரிவித்தே சிங்களே தேசிய ஐக்கிய கூட்டமைப்பின் ஏற்பாட்டில் கொழும்பிலுள்ள பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகராலயத்திற்கு முன்பாக அமைதியான முறையில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

இப்போராட்டத்தில் தேசப்பற்றாளர்கள் அமைப்பு, மக்கள் சக்தி, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு வலையமைப்பு ஆகிய அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளடங்கலாக சிங்கள, தமிழ், முஸ்லிம் இனங்களைச் சேர்ந்த செயற்பாட்டாளர்கள் கொண்டிருந்தனர்.

அதுமாத்திரமன்றி மிகக்கொடூரமான முறையில் கொல்லப்பட்ட பிரியந்த குமாரவின் குடும்பத்திற்கு நட்டஈடாக பாகிஸ்தான் அரசாங்கம் ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதுடன் இச்சம்பவம் தொடர்பில் எழுத்துமூலம் மன்னிப்புக்கோரவேண்டும் என்று அவ்வமைப்பு வலியுறுத்தியுள்ளது.

கலப்பு அபிவிருத்தி திட்டத்துக்காக வெலிக்கடை சிறைச்சாலையை குத்தகைக்கு வழங்க அரசாங்கம் தீர்மானம்!

வெலிக்கடை சிறைச்சாலையின் 42 ஏக்கர் காணியை கலப்பு அபிவிருத்தி திட்டத்துக்காக நீண்டகால அடிப்படையில் குத்தகைக்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

கலப்பு அபிவிருத்தி திட்டத்திற்காக நீண்ட கால அடிப்படையில் காணிகளை குத்தகைக்கு வழங்குவதன் மூலம் சுமார் 2,630 கோடி ரூபாவை பெறுவதற்கு மதிப்பிடப்பட்டுள்ளது.

வெலிக்கடை சிறைச்சாலையை அதன் இடத்தில் இருந்து அகற்றி, ஹொரணை, மில்லனிய பிரதேசத்தில் 280 ஏக்கர் காணியில் கட்டுவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

பத்தரமுல்லையில் சிறைச்சாலை தலைமையகமும் மாலபேயில் உத்தியோகபூர்வ குடியிருப்பும் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இந்த மூன்று திட்டங்களுக்கான செலவையும் வெலிக்கடை சிறைச்சாலை அமைந்துள்ள காணியின் குத்தகையில் இருந்து ஈடுகட்டவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.

வெலிக்கடை சிறைச்சாலையை ஹொரணையில் உள்ள மில்லனியவுக்கு இடமாற்றம் செய்வதற்கும், பத்தரமுல்லையில் தலைமையகத்தை நிர்மாணிப்பதற்கும் மாலபேயில் உத்தியோகபூர்வ குடியிருப்புகளை நிர்மாணிப்பதற்கும் காணிகளை சுவீகரிப்பதற்கும் சுமார் 3147 கோடி ரூபா செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் சம்பவத்தையடுத்து உளவுத் துறை உசார் ! – பொலிஸ் மா அதிபருக்கு ஜனாதிபதி சிறப்பு ஆலோசனை

பாகிஸ்தான் பஞ்சாப் மாநிலத்தின் சியால்கோட் நகரில் பணிபுரிந்து வந்த இலங்கையர் ஒருவர், வன்முறைக் கும்பலால் தாக்கப்பட்டு, எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தை அடுத்து இலங்கையில் உளவுத் துறையினர் உசார் படுத்தப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தை மையப்படுத்தி குறுகிய நோக்கங்களுக்காக அசம்பாவிதங்களை தோற்றுவிக்க எவரேனும் முயற்சிக்கலாம் என்ற அடிப்படையில், உளவுத் துறையினர் ஊடாக உரிய தகவல்களைப் பெற்று, அவ்வாறான நாசகார செயல்களை முறியடிக்குமாறு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ, பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்னவுக்கு விஷேட அறிவித்தலை விடுத்துள்ளார்.

திங்கட்கிழமை (6), கொலை செய்யப்பட்ட இலங்கை முகாமையாளர் பிரியந்த குமாரவின் சடலம் நாட்டுக்கு எடுத்து வரப்படும் நிலையில், குறுகிய சிந்தனை கொண்டவர்கள் நாசகார செயல்களில் ஈடுபட முயல்கின்றனரா என்பதை உளவுத் துறையூடாக கண்காணித்து தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி பொலிஸ் மா அதிபருக்கு இவ்வாறு கண்டிப்பான ஆலோசனையை வழங்கியுள்ளதாக பொலிஸ் தலைமையக தகவல்கள் தெரிவித்தன.

இந் நிலையில் நாடளாவிய ரீதியில் உளவுத் துறையினர் உசார் செய்யப்பட்டு, இது தொடர்பில் போதுமான தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருவதுடன், அவசியம் ஏற்படும் பட்சத்தில் கைது நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் பொலிசாருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.

Share

Posted in Uncategorized

இந்தியாவின் திரவ உர இறக்குமதியில் தாமதம் – விவசாய அமைச்சு

இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் நனோ நைதரசன் திரவ உரத்தை நாட்டுக்கு இறக்குமதி செய்யும் முகவரின் செயற்பாட்டில் சிக்கல் தோன்றியுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனால் திரவ உரத்தை நாட்டுக்கு கொண்டுவருவதில் தாமதம் நிலவுவதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

​குறித்த முகவர் ஒப்பந்தத்துக்கு இணங்கிச் செயற்படாமையினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

எவ்வாறாயினும், இந்த விடயம் தொடர்பில் நேரடியாக தலையிட்டு முழுமையான விசாரணையை மேற்கொள்ளுமாறு அமைச்சின் உரச் செயலாளர் அலுவலகம் மற்றும் அரச உர நிறுவனம் ஆகியவற்றுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது ஏற்பட்டுள்ள நிலை தொடர்பில் இந்த வாரத்திற்குள் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் தயாரிக்கப்படும் ​நனோ நைதரசன் திரவ உரத்தை இறக்குமதி செய்யும் போது கடன் பத்திரத்திற்கான கொடுப்பனவை செலுத்தாமை உள்ளிட்ட காரணங்களினால் உள்நாட்டு முகவர்களின் செயற்பாடுகள் சிக்கலைத் தோற்றுவித்துள்ளதாக அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

இதனிடையே, நிராகரிக்கப்பட்ட சீன சேதனப் பசளையை ஏற்றிய கப்பலிலுள்ள உரத்தை மீள் பரிசோதனைக்குட்படுத்த எச்சந்தர்ப்பத்திலும் அனுமதி வழங்க வேண்டாம் என விவசாய அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

இதனிடையே, சீன சேதனப் பசளையை ஏற்றிய ஹிப்போ ஸ்பிரிட் கப்பல், உர மாதிரியைப் பெறல் மற்றும் தீர்ப்பைப் பெற சிங்கப்பூர் நோக்கி பயணத்தை ஆரம்பித்துள்ளதாக சிந்தாவோ சீவின்ங் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஹிப்போ ஸ்பிரிட் கப்பல் இலங்கை கடற்பரப்பில் 70 நாட்களுக்கும் மேலாக சஞ்சரித்திருந்த நிலையிலேயே சிங்கப்பூருக்கு பயணத்தை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.