இடம்பெற்றதாக குற்றம்சாட்டப்படும் மனித உரிமை மீறல்கள்உயிரிழப்பு குறித்து பக்கச்சார்பற்ற விசாரணைகள்இடம்பெறவேண்டும் என சர்வதேச மன்னிப்புச்சபை வேண்டுகோள் விடுத்துள்ளது. ஆர்ப்பாட்டக்காரர்களிற்கு எதிராக பலத்தை கடைப்பிடிக்கும் போது நிதானத்தை கடைப்பிடிக்கவேண்டும் என சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.
அமைதியாக ஒன்றுகூடுவதற்கான உரிமையை பின்பற்றுவதற்கு இலங்கை அரசாங்கம் அனுமதியளிக்கவேண்டும் எனவும் சர்வதேச மன்னிப்புச்சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.
கொழும்பில் பொலிஸார் மேற்கொண்ட சட்டவிரோத கண்ணீர்புகை பிரயோகம் நீர்த்தாரை பிரயோகம் காரணமாக ஆர்ப்பாட்டக்காரர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்ற செய்தி குறித்து பதிலளித்துள்ள சர்வதேச மன்னிப்புச்சபையின் ஆர்ப்பாட்டங்களிற்கான உரிமை தொடர்பிலான பிராந்திய ஆராய்ச்சியாளர் ஹரிந்திரினி கொரியா இலங்கையில் பல மாத ஆர்ப்பாட்டங்களிற்கு பின்னரும் இலங்கை பொலிஸாருக்கு அமைதியான ஒன்றுகூடலிற்கான உரிமையை உறுதி செய்யவேண்டிய அவர்களது கடமை குறித்தும் ஆர்ப்பாட்டங்களை கட்டுப்படுத்தும்போது கட்டுப்பாட்டை பின்பற்றவேண்டியது குறித்தும் மீண்டும் மீண்டும் நினைவுபடுத்தவேண்டியது கவலையளிக்கின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
பொலிஸாரின் நடவடிக்கைகள் கடந்த பல மாதங்களாக பல உயிர்களை பலியெடுத்துள்ளன இன்றும் அது இடம்பெற்றுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒரு பகுதிக்குள் சுற்றிவளைக்கப்பட்டுள்ளதையும் அவர்கள்அங்கிருந்து வெளியேற முடியாத தப்பமுடியாத நிலை காணப்படுவதையும்வீடியோ காண்பித்துள்ளது,அவ்வாறான சூழ்நிலையிலும் பொலிஸார் சர்வதேச மனிதஉரிமை சட்டம் பலத்தை பயன்படுத்துவதற்கான தராதரங்கள்ஆகியவற்றை மீறி நீர்த்தாரை பிரயோகம் கண்ணீர்புகைபிரயோகம்ஆகியவற்றை மேற்கொள்கின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அமைதியான ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்களிற்கு எதிரான பரந்துபட்ட வன்முறைகள்இல்லாத போது கண்மூடித்தனமான விளைவுகளை கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய ஆபத்தான ஆயுதங்களை பயன்படுத்தக்கூடாது எனவும் மன்னிப்புச்சபையின் ஆர்ப்பாட்டங்களிற்கான உரிமை தொடர்பிலான பிராந்திய ஆராய்ச்சியாளர் ஹரிந்திரினி கொரியா தெரிவித்துள்ளார்.
ஆர்ப்பாட்டத்தின் சூழமைவில் இடம்பெற்றதாக குற்றம்சாட்டப்படும் மனித உரிமை மீறல்கள்உயிரிழப்பு குறித்து பக்கச்சார்பற்ற விசாரணைகள்இடம்பெறவேண்டும் இவற்றிற்கு காரணமானவர்கள் நீதியின்முன்நிறுத்தப்படவேண்டும் எனவும் சர்வதேச மன்னிப்புச்சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.