பணவீக்கத்தால் பாதிக்கப்பட்ட நாடுகளின் சுட்டெண்ணில் இருந்து இலங்கையை நீக்க தீர்மானம்

பணவீக்கத்தால் பாதிக்கப்படும் நாடுகளின் சுட்டெண்ணில் இருந்து இலங்கையை நீக்குவதற்கு தீர்மானம்

உலகில் அதிக உணவுப் பணவீக்கத்தால் அதிகம் பாதிக்கப்படும் நாடுகளின் சுட்டெண்ணில் இருந்து இலங்கையை நீக்குவதற்கு உலக வங்கி தீர்மானித்துள்ளது.

உலக வங்கியின் உணவுப் பாதுகாப்பு மதிப்பீட்டு அறிக்கையின் அடிப்படையில் இந்த சுட்டெண் வெளியிடப்பட்டுள்ளது.

பணவீக்கம் குறைந்து வருவதால் இலங்கையை இந்த சுட்டெண்ணில் இருந்து நீக்க உலக வங்கி முடிவு செய்துள்ளது.

கடந்தாண்டு முதல் இலங்கை இந்த சுட்டெண்ணில் இணைக்கப்பட்டுள்ளது.

உலக வங்கியின் அறிக்கைக்கு அமைய, குறியீட்டில் முதல் இடம் லெபனான் காணப்படுவதோடு, அதன் பணவீக்கம் 261 சதவீதம் ஆகும்.

இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களை முறையே சிம்பாம்வே மற்றும் ஆர்ஜென்டினா பிடித்துள்ளன.

மது, சிகரெட் விலை உயர்வு

இன்று (03) நள்ளிரவு முதல் மதுபானத்தின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதாவது ஒரு போத்தல் மதுபானத்திற்கு விதிக்கப்படும் வரி 20 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, மதுபான போத்தல் ஒன்றிற்கு அறவிடப்பட்ட 1,050 ரூபா வரி 1,256 ரூபாவாகவும், 1,121 ரூபா வரி 1,344 ரூபாவாகவும், 1,309 ரூபா வரி 1,576 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பீர் போத்தல் ஒன்றிற்கு அறவிடப்பட்ட 103 ரூபா வரி 124 ரூபாவாகவும் 194 ரூபா வரி 233 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சிகரெட் வரியும் 20 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன்படி 90 ரூபாவாக இருந்த சிகரெட் ஒன்றின் புதிய விலை 105 ரூபாவாகும்.

85 ரூபாயாக இருந்த சிகரெட்டின் புதிய விலை 100 ரூபாயாக இருக்கும்.

ரூ.70க்கு விற்கப்பட்ட சிகரெட்டின் புதிய விலை ரூ.80 ஆக உயரும்.