மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் நிறுவ முயற்சிக்கப்படும் தற்காலிகமான பொறிமுறைகளை இலங்கையால் ஏற்றுக்கொள்ள முடியாது என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இந்தப் பொறிமுறையானது ஐநா.சாசனத்தின் ஆவணங்களுக்கு ஏற்ப அமையவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
பொதுநலவாய அமைப்பின் பொதுச் செயலாளர் பட்ரிசியா ஸ்கொட்லேன்ட்டுடன் வீடியோ ஊடாக நடத்தப்பட்ட கலந்துரையாடல் ஒன்றிலேயே ஜீ.எல்.பீரிஸ் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நியூயோர்க் நகரில் இருந்து வெளிவிவகார அமைச்சர் இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்டிருந்தார்.
பொதுநலவாய அமைப்பின் ஸ்தாபக உறுப்பு நாடு என்ற வகையில் இலங்கை முன்னெச்சரிக்கையாகவும், அமைப்பின் மதிப்புக்கள், கொள்கைகள் மற்றும் குறிக்கோள்களுக்கு இணங்க அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக அமைச்சர் பீரிஸ் இதன்போது தெரிவித்துள்ளார்.
பொதுநலவாய நாடுகளுடன் வணிகம், கல்வி, தொழிற்பயிற்சி மற்றும் பருவநிலை மாற்றம் உள்ளிட்ட பல துறைகளிலான ஒத்துழைப்பை இலங்கை மேலும் எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை உள்ளூர் நிறுவனங்கள் தமது ஆணைகளை நிறைவேற்றுவதற்குப் போதுமான அமைப்புக்கள் தேவைப்படுகின்றன. இந்த நிறுவனங்களால் மேற்கொள்ளப்படும் பணிகளை வெளிப்புற அமைப்புக்களால் மாற்றவோ அல்லது கையகப்படுத்தவோ முடியாது என்றும் கூறியுள்ளார்.
இந்நிலையில் வர்த்தகம், விளையாட்டு, இளைஞர்கள் மற்றும் வன்முறைத் தீவிரவாதத்தை எதிர்த்தல் உள்ளிட்ட பல்வேறு துறைகளிலான இலங்கையின் தொடர்ச்சியான ஒத்துழைப்பை பொதுநலவாய அமைப்பு பாராட்டுவதாக பொதுச்செயலாளர் ஸ்கொட்லேன்ட் இதன்போது தெரிவித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சின் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
TRENDING TODAY
- 15 வருட வழக்கு கடவுச்சீட்டை நீதிமன்றில் ஒப்படைக்குமாறும், நீதிமன்ற அனுமதி பெற்றே வெளிநாடு செல்ல முடியும் எனவும் கட்டளை
- தமிழ்ப் பௌத்த வரலாற்றை மறைக்க மேர்வின் போன்ற இனவாதிகள் முயற்சி! அரசின் நடவடிக்கை என்ன? சபா குகதாஸ் கேள்வி
- அரசியல் கைதிகள் எந்தவொரு சிறையிலும் இல்லை என்ற நீதி அமைச்சரின் கருத்து கண்டனத்துக்கு உரியது -ரெலோ
- மன்னார் துப்பாக்கிச் சூடு: முழுப்பொறுப்பையும் பொலிஸாரே ஏற்க வேண்டும்! -செல்வம் அடைக்கலநாதன் தெரிவிப்பு
- தமிழ் நாடு அரசினால் நடைபெறும் உலக தமிழ் புலம்பெயர்ந்தோர் தினம் 2025 செல்வம் அடைக்கலநாதன் அவர்களுக்கு அழைப்பு
- பயங்கரவாத தடைச்சட்டம் முழுமையாக ஒழிக்கப்பட வேண்டும் ;ரெலோ தலைவர் செல்வம்
- இனப்பிரச்சினை தீர்க்க அரசாங்கம் செயல்பட வேண்டும் நாங்களும் ஒத்துழைப்பு வழங்க தயாராக இருக்கிறோம் -ரெலோ
- முன்னாள் இந்திய பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங் அவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள் -ரெலோ
- இந்தியா காசி அமைந்துள்ள “centre for sanatan research சட்டத்தரணி துஷ்யந்தன் திருக்கோணேஸ்வர ஆலய ராஜகோபுர கட்டுமானம்தொல்லியல் துறையினரின் அத்து மீறல் தொடர்பாக வெளிப்படுத்தி இருந்தார்
- பிறந்திருக்கும் பாலக இயேசு அனைவருக்கும் சமாதானத்தையும், மகிழ்வையும் அளிப்பாராக.
- ஈழமக்கள் மீதும் ஈழ விடுதலைமீதும் தனியாத ஈர்ப்புக்கொண்டு இதய தெய்வமாய் வாழ்ந்த எம் ஜி ஆர் அவர்கள் இறந்த தினம் இன்று
- புதுடெல்லியில் நடைபெறும் தெற்காசிய பிராந்திய பாராளுமன்ற பொதுக்குழு ஒன்றுகூடலில் ரெலோ தலைவர் செல்வம்
- தீர்வு விடயத்தில் தேர்தல் வெற்றிகளை பார்க்க முடியாது: சுமந்திரனுக்கு பதிலளித்த செல்வம் அடைக்கலநாதன்
- தமிழ் ஈழ விடுதலை இயக்கம் ரெலோ – தமிழ் தேசிய மக்கள் முன்னணி இடையே விசேட கலந்துரையாடல்
- தமிழ்தேசிய கட்சிகளை சந்தித்த சுவிஸ் தூதரக அதிகாரிகள்
- இவ்வார இறுதியில் கெளரவ செல்வம் அடைக்கலநாதன் அவர்களை சந்திக்கிறார் கெளரவ கஜேந்திரகுமார்
- இலங்கை – இந்திய ஒப்பந்தத்தை எந்த காலத்திலும் புதிய அரசியல் சாசனத்தின் ஊடாக நிறுத்தக் கூடாது ரெலோ தலைவர் செல்வம்
- வடக்கு கிழக்கில் மாவீரர் நினைவேந்தல் தடையின்றி இடம் பெற ஒத்துழைத்த ஜனாதிபதி அனுரவிற்கு நன்றி-ரெலோ தலைவர் செல்வம்
- நாட்டில் அனைவரும் சமம் என்று கூறும் தேசிய மக்கள் சக்தி, பௌத்த மதத்திற்கு கொடுக்கும் முன்னுரிமையை அனைத்து மதங்களுக்கும் வழங்குமா ரெலோ செயலாளர் ஜனா
- மக்களிடத்தில் ஆதரவு அற்ற கட்சிகளை ஒன்றிணைத்துக் கொண்டு நாங்கள் தொடர்ந்தும் பயணிப்பதா? மன்னார் மாவட்ட ரெலோ கட்சியின் மாவட்ட அமைப்பாளர் டானியல் வசந்தன் கேள்வி?
{"ticker_effect":"slide-h","autoplay":"true","speed":"5000","font_style":"normal"}