“சஜித் பிரேமதாஸவால் நாட்டுக்கு எதுவும் செய்ய முடியாது. இதை ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் நன்றாக உணர்ந்துவிட்டார்கள். இந்நிலையில், ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் பலர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைவதற்கான சாத்தியம் காணப்படுகின்றது.”
– இவ்வாறு அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
“தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தொடர்ந்தும் ஜனாதிபதியாகப் பதவி வகிப்பார். அடுத்த வருடம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் அவர் அமோக வாக்குகளால் வெற்றியடைவார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் மட்டுமல்ல எதிரணியில் உள்ள ஏனைய கட்சிகளின் உறுப்பினர்களும் ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிப்பார்கள்.” – என்றார்.