ராஜபக்ச குடும்ப நிறுவனமாக மாறி வரும் இலங்கை அரசாங்கம் – நியூயோர்க் டைம்ஸ்

இலங்கையின் தற்போதைய அரசாங்கம் ராஜபக்ச குடும்பத்தின் நிறுவனமாக மாறி வருவதாக நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது.

இலங்கையில் ஜனாதிபதியான கோட்டாபய ராஜபக்சவின் மூன்று சகோதரர்கள் அரசாங்கத்தில் உயர் பதவிகளை வகித்து வருவதாகவும் அவர்களின் புதல்வர்களுக்கும் அதிகாரமிக்க பதவிகள் வழங்கப்பட்டுள்ளன எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.

இலங்கையின் நிதியமைச்சராக பசில் ராஜபக்ச பதவியேற்றுள்ளமை தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை இது, குடும்ப ஆட்சியை உறுதிப்படுத்தும் நடவடிக்கை எனவும் கூறியுள்ளது.

கோட்டாபய ராஜபக்ச இலங்கையின் ஜனாதிபதியாக பதவி வகிப்பதுடன் அவரது சகோதரரும் முன்னாள் ஜனாதிபதியுமான மகிந்த ராஜபக்ச பிரதமராக பதவி வகித்து வருகிறார். மேலும் மற்றுமொரு சகோதரரான சமல் ராஜபக்ச மற்றும் மகிந்த ராஜபக்சவின் புதல்வர் நாமல் ராஜபக்ச ஆகியோர் அமைச்சர்களாக பதவி வகித்து வருகின்றனர்.

சமல் ராஜபக்சவின் புதல்வர் ஷசீந்திர ராஜபக்ச ராஜாங்க அமைச்சராக பதவி வகித்து வருகிறார். இந்த நிலையில், அண்மையில் அமெரிக்காவில் இருந்து திரும்பிய பசில் ராஜபக்ச, நாட்டின் மிக முக்கிய அமைச்சு பதவிகளில் ஒன்றான நிதியமைச்சு பதவிக்கு நியமிக்கப்பட்டார்.

இவர்களை தவிர ராஜபக்ச சகோதரர்களில் தங்கையின் புதல்வரான நிபுண ரணவக்க நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்து வருகிறார். இலங்கையின் அரசத்துறையில் உள்ள நிறுவனங்களின் கிட்டத்தட்ட 80 வீதமான நிறுவனங்கள் ராஜபக்ச குடும்பத்தினரின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளதாக நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.

Posted in Uncategorized

மாகாணங்களுக்கு இடையிலான பொதுப் போக்குவர்த்து சேவைகள் புதன்கிழமை முதல்

மட்டுப்படுத்தப்பட்ட மாகாணங்களுக்கு இடையிலான பொதுப் போக்குவர்த்து சேவைகள் எதிர்வரும் புதன்கிழமை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்தியவசிய தேவைகளுக்கு பயணிப்பவர்களுக்காக இவ்வாறு பொதுப் போக்குவர்த்து சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கண்டியில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

புகையிரத சேவைகளும் அன்றைய தினம் ஆரம்பிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்வதற்கு மக்களிற்கு உரிமையுள்ளது- ஐநா பிரதிநிதி

அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் செய்வதற்கு மக்களிற்கு உள்ள உரிமைக்கு ஆதரவாக இலங்கைக்கான ஐக்கியநாடுகளின் நிரந்தர வதிவிடப் பிரதிநி ஹனா சிங்கர் கருத்து வெளியிட்டுள்ளார்.

ஒன்றுகூடுவதற்கான உரிமையில் ஆர்ப்பாட்டங்களிற்கான உரிமையும் அடங்கியுள்ளது என அவர் டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

கருத்துசுதந்திரம் பொதுமக்கள் கொள்கைகளில் தாக்கம் செலுத்துதல் போன்ற ஏனைய உரிமைகளை பயன்படுத்துவதற்கு அமைதியாக ஒன்றுகூடுவதற்கான உரிமை உதவுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனாவைரசினை கட்டுப்படுத்;துவதற்கான கட்டுப்பாடுகள் பொதுமக்களின் சுகாதாரத்தை பாதுகாக்கின்ற நியாயமான நடவடிக்கைகளிற்கு அப்பால் செல்லாமலிருப்பது அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசியல் கட்சிகளும் கூட்டுக்களும் கட்டமைப்பை மாற்ற வேண்டியதில்லை: பொதுத்தளத்தில் பணியாற்றவே அழைப்பு – ரெலோ

தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் பொதுத்தளமொன்றில் அனைத்து தமிழ்த் தேசியக் கட்சிகளும் இணைந்து பணியாற்றுவதையே இலக்காக கொண்டு ஒருங்கிணைக்கும் பணியை ரெலோ முன்னெடுத்துள்ளதே தவிர, எந்தவொரு அரசியல் கட்சிகளினதும், கூட்டுக்களினதும் கட்டமைப்புக்களை மாற்ற வேண்டிய அவசியமில்லை என்று ரெலோ தெரிவித்துள்ளது.

ரெலோவின் முயற்சியில், இலங்கைத் தமிழரசுக்கட்சி, புளொட், ரெலோ மற்றும் தமிழ் மக்கள் விடுதலைக் கூட்டணி ஆகிய தரப்புக்கள் பொதுத்தளத்தில் பணியாற்றுவது பற்றி பேச்சுக்களை முன்னெடுத்திருந்தது. இந்நிலையில் கொழும்பில் கூடிய தமிழரசுக்கட்சியின் அரசியல் பீடத்தில் இவ்விடயம் சம்பந்தமாக பலத்த விமர்சனங்களும், எதிர்மறையான நிலைப்பாடுகளும் பிரதிபலிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் கட்சிகளை ஒருங்கிணைக்கும் செயற்பாடுகளை முன்னெடுத்த ரெலோ அடுத்த கட்டமாக எவ்விதமான செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளது என்பது தொடர்பில் வினவியபோது அக்கட்சியின் ஊடகப்பேச்சாளர் சுரேந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ்த் தேசியத்தளத்தில் உள்ள அனைத்துக்கட்சிகளும் மக்களின் பிரச்சினைகள் விடயத்தில் ஒரே நிலைப்பாட்டினையே கொண்டிருக்கின்றன என்பது அத்தரப்புக்கள் பல்வேறு இடங்களில் வெளிப்படுத்தப்படும் கருத்துக்கள், செயற்பாடுகள் மூலமாக உணர்ந்து கொள்ளக்கூடியதாக உள்ளது.

அவ்வாறான நிலையில் தான் ரெலோ பொதுப்பிரச்சினைகள் தொடர்பில் பொதுத்தளமொன்றில் அனைத்துக் கட்சிகளும் இணைந்து செயற்படுவதென்றும் பிரதான விடயங்களான வடக்கு கிழக்கு இணைப்பு, இனப்பிரச்சினைத்தீர்வு உள்ளிட்ட விடயங்களில் இணக்கப்பாட்டை எட்டக்கூடிய விடயங்களில் இணைந்து செல்வதென்றும் கூட்டமைப்புக்கு வெளியில் உள்ள அரசியல் தரப்புக்களை ஒருங்கிணைக்கும் முயற்சிகளை முன்னெடுத்தது.

இந்தச் செயற்பாடானது புதிய கூட்டொன்றை முன்னெடுப்பது என்று கருதுவது தவறானதாகும். எந்தவொரு அரசியல் கட்சியும், கூட்டுக்களும் தமது கட்டமைப்புக்களை மாற்ற வேண்டியதில்லை. அக்கட்சிகளும், கூட்டுக்களும் இணைந்து செல்லக்கூடிய விடயங்களில் இணைந்து செயற்பட முடியும் என்ற புரிதல் முதலில் ஏற்பட வேண்டியது அவசியமாகின்றது.

குறிப்பாக, தமிழரசுக்கட்சி உட்பட அனைத்து கட்சிகளும் இந்த விடயத்தில் சந்தேகங்களின்றி சரியான புரிதலைக் கொள்ள வேண்டியது அவசியமாகின்றது. அதேநேரம், கடந்த காலத்தில் நடைபெற்ற திம்புப் பேச்சுவார்த்தையின்போது ஆயுத விடுதலை இயக்கங்களும், அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்தே பேச்சுக்களின் ஈடுபட்டன. திம்புக் கோட்பாட்டை உருவாக்கியிருந்தன.

அண்மைய காலங்களில் கூட கொள்கை அளவில் எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக அங்கீகரிப்பதை மறுதலித்திருந்த தரப்புக்கள் அவர் தலைமையில் நடைபெறும் அரச எதிர்ப்பு போராட்டங்களில் பங்கெடுத்துள்ளன.

ஆகவே, தற்போதைய நிலைமையில் தமிழ் மக்களின் விடயங்களை கையாள்வதற்கு வலுவானதொரு தரப்பாக தமிழ்த் தேசியத்தரப்புக்கள் இருக்க வேண்டும் என்பதே ரெலோவின் நிலைப்பாடே தவிரவும் அதற்கு அப்பால் எவ்விதமான தனிப்பட்ட அரசியல் நலன்களும் இல்லை என்றார்.

பசிலை வட்­ட­மிடும் முஸ்லிம் பிர­தி­நி­திகள் – பத­விகளை பெற்றுக் கொள்­வதில் பலத்த போட்டி

முஸ்லிம் அர­சி­யலின் வீரியம் முற்­றாக தேய்­வ­டைந்­துள்­ளது. முஸ்லிம் சமூ­கத்­திற்கு எதி­ராக நடை­பெற்றுக் கொண்­டிருக்கும் அநி­யாயங்­களை தட்டிக் கேட்­ப­தற்கு எந்­த­வொரு மக்கள் பிர­தி­நி­தி­களுக்கும் தைரியம் இல்­லாத நிலையே காணப்­ப­டு­கின்­றது. பாரா­ளு­மன்­றத்தில் உள்ள முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களில் ரிஷாத் பதி­யுதீன் கைது செய்­யப்­பட்டு தடுத்து வைக்­கப்­பட்­டுள்ளார். அவர் இன்னும் விசா­ரிக்­கப்­ப­ட­வில்லை. அவரை விசா­ர­ணைக்கு நீதி­மன்­றத்­திற்கு அழைத்­து­வ­ரும் ஒவ்­வொரு வேளை­யிலும் நீதி­ப­தி­களில் ஒருவர் வழக்­கி­லி­ருந்து தாமாக விலகிக் கொள்­கின்­றனர். இது­வ­ரைக்கும் நான்கு நீதி­ப­திகள் வில­கி­யுள்­ளார்கள்.

ரவூப் ஹக்கீம், முஜிபுர் ரஹ்மான் ஆகி­யோர்கள் முஸ்­லிம்­களின் பிரச்­சி­னைகள் குறித்து பேசிக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். ஆயினும், ஏனைய முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் முஸ்லிம் சமூ­கத்தைப் பற்­றிய சிந்­த­னையே இல்­லாமல் அவர்கள் அர­சாங்­கத்­தோடு இணைந்து செயற்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். அமைச்சர் பத­வி­களின் மீது ஆசை வைத்து காத்துக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். மக்கள் காங்­கி­ரஸின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அலி­சப்ரி ரஹீம் புத்­த­ளத்தில் நடை­பெற்ற நிகழ்­வொன்றில் தாங்கள் 20ஆவது திருத்தச் சட்­டத்­திற்கு ஆத­ரவு வழங்­கு­வ­தற்கு முன்­ன­தாக இரா­ஜாங்க அமைச்சர் பத­வியை கோரி­ய­தா­கவும், அந்த அமைச்சர் பதவி கிடைக்­கு­மென்ற நம்­பிக்­கையில் உள்­ள­தா­கவும் தெரி­வித்­துள்ளார்.

கட்­சியின் தீர்­மா­னத்தின் அடிப்­ப­டையில் அர­சாங்­கத்­துடன் இணைந்து கொள்­வ­தற்­கு­ரிய எண்­ணத்தை முஸ்லிம் காங்­கி­ரஸின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பைசால் காசிம் தனியார் தொலைக்­காட்சி ஒன்­றுக்கு தெரி­வித்­துள்ளார்.

அம்­பாறை மாவட்ட முஸ்­லிம்­களின் வாக்­கு­க­ளினால் தெரிவு செய்­யப்­பட்ட நான்கு பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் உள்­ளார்கள். இவர்கள் அம்­பாறை மாவட்ட விவ­சா­யி­களின் பிரச்­சி­னைகள் குறித்து ஒரு வார்த்­தை­யேனும் பாரா­ளு­மன்­றத்­திலும், பாரா­ளு­மன்­றத்­திற்கு வெளி­யிலும் பேச­வில்லை. அர­சாங்­கத்­திடம் விவ­சா­யி­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்­வு­களை கேட்டு கோரிக்கை விடுத்தால் தாங்கள் எதிர்­பார்த்துக் கொண்­டி­ருக்கும் அமைச்சர் பதவி கிடைக்­காது போய்­விடும் என்ற பதவி ஆசையில் வாய் திறக்­காது இருக்­கின்­றார்கள்.

இதேவேளை, அமைச்சர் பத­வியை பெற்றுக் கொள்­வதில் இவர்­க­ளி­டையே பலத்த போட்டி காணப்­ப­டு­கின்­றது. அர­சாங்­கத்­துடன் இணைந்து செயற்­படும் எல்லா முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கும் அமைச்சர் பதவி கிடைக்­காது. ஒருவர் அல்­லது இரண்டு பேருக்கு அமைச்சர் பதவி கிடைக்­கலாம். இதனால் அமைச்சர் பத­வியை பெற்றுக் கொள்­ப­வர்­களில் தானும் ஒரு­வ­ராக இருக்க வேண்­டு­மென்று காய்­ந­கர்த்திக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். 20வது திருத்தச் சட்ட மூலம் பாரா­ளு­மன்­றத்தில் நிறை­வேற்­றப்­பட்ட நாள் முதல் முஸ்லிம் காங்­கிரஸ், மக்கள் காங்­கி­ரஸின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் ஒற்­று­மை­யா­கவே செயற்­பட்டுக் கொண்­டார்கள். இப்­போது ஒவ்­வொ­ரு­வரும் தனித்­த­னி­யாக ஓடிக் கொண்­டி­ருக்­கின்­றார்கள்.

முஸ்லிம் கட்­சி­களின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களின் இத்­த­கைய ஓட்­டத்தை பசில்­ரா­ஜபக் ஷ அமெ­ரிக்­கா­வி­லி­ருந்து நாட்­டிற்கு திரும்­பி­யதன் பின்­னரே அவ­தா­னிக்க முடி­கின்­றது. பசில்­ரா­ஜபக் ஷவு­டன்தான் முஸ்லிம் கட்­சி­களின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் அர­சாங்­கத்­துடன் இணைந்து செயற்­ப­டு­வ­தற்­கு­ரிய உடன்­பா­டு­களைக் கண்­டி­ருந்­தார்கள். பசில்­ரா­ஜபக் ஷ அமெ­ரிக்கா சென்­றதும் முஸ்லிம் கட்­சி­களின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் மிகுந்த கவ­லையில் இருந்­தார்கள். அர­சாங்­கத்­திற்கு ஆத­ரவு வழங்­கி­விட்டு தாம் நடு­வீ­தியில் நிற்­பது போன்­ற­தொரு உணர்வை இவர்கள் கொண்­டி­ருந்­தார்கள்.

அவர் மீண்டும் நாட்­டிற்கு திரும்­பு­வாரா என்­பது கூட கேள்விக் குறி­யா­கவே இருந்­தது. இப்­போது பசில்­ரா­ஜபக் ஷ பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக நிய­மிக்­கப்­பட்­டுள்ளார். அமைச்சர் பத­வி­யையும் பெற்றுக் கொண்டுள்ளார். பசில்­ரா­ஜபக் ஷவின் வருகை முஸ்லிம் கட்­சி­களின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களைப் பொறுத்­த­வரை போன உயிர் திரும்பி வந்­த­தா­கவே இருக்­கின்­றது.

முஸ்லிம் கட்­சி­களின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் எதிர்க்­கட்சி வரி­சையில் இருந்து கொண்டு அர­சாங்­கத்தின் தரப்­பி­ன­ராகச் செயற்­ப­டு­வ­தனை விடவும் ஆளும் கட்சி வரி­சையில் இருந்து அர­சாங்­கத்­திற்கு ஆத­ரவு வழங்கும் முடி­வினை எடுத்­துள்­ளார்கள்.

முஸ்லிம் கட்­சி­களின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் அமைச்சர் பத­வி­களைப் பெற்றுக் கொண்டால், அதன் மூல­மாக அவர்­க­ளது கட்­சியை வளர்க்க முடி­யாது. அவர்கள் அடுத்த பாரா­ளு­மன்ற தேர்­தலில் பொது­ஜன பெர­மு­ன­வுடன் போட்­டி­யிட வேண்டும். அதனால், பொது­ஜன பெர­முனக் கட்­சியின் உறுப்­பி­னர்­க­ளாக மாற வேண்டும். அப்­போ­துதான் அமைச்சர் பத­வியை பெற்றுக் கொள்­ளலாம். அமைச்சர் பத­வி­யையே தமது இலக்­காகக் கொண்­டுள்ள முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் பொது­ஜன பெர­மு­ன­வுடன் இணைந்து கொண்­டாலும் ஆச்­ச­ரி­யப்­ப­டு­வ­தற்­கில்லை. அம்­பாறை மாவட்­டத்தில் உள்ள முஸ்லிம் கட்சி ஒன்றின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் தமது கோரிக்­கை­களை ஆட்­சி­யா­ளர்கள் நிறை­வேற்றும் பட்­சத்தில் அக்­கட்­சியில் அடுத்த தேர்­தலில் போட்­டி­யி­டுவேன் என்று ஓர் இடத்தில் தெரி­வித்­துள்ளார்.

இதே வேளை, பொது­ஜன பெர­மு­ன­வுடன் உள்ள முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களை எடுத்துக் கொண்டால் அவர்­க­ளி­னாலும் சமூ­கத்தின் பிரச்­சி­னை­க­ளுக்கு ஆளுந்­த­ரப்­பினர் என்ற அடிப்­ப­டையில் தீர்­வு­களைப் பெற்றுக் கொடுக்க முடி­யாத நிலையே உள்­ளது. அவர்­களில் தேசி­யப்­பட்­டியல் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரான அலி­சப்ரி நீதி அமைச்­ச­ராக இருந்து கொண்­டி­ருக்­கின்றார். அவர் நீதி அமைச்சர் என்­றாலும், ஆட்­சி­யா­ளர்­களின் திட்­டங்­க­ளுக்கு அமை­வா­கவே செயற்­பட முடியும்.

முஸ்­லிம்­களின் தனியார் சட்­டத்தை இல்­லாமல் செய்யும் நட­வ­டிக்­கை­களை ஆட்­சி­யா­ளர்கள் மேற்­கொண்­டுள்­ளார்கள். ஒவ்­வொரு அர­சாங்­கமும் அதனை மாற்­றி­ய­மைக்க முயற்சி எடுத்த போதிலும் முஸ்­லிம்­க­ளினால் காட்­டப்­பட்ட எதிர்ப்­புக்கள், முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களின் முயற்­சி­க­ளினால் அந்த நட­வ­டிக்­கைகள் முறி­ய­டிக்­கப்­பட்­டன. இன்­றைய நிலையில் கடந்த காலத்தைப் போன்று தமது எதிர்ப்பைக் காட்­டு­வ­தற்­கு­ரிய வீரியம் முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்களுக்கு இருப்­ப­தாகத் தெரி­ய­வில்லை.

ஆனால், இப்­போது ஆட்­சி­யா­ளர்கள் மூன்றில் இரண்டு பெரும்­பான்­மையைக் கொண்­டுள்­ளார்கள். ஆட்­சி­யா­ளர்­க­ளுக்கும் பௌத்த இன­வாதத் தேரர்­க­ளுக்கும் இடையே பலத்த முரண்­பா­டுகள் ஏற்­பட்­டுள்­ளன. அதனால், முஸ்­லிம்­களின் தனியார் சட்­டத்தில் உள்­ள­வற்றில் திருத்­தங்­களை மேற்­கொள்­வ­தற்கும், சில­வற்றை இல்­லாமல் செய்­வ­தற்கும் நட­வ­டிக்­கைகள் எடுப்­ப­தற்கு அமைச்­ச­ரவை அங்­கீ­காரம் வழங்­கி­யுள்­ளது. காதி­நீ­தி­மன்ற முறை­மையை இல்­லாமல் செய்­வ­தற்­கு­ரிய நட­வ­டிக்­கைகள் இடம்­பெற்றுக் கொண்­டி­ருப்­ப­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

இந்­நி­லையில் இந்த ஆலோ­ச­னையை தான் முன்­வைக்­க­வில்லை. அது குறித்து என்னால் எதுவும் பேச முடி­யா­தென்று நீதி அமைச்சர் அலி­சப்ரி தெரி­வித்­துள்ளார்.

காதிநீதிமன்ற முறையிலும், முஸ்லிம் தனியார் சட்டத்தில் உள்ள குறைகளையும் நிவர்த்தி செய்வதில் முஸ்லிம்களிடையே மாற்றுக் கருத்துக்கள் கிடையாது. ஆனால், அவற்றை முழுமையாக இல்லாமல் செய்ய முடியாது. அவ்வாறு செய்வதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகள் முஸ்லிம் களின் மீது மேற்கொள்ளப்படும் திட்டமிட்ட இனவாத ஒடுக்குதலாகவே பார்க்கப்பட வேண்டியதாகும். ஆதலால், நீதி அமைச்சர் இதில் நழுவல் போக்கை கடைப்பிடித்து தமது சமூகப் பொறுப்பிலிருந்து விலகிக் கொள்ளாது செயற்படுவதற்கு முன்வருதல் வேண்டும்.

இதே வேளை, ஆட்சியாளர்கள் பௌத்த இனவாதத் தேரர்களின் முரண்பாடுகளை இல்லாமல் செய்வதற்கும், தேர்தல் காலங்களில் தாங்கள் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுவதில் தயங்கப் போவதில்லை என்று காட்டுவதற்கு முஸ்லிம்களின் தனியார் சட்டத்தை கையில் எடுத்துள்ளதாகவே தெரிகின்றது.

Source:– Vidivelli

Posted in Uncategorized

பொதுஜன பெரமுனவுடன் நிலவும் முரண்பாடு – ஜனாதிபதியை சந்திக்கும் சுதந்திரக் கட்சி

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்திக்க ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தீர்மானித்துள்ளதாக கட்சியின் தகவல்கள் தெரிவித்துள்ளன.

இதன்படி ஜனாதிபதி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பிரதிநிதிகளுக்கு இடையேயான சந்திப்பு எதிர்வரும் 21ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் நிலவும் முரண்பாடுகள் தொடர்பாக இந்த சந்திப்பில் கலந்துரையாடப்படுடென எதிர்பார்க்கப்படுகிறது.

Posted in Uncategorized

விமல் வீரவன்ச கடும் எதிர்ப்பு – எதிர்த்து வாக்களிக்கப் போவதாக எச்சரிக்கை, திட்டத்தை பிற்போட்டது அரசாங்கம்

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைகழக சட்டமூலத்திற்கு எதிராக வாக்களிக்கப்போவதாக அமைச்சர் விமல்வீரவன்ச தெரிவித்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
விமல்வீரவன்சவின் கட்சி உறுப்பினரும் இராஜாங்க அமைச்சருமான ஜயந்த சமரவீர இதனை தெரிவித்துள்ளார்.

அமைச்சர் சமல்ராஜபக்சவிடம் விமல்வீரவன்ச இதனை தெரிவித்துள்ளார் – விமல்வீரவன்சவின் எதிர்ப்பு காரணமாக இந்த சட்டமூலத்தை ஆகஸ்ட்மாதம் வரை பிற்போட்டுள்ளது என இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் தனியார் பல்கலைகழகங்களை அமைப்பதை தங்கள் கட்சி ஏற்றுக்கொள்ளாது குறிப்பிட்ட ஏற்பாடுகளை அகற்றாமல் சட்டமூலத்தை மீண்டும் கொண்டுவந்தால் அதனை எதிர்ப்போம் எனவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தற்போதுள்ள பயணக் கட்டுப்பாடுகளில் தளர்வு – புதிய அறிவிப்பு வெளியானது

தற்போதுள்ள பயணக் கட்டுப்பாடுகளை இன்று (சனிக்கிழமை) முதல் மேலும் தளர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், மாகாணங்களுக்கு இடையேயான பயணக் கட்டுப்பாடுகள் மேலும் 14 நாட்களுக்கு நடைமுறையில் இருக்கும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்துவது மற்றும் அனுமதிக்கப்பட்ட பொது நடவடிக்கைகள் குறித்த புதிய சுகாதார வழிகாட்டுதல்கள் வெளியாகியுள்ளது.

அதிகபட்சம் 150 பேருடன் திருமண நிகழ்வை நடத்தவும் 50 பேருடன் 24 மணித்தியாலங்களுக்குள் இறுதி கிரியைகளை நடத்தவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் வழிபட்டு தலங்களை திறப்பதற்கும் மாநாடுகள் / கருத்தரங்குகள் என்பனவற்றை 50 இருக்கைகளுடன் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஆட்சியைக் கவிழ்க்கலாம் என கனவு காண வேண்டாம் – பசில் ராஜபக்ஷ

ஆர்ப்பாட்டங்கள் மூலம் ஆட்சியைக் கவிழ்க்கலாம் என கனவு காண வேண்டாம் என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, எதிரணிக்கு பதிலுரை வழங்கியுள்ளார்.

நேற்று ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த அவர், தான் அமைச்சராக பதவி ஏற்றவுடனேயே இந்த ஆர்ப்பாட்டங்களை எதிரணியினர் தீவிரப்படுத்தியுள்ளனர் என்றும் சுட்டிக்காட்டினார்.

குறிப்பிட்ட ஒரு சிலரைக்கொண்டு முன்னெடுக்கப்படும் இந்த ஆர்ப்பாட்டங்கள் மூலம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசை ஒருபோதும் கவிழ்க்க முடியாது என்றும் பசில் ராஜபக்ஷ குறிப்பிட்டார்.

கட்சியை மனதில் வைத்தே நாட்டு மக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடனான அரசாங்கத்தையும் ஜனாதிபதியையும் தெரிவு செய்துள்ளார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

எனவே அர்த்தமற்ற இந்த ஆர்ப்பாட்டங்கள் கைவிட்டு நாட்டினதும் மக்களினதும் நலன் சார்ந்த திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் பசில் ராஜபக்ஷ எதிரணியிடம் கேட்டுக்கொண்டார்.

Posted in Uncategorized

கருத்துச் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்த தனிமைப்படுத்தல் சட்டம்- சர்வதேச மன்னிப்புச்சபை கண்டனம்

இலங்கையில் அமைதியாக முறையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தெரிவு செய்யப்பட்ட அடிப்படையில் தனிமைப்படுத்தும் சட்டம் பிரயோகிக்கப் பட்டிருப்பதானது, கருத்து சுதந்திரத்தைக் கட்டுப் படுத்துவதற்கான ஓர் கருவியாக அரசாங்கம் கொரோனா வைரஸ் பரவலைப் பயன் படுத்துவதை வெளிப்படுத்தி இருக்கிறது என சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.

பொது மக்கள் அதிகளவில் ஒன்று கூடும் போராட்டங்கள், பொதுக் கூட்டங்களுக்கு மறு அறிவித்தல் வரும் வரையில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆனால் நாட்டில் பல இடங்களில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டங்கள் முன் வைக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு போராட்டங்களை நடத்துபவர்களை கைது செய்யும் காவல் துறையினர், நீதி மன்றம் அவர்களை பிணையில் செல்ல அனுமதித்தாலும், அந்த உத்தரவை மீறி தனிமைப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தெரிவு செய்யப்பட்ட அடிப்படையில் தனிமைப்படுத்தல் சட்டம் பிரயோகிக்கப் படுவது இலங்கை அரசாங்கம் கருத்துச் சுதந்திரத்தைக் கட்டுப் படுத்துவதற்கு இந்த கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலை ஓர் கருவியாகப் பயன்படுத்தப் படுவதை வெளிப்படுத்தி இருக்கின்றது என சர்வதேச மன்னிப்புச் சபை சாடியுள்ளது.