வடக்கில் 40 ஏக்­கர் அரச காணி­கள் இராணுவத்தினருக்கு வழங்கப்பட்டுள்ளதாக தகவல்

வடக்கு மாகாண சபை­யின் ஆயுள் காலம் முடி­வ­டைந்த பின்­னர் பாது­காப் ­புத்தரப்பின­ருக்கு 40 ஏக்­கர் அரச காணி­கள் இது­வரை உத்­தி­யோ­க­பூர்­வ­மாகக் கையளிக்­கப்­பட்­டுள்­ளன.

தக­வல் அறி­யும் உரி­மைச் சட்­டத்­தினூடாக கேட்­கப்­பட்ட கேள்­விக்கு, வடக்கு மாகாண காணித் திணைக்­க­ளம் வழங்கிய பதிலிருந்தே இது தெரியவந்துள்ளது.

வடக்கு மாகா­ணத்­தில் 22 ஆயி­ரம் குடும்­பங்­கள் காணி­கள் இல்­லா­மல் இருக்­கும் சூழலில், இந்­தக் காணிகள் 2019, 2020, 2021, 2022ஆம் ஆண்­டு­க­ளில் கையளிக்கப்பட்­டுள்­ளன. கடற்­ப­டை­யி­ன­ருக்கு 22.15 ஏக்கரும், காவல்துறையினருக்கு 9.5 ஏக்­க­ரும், இரா­ணு­வத்­தி­ன­ருக்கு 6.25 ஏக்­க­ரும், விமா­னப்­ப­டைக்கு 1.24 ஏக்கரும் வழங்­கப்­பட்­டுள்­ளன. காவல்துறையினருக்கும் 2019 ஆம் ஆண்டு அரச காணி­கள் வழங்­கப்­பட்­டுள்­ளன.

ஒட்டுசுட்டா­னில் 0.4 ஏக்­க­ரும், புதுக்­கு­டி­யி­ருப்­பில் 4.9 ஏக்­க­ரும், கொக்­கி­ளா­யில் 1 ஏக்­ க­ரும், பளை­யில் 2 ஏக்­க­ரும், நயி­னா­தீ­வில் 0.25 ஏக்­க­ரும், வவு­னியா தெற்­கில் 1 ஏக்­க­ரும் வழங்­கப்­பட்­டுள்­ளன.

2020ஆம் ஆண்டு கடற்­ப­டை­யி­ன­ருக்கு சங்­கானை பிர­தேச செய­லர் பிரி­வில் அரா­லி­யில் 0.37 ஏக்­க­ரும், யாழ்ப்­பா­ணத்­தில் 0.06 ஏக்­க­ரும், ஊர்­கா­வற்­றுறை மெலிஞ்­சி­மு­னை­யில் 0.3 ஏக்­க­ரும், கொக்­குத்­தொ­டு வா­யில் 3.39 ஏக்­க­ரும், கொக்­கி­ளாய் கிழக்­கில் 1.49 ஏக்­க­ரும், பூந­க­ரி­யில் 7.38 ஏக்­க­ரும், மண்­டை­தீவு தெற்கில் 0.62 ஏக்­க­ரும், அல்­லைப்­பிட்­டி­யில் 0.25 ஏக்­க­ரும், வேலணை கிழக்­கில் 0.25 ஏக்­க­ரும், ஊர்காவற்றுறை சுரு­வி­லில் 0.19 ஏக்­க­ரும் வழங்­கப்­பட்­டுள்­ளன.

விமா­னப்­ப­டை­யி­ன­ருக்கு கேப்பாபிலவில் 1.24 ஏக்­கர் வழங்­கப்­பட்­டுள்­ளது. இரா­ணு­வத்­தி­ன­ருக்கு கரை­து­றைப்­பற்­றில் 1.83 ஏக்­கர் கைய­ளிக்­கப்­பட்­டுள்­ளன. கடந்த ஆண்டு இரா­ணு­வத்­தி­ன­ருக்கு முச­லி­யில் 4.42 ஏக்­க­ரும், கடற்­ப­டை­யி­ன­ருக்கு வேல­ணை­யில் 0.31 ஏக்­க­ரும், நெடுந்­தீ­வில் 1.5 ஏக்­க­ரும் கைய­ளிக்­கப்­பட்­டுள்­ளன.

இந்த ஆண்டு கடற்­ப­டை­யி­ன­ருக்கு பூந­கரி பொன்­னா­வெ­ளி­யில் 5 ஏக்­க­ரும், வலைப்­பாட்­டில் 0.25 ஏக்கரும், முச­லி­யில் 0.21 ஏக்­க­ரும், காரை­ந­க­ரில் 0.04 ஏக்­க­ரும் கைய­ளிக்­கப்­பட்­டுள்­ளன. இந்த அரச காணி­க­ளுக்­கு­ரிய கோரிக்­கை­க­ளில் சில, பாது­காப்­புத் தரப்­பி­ன­ரால் வடக்கு மாகாண சபை இயங்­கிய காலத்­தில் முன்­வைக்­கப்­பட்­ட­போது அப்­போ­தைய காணி அமைச்­ச­ராக இருந்த முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ர­னால் நிரா­க­ரிக்­கப்­பட்­டி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

Posted in Uncategorized

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதே உண்மையான நல்லிணக்கம்– ஜீவன் தொண்டமான்

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதே உண்மையான நல்லிணக்கத்தின் முதல் படியாக அமையும். என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முற்றாக நீக்குமாறு வலியுறுத்தி இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணி, சர்வஜன நீதி அமைப்பு, தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புக்களின் கூட்டமைப்பு ஆகியவற்றின் ஏற்பாட்டில் நாடளாவிய ரீதியில் கையெழுத்து திரட்டப்பட்டு வருகின்றது.

இதன் ஓர் அங்கமாக நுவரெலியா, ரிகில்கஸ்கட பகுதியில் இன்று கையெழுத்து திரட்டப்பட்டது. இதில் பங்கேற்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் சார்பில்    ஜீவன் தொண்டமான்  கையொப்பம் இட்டார்.

அதன் பின்னர் நுவரெலியாவில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது     கருத்து வெளியிட்ட ஜீவன் தொண்டமான்,

அரசியல் வேறுபாடுகள், கொள்கை வேறுபாடுகள் இருந்தாலும் பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் உள்ளது. இதற்கமையவே சாணக்கியன்   விடுத்த அழைப்பை ஏற்று மனுவில் நானும் கையொப்பம் இட்டேன்.

இற்றைக்கு 43 ஆண்டுகளுக்கு முன்னர் தற்காலிக தீர்வாகவே பயங்கரவாத தடைச்சட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால் போர் முடிவடைந்து பல வருடங்கள் கடந்தும் அந்த சட்டம் நீடிக்கின்றது. இதனை ஏற்க முடியாது. உண்மையான ஜனநாயகம் மற்றும் நல்லிணக்கத்தின் முதல்படியாக அச்சட்டத்தை நீக்க வெண்டும்.

இது தொடர்பில் நாம் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளோம். பயங்கரவாத தடைச்சட்டத்தை காங்கிரஸ் தற்போது எதிர்க்கவில்லை. முன்னர் இருந்தே எதிர்த்து வருகின்றோம். எமது மறைந்த தலைவர் ஆறுமுகன் தொண்டமான் நீதிமன்றம்கூட சென்றுள்ளார் என தெரிவித்துள்ளார்.

ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கு 6 மணி நேரத்திற்கு முன் அனுமதி பெற வேண்டும் – பதில் பாதுகாப்பு அமைச்சர்

எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கு 6 மணித்தியாலங்களுக்கு முன்னர் காவல்துறையினருக்கு அறிவித்து அனுமதி பெறுவது அவசியம் என பதில் பாதுகாப்பு அமைச்சர் ப்ரமித்த பண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியாலளர் சந்திப்பில் கலந்து கொண்டு பதில் பாதுகாப்பு அமைச்சர் இந்த விடயம் குறித்து தெளிவுபடுத்தினார்.

ஐநா பிரதிநிதி இன்று இலங்கை வருகிறார்!

எதிர்வரும் 28ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருக்கும் அவர், கொழும்பில் உள்ள அரச உயர் அதிகாரிகள் மற்றும் உதவி நிறுவனங்களைச் சந்தித்து கலந்துரையாடவும் திட்டமிட்டுள்ளார்.மேலும், அமெரிக்க நிதியத்தால் இயக்கப்படும் மனிதாபிமான உதவித் திட்டங்களின் பயனாளிகள் மற்றும் அவற்றை செயல்படுத்தும் தரப்பினருடன் கலந்துரையாட திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Posted in Uncategorized

நினைவு நாட்களுக்கு உரிமை கோருவது ?

நிலாந்தன்
நினைவு கூர்தலுக்கான ஒரு பொதுக் கட்டமைப்பை குறித்த உரையாடல்கள் பல ஆண்டுகளுக்கு முன்னரே தொடங்கிவிட்டன.ஆனால் ஒரு பொதுவான கட்டமைப்பை உருவாக்கும் விடயத்தில் தமிழ்ப்பரப்பில் இருக்கும் அரசியல் செயற்பாட்டாளர்கள் பொருத்தமான வெற்றிகளை இதுவரை பெற்றிருக்கவில்லை.அனைத்து நினைவு கூர்தல்களுக்குமான ஒரு பொதுக் கட்டமைப்பை ஏன் உருவாக்க முடியவில்லை?

ஏனென்றால் ஒரு பொதுவான தியாகிகள் நினைவு தினம் தமிழ்மக்கள் மத்தியில் இல்லை.ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட ஒவ்வொரு அமைப்பும் தனக்கென்று தனியாக தியாகிகள் தினங்களை வைத்திருக்கின்றது. நினைவு நாட்களை வைத்திருக்கின்றது.இதில் ஒரு இயக்கம் தியாகி என்று கூறுபவரை மற்றொரு இயக்கம் துரோகி என்று கூறும் நிலைமையும் உண்டு.ஒரு இயக்கத்தால் தியாகியாக கொண்டாடப்படுகிறவர் மற்றொரு இயக்கத்தால் கொலைகாரராக பார்க்கப்படுகிறார்.எனவே இயக்கங்களுக்கிடையிலான ஒரு பொதுவான தியாகிகள் நாளை இன்றுவரை கண்டுபிடிக்க முடியவில்லை.அதை என்றோ ஒரு நாள் கண்டுபிடிக்கும் பொழுதுதான் தமிழ்த் தேசியத்தின் ஜனநாயக இதயம் அதன் முழுமையான செழிப்பை அடையும்.

தியாகிகள் நாள் மட்டுமல்ல, இனப்படுகொலை நாளில் கூட சர்ச்சைகள் உண்டு.மே 18 எனப்படுவது தமிழ்மக்களின் ஆயுதப் போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட நாள்.எனவே அந்த நாளை இனப்படுகொலை நாளாக அனுஷ்டிக்க வேண்டும் என்று தமிழ் மக்களில் ஒரு பகுதியினர் கருதுகிறார்கள். ஒரு குறுகிய காலகட்டத்தில் ஒரு குறுகிய நிலப்பரப்புக்குள் அதிக தொகையினர் கொல்லப்பட்டதன்மூலம் ஆயுதப் போராட்டம் தோற்கடிக்கப்பட்ட ஒரு நாள் என்ற அடிப்படையில் அந்த நாளை இனப்படுகொலை நினைவு நாளாக அனுஷ்டிக்கலாம் என்று கருதுபவர்கள் உண்டு.ஆனால் அங்கேயும் சர்ச்சைகள் உண்டு.அந்த நாளில் புலிகள் இயக்கத்தின் பிரதானிகள் பலர் தம் உயிர்களை துறந்தனர் என்ற அடிப்படையில் அதுவும்கூட புலிகள் இயக்கத்தின் நினைவு நாட்களில் ஒன்றுதான் என்று ஒரு வாதம் முன்வைக்கப்படுகிறது.

இந்த அடிப்படையில் பார்த்தால் தமிழ் மக்கள் மத்தியில் உள்ள எல்லாத் தரப்புகளினாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு பொதுவான நினைவு நாளை கண்டுபிடிப்பது இப்போதைக்குச் சாத்தியமில்லை.அவ்வாறு ஒரு பொதுவான நினைவு நாள் இல்லாத ஒரு சமூகத்தில், நினைவு கூர்தலுக்காக ஒரு பொதுவான கட்டமைப்பை உருவாக்குவதும் சாத்தியமில்லை.பதிலாக அவரவர் அவரவருடைய தியாகிகள் நாளை அனுஷ்டிப்பது என்ற அடிப்படையில் நினைவு கூர்தலில் பல்வகைமையை ஏற்றுக் கொள்வதுதான் உடனடிக்கு சாத்தியமான ஒன்று.

மேலும்,கடந்த 13ஆண்டுகளாக நினைவுகூர்தல் தொடர்பாக ஏற்பட்ட சர்ச்சைகள் யாவும் விடுதலைப்புலிகள் இயக்கத்தோடு சம்பந்தப்பட்ட நினைவு நாட்கள்தான்.விடுதலைப்புலிகள் அல்லாத இயக்கங்களின் நினைவு நாட்கள் பொறுத்து பெரியளவில் சர்ச்சைகள் இல்லை.

இது எதை காட்டுகின்றது என்றால்,புலிகள் இயக்கத்தின் மெய்யான வாரிசு யார் என்ற ஒரு போட்டிதான்.அல்லது அந்த இயக்கத்தின் வீரத்துக்கும் தியாகங்களுக்கும் யார் உரிமை கோரலாம் என்ற ஒரு போட்டிதான்.இந்தப் போட்டி காரணமாகத்தான் கடந்த 13ஆண்டுகளாக நினைவுகூர்தல் தொடர்பாக சர்ச்சைகள் எழுகின்றன.

இதில் பொதுக் கட்டமைப்பை உருவாக்கும் முயற்சிகளில் பெரும்பாலானவை விடுதலைப்புலிகள் இயக்கத்தோடு சம்பந்தப்பட்ட நினைவு நாட்களை அனுஷ்டிப்பதற்கானவைதான்.அவ்வாறான ஒரு பொதுக் கட்டமைப்பு இல்லாத ஒரு பின்னணியில்தான் இப்பொழுது மறுபடியும் திலீபனின் நினைவு நாளை முன்னிட்டு அரசியல்வாதிகள் தங்களுக்கிடையே பிடுங்குப்படத் தொடங்கியிருக்கிறார்கள்.

இப்படி ஒரு சர்ச்சை வரும் என்பதனை ஏற்கனவே எதிர்பார்த்த அரசியற் செயற்பாட்டாளர்கள் சிலர் இதில் சம்பந்தப்பட்ட எல்லாக் கட்சிகளையும் அணுகினார்கள்.குறிப்பாக இந்த சர்ச்சைகளின் மையமாகக் காணப்படும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் இரண்டு அணிகளையும் அணுகினார்கள். புலிகள் இயக்கத்தின் மூத்த உறுப்பினரான பஷீர் காக்கா இது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரனோடு உரையாடினார்.தான் மட்டக்களப்புக்குச் சென்று கொண்டிருப்பதாகவும் தமது அமைப்பின் பேச்சாளர் சுகாசுடன் உரையாடும்படியும் கஜேந்திரன் சொன்னார்.எனினும்,இது தொடர்பாக அக்கட்சியின் உறுப்பினரும் திலீபனோடு நேரடியாகப் பழகியவருமான பொன் மாஸ்ரரோடு உரையாடுவது அதிகம் பொருத்தமாக இருக்கும் என்று பஷீர் காக்கா கருதினார் போலும். எனவே அவர் பொன் மாஸ்டரிடம் இது தொடர்பாக உரையாடியிருக்கிறார். எனினும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்குள் ஏற்பட்ட உடைவு நினைவு கூர்தலில் பிரதிபலிப்பதை அவரைப் போன்ற செயல்பாட்டாளர்களால் தடுக்க முடியவில்லை.மாறாக அரசியல்வாதிகள் பஷீர் காக்காவை போன்ற மூத்த செயற்பாட்டாளர்களை அவமதிக்கும் ஒரு நிலைமைதான் உருவாகியது.

முரண்பாடு பொதுவெளியில் வந்த பின்னர்தான் மணிவண்ணன் ஒரு பொதுக் கட்டமைப்பை உருவாக்கினார். முரண்பாட்டின் பின் உருவாக்கப்பட்டபடியால் அது முரண்பாட்டின் ஒரு விளைவாகவே பார்க்கப்படும். மாநகர முதல்வர் என்று அடிப்படையில் மணிவண்ணன் அதனை உருவாக்கிய போதிலும், அப்பொதுக் கட்டமைப்பு சுயாதீனமானது என்று அதைச் சேர்ந்தவர்கள் கூறுகிறார்கள்.அது திலீபன் நினைவு நாட்களை சுயாதீனமாக நினைவுகூரும் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.

ஆனால் கஜேந்திரகுமார் அணியைச் சேர்ந்த பொன் மாஸ்டர் ஊடகங்களுக்கு தெரிவித்த கருத்துக்களை வைத்துப்பார்த்தால்,தமிழ்த்தேசிய மக்கள் முன்னணிக்குள் ஏற்பட்ட பிளவு திலீபனின் நினைவு நாட்களில் பிரதிபலிக்கிறது என்றே தெரிகிறது. அது மட்டுமல்ல கடந்த 13 ஆண்டுகளில் தமிழ்மக்கள் ஒரு பொதுவான நினைவுகூரும் கட்டமைப்பை உருவாக்குவது எத்துணை சவால்கள் மிகுந்தது என்பதனை நிரூபிப்பதாகவும் அது காணப்படுகிறது.ஆயுத மோதல்களுக்கு பின்னரான கடந்த 13 ஆண்டுகளில் தமிழ்ச் சமூகமும் அதன் அரசியலும் பண்புருமாற்றம் – transformation – ஒன்றுக்கு போகமுடியாது தியங்குவதையும் அது காட்டுகிறது.

தமிழ்மக்கள் முழு உலகத்தையும் திரும்பி பார்க்க வைக்கும் ஓர் ஆயுதப் போராட்டத்தை நடாத்திய மக்கள்.ஆயுதப் போராட்டம் என்று சொன்னால் சம்பந்தப்பட்ட எல்லாருடைய கைகளிலும் ரத்தம் இருக்கும்.ஆயுதம் ஏந்தியவர்கள் மட்டுமல்ல,அந்தப் போராட்டத்தை ஏதோ ஒரு விதத்தில் ஆதரித்தவர்கள் எல்லாருக்கும் அதில் கூட்டுப்பொறுப்பு உண்டு.இதில் என்னுடைய கை சுத்தம், உன்னுடைய கையில் இருப்பது ரத்தம் என்று சொல்லிக் கொண்டிருக்க முடியாது.தியாகி – துரோகி என்ற அளவுகோள்கள் ஊடாக அரசியலைத் தொடர்ந்தும் அணுக முடியாது.நான் தியாகி,நீ துரோகி என்று வகிடுபிரிக்க வெளிக்கிட்டால் சமூகம் என்றைக்குமே ஒரு திரட்சியாக இருக்கமுடியாது.அதாவது தமிழ்மக்களை ஒரு தேசமாக கட்டியெழுப்பவே முடியாது.

இதில் தங்களை தியாகிகளாக காட்டிக் கொள்பவர்கள் அல்லது கடந்த காலத் தியாகங்களுக்கும் வீரத்திற்கும் உரித்து கொண்டாடுபவர்கள் முதலில் அந்த வீரத்தின் தொடர்ச்சியும் தியாகத்தின் தொடர்ச்சியும் தாங்களே என்பதனை நிரூபித்துக் காட்டவேண்டும்.அதை நிரூபிக்கும் இடம் நினைவு கூர்தல் அல்ல. மாறாக கடந்த 13 ஆண்டு கால அரசியலில் தமது சொத்துக்களை இழப்பதற்கும் ரிஸ்க் எடுப்பதற்கும் எத்தனை பேர் தயாராக இருந்தார்கள் என்பதிலிருந்துதான் அதை மதிப்பிடலாம். திலீபனை நினைவு கூர்வது என்பது நல்லூரில் இருக்கும் நினைவுத்தூபியில் சிவப்பு மஞ்சள் கொடியை கட்டுவது மட்டுமல்ல, விளக்குகளை ஏற்றுவது மட்டும் அல்ல,அது அதைவிட ஆழமானது. திலீபனைப்போல தமது அரசியல் இலக்கை அடைவதற்காக உயிரைத் துறக்கத் தயாரான எத்தனை அரசியல்வாதிகள் தமிழ் மக்கள் மத்தியில் உண்டு? ஒருவர் முன்வரட்டும் பார்க்கலாம்?

இதுதான் பிரச்சினை.தியாகத்துக்கும் வீரத்துக்கும் உரிமை கோரும் அரசியல்வாதிகள் கடந்த 13ஆண்டுகளாக எத்தனை தியாகங்களைச் செய்திருக்கிறார்கள்?எத்தனை பேர் சட்ட மறுப்பாகப் போராடி சிறை சென்றிருக்கிறார்கள்? எத்தனை பேர் சொத்துக்களை துறந்திருக்கிறார்கள்?

கடந்த 13ஆண்டுகளில் காணாமல் போனவர்களின் அம்மாக்கள் உண்ணாவிரதம் இருந்திருக்கிறார்கள்.அரசியல் கைதிகள் உண்ணாவிரதம் இருந்திருக்கிறார்கள்.ஆனால் அவர்களை அரசியல் செயற்பாட்டாளர்கள் சாக விடவில்லை.இவைதவிர அரசியல்வாதிகள் என்று பார்த்தால் யாருமே அந்தளவுக்கு துணியவில்லை.

அதற்காக அரசியல்வாதிகள் சாக வேண்டும் என்று இக்கட்டுரை கேட்கவில்லை.உயிரைக் கொடுத்தது போதும்.இனி உயிர்களைப் பாதுகாக்க வேண்டிய காலம்.எனவே ஆயுதப் போராட்டத்திற்கு பின்னரான ஒரு அரசியலுக்குரிய பண்புருமாற்றத்திற்கு தமிழ்மக்கள் தயாராக வேண்டும்.நான் வண்ணாத்து பூச்சி,நீ மசுக்குட்டி என்று சொல்லிக் கொண்டிருக்க முடியாது.ஏனென்றால் எல்லா வண்ணாத்துப் பூச்சிகளும் ஒரு காலம் மயிர்க்கொட்டிகளாக இருந்தவைதான்.

இந்த விடயத்தில் தமிழ்மக்கள் தென்னாபிரிக்காவிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும்.தென்னாபிரிக்காவில் வெவ்வேறு ஆயுத அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் மாறி மாறி ஒருவர் மற்றவரை கொன்றிருக்கிறார்கள். பாதிக்கப்பட்டவர்கள் பழிவாங்கும் உணர்ச்சியோடு ஒருவர் மற்றவரைத் தண்டிக்க முற்பட்டிருந்திருந்தால் தென்னாபிரிக்கா தொடர்ந்தும் இறந்த காலத்திலேயே வாழ வேண்டியிருந்திருக்கும்.ஒரு புதிய காலத்துக்கு வந்திருக்கவே முடியாது.இதுவிடயத்தில் தென்னாபிரிக்காவை இறந்த காலத்திலிருந்து புதிய காலத்துக்கு அழைத்து வரத் தேவையான பண்புருமாற்றத்திற்கு மண்டேலா தலைமை தாங்கினார்.

ஈழத்தமிழ் அரசியலிலும் இறந்த காலத்தில் இருந்து ஒரு புதிய காலத்தை நோக்கி செல்வதற்கான பண்புருமாற்றம் தேவை.தனது அரசியல் எதிரியை துரோகி ஆக்குவதால் யாரும் தியாகி ஆகிவிட முடியாது.தியாகம் செய்தால்தான் தியாகியாகலாம்.தனது அரசியல் எதிரியைத் துரோகியாக்குவது என்பது தமிழ்ச் சமூகம் பண்புருமாற்றத்துக்கு தயாரில்லை என்பதைத்தான் காட்டுகின்றது. பண்புருமாற்றத்துக்கு தயாரில்லை என்று சொன்னால் கூட்டுக் காயங்களோடும் பிணங்களோடும் இறந்த காலத்திலேயே வாழ வேண்டியதுதான்.பழிவாங்கும் உணர்ச்சியால் பிளவுண்டு ஒரு தேசமாக திரட்சியுறாமல் சிதறிப் போவதுதான்.

சில மாதங்களுக்கு முன் பொருளாதார நெருக்கடி தொடர்பில் நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்திய கஜேந்திரகுமார் சிங்கள பௌத்த அரசியலானது பண்புருமாற்றத்துக்குப் போகதவறியதன் விளைவே அதுவென்று கூறியிருந்தார்.உண்மை. அதுபோல தமிழ் அரசியலும் பண்புருமாற்றத்துக்குப் போக வேண்டும்.

கடந்த 13 ஆண்டுகளில் ஒரு பொதுவான நினைவு நாளையோ அல்லது நினைவு கூர்தலுக்கான ஒரு பொதுக் கட்டமைப்பையோ ஈழத்தமிழர்களால் உருவாக்க முடியவில்லை என்பது தமிழ் அரசியல் தொடர்ந்து பண்புருமாற்றத்திற்கு தயாராக இல்லை என்பதைத்தான் காட்டுகின்றது.இப்பொழுது திலீபனின் நினைவு நாளை முன்னிட்டு உருவாக்கப்பட்டிருக்கும் பொதுக் கட்டமைப்பானது ஒரு கட்சிக்குள் ஏற்பட்ட உடைவைப் பிரதிபதிக்குமா? அல்லது ஒரு புதிய காலத்தை நோக்கிய பண்புருமாற்றத்தைப் பிரதிபலிக்குமா?

“மக்கள் பிரதிநிதிகள் இன்றி மாகாண சபைகளை முன்னெடுப்பது சட்டவிரோதமானது”

மக்கள்பிரதிநிதிகள் இன்றி மாகாண சபைகளை முன்னெடுத்து செல்வது முழுவதும் சட்டவிரோத செயலாகும் என முன்னாள் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

இதனால் மாகாண சபை முறைமை கொண்டு செல்ல வேண்டுமாயின் பழைய முறையில் அல்லது புதிய முறைமையில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை எந்தவொரு அரச நிறுவனத்தையும் மக்கள் பிரதிநிதி ஒருவர் இல்லாமல் கொண்டு செல்வது குற்றமாகும் என்பதோடு இது பொதுமக்களின் அடிப்படை உரிமை மீறும் செயல் எனவும் முன்னாள் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டார்.

Posted in Uncategorized

தமிழரின் வரலாற்றுப் பெருமை கொண்ட திருக்கோணேஸ்வரம் சூரையாடப்பட்டுக் கொண்டிருக்கின்றது  –   ஜனா

தொல்பொருள் என்னும் பெயரிலே தமிழரின் வரலாற்றுப் பெருமை கொண்ட திருக்கோணேஸ்வரம் சூரையாடப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த நாட்டிலே வரலாற்றுச் சின்னங்களைப் பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்ட தொல்பொருள் திணைக்களம் திருக்கோணேஸ்வரத்தில் மாத்திரம் தொல்பொருள் என்கின்ற போர்வையில் குடியேற்றத்திற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் ஜனா தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற திருகோணமலை திருக்கோணேஸ்வரர் ஆலய விடயம் தொடர்பிலான ஒத்துவைப்புப் பிரேரணை மீததான விவாதத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

தொல்பொருள் என்னும் பெயரிலே தமிழரின் வரலாற்றுப் பெருமை கொண்ட திருக்கோணேஸ்வரம் சூரையாடப்பட்டுக் கொண்டிருக்கின்றது. கோணேஸ்வரர் ஆலயத்தின் புகழை வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் இருந்தே பல புராணங்கள் போற்றியுள்ளன. இதற்கு சிறந்த உதாரணம் தட்சண கைலாய புராணமாகும். இலங்காபுரியை ஆண்ட இராணவனால் வழிபட்ட இவ்வாலயத்தின் பெருமையை திருஞானசம்மந்தர் பதிகம் மூலம் பாடியுள்ளார். பல்லவ, சோழர் கால கல்வெட்டுக்கள் பலவற்;றில் இதன் பெருமை எடுத்துக் கூறப்பட்டுள்ளது.

1624ம் ஆண்டு போர்த்துக்கேயர் திருகோணமலையிலே ஆட்சி செய்த காலம் இந்தக் கோயிலை உடைத்து அதன் செல்வங்களை அள்;ளிச் சென்றது மாத்திரமல்லாமல், அந்தக் கோயிலை உடைத்த கற்களைக் கொண்டுதான் சரத் வீரசேகர பாராளுமன்ற உறுப்பினர் கூறிய பிறட்ரிக் கோட்டை என்பது உருவாக்கப்பட்டது. ஆனால் அந்தப் பாராளுமன்ற உறுப்பினர் 1952லே மூன்று மதஸ்தலங்களிலே அதுவும் ஒன்று என்று கூறுகின்றார்.

ஐம்பது வருடங்களுக்கு மேலாக திருக்கோணேஸ்வரத்தைப் புனித நகராக மாற்ற வேண்டும் என்று இந்துக்கள் படாதபாடு பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். 1965ல் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி ஒரு நல்;லிணக்கத்தை இந்த நாட்டு அரசுடன் ஏற்படுத்த வேண்டும். இலங்கையில் தமிழர்களின் இனப்பிரச்சனைக்கு நிரந்தரமான தீர்வைக் காண வேண்டும் என ஆட்சி அதிகாரத்தில் பங்குகொண்டிருந்தார்கள். திருச்செல்வம் அவர்கள் உள்ளுராட்சி அமைச்சராக இருந்தார். அவர் திருகோணமலை நகரைப் புனித பூமியாக மாற்ற வேண்டும் என்ற பிரேரணை கொண்டு வந்திருந்தார். டட்லி சேனநாயக்காவும் அதற்கு அனுசரணை கொடுத்திருந்தார். ஆனால் விகாராதிபதிகளின் எதிர்ப்பைத் தாங்க முடியாமல் திருச்செல்வத்திற்கே தெரியாமல் அந்த ஆணைக்குழுவை நிராகரித்தமையால் திருச்செல்வம் அவர்கள் அமைச்சரவையை விட்டு வெளியேற வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டது.

இருந்தாலும் 2018ம் அண்டு திருகோணமலை மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தலே அரச அதிபர் அங்குள்ள நான்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்னலையிலே முடிவு எட்டப்படடது. அங்கு கடைகள் வைத்திருந்த 45 பேரும் அமைச்சர் சொல்வது போன்று அந்தக் கோயிலையோ, அப்பிரதேசத்தையோ சுற்றியிருந்தவர்கள் அல்ல. அன்று இரத்தினபுரியிலே இருந்து திருகோணமலைக்கு வந்து பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட புஞ்சிநிலமே அவர்கள் தன்னுடைய பிரதேசத்தில இருந்தும், தம்புள்ளை, குருநாகல், பொலநறுவை போன்ற பிரதேசங்களில் இருந்தும் தன்னடைய தேர்தல் அடாவடி வேலைகளுக்காகக் கொண்டு வரப்பட்டவர்கள் தான் அங்கு குடியேற்றப்பட்டார்கள், அவர்களின் வாழ்வாhரத்திற்காக அந்தக் கோயில் பிரதேசத்திலே தற்காலிகக் கடைகள் அமைத்துக் கொடுக்கப்பட்டதென்பதை இந்தச் சபை தெரிந்துகொள்ள வேண்டும்.

அந்தக் கோயில் நிருவாகம் மனச்சாட்சியுடன் நடந்து கொள்கின்றார்கள். என்னவென்றால் 2018ம் ஆண்டு மாவட்ட அபிவிருத்திக் குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கமைவாக அவர்களை அங்கு தங்க வைப்பதற்கு எவ்வித ஆட்சேபனைகளும் இல்லை என அவர்கள் சொல்லியிருக்கின்றார்கள். ஆனால், தொல்பொருள் திணைக்களம் என்பது இந்த நாட்டிலே வரலாற்றுச் சின்னங்களைப் பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்டது. ஆனால் திருகோணமலையில், கோணேஸ்வரத்தில் மாத்திரம் தொல்பொருளை பாதுகாக்க வேண்டிய திணைக்களம் அவ்விடத்தில் வேற்று மதத்தவர்களை, இனத்தவர்களை அந்தக் கோயிலையே வழிபடாதவர்ககளைக் கொண்டு வந்து தொல்பொருள் திணைக்களம் என்கின்ற போர்வையில் குடியமர்த்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் கோயில் நிருவாகத்தினரை ஆலோசனை பெறுவதற்காகக் கூப்பிடவில்லை, அறிவுறுத்தல் தருவதற்காகவே அழைத்துள்ளோம், நாங்கள் அவர்களுக்கு நிரந்தரமான கடைகள் அமைத்துக் கொடுக்கப் போகின்றோம் என ஆளுநரும், தொல்பொருள் அதிகாரியும் கூறியுள்ளார்கள். ஆனால் அந்தக் கடைகளின் வடிவங்களைப் பார்க்கும் போது அந்தக் கடைகள் கடைகளாக இல்லை, அவை குடியேற்ற வீடுகளாகவே இருக்கின்றது. எனவே கௌரவ அமைச்சர் அவர்கள் இந்த விடயத்தின் நியாயத் தன்மையைப் புரிந்துகொண்டு நியாயமாக நடந்துகொள்ள வேண்டும்.

கிழக்கு மாகாணத்திற்கென ஒரு தொல்பொருள் செயலணியை இதற்கு முன்பிருந்த ஜனாதிபதி கோட்டபாய அவர்கள் அமைத்திருந்தார். முன்னாள் இராணுவத் தளபதி கமால் குணரட்ண தலைமையில் முழுக்க முழுக்க சிங்கள அதிகாரிகளையும் பௌத்த பிக்குகளையும் கொண்ட ஒரு செயலணியாக அது அமைக்கப்பட்டது. இன்று திருகோணமலை திருக்கோணேஸ்வரத்திலே சிங்களம் மட்டும் பேசக் கூடிய பல்கலைக்கழக மாணவர்களினாலேயே அந்தப் பிரதேசத்தில் தொல்பொருள் ஆராய்ச்சி நடக்கின்றது. ஏன் இந்த நாட்டிலே தொல்பொருளுடன் தொடர்புடைய ஏனைய மதத்தவர்கள் இல்லையா?  கிழக்கு மாகாணத்திற்கென நூறு வீதம் சிங்களவர்களினால் மாத்திரம் உருவாக்கப்பட்ட செயலணியும், தொல்பொருள் சம்மந்தமாக ஆராய்ச்சி செய்யும் பல்கலைக்கழக மாணவர்களும் எதனைச் செய்ய முனைகின்றார்கள்?

கிழக்கு மாகாணத்திலே சிங்களப் புராதனச் சின்னங்கள் மாத்திரம் தான் இருக்கின்றது என்பதை உறுதிப்படுத்த முயற்சிக்கின்றார்களா? ஏனைய மதத்தவர்களும் அந்தச் செயலணிக்குள் உள்ளடக்கட வேண்டும். அவ்வாறில்லாவிட்டால் அந்தச் செயலணி கலைக்கப்பட வேண்டும். அந்தச் செயலணிக்குள் ஏனைய மதத்தவர்களோ, ஆராய்ச்சி செய்யும் பல்கலைக்கழக மாணவர் குழாமிற்குள் ஏனைய மத மாணவர்களோ உள்வாங்கப்பட்டால் அங்கிருப்பது எந்த மதத்தைச் சார்ந்த, எந்த மதத்தினர் வழிபட்ட புராதனப் பொருட்கள் என்பது வெளிப்பட்டுவிடும் என்ற பயமா?

முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகரவிற்கு ஒன்றைக் கூறிக் கொள்ள விரும்புகின்றேன். இந்த நாட்டிலே நாங்கள் நல்லிணக்கத்தை விரும்புகின்றோம். நீங்கள் கூறுவது போன்று நீங்கள் தமிழருக்கு இரத்தம் கொடுத்திருக்கலாம், நீங்கள் குறிப்பிட்ட தமிழர்களுடன் சேர்ந்து வாழ்ந்திருக்கலாம். ஆனால், கடந்த அமைச்சரவையிலே இருந்த இனவாதிகளுள் முக்கியமான இனவாதி நீங்களாகவே இருப்பீர்கள்.

இந்த நாட்டை அழித்த சில இனவாதிகள் இருந்திருக்;கின்றார்கள்;. குறிப்பாக கே.எம்.பி.ராஜரெட்ண, ஆர்ஜி.சேனநாயக்க, சிறிலால் மத்தியு போன்ற மூன்று மிகவும் துவேசமான இனவாதிகள் இருந்திருக்கின்றார்கள். அந்த மூன்று இனவாதிகளையும் ஒன்று திரட்டி ஒரே ஆளாக நீங்கள் இருக்கின்றீர்கள். ஏனெனில் நீங்கள் தற்போது பேசும் போது சுற்றிவர இருந்தவர்களுக்கு முன்னுரிமை, நாங்கள் நல்லிணக்கத்துடன் வாழ வேண்டும் என்றும் கூறுகின்றீர்கள். ஆனால், இந்த நாட்டிலே கடந்த காலங்களிலே நடைபெற்றவைகளுக்கு நீங்களும் முக்கிய காரணமாக இருந்திருக்கின்றீர்கள்.

எனவே, தொடர்புடைய அமைச்சரிடம் நான் கேட்டுக் கொள்வது என்னவென்றால் ஏழாம் நூற்றாண்டிலே பாடல் பெற்ற இந்தத் திருக்கோணேஸ்வரம் முன்னூற்று நாற்பது ஏக்கர் பரப்பளவைக் கொண்டதை 1971ம் ஆண்டு தொல்பொருள் திணைக்களத்திற்கு வழங்கப்பட்டிருந்தாலும், பதினெட்டு ஏக்கருக்கு உட்பட்ட காணி கோயிலுக்குச் சொந்தமானதாக இருக்கின்றது. அந்தக் கோயில் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும். பாடல் பெற்ற தளம் இராஜகோபுரம் இல்லாமல் இருக்கின்றது. அதற்கான இராஜகோபுரம் அமைக்க வேண்டும்.

வெளிநாடுகளில் இரந்து இங்கு சுற்றுலாவிற்கு வருபவர்கள் இந்த நாடடைப் பற்றிப் படித்து விட்டுத்தான் வருகின்றார்கள். இந்த நாட்டிலே சோழர் பல்லவ காலத்து ஆட்சியைப் பற்றி அறிந்து விட்டுத்தான் வருகின்றார்கள். அவர்கள் திருக்கோணேஸ்வரத்திற்குச் செல்லும் போது வழியிலே கடைகளை வைத்து இந்து சமயத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் வழிபடுவதற்கும், ஆராய்வதற்கும், சுற்றலாப் பயணிகள் மேலும், மேலும் வருவதற்கும் ஆவனசெய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.

இலங்கைக்கு அமெரிக்கா தொடர்ந்தும் உதவும் என்கிறார் விக்டோரியா நுலாண்ட்

இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு அமெரிக்கா தொடர்ந்து ஆதரவளிக்கும் என அமெரிக்காவின் துணைச் செயலாளர் விக்டோரியா நுலாண்ட் உறுதியளித்துள்ளார்.

தற்போது அமெரிக்கா சென்றுள்ள இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியை சந்தித்தபோதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கைபொருளாதார நெருக்கடியில் இருந்து மீள அமெரிக்கா தொடர்ந்து ஆதரவளிக்கும் என்றும் சுதந்திரமான மற்றும் வளமான பிராந்தியத்திற்கு ஆதரவளிக்க ஒன்றிணைந்து செயற்படுவோம் என்றும் அமெரிக்காவின் துணைச் செயலாளர் விக்டோரியா நுலாண்ட் ருவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

Posted in Uncategorized

சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கைக்கு முன்னர் அமைச்சரவைக்கு அறிவிக்கப்படும்!

சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்படிக்கைக்கு வருவதற்கு முன்னர் உரிய உடன்படிக்கை தொடர்பில் அமைச்சரவைக்கு அறிவிக்கப்படும் என ஜனாதிபதி தமக்கு அறிவித்ததாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (22) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

ஊழியர் மட்ட உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாகவும் அதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபையினால் அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும் எனவும் அதற்கு முன்னர் கடனாளர்களுடனான கலந்துரையாடலில் அறிக்கை உள்ளடக்கப்பட வேண்டுமெனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

எல்லா தகவல்களும் கிடைத்த பிறகு அமைச்சரவைக்கு விளக்கம் அளிக்கப்படும். மேலும், எதிர்க்கட்சிகள் மற்றும் ஆர்வமுள்ள கட்சிகள் மாநாட்டில் பங்கேற்கலாம் என்று ஜனாதிபதி தன்னிடம் கூறியதாகவும் சபாநாயகர் தெரிவித்தார்.

ரவிகரன் மற்றும் மயூரன் விடுதலை செய்யப்படாவிட்டால் வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் பாரிய ஆர்ப்பாட்டம் – யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்

குருந்தூர்மலை பகுதியில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டமைக்கு நீதி கோரியும், பௌத்தமயமாக்கலுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் இன்றைய தினம் ஆர்ப்பாட்ட பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண பல்கலைக்கழக பிரதான நுழைவாயிலுக்கு முன்பாக இன்று நண்பகல் 12 மணியளவில் ஒன்றுகூடிய பல்கலைக்கழக மாணவர்கள் அங்கிருந்து கோஷங்களை எழுப்பியவாறு பேரணியாக இராமநாதன் வீதி ஊடாக பரமேஸ்வராச் சந்தியை அடைந்து அங்கிருந்து சிறிது நேரம் வீதியை முடக்கி போராட்டத்தில் ஈடுபட்டதுடன் பின்னர் பேரணியாக பல்கலைக்கழகத்தை வந்தடைந்தனர்.

ரவிகரன் மற்றும் மயூரனை விடுதலை செய், எமது காணி எமக்கு வேண்டும், எமது மலை எமக்கு வேண்டும், குருந்தூர் மலையை ஆக்கிரமிக்காதே போன்ற கோஷங்கள் பல்கலைக்கழக மாணவர்களால் எழுப்பப்பட்டது.ரவிகரன் மற்றும் மயூரன் விடுதலை செய்யப்படாவிட்டால் வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் பாரிய ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படும் என யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் எச்சரிக்கை விடுத்தனர்.

முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு, குருந்தூர்மலையைச் சூழவுள்ள தமிழ் மக்களுக்குரிய 632ஏக்கர் பூர்வீக காணிகளை தொல்லியல் திணைக்களம் அபகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றமை மற்றும், நீதிமன்ற கட்டளையைப் புறந்தள்ளி பௌத்த கட்டுமானம் மேற்கொள்ளப்படுகின்றமை என்பவற்றைக் கண்டித்து நேற்றையதினம் புதன்கிழமை குருந்தூர்மலையில் அப்பகுதி மக்கள், அரசியல் கட்சி பிரதிநிதிகள், சிவில்சமூகப் பிரதிநிதிகள், பல்கலைக்கழக மாணவர்கள் பங்கேற்புடன் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது

Posted in Uncategorized