திருமலை எண்ணெய் குதங்கள்; கடும் எதிர்ப்புக்கு மத்தியில் ஒப்பந்தம் நேற்று கைச்சாத்து

திருமலை எண்ணெய் குதங்கள்: திருமலை எண்ணெய் குதங்களை இந்தியாவுக்கு வழங்குவதற்கான ஒப்பந்தம் நேற்று மாலை கைச்சாத்திடப்பட்டது.

திறைசேரி செயலாளர், காணி ஆணையாளர் நாயகம், இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம், லங்கா ஐ.ஓ.சி. நிறுவனம், மற்றும் ட்ரிங்கோ பெற்றோலியம் ரேமினல் லிமிட்டெட் ஆகியவற்றின் பிரதிநிதிகள் ஆகியோர் ஒப்பந்தத்தில் கைச் சாத்திட்டுள்ளனர்.

திருகோணமலை எண்ணெய் குதங்களை இந்திய நிறுவனத்துக்கு வழங்குவதற்கு கடும் எதிர்ப்பை தொழிற்சங்கங்கள் வெளியிட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

திருகோணமலை பெரியகுளம் பகுதியில் விகாரை அமைப்பதற்கு முயற்சி- மக்கள் ஆர்ப்பாட்டம்!

திருகோணமலை பெரியகுளம் பகுதியில் விகாரை ஒன்றினை அமைப்பதற்கு எடுக்கப்பட்ட முயற்சிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து குறித்த பகுதி மக்களால் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

திருகோணமலை பெரியகுளம் பகுதியில் விகாரை ஒன்றினை அமைப்பதற்காக அப்பகுதியில் அமைந்துள்ள கடைகளை அகற்றித்தருமாறு உப்புவெளி காவல் நிலையத்தில் பௌத்த துறவி ஒருவரால் முறைப்பாடு தெரிவிக்கப்பட்டதை அடுத்து குறித்த பகுதிக்கு வருகைதந்திருந்த காவல் துறையினர் அக்கடைகளை அகற்றுமாறு அறிவுருத்தியிருந்த நிலையில் ஒன்று திரண்ட அப்பகுதி வாசிகளால் குறித்த போராட்டமானது முன்னெடுக்கப்பட்டது.குறித்த போராட்டத்தில் பொதுமக்களோடு இணைந்து பாராளுமன்ற உருப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.

நாடு இக்கட்டான சூழ்நிலையில் காணப்படும் இக்காலகட்டத்தில் அரசு இவ்வாறான திட்டமிட்ட குடியேற்றங்களை நிறுவுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருவதை அவதானிக்கக்கூடியதாக இருப்பதுடன். தமிழ்மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் பரவலான பெரும்பான்மையினக் குடியேற்றங்களை நிறுவுவதற்காக அரசால் முன்னெடுக்கபடும் இவ்வாறான செயற்பாடுகளை தாம் வன்மையாக கண்டிப்பதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்ததுடன் பாராளுமன்ற உருப்பினர்கள் கருத்து தெரிவித்தனர்.

Posted in Uncategorized

இலங்கையுடனான நிதி வர்த்தக நடவடிக்கைகள் குறித்து இந்திய வங்கிகள் மிகுந்த எச்சரிக்கை

இலங்கையுடனான நிதி வர்த்தக நடவடிக்கைகள் குறித்து இந்திய வங்கிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் காணப்படுவதாக இந்தியாவின் எகனமிக் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கை அந்நிய செலாவணிநெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில் இந்தியாவின் முக்கிய வங்கிகள் இலங்கையுடன் வர்த்தகத்தில் ஈடுபடுவது குறித்து எச்சரிக்கையுடன் செயற்படுகின்றனர் மிகவும் அவதானமாக தங்கள் நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றன என இந்திய ஊடகம் தெரிவித்துள்ளது.

கடன்பத்திரத்தை ஏற்றுக்கொள்வதில் வங்கிகள் மிகவும் எச்சரிக்கையுடன் செயற்படுகின்றன என தெரிவித்துள்ள இந்திய ஊடகம் ஏனைய வங்கிகள் ஏற்றுமதியாளர்களின் நிலை தொகை கடன்காலம் மற்றும் கடன்பத்திரங்களை வழங்கும் வங்கிகளின்நிலை ஆகியவற்றை அடிப்படையாகவைத்து கடன்பத்திரத்தை வழங்குகின்றன எனவும் தெரிவித்துள்ளது.

இலங்கையால் தற்போது உருவாகியுள்ள நெருக்கடிக்கு தீர்வை காணமுடியும் என வங்கியாளர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர். டிசம்பர் மாத இறுதியில் இலங்கையின் அந்நிய செலாவணி ஒரு மாத இறக்குமதிக்கு போதுமானதாக காணப்பட்டது என இந்திய ஊடகம் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கான ஏற்றுமதியாளர்களின் ஆவணங்கள் மீது நாங்கள் முழுமையான தடையை விதிக்கவில்லை கடன்பத்திரத்தை வழங்கும் வங்கிகளின் நிலைமையை அடிப்படையாக வைத்து இதனை முன்னெடுக்கின்றோம் என ஸ்டேட் பாங் ஓவ் இந்தியாவின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய வங்கிகளில் எச்டிஎவ்சி வங்கி இலங்கைக்கான ஏற்றுமதி கடன்பத்திரங்களை கையாள்வதில் அவதானமாக செயற்படுகின்றது. இலங்கைக்கான பல ஏற்றுமதிகளிற்கு நிதி வழங்கிய அக்சிஸ் மிகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில்இந்த விவகாரத்தை கையாள்கின்றது.

இலங்கை வங்கிகளில் எந்த தவறும் இல்லை ஆனால் கொடுப்பனவுகள் தாமதமாகும் போது அந்த நாட்டின் அந்நிய செலாவணி சந்தையில் போதிய அளவு டொலர்கள் கையிருப்பில் இருக்காது என வங்கியாளர் ஒருவர்தெரிவித்துள்ளார். 2020இல் இலங்கைக்கான இந்தியாவின் மொத்த ஏற்றுமதி 3.2 பில்லியனாடொலராக காணப்பட்டது.

வடகிழக்கு கட்சிகளின் பயணத்துக்கு தடையாக இருக்க போவதில்லை”: மனோ, திகா, இராதா கூட்டறிக்கை

“இந்திய பிரதமருக்கு, இலங்கையின் ஒட்டுமொத்த தமிழ் பேசும் கட்சிகளின் விண்ணப்ப கடிதம்” என்று ஆரம்பிக்கப்பட்ட கூட்டு செயற்பாட்டில், சமீபத்தைய இந்திய வம்சாவளி மலையக தமிழரின் அபிலாசைகளையும் உள்ளடக்குவதில் சிக்கலை எதிர்கொண்டதாலும், எமது பங்களிப்பு வடகிழக்கு தமிழ் கட்சிகளின் சுதந்திர செயற்பாட்டுக்கு பாதகமாக இருப்பதை உணர்ந்ததாலும், இந்த செயற்பாட்டுக்கு வெளியில் நின்று அவசியமான ஒத்துழைப்புகளை வழங்குவோம்.

அதேவேளை, பொது இணக்கப்பாட்டின் மூலம் பொது ஆவணம் தயாரிக்க முடியாமையை கருத்தில் கொண்டு மலையக தமிழரின் அபிலாஷைகளை முன்னிறுத்தி பாரத பிரதமர், இலங்கை ஜனாதிபதி, தமிழக முதல்வர் உள்ளிட்ட அனைத்து உள்நாட்டு, வெளிநாட்டு அரசியல் தலைவர்களுக்கும் தனித்தனியாக, தமிழ் முற்போக்கு கூட்டணியின் ஏற்பாட்டில் ஆவண கடிதம் எழுதப்படும்.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் இம்முடிவுகளை கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், பிரதி தலைவர்கள் பழனி திகாம்பரம், வே. இராதாகிருஷ்ணன் ஆகியோர் விடுத்துள்ள கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

இந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

“இலங்கை அரசியலமைப்பில் ஏற்கனவே உள்ள 13வது (13A) திருத்த சட்டத்தை முற்று முழுதாக நடைமுறைப்படுத்தி, அர்த்தமுள்ள அதிகார பகிர்வை உறுதி செய்து, மாகாணசபை தேர்தலையும் விரைந்து நடாத்த இலங்கை அரசை வலியுறுத்த, இந்தியாவை ஒருமித்து தமிழ் பேசும் மக்களின் கட்சிகள் கோருதல்” என்ற அடிப்படையிலான அழைப்பின் பேரிலேயே ஏற்பாட்டாளர்களால் இந்த கூட்டு செயற்பாடு ஆரம்பிக்கப்பட்டது.

தமிழீழ விடுதலை இயக்கம், தமிழீழ மக்கள் விடுதலை கழகம், தமிழ் மக்கள் கூட்டணி, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழ் தேசிய கட்சி ஆகிய வட கிழக்கு தமிழ் கட்சிகளுடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் முற்போக்கு கூட்டணி ஆகிய கட்சிகளும் நவம்பர் இரண்டாம் திகதி நடைபெற்ற முதல் கலந்துரையாடலில் கலந்துக்கொண்டன.

இலங்கை அரசமைப்பில் இடம் பெற்றுள்ள ஒரே அதிகார பரவலாக்கல் சட்டமான 13ம் திருத்தம் என்பதை இறுதி தீர்வாக கருதி இந்த பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்படவில்லை.

ஆனால் இலங்கை அரசாங்கம், இந்த குறைந்தபட்ச சட்டத்தைக்கூட முழுமையாக அமுல் செய்யாமல் இழுத்தடிப்பதுடன், இச்சட்டமூலம் மாகாணசபைகளுக்கு வழங்கிய அதிகாரங்களையும்கூட வாபஸ் பெறுகிறது என்ற உண்மை உலகிற்கு அதிகாரபூர்வமாக ஒட்டுமொத்த தமிழ் பேசும் கட்சிகளால் அறிவிக்கப்பட வேண்டும் என்ற நல்ல நோக்கமே எமது பொது நோக்காக இருந்தது.

இந்த செயற்பாட்டில், இலங்கை தமிழரசு கட்சியும் உள்வாங்கப்பட வேண்டும் என்பதை ஆரம்பம் முதல் வலியுறுத்தி கூட்டமைப்பின் தலைவரை நேரடியாக, தமுகூ மனோ கணேசனும், ஸ்ரீமுகா தலைவர் ரவுப் ஹக்கீமும் சந்தித்து அழைப்பு விடுத்ததையும், தமிழரசு கட்சியை தவிர்த்து விட்டு விண்ணப்ப கடிதத்தில் கையெழுத்திடும் யோசனையை, தமிழ் முற்போக்கு கூட்டணியாகிய நாம் நிராகரித்தோம் என்பதையும் ஏற்பாட்டாளர்கள் நன்கறிவார்கள்.

ஆரம்பத்தில், பாரத பிரதமருக்கான கடித வரைபு, அனைத்து கட்சிகளும் ஏற்றுக்கொள்ளும், பொது குறைந்தபட்ச நிலைப்பாடுகளை கொண்ட விண்ணப்ப கடிதமாக சுமார் ஒன்றரை பக்கத்தில் வடிவமைக்கப்பட்டது.

எனினும் தொடர்சியாக நடைபெற்ற கலந்துரையாடல்களின் போது, தமிழ் தேசிய அரசியலின் சமகால வரலாறு முழுமையாக அதில் எழுதப்பட்டு, எட்டு பக்கங்களை கொண்ட நீண்ட ஆவணக்கடித வரைபாக மாற்றப்பட்டது.

இதன் பின்னுள்ள நியாயப்பாட்டை எம்மால் புரிந்துக்கொள்ள முடிகிறது.
ஆனால் ஒட்டு மொத்த தமிழ் பேசும் மக்கள் சார்பான கடிதம் என்பதால், இதே நியாயப்பாட்டின் அடிப்படையில், இக்கடிதத்தில் மலையக தமிழ் மக்களின் அபிலாஷகளும் உள்ளடக்கப்பட வேண்டிய இயல்பான தேவைப்பாடு எழுந்தது.

மேலதிகமாக இந்த ஆவணக்கடித வரைபு, இறுதி வடிவம் பெறமுன்னரே ஊடகங்களின் வெளிப்படுத்தப்பட்டு வாதப்பிரதிவாதங்களை தமிழ் பேசும் அரசியல் சமூக பரப்புகளில் ஏற்படுத்தியது.

இந்நிலையிலேயே, கடந்த வருடத்தின் இறுதி நாளான்று, தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் அவர்களது கொழும்பு இல்லத்தில், தமுகூ தலைவர் மனோ கணேசன் உட்பட கட்சி தலைவர்கள், பிரதிநிதிகள் கூடி ஆராய்ந்து எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் மறுநாள் இவ்வருடத்தின் முதல் நாள், கூட்டமைப்பின் பேச்சாளர் எம். ஏ. சுமந்திரன் எம்பியின் கொழும்பு இல்லத்தில் கூடி புதிய கடித வரைபு தயாரிக்கப்பட்டது.

ஆனால், இந்த ஆவணக்கடித வரைபு, உடனடியாகவே இலங்கை தமிழரசு கட்சியின் தலைமை சார்பாக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனால் கடும் விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட்டு நிராகரிக்கப்பட்டதை நாம் அறிந்தோம்.

ஆகவே, பொது ஆவணம் தயாரிக்க முடியாமையை கருத்தில் கொண்டு சமீபத்தைய இந்திய வம்சாவளி மலையக தமிழரின் அபிலாஷைகளை முன்னிறுத்தி பாரத பிரதமர், இலங்கை ஜனாதிபதி, தமிழக முதல்வர் உள்ளிட்ட அனைத்து உள்நாட்டு, வெளிநாட்டு அரசியல் தலைவர்களுக்கும் ஆவணக்கடிதம் எழுத தமிழ் முற்போக்கு கூட்டணி முடிவு செய்துள்ளது.

இப்பின்னணிகளிலேயே, தேவையற்ற முரண்பாடுகளை தவிர்க்கும் நோக்கில், “வடகிழக்கு தமிழ் கட்சிகளின் இந்த செயற்பாட்டுக்கு வெளியில் நின்று ஒத்துழைப்புகளை வழங்குவோம்” என்ற முடிவை நாம் எடுத்துள்ளோம். வடகிழக்கு உடன்பிறப்புகளுக்கு, வரலாறு முழுக்கவும் இதை நாம் செய்துள்ளோம்.

‘இந்திய பிரதமருக்கான ஆவணத்தில் பல அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கையொப்பம்’-செல்வம் அடைக்கலநாதன்

இந்திய பிரதமருக்கு அனுப்பி வைக்கப்படவுள்ள ஆவணத்தில் பல கட்சிகளின் தலைவர்கள் கையொப்பம் இட்டுள்ளதாக தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழ் தேசியக் கட்சியின் தலைவர் என்.சிறிகாந்தா, தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தனுடன் தாமும் ஆவணத்தில் கையொப்பமிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் மற்றும் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் ஆகியோர் வௌியில் இருந்து இந்த முயற்சிக்கு ஆதரவு வழங்குவதாக கூறியதாகவும் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா நாளைய தினம் (07) ஆவணத்தில் கையொப்பமிடவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

மோடிக்கான ஆவணத்தில் தமிழ்த் தலைவர்கள் ஒப்பம்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் ஒப்படைப்பதற்காகத் தமிழ்பேசும் தரப்புக்களின் பொது நிலைப்பாட்டைப் பிரதிபலிக்கும் ஆவணத்தில் வடக்கு, கிழக்கு தமிழர்களின் கட்சிகள் இன்று வியாழக்கிழமை ஒப்பமிட்டன.

கடந்த டிசம்பர் 21ஆம் திகதி இறுதி செய்யப்பட்ட ஆவணத்தில் சம்பந்தன் உட்படதலைவர்களும் இன்று ஒப்பமிட்டனர். அது விரைவில் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் ஊடாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பிவைக்கப்பட்டவுள்ளது.

அந்த ஆவணத்தில் இரா.சம்பந்தன் (தலைவர் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு), சி.வி.விக்னேஸ்வரன் (தலைவர் – தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி), சுரேஷ் பிரேமச்சந்திரன் (தலைவர் – ஈ.பி.ஆர்.எல்.எப்.), என்.ஸ்ரீகாந்தா (தலைவர் – தமிழ்த் தேசியக் கட்சி), செல்வம் அடைக்கலநாதன் (தலைவர் – ரெலோ), த.சித்தார்த்தன் (தலைவர் – புளொட்) ஆகியோர் இன்று ஒப்பமிட்டனர்.

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாத் மற்றும் புளொட் அமைப்பின் தலைவர் த.சித்தார்த்தன் ஆகியோர் நேரில் சென்று சம்பந்தனிடம் கையொப்பம் பெற்றதைத் தொடர்ந்தே ஏனைய தலைவர்கள் கையொப்பமிட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து இன்றிரவு கொழும்பு வரும் மாவை சேனாதிராஜா (தலைவர் – இலங்கைத் தமிழரசுக் கட்சி) நாளை காலை அந்த ஆவணத்தில் ஒப்பமிடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான பேச்சுக்கள் பல்வேறு கட்டடங்களாக நடைபெற்றுவந்த நிலையில், இறுதியாக தயாரிக்கப்பட்ட ஆவணம் கடந்த டிசம்பர் 21ஆம் திகதி கொழும்பிலுள்ள குளோபல் டவர் ஹோட்டலில் நடைபெற்ற தமிழர் தரப்புக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் இறுதி செய்யப்பட்ட கடிதமே இப்போது தமிழ்க் கட்சிகளின் தலைவர்களால் ஒப்பமிடப்பட்டு இந்தியப் பிரதமருக்கு அனுப்பப்படுகின்றது.

தமிழ் தேசிய பங்காளி கட்சியான ரெலோவின் முயற்சியினால் அனைத்து தமிழ் கட்சிகளையும் ஒன்றிணைந்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ் மக்களின் பிரச்சினைகளையும் கோரிக்கைளையும் முன்வைத்து ஆவணமொன்றை அனுப்புவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

இந்தியத் தூதுவரைச் சந்தித்து இந்தக் கடிதத்தை அவர் மூலம் இந்தியப் பிரதமருக்கு அனுப்பிவைப்பர் என ஏற்பாட்டாளர்கள் ஆகிய தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் சார்பில் இச்செயற்பாட்டின் ஒருங்கிணைப்பாளர் குருசுவாமி சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

ஆவணம் தொடர்பில் நாளை இறுதி முடிவு

இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பவுள்ள பொது ஆவணம் தொடர்பில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைமைக்குழு, நாளை அரசியல் குழுவை கூட்டி இது தொடர்பில் இறுதி முடிவை எடுப்பது என தீர்மானித்தது.

13ஆம் திருத்தம் என அறியப்படும், இலங்கை அரசியலமைப்பில் இடம் பெற்றுள்ள ஒரேயொரு அதிகார பரவலாக்கல் சட்டத்தை முழுமையாக அமுலாக்க உரிய அறிவுறுத்தல்களை, இலங்கை-இந்திய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிரதான தரப்பு என்ற முறையில், இலங்கை அரசாங்கத்துக்கு கொடுங்கள் என்ற கோரிக்கையை முன்வைத்து இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழ் பேசும் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் சார்பாக எழுதப்பட உள்ள பொது ஆவணக்கடிதம் தொடர்பிலேயே குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றதாக மனோ எம்.பியின் ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பொது ஆவணக்கடிதம் தொடர்பாக, நவம்பர் 2ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற “திண்ணை கலந்துரையாடல்” முதல் கடந்த ஒரு மாதமாக நடைபெற்ற கலந்துரையாடல்களில் முன்வைக்கப்பட்ட பல்வேறு வரைவுகளின் உள்ளடக்கங்கள் தொடர்பாகவும், அவை தொடர்பில் முன்வைக்கப்பட்ட வாதபிரதிவாதங்கள் தொடர்பாகவும், இன்று மாலை மெய்நிகர் கலந்துரையாடல் மூலம் ஆலோசிக்கப்பட்டதாக தெரியவருகிறது.

இன்றைய மெய்நிகர் கலந்துரையாடலில் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், பிரதி தலைவர்கள் பழனி திகாம்பரம், வே. இராத கிருஷ்ணன் ஆகியோர் உள்ளிட்ட தலைமைக்குழு
உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

கொரோனா அச்சம் காரணமாக வல்வை பட்டத்திருவிழா இடைநிறுத்தம்!

வல்வெட்டித்துறை பட்டத்திருவிழா கொரோனா காரணமாக இடைநிறுத்தப்படுவதாக, ஏற்பாட்டுக்குழு அறிவித்துள்ளது.

வல்வெட்டித்துறை உதயசூரியன் கடற்கரையில் வருடாந்திரம் தைப்பொங்கல் தினத்தன்று மாபெரும் பட்டத்திருவிழா இடம்பெறுவது வழமையாகும்.

அந்த வகையில் இம்முறையில் பட்டத்திருவிழாவை நடாத்த ஏற்பாட்டாளர்கள் தீர்மானித்திருந்தனர்.

இந்நிலையில், கொரோனா அச்சுறுத்தல் முழுமையாக நீங்காத நிலையில், பட்டத்திருவிழாவை நடாத்தும் போது, கொரோனா தொற்று அபாயம் அதிகரிக்கும் என பிரதேச மக்கள் அச்சம் தெரிவித்தமையால், பட்டத்திருவிழாவை இடை நிறுத்துவதாக ஏற்பாட்டுக்குழு அறிவித்துள்ளது.

அதேவேளை இம்முறை பட்டத்திருவிழாவிற்கு, விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தனது முழுமையான ஆதரவை தெரிவித்திருந்தமையும், அதனால், பல்வேறு தரப்பினரும் ஏற்பாட்டு குழுவிற்கு தமது கண்டனங்களை தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

பரந்த கூட்டணி தேவைப்படும் சந்தர்ப்பத்தில் இருப்பவர்களை ஒதுக்கக்கூடாது: விமல் வீரவன்ச தெரிவிப்பு

பரந்த கூட்டணியொன்று தேவைப்படுகின்ற சந்தர்ப்பத்தில், இருப்பவர்களை ஒதுக்கக்கூடாது என அமைச்சர் விமல் வீரவன்ச இன்று மாலபேயில் தெரிவித்தார்.

மாலபே ஆண்கள் கல்லூரியின் தொழில்நுட்ப கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வில் அமைச்சர் விமல் வீரவன்ச இன்று கலந்துகொண்டார்.

இந்நிகழ்வில் அமைச்சர் தினேஷ் குணவர்தன, ஜகத் குமார மற்றும் பிரதீப் உதுகொட ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

நிகழ்வு நிறைவு பெற்றதன் பின்னர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டமை தொடர்பில் வினவுவதற்கு ஊடகவியலாளர்கள் முயன்றனர்.

இதன்போது ஊடகவியலாளர்களுக்கு பதிலளித்த விமல் வீரவன்ச, முடிந்தால் எதிர்க்கட்சியில் உள்ளவர்களையும் இணைத்துக் கொண்டு தேசிய இணக்கப்பாட்டுடன் நாடு எதிர்நோக்கியுள்ள நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு பரந்த கூட்டணியொன்றை ஏற்படுத்திக்கொள்ள வேண்டிய தருணமே இதுவென குறிப்பிட்டார்.

அவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில், இருப்பவர்களையும் அகற்றிவிடக்கூடாது என சுட்டிக்காட்டினார்.

Posted in Uncategorized

சர்வதேச நாணய நிதியத்திடம் இலங்கை நிதியுதவி கோராது! அமைச்சரவையில் எதிர்ப்பு

சர்வதேச நாணய நிதியத்திடம் நிதியுதவி கோருவதற்கான அமைச்சரவைக் கூட்டம் இணக்கமின்றி முடிந்தது. இதனால், சர்வதேச நாணய நிதியத்திடம் இலங்கை நிதியுதவி கோராது என்று தெரியவருகின்றது.

நேற்று முன்தினம் இரவு நடந்த அமைச் சரவை கூட்டத்தில் சர் வதேச நாணய நிதி யத்திடம் நிதி உதவி கோருவதற்கு பெரும்பாலான உறுப்பினர்கள் அனுமதி அளிக்கவில்லை என்று தெரிய வருகின்றது.

நிதியுதவிக்காக சர்வதேச நாணய நிதியம் முன்வைக்கும் நிபந்தனை களை அவர்கள் ஏற்கத் தயாராக இல்லா மையே இதற்குக் காரணம் என்று தெரிய வருகின்றது. அரசாங்கம் கோரினால் இலங்கைக்கு நிதி அளிப்பது தொடர்பில் ஆராயப்படும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான பணித் தலைவர் மசா ஹிரோ நோசாகி கூறியிருந்தார்.

இந்நிலை யில், அது தொடர்பில் ஆராய்வதற்காக கூடிய அமைச்சரவை இணக்கமின்றி நிறை வடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக் கது.