மைத்திரிக்கு எதிரான வழக்கு 10 வாரங்களுக்கு ஒத்திவைப்பு!

ஈஸ்டர் தாக்குதலை தடுக்கத் தவறியதாக தெரிவித்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான விசாரணைகளை 10 வாரங்களுக்கு ஒத்திவைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.

கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் தனக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள தனிப்பட்ட முறைப்பாடு தொடர்பான விசாரணையை இடைநிறுத்த உத்தரவிடுமாறு கோரி மைத்திரிபால சிறிசேனவினால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள இடைநகர்த்தல் மனுவை அடிப்படையாகக் கொண்டே நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

சோபித ராஜகருணா மற்றும் தம்மிக்க கணேபொல ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

வடக்கிற்கும் தெற்கிற்கும் உறவு பாலத்தை மேம்படுத்தும் முகமாக யாழில் இருந்து 100 உள்ளூராட்சி உறுப்பினர்கள் தென்பகுதிக்கு விஐயம்

வடக்கிற்கும் தெற்கிற்கும் இடையிலான உறவு பாலத்தை மேம்படுத்தும் முகமாக யாழ்ப்பாணத்திலிருந்து 100 உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் தென்பகுதிக்கு விஜயம் செய்யவுள்ளதாக கொழும்பு மாநகர சபை முதல்வர் அலுவலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே கொழும்பு மாநகர சபை உறுப்பினர்கள் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டதை போல யாழ்ப்பாணத்தில் இருந்து உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் தென்பகுதிக்கு அழைத்து செல்லப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எதிர்வரும் நவம்பர் மாத முற்பகுதியில், யாழ்ப்பாண மாநகர சபை உடுவில் பிரதேச சபை மானிப்பாய் பிரதேச சபையைச் சேர்ந்த 100 உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் கொழும்புக்கு அழைத்துவரப்பட்டு கொழும்பில் முக்கிய இடங்களான ஜனாதிபதி செயலகம், தாமரை கோபுரம், தாமரை தடாகம் நாடாளுமன்றம் மற்றும் ஏனைய கொழும்பின் முக்கிய இடங்களுக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளதோடு கொழும்பு மாநகர சபை உறுப்பினர்களுடன் சிநேகபூர்வமான கிரிக்கெட் சுற்றுப் போட்டி மற்றும் வடக்கு தெற்கிற்கான உறவுபாலத்தினை மேம்படுத்துவதற்காக வேலை திட்டம் கொழும்பு மாநகர முதல்வரால் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ரணிலை போன்று பொருளாதார யதார்த்தத்தை நன்கு புரிந்துகொண்ட ஒரு அரசியல்வாதியை பார்க்க முடியாது – எரிக்சொல்ஹெய்ம்

இலங்கை ஜனாதிபதியை போல பொருளாதார யதார்த்தத்தை நன்கு புரிந்துகொண்ட ஒரு அரசியல்வாதியை பார்க்க முடியாது என நோர்வேயின் இலங்கைக்கான முன்னாள் சமானதான தூதுவர் எரிக்சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

இலங்கையை நெருக்கடியிலிருந்து மீட்பதற்கான தலைமைத்துவத்தை ரணில் விக்கிரமசிங்க வழங்குவார்.இலங்கையில் பொருளாதார நிலைமை மிக மோசமாக உள்ளது என குறிப்பிட்டுள்ள நோர்வேயின் இலங்கைக்கான முன்னாள் சமாதான தூதுவர் ஆனால் இலங்கை மீண்டும் இயங்கத்தொடங்கியுள்ளது பொருளாதார நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பமாகியுள்ளன எனவும் தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் இந்திய நிறுவனங்கள் மீள்புதுப்பிக்கத்தக்க வலுசக்தி துறைகள் எலெக்ரிக் போக்குவரத்து போன்றவற்றில் முதலீடு செய்வதில் இந்திய நிறுவனங்களிற்கு முக்கிய பங்குள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.அதானி ஏற்கனவே முக்கியமான காற்றாலை மின் உற்பத்தி குறித்த முதலீடுகளை அறிவித்துவிட்டார் எனவும் எரிக்சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.ஒக்டோபர் 12 ம் திகதி இலங்கை ஜனாதிபதியுடனான தனது சந்திப்பை சிறந்தது என தெரிவித்துள்ள எரிக்சொல்ஹெய்ம் பசுமை பொருளாதார மீட்சி மற்றும் காலநிலை தலைமைத்துவம் தொடர்பில் ரணில் விக்கிரமசிங்கவிற்கு சிறந்த தொலைநோக்கு பார்வை உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

இலங்கையை நெருக்கடியிலிருந்து மீட்பதற்கான தலைமைத்துவத்தை ரணில் விக்கிரமசிங்க வழங்குவார் ஆனால் அவரது பணி மிகவும் கடினமானது அதற்காக அவரை எவரும் பாராட்டப்போவதில்லை ஏனென்றால் நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான கடுமையான நடவடிக்கைகளே ஒரேவழி எனவும் எரிக்சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.எதிர்காலத்தில் அதிக வரிகள் தேவையற்ற பொதுச்செலவீன குறைப்பு போன்றவை காணப்படலாம், குறுகிய காலத்தில் வலிகள் காணப்படும்,ஆனால் நீண்ட கால அடிப்படையில் இலங்கைக்கான வாய்ப்புகள் மிகவும் சாதகமானவையாக உள்ளன என இலங்கையின் சமாதான தூதுவராக பணியாற்றிய எரிக்சொல்ஹெய்ம் ஐஎஎனஎஸ ற்க்கு தெரிவித்துள்ளார்.

இலங்கை எதிர்கொண்டுள்ள நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு பசுமை அபிவிருத்தி மிகவும் முக்கியமான விடயம் என குறிப்பிட்டுள்ள எரிக்சொல்ஹெய்ம் மீள்புதுப்பிக்கத்தக்க வலுசக்தி எலெக்ரிக் மொபிலிட்டி மரநடுகை பசுமை விவசாயம் சுற்றுசூழலிற்கு உகந்த சுற்றுலா ஆகியவை வேலைவாய்ப்புகள் மற்றும் பொருளாதார செழிப்பிற்கான பாரிய வாய்ப்புகளை வழங்குகின்றன எனவும் குறிப்பிட்டுள்ள அவர் இவை வெற்றிபெறும் கொள்கைகள் இவை சுற்றுசூழலிற்கும் பொருளாதாரத்திற்கும் ஒரே நேரத்தில் சிறந்தவை எனவும் தெரிவித்துள்ளார்.இலங்கை ஜனாதிபதியின் காலநிலை ஆலோசகர் என்ற அடிப்படையில் நான் அவர் தனது பணியாளர்கள் உள்நாட்டு வெளிநாட்டு வர்த்தகத்தை கவருவதற்கான சிறந்த கொள்கைகளை உருவாக்குவதற்கு உதவுவேன் எனவும் எரிக்சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

இலங்கை சீனா இந்தியா ஐரோப்பா மற்றும் ஏனைய உலகநாடுகளி;ல் இருந்து சிறந்த சுற்றுச்சுழல் செயற்பாடுகளை பெற்றுக்கொள்வதற்கான தொடர்புகளை ஏற்படுத்திக்கொடுப்பேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.காலநிலை மாற்றம் இலங்கை இருப்பிற்கே அச்சுறுத்தலானதா என்ற கேள்விக்கு எரிக்சொல்ஹெய்ம் ஆம் என பதிலளித்துள்ளார்.இலங்கையின் வறண்ட பகுதி தொடர்ந்தும் உலர்வலயமாகவும் ஈரமான பகுதி ஈரமாகவும் காணப்படும் நாங்கள் மிக மோசமான காலநிலையையும் மண்சரிவையும் சந்திப்போம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.சகோதார மக்களிற்கு ஆதரவளிக்கும் வெளிப்பாடாக இந்தியா இலங்கைக்கு மிக முக்கியமான உதவிகளை வழங்கியுள்ளது என எரிக்சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.இந்தியாவின் ஐஏஎன்எஸ் இணையத்தளத்திற்கு வழங்கியுள்ள பேட்டியில் இதனை தெரிவித்துள்ள அவர் இலங்கையை நெருக்கடியிலிருந்து மீட்பதற்கான தலைமைத்துவத்தை ரணில் விக்கிரமசிங்க வழங்குவார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Posted in Uncategorized

ரெலோ வின் யாழ் மாவட்ட தலைவர் தவிசாளர் நிரோஷ் கனடா பயணம்

புலம்பெயர் தேசத்தில் வெளிவரும் கனடா உதயன் பத்திகையின் விருது வழங்கும் விழாவில் பங்கேற்பதற்காக ரெலோ வின் யாழ் மாவட்ட தலைவரும் வலிகிழக்கு பிரதேச சபை தவிசாளருமான தியாகராஜா நிரோஷ் விடுமுறையில் கனடா சென்றுள்ளார்.

எதிர்வரும் சனிக்கிழமை 15 ஆம் திகதி கனடா ஸ்காபரோவில் உள்ள கெனடி மாநாட்டு; நிலையத்தில் கனடா உதயன் பத்திரிகையின் சர்வதேச விருது வழங்கும் விழா மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ளது. இவ் விருது வழங ;கும் விழாவில் விருது பெறுவதற்காக வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷின் பெயரும் அறிவிக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவர் கனடா சென்றுள்ளார்.

இன்று 13 ஆம் திகதி கனடா சென்றடைந்த அவரை கனடா உதயன் பத்திரிகையின் சிரேஷ்ட பிரதம ஆசிரியர் ஆர்.என் லோகேந்திரலிங்கம், பேராசியர் வே. சுங்கரநாராயணன் உள்ளிட்ட பிரமுகர்கள் வரவேற்றனர். இந் நிகழ்வினைத் தொடர்ந்து, எதிர்வரும் 27 ஆம் திகதி வரையில் கனடாவில் தங்கியுள்ள அவர் கனடாவில் உள்ள முக்கியஸ்தர்களுடன் சந்திப்புக்களை மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

கடன் மறுசீரமைப்பு தொடர்பாக இந்தியா மற்றும் சீனாவிடம் இருந்து துரிதமான பதில் எதுவும் கிடைக்கவில்லை – பரிஸ் கிளப்

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பாக இந்தியா மற்றும் சீனாவிடம் இருந்து துரிதமான பதில் எதுவும் கிடைக்கவில்லை என பரிஸ் கிளப் (Paris Club) தெரிவித்துள்ளது.

இலங்கை ஒரு நடுத்தர வருமானம் கொண்ட நாடாக இருப்பதால், G20 பொதுத் திட்டத்தின் கீழ் சலுகைகளுக்கு விண்ணப்பிக்க முடியாது என்றும் அந்த கிளப் தெரிவித்துள்ளது.

இலங்கையின் வெளிநாட்டுக் கடனை மறுசீரமைப்பது தொடர்பாக கடந்த மாதம் இந்திய மற்றும் சீன அதிகாரிகளுடன் ‘பரிஸ் கிளப்’ யோசனைகளை பரிமாறிக்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும் இந்தியா மற்றும் சீனாவிடம் இருந்து துரிதமான பதில் எதுவும் இதுவரையில் கிடைக்கவில்லை என பரிஸ் கிளப் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்கா, ஜேர்மனி, அவுஸ்ரேலியா உள்ளிட்ட அபிவிருத்தியடைந்த நாடுகளை பரிஸ் கிளப் (Paris Club) உள்ளடக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

எங்களை பகடைக்காயாக்கி குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க சீனா முயலக்கூடாது..!! சீனா மீது சிவாஜிலிங்கம் குற்றச்சாட்டு

அனைத்து கட்சிகளும் எவ்வித பேதமின்றி இணைந்து போதைப்பொருள் பாவனைக்கு எதிராக செயற்பட வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

வல்வெட்டித்துறையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், போதைவஸ்து பாவனை மற்றும் திருட்டு சம்பவங்கள் என்பன தற்போது அதிகரித்து காணப்படுகின்றது. இதனை கட்டுப்படுத்த அனைத்து கட்சிகளும் எவ்வித பேதமின்றி இணைந்து போதைப்பொருள் பாவனைக்கு எதிராக செயற்பட வேண்டும். விழிப்புக்குழுக்களை உருவாக்கி செயற்பட வேண்டும்.

பொலிஸ் மற்றும் படையினர் அதிகமாக இருந்தும் போதைப்பொருள் பாவனையை தடுக்க முடியாதுள்ளது. எங்களை சீரழிக்க சிங்கள பேரினவாதம் முயற்சிக்கிறது. இதனை அனைவரும் இணைந்து முறியடிக்க வேண்டும் என்றார்.

மேலும், எங்களை சீனா பகடைக்காயாக்க முயற்சிக்க வேண்டாம். குழம்பிய குட்டையில் சீனா மீன்பிடிக்ககூடாது .
சீனத் தூதரகத்திடம் பெற்ற உதவி தொடர்பாக யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தரின் கருத்து வேடிக்கையானது என்றார்.

பொதுஜன பெரமுனவின் 2 ஆவது கூட்டத்தில் முக்கிய தீர்மானம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் வருகிற ஞாயிற்றுக்கிழமை (ஒக் 16) நாவலப்பிட்டி நகரில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கட்சிக் கூட்டம் இடம்பெறவுள்ளது.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஆறாவது மாநாட்டில் முக்கிய பல மு‍டிவுகளை அறிவிக்க கட்சி மட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உட்பட ராஜபக்ஷர்கள் அனைவரும் பதவிகளில் இருந்து விலக வேண்டும் என வலியுறுத்தி இடம்பெற்ற போராட்டம் தீவிரமடைந்ததை தொடர்ந்து கடந்த மே மாதம் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகியதை தொடர்ந்து அவர் பொது அரசியல் கூட்டங்களில் கலந்துகொள்ளவில்லை.

நீண்ட இடைவெளிக்குப் பின்னர் ‘ஒன்றிணைந்து எழுவோம்; களுத்துறையில் இருந்து ஆரம்பிப்போம்’ என்ற தொனிப்பொருளுடன் கடந்த 8ஆம் திகதி பொதுஜன பெரமுன முதலாவது கூட்டத்தை களுத்துறையில் நடத்தியது.

இந்த கூட்டத்தில் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, பிரதமர் தினேஷ் குணவர்தன, பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் உட்பட முன்னாள் அமைச்சர்களான நாமல் ராஜபக்ஷ, ரோஹித அபேகுணவர்தன, பவித்ராதேவி வன்னியராச்சி, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உட்பட பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பாலானோர் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விவசாயத்துறையில் எடுத்த தீர்மானம் பொதுஜன பெரமுனவின் வீழ்ச்சிக்கு ஆரம்பமாக அமைந்ததாகவும், அப்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் அரசியல் ஆலோசனைகளுக்கு மதிப்பளிக்கப்படவில்லை எனவும் கூட்டத்தில் உரையாற்றிய முன்னாள் அமைச்சர் பவித்ராதேவி வன்னியராச்சி தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கம் எடுத்த ஒருசில தீர்மானங்கள் நாட்டுக்கு பொருத்தமானதாக அமையவில்லை. 69 இலட்ச மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றவில்லை என அந்த கூட்டத்தில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

இவ்வாறான பின்னணியில் நாடளாவிய ரீதியில் கூட்டங்களை நடத்தி கட்சியை பலப்படுத்த பொதுஜன பெரமுனவின் முன்னாள் அமைச்சர்கள் அவதானம் செலுத்தியுள்ளனர்.

அதற்கமைய பொதுஜன பெரமுனவின் இரண்டாவது கூட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை நாவலப்பிட்டி நகரில், முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவின் தலைமையில் இடம்பெறவுள்ளது.

Posted in Uncategorized

நவம்பர் 2 ஆம் திகதி கொழும்பில் எதிர்ப்பு நடவடிக்கையை முன்னெடுக்க திட்டம்

அடக்குமுறைக்கு எதிராக நவம்பர் 2 ஆம் திகதி கொழும்பில் எதிர்ப்பு நடவடிக்கை ஒன்றை முன்னெடுப்பதற்கு அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள், மாணவர் அமைப்புகள் , பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் சிவில் செயற்பாட்டாளர்கள் இன்று கூட்டாக தீர்மானித்துள்ளனர்.

போராட்டத்தின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பிலான ஒன்றிணைந்த கலந்துரையாடல் கொழும்பு பொது நூலகக் கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்றது.

ஐக்கிய மக்கள் சக்தி, ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, முன்னிலை சோசலிசக் கட்சி, அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், இலங்கை ஆசிரியர் சங்கம், இளம் ஊடகவியலாளர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் இதில் பங்கேற்றிருந்தனர்.

தவறான தீர்மானங்கள் தொடர்பில் கணக்காய்வு ஆரம்பம்

முன்னால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அரசாங்கத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட தவறான பொருளாதார முகாமைத்துவ தீர்மானங்களினால் மக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட 02 அடிப்படை உரிமை மனுக்களை பரிசீலனை செய்ய வழங்கிய உத்தரவின் அடிப்படையில் விசேட கணக்காய்வு  ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய கணக்காய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது

உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் இது தொடர்பான விசாரணைகள்  இடம்பெற்று வருவதாக கணக்காய்வாளர் நாயகம்  டபிள்யூ.பி.சி. விக்ரமரத்ன குறிப்பிட்டார்.

அதற்காக பிரதி கணக்காய்வாளர் நாயகம் ஒருவரின் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

டொலரின் பெறுமதியை 203 ரூபாவாக பேணியமை, சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து உதவி பெறுவதில் தாமதம், இந்த ஆண்டு ஜனவரி 18 ஆம் திகதி 500 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான இறையாண்மை பத்திரங்களை மீளச் செலுத்துவது தொடர்பிலும் இதன்போது கணக்காய்விற்கு உட்படுத்தப்படவுள்ளது.

உள்ளூராட்சி சபை தேர்தல் குறித்து தேர்தல் ஆணைக்குழு தலைவர் விளக்கம்

உள்ளூராட்சி சபை தேர்தலை மார்ச் 20ஆம் திகதிக்கு முன்னர் நடத்துவதே தேர்தல் ஆணைக்குழுவின் நிலைப்பாடென தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

அதற்கான நடவடிக்கைகளை தற்போது தேர்தல் ஆணைக்குழு மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை,மக்கள் பிரதிநிதிகளிருந்து செயற்பட வேண்டிய இடத்தில் அதிகாரிகள் அமர்ந்து செயற்படுவதை ஒருபோதும் தேர்தல் ஆணைக்குழு ஏற்றுக் கொள்ளாதென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சுதந்திர மக்கள் சபை உறுப்பினர்கள் நேற்று தேர்தல் ஆணைக்குழுவுக்குச் சென்று தேர்தல் ஆணைக்குழுவின் தலைவரை சந்தித்து கலந்துரையாடல் நடத்தியுள்ளனர். அதன் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

இந்த வருடத்தின் மார்ச் மாதம் நடத்தப்படவிருந்த உள்ளுராட்சி சபை தேர்தல் அடுத்த வருடம் மார்ச் மாதம் வரை ஒத்திப் போடப்பட்டுள்ளது. தேர்தல்களை ஒத்திப் போடுவதை தேர்தல் ஆணைக்குழு ஒருபோதும் ஆதரிக்காது.

அந்த வகையில் ஆறு மாதத்துக்கு முன்பதாக அதற்கான அதிகாரம் தேர்தல் ஆணைக்குழுவுக்கு கிடைக்கும். அதன்படி கடந்த செப்டம்பர் 20ஆம் திகதிக்குப் பின்னர் தேர்தலை அறிவிக்கும் அதிகாரம் தேர்தல் ஆணைக்குழுவுக்கு கிடைத்துள்ளது.

ஆனணக்குழு தற்போது தேர்தல் இடாப்புகளை உறுதிப்படுத்தும் காலமாகும். அதனை உறுதிப்படுத்தும் முன்பு இக்காலத்தில் நாம் தேர்தலை அறிவித்தால் கடந்த 2021 தேர்தல் இடாப்பின்படியே அது செல்லுபடியாகும்.

அவ்வாறானால் இரண்டரை இலட்சத்துக்குமதிகமானோருக்கு வாக்களிக்கும் உரிமை இழக்கப்படும். அதற்கு ஆணைக்குழு தயாரில்லை. அதனைக் கவனத்தில் கொண்டு செயற்படுவதற்கு ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

அந்த வகையில் மார்ச் 20ஆம் திகதிக்கு முன்னர் உள்ளூராட்சி சபை தேர்தலை நடத்துவதே ஆணைக்குழுவின் எதிர்பார்ப்பென்றும் அவர் மேலும் தெரிவித்தார்.