காங்கிரஸ் யாப்பில் ஒற்றையாட்சியை வலியுறுத்திக் கொண்டு வெளியில் இருதேசம் ஒரு நாடு என மக்களை ஏமாற்றுகிறார் கஜேந்திரகுமார்! சித்தார்த்தன் குற்றச்சாட்டு

கயேந்திர குமார் பொன்னம்பலத்தின் அகில இலங்கை தமிழ் காங்கிரசின் கட்சியின் யாப்பு ஒற்றையாட்சியை வலியுறுத்துகின்ற நிலையில் தமிழ் மக்களை திசைதிருப்ப தமிழ் மக்கள் முன்னணி என்ற குழுவை அமைத்து 13 க்கு எதிராகப் போராட்டம் நடத்துகிறார்கள் என புளொட் அமைப்பின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.

வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் 13வது திருத்தச் சட்டத்தினை எதிர்க்கும் தமிழ் தேசிய முன்னணியினர் தமிழ் மக்களின் தீர்வாக எதனை முன் வைக்கப் போகிறார்கள் அல்லது அவர்கள் தீர்வு தொடர்பில் எடுக்கும் முயற்சி என்னவென கேட்க விரும்புகின்றேன்.

மக்கள் மத்தியில் பொய் சொல்வதற்கு தகுதி வேண்டும் 13வது திருத்தச் சட்டத்தினை நாங்கள் தீர்வாக ஏற்றுக் கொண்டோம் ஏற்றுக் கொண்டுள்ளோம் என கஜேந்திரகுமார் அணியினர் பொய் பிரச்சாரம் செய்கிறார்கள்.

13 வேண்டாம் என்றால் 13பதிலாக என்ன தீர்வினை முன் வைக்கப் போகிறீர்கள்? அல்லது தீர்வு விடயத்தில் என்ன நடவடிக்கை எடுத்துள்ளீகள் எனக் கூறமுடியுமா.

கயேந்திரகுமார் அணியினர் எதிர்வரும் மாகாணசபை தேர்தலில் போட்டியிடவுள்ள நிலையில் யாரை முதலமைச்சராக முட்படுத்துவது என போட்டி நிலவுகிறது.

கஜேந்திரகுமாரின் அகில இலங்கை தமிழ் காங்கிரசின் தேர்தல் விஞ்ஞாபனத்தை 75ரூபாய் முத்திரைக் காசு வழங்கி பார்த்தேன் அவர்களின் தேர்தல் விஞ்ஞாபனம் ஒற்றையாட்சியை வலியுறுத்துகிறது.

காங்கிரஸ் என்ற பெயரில் போராட்டம் நடத்தினால் தமது கபடத்தனம் தெரிந்து விடும் என்பதற்காக முன்னணி என்ற ஒரு குழுவை ஆரம்பித்து 13ஐ தமிழ் தேசிய கட்சிகள் ஒன்றிணைந்து ஏற்றிவிட்டார்கள் அதற்கு எதிராக போராட வாருங்கள் என மக்களை குழப்பி வருகிறார்கள்.

தமிழ் தேசியத்திற்காக ஒன்றிணைந்த தலைவர்கள் நாங்கள் ஒருபோதும் 13வது திருத்தச்சட்டத்தை தமிழ் மக்களின் தீர்வாக ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறோம் .

Posted in Uncategorized

தமிழ் மக்களை குழப்புவதற்காக ஒரு கட்சி பேரணிகளை ஏற்பாடு செய்துள்ளது – மாவை சேனாதிராஜா

13 ஆவது திருத்தம் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கு தீர்வினை தராது என்பதில் நாம் தெளிவாக இருக்கின்றோம்.இந்த நிலையில் ஒரு கட்சி எமக்கு எதிராக பிரச்சாரம் செய்வதாக நினைத்து, தமிழ் மக்களை குழப்புவதற்காக பேரணிகளை ஏற்பாடு செய்துள்ளது

என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

13 ஆவது திருத்தம் தொடர்பில் தமிழ் கட்சிகள் ,இந்திய பிரதமர் மோடிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதம் தொடர்பில்,தெளிவுபடுத்தும் ஊடகவியாளர் சந்திப்பு யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்றது. இதன் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

சமஸ்டி கட்டமைப்பில்,சுயநிர்ணய தீர்வைத் தான் நாம் எதிர் பார்க்கின்றோம். நாங்கள் தெளிவாக சிந்தித்து இந்த முடிவை எடுத்துள்ளோம்.ஒரு நாளும் 13ஆவது திருத்தம் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கு தீர்வினை தராது.அதிலும் நாம் தெளிவாக இருக்கின்றோம்.

இந்த நிலையில் ஒரு கட்சி எமக்கு எதிராக பிரச்சாரம் செய்வதாக நினைத்து,தமிழ் மக்களை குழப்புவதற்காக பேரணிகளை ஏற்பாடு செய்துள்ளது.நாம் இந்தியாவுக்கு சோரம் போகமாட்டோம். இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையில் நாம் அவர்களிடமிருந்து பெறவேண்டியதை பெறுவோம்.

வடக்கு கிழக்கு இணைப்பு தொடர்பில் கத்தி கத்தி களைத்து விட்டோம்.அதற்காக அப்படியே இதை விட்டு விட்டோம் என்று நினைக்க வேண்டாம்.தமிழர் இருப்புக்கு நாம் ஒன்று சேர்ந்து உழைக்க வேண்டும் என்றார்.

கொக்கட்டிச்சோலை படுகொலையின் 35ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு பா.உ. ஜனாவால் முன்னெடுப்பு 

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை படுகொலையின் 35ஆவது  ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு மகிழடித்தீவில் அமைந்துள்ள நினைவுத்தூபியில் நேற்று வெள்ளிக்கிழமை காலை மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான  கோவிந்தன் கருணாகரம்(ஜனா)வினால்  பொலிசாரின் கெடுபிடிகளையும் மீறி அனுஸ்டிக்கப்பட்டது.

இதன் போது,  முன்னாள் கிழக்கு மாகாண பிரதி தவிசாளரும்   தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் உப தலைவருமான இந்திரகுமார் பிரசன்னா, கட்சியின் பொருளாளர் விந்தன் கனகரெட்ணம் உள்ளிட்டோர் பங்கு கொண்டிருந்தனர்.

போலிசாரிர்  தடைகளை ஏற்படுத்த முற்பட்ட போதிலும் சுகாதார வழிமுறைகளை பின்பற்றி அமைதியான முறையில், குறித்த நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது நினைவுத் தூபியில் ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டதுடன் மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

1987ஆம் ஆண்டு ஜனவரி 28ஆம் திகதி கொக்கட்டிச்சோலை மகிழடித்தீவு இறால் பண்ணையில் பணியாற்றிய உள்ளுர் பணியாளர்கள் உட்பட 150 பேர் வரை சுட்டுக் கொல்லப்பட்டு எரிக்கப்பட்டிருந்தனர்.

Posted in Uncategorized

நினைவுகூரல்களுக்கு தடைவிதிப்பது ஒட்டுமொத்த ஜனநாயக மீறல் – ரெலோவின் செயலாளர் நாயகம் ஜனா

இலங்கை இராணுவத்தின், இராணுவத்தினரின் உதவியுடன் செய்யப்பட்ட படுகொலைகளை நினைவுகூருவதற்குத் தடைவிதிப்பது ஒட்டுமொத்த ஜனநாயக அத்துமீறலாகவே நாங்கள் பார்க்கின்றோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்தார்.

இன்று   வெள்ளிக்கிழமை காலை, கொக்கட்டிச்சோலை படுகொலையின் 35ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வினை மகிழடித்தீவு சந்தியில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபில் நடத்திய பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர்,

கொக்கட்டிச்சோலை படுகொலை   என்று கூறப்படுவது 1987ஆம் ஆண்டு அகதிகளாக இந்த இறால்வளர்ப்புத் திட்டத்துக்குள் இருந்த அகதிகளாக இருந்த பொதுமக்களையும், இந்தப்பிரதேச மக்களுமாக 150க்கு மேற்பட்ட பொது மக்கள் இந்தப்பிரதேசத்தில் கொல்லப்பட்டார்கள் அவர்களது நினைவா இந்த நினைவுத்தூபி அமைக்கக்கட்டு வருடா வருடம் நினைவேந்தல் நடைபெற்றுவருவரு வழமை.

கடந்த வருடம் கூட இந்த இடத்தில் கொட்டில் அமைத்து மிகவும்விமர்சையாக இந்த நினைவேந்தல் நடைபெற்றது. இந்த வருடம் கொக்கட்டிச்சோலைப் பொலிசாரினால் தடையுத்தரவு பெறப்பட்டு பொதுமக்கள் தங்களது உறவுகளை நினைத்து நினைவேந்தக்கூடாது என்ற கட்டளை பிறப்பிக்கப்பட்டிருக்கின்றது.

இருந்தாலும் படுகொலை செய்யப்பட்ட உறவுகளை நினைத்து தமிழ் ஈழ விடுதலை இயக்கம் நான் உட்பட உபதலைவர் பிரசன்னா இந்திரகுமார், பொருளாளர் விந்தன் கனகரெட்ணம் யாழ்ப்பாணத்திலிருந்து வந்திருக்கின்றார். இந்த நினைவேந்தலை நாங்கள் செய்து கொண்டிருக்கின்றோம்.

இந்த அரசு கடந்த காலங்களில் போராட்டத்தில் மரணித்த போராளிகள், பொதுமக்களை எதிர்காலச் சந்தத்தியினர் நினைவுகூரக்கூட விடுவதில்லை. அவர்களை நினைத்துக் கூட பார்க்கக் கூடாது என்ற முடிவில் இருக்கிறார்கள். இந்தப்படுகொலை கூட இந்த ராஜபக்ச சகோதரர்களின் சிறிலங்கா சுதந்திரக்கட்சியையொட்டிய அரசினால் நடத்தப்படவில்லை. ஐக்கிய தேசியக்கட்சி அரசாங்க ஆட்சிக்காலத்தில் இது நடைபெற்றிருந்தது.

இருந்தும் இலங்கை இராணுவத்தின், இராணுவத்தினரின் உதவியுடன் செய்யப்பட்ட படுகொலைகளை நினைவுகூருவதற்குத் தடைவிதிப்பது ஒட்டுமொத்த ஜனநாயக அத்துமீறலாகவே நாங்கள் பார்க்கின்றோம்.

Posted in Uncategorized

விசேட சரக்கு மற்றும் சேவை வரி சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் பெப்ரவரியில்..!

விசேட சரக்கு மற்றும் சேவை வரி சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது.

நாடாளுமன்ற அலுவல்களுக்கான குழு இந்த முடிவை எடுத்துள்ளது.

அதற்கமைய, எதிர்வரும் பெப்ரவரி மாதம் 8ஆம் திகதி முதல் 11ஆம் திகதி வரை நாடாளுமன்றம் கூட்டப்படவுள்ளதாக நாடாளுமன்ற செயலாளரான தம்மிக்க தசநாயக்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றம் தினமும் காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, அடுத்த நாடாளுமன்ற வாரத்தில் தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை அதிகாரசபை சட்டம், மஹாபொல உயர்கல்வி புலமைப்பரிசில் நம்பிக்கை நிதியம், குற்றவியல் நடைமுறைச் சட்டம் (திருத்தம்) சட்டமூலம், சிவில் நடைமுறைச் சட்டம் (திருத்தம்) சட்டமூலம் உள்ளிட்ட பல சட்டமூலம் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

Posted in Uncategorized

இலங்கை இராணுவத்திற்கு எதிரான தடைகளிற்கான சாத்தியக்கூறுகள் குறித்து பிரிட்டன் சுட்டிக்காட்டு

இலங்கை இராணுவத்திற்கு எதிரான தடைகளிற்கான சாத்தியக்கூறுகள் குறித்து பிரிட்டன் சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கை இராணுவத்தினருக்கு எதிரான தடைகள்குறித்து ஆலோசிக்கப்படுவதாக பிரிட்டன்தெரிவித்துள்ளது.
வெளிவிவகார பொதுநலவாய அபிவிருத்தி அமைச்சர் அமன்டா மில்லிங் பிரிட்டிஸ் நாடாளுமன்றத்தில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார். இலங்கை தொடர்பான விடயங்களில் பிரிட்டன் அமெரிக்கா உட்பட ஏனைய சகாக்களுடன் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுவருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

பிரிட்டனின் சர்வதேச மனிதஉரிமை தடைகளின் கீழ் வரக்கூடிய அனைத்து ஆதாரங்கள் மற்றும் சாத்தியமான தடைகள் குறித்தும் பிரிட்டன் அரசாங்கம் உன்னிப்பாக ஆராய்ந்துவருகின்றது எனதெரிவித்துள்ள அவர் எதிர்கால தடைகள் குறித்து பொதுவாக நாங்கள் ஊகங்களை வெளியிடுவதில்லை அவ்வாறு செய்வது அவற்றின் தாக்கத்தை குறைக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவை பின்பற்றி இலங்கையின் இராணுவதளபதி சவேந்திரசில்வாவிற்கு எதிராக யுத்தகுற்ற தடைகளை விதிப்பதற்கு பிரிட்டனிற்கு மேலும் என்ன ஆதாரங்கள் வேண்டும் என தொழில்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சியோபைன் மக்டொனாக் கேள்வி எழுப்பியவேளையே அமன்டா மில்லிங் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஜெனீவாவில்இலங்கை தொடர்பான முதன்மை குழுவின் தலைவர் என்ற அடிப்படையில் பிரிட்டன் மனிதஉரிமை ஆணையகத்தின் அடுத்த அமர்விற்கு முன்னதாக மேலும் நடவடிக்கைகளை எடுப்பதற்கு பிரிட்டன்திட்டமிட்டுள்ளது என இலங்கைஇராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன என ஐலண்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

கச்சத்தீவு அந்தோனியார் தேவாலய விழாவுக்கு இந்திய யாத்திரிகர்களை அனுமதிக்க முடியாது – இலங்கை

எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள கச்சத்தீவு அந்தோனியார் தேவாலய விழாவுக்கு, இந்திய யாத்திரிகர்களை அனுமதிக்காதிருப்பதற்கு தீர்மானித்துள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிபிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் பரவிவரும் கோவிட் ஒமிக்ரோன் தொற்று மற்றும் இந்தியாவில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு ஆகியவற்றை கருத்திற்கொண்டே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

இதன்படி, சுமார் 500 வரையான மட்டுப்படுத்தப்பட்ட இலங்கை யாத்திரிகர்களுடன் இம்முறை விழா நடத்தப்படவுள்ளது.

இலங்கை சுகாதார அதிகாரிகளினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளை அடிப்படையாகக் கொண்டே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலய வருடாந்த உற்சவம் இம்முறை மார்ச் மாதம் 11 மற்றும் 12ம் திகதிகளில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதே நேரம், கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத் திருவிழாவில் தமிழ்நாடு மீனவர்களையும் அனுமதிக்க வேண்டும் என இராமேஸ்வரம் விசைப்படகு உரிமையாளர் சங்கத் தலைவர் யேசுராயா கோரிக்கை விடுத்தார்.

கச்சதீவு அந்தோனியாருக்கு கோரோனா காரணமாக இரண்டு ஆண்டுகள் திருவிழா இடம்பெறவுள்ளது. இந்த திருவிழாவில் வருடாந்தம் 10 ஆயிரம் பேர் பங்குகொண்டாலும் இம்முறை 500 பேராக மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு இடம்பெறும் இந்த திருவிழாவிற்கு தமிழ்நாடு மீனவர்களும் பங்குகொண்டு வழிபட விரும்புகின்றோம். மத வழிபாட்டை ஏற்று எமது மீனவர்களிற்கும் குறைந்த பட்சம் 200 பேர் பங்குகொள்ள யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இறைவனை மன்றாடுகின்றோம்.

கொரோனா அச்சம் இருப்பின் புறப்படும் சமயம் பரிசோதனை மேற்கொண்டு கொரோனா இல்லை என உறுதிப்படுத்தப்பட்ட சான்றிதழுடன் பயணிக்க முடியும். ஏனெனில் தற்போது இந்தியாவில் இருந்து தினமும் ஆயிரக் கணக்கானோர் விமானம் மூலம் இலங்கைக்கு பயணிக்க முடியும் என்றால் ஏன் கச்சதீவிற்கு பயணிக்க கூடாது என்ற கேள்வி மீனவர்களிடத்தில் உள்ளது.

இதனால் இந்த விடயத்தை அவச்மாக தமிழ்நாடு முதலமைச்சரின் கவனத்திற்கும் கொண்டு சென்று மத்திய அரசின் ஊடாக இலங்கை அரசைகோரவுள்ளோம் என்றார்.

Posted in Uncategorized

மோடிக்கு கடிதம் அனுப்பிய 6 கட்சித் தலைவர்கள் நாளை அவசர ஊடக மாநாடு

மோடிக்கு கடிதம் அனுப்பிய 6 கட்சித் தலைவர்கள்: இந்தியப் பிரதமருக்கான கடிதத்தில் ஒப்பமிட்ட ஆறு கட்சிகளின் தலைவர்களும் இணைந்து நாளைய தினம் ஓர் ஊடகவியலாளர் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தியப் பிரதமருக்கு அனுப்பிய கடிதத்தில் சட்டத்தில் தற்போதுள்ள விடயத்தையும் நடைமுறைப்படுத்துமாறு கோரிய விடயத்தை அதனையே தீர்வாக கோருகின்றோம் என மற்றுமோர் கட்சி தவறாக பிரச்சாரப்படுத்துவது தொடர்பிலேயே இந்த ஊடகவியலாளர் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

நாளை காலை 10 மணிக்கு யு.எஸ் விடுதியில் இந்தச் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வெளிநாட்டு இராஜதந்திரிகளை சந்தித்தார் அமைச்சர் பீரீஸ்!

இலங்கை அரசாங்கத்தின் தற்போதைய முன்முயற்சிகள் குறித்து வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் இராஜதந்திரிகளுக்கு விளக்கமளித்துள்ளார்.

புதிய ஆண்டின் முதலாவது இராஜதந்திர மாநாடு நேற்று, வெளிநாட்டு அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

தற்போதைய முன்னேற்றங்களைப் பகிர்ந்து கொள்வதற்காக அமைச்சினால் ஒழுங்கமைக்கப்பட்ட வழக்கமான விளக்கங்களின் தொடர்ச்சியாக, முழு இராஜதந்திரப் படையினரையும் சந்திப்பதற்கான வாய்ப்பை வெளிநாட்டு அமைச்சர் பாராட்டினார்.

பெப்ரவரி இறுதி வாரத்தில் ஆரம்பமாகவுள்ள மனித உரிமைகள் பேரவையின் எதிர்வரும் 49ஆவது கூட்டத் தொடருக்கு முன்னதாக மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான முன்னேற்றம் தொடர்பான தகவல்களைப் பகிர்வதே இன்றைய மாநாட்டின் நோக்கமாகும்.

மனித உரிமைகள் பேரவையின் செப்டெம்பர் 2021 அமர்வில், மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கும் பாதுகாப்பதற்கும், மனித உரிமைகள் பேரவை உட்பட ஐக்கிய நாடுகள் சபையுடன் தொடர்ந்தும் ஈடுபடுவதற்கான இலங்கையின் அர்ப்பணிப்பை மீண்டும் வலியுறுத்தியதை அமைச்சர் நினைவு கூர்ந்தார். இந்த சூழலில், சர்வதேச சமூகத்துடனான ஒத்துழைப்பு மற்றும் உரையாடல் சார்ந்த உணர்வுடனான ஆக்கபூர்வமான ஈடுபாட்டை அமைச்சர் குறிப்பிட்டார்.

பொறுப்புக்கூறல், நீதி மறுசீரமைப்பு மற்றும் அர்த்தமுள்ள நல்லிணக்கம் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு உள்நாட்டு நிறுவனங்களின் செயற்பாடுகளினூடாக இலங்கை அரசாங்கம் கணிசமான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவித்த வெளிநாட்டு அமைச்சர் பீரிஸ், தற்போது ஏற்பட்டுள்ள உறுதியான முன்னேற்றங்கள் குறித்து விளக்கமளிக்குமாறு இந்த நிறுவனங்களின் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்தார். அதற்கிணங்க, கடந்த வருடத்தில் உள்நாட்டு நிறுவனங்களால் ஏற்படுத்தப்பட்ட முன்னேற்றங்கள் தொடர்பான விளக்கங்கள் இழப்பீடுகளுக்கான அலுவலகத்தின் தலைவி திருமதி தாரா விஜயதிலக, நிலையான அபிவிருத்தி சபையின் பணிப்பாளர் நாயகம் திருமதி சாமிந்திரி சப்பரமாது, தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகத்தின் பணிப்பாளர் நாயகம் திரு. தீப்தி லமாஹேவா, காணாமல் போனோர் அலுவலகத்தின் சட்டப் பிரிவின் தலைவர் திரு. த. தப்பரன் மற்றும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆய்வு மற்றும் கண்காணிப்புக்கான பணிப்பாளர் திரு. நிஹால் சந்திரசிறி ஆகியோரினால் வழங்கப்பட்டன.

43 வருடங்களின் பின்னர் சர்வதேச நியதிகள் மற்றும் சிறந்த நடைமுறைகளுக்கு அமைவாக பயங்கரவாதத் தடைச் சட்டத்தைக் கொண்டுவரும் நோக்கத்துடன் திருத்தப்பட்டு வருவதாக அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார். உத்தேசத் திருத்தங்கள் அடங்கிய சட்டமூலத்தை வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் அதன் பின்னர் இறுதி அங்கீகாரத்திற்காக பாராளுமன்றத்தில் சட்டமூலத்தை சமர்பிப்பதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்தார். பல மாதங்களாக மேற்கொள்ளப்பட்ட நீண்ட கலந்துரையாடலின் பின்னர் பயங்கரவாதத் தடைச் சட்டம் திருத்தப்பட்டு வருவதாக அமைச்சர் விளக்கமளித்தார்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் முக்கிய திருத்தங்களில் தடுப்புக் காவல் உத்தரவு, கட்டுப்பாட்டு உத்தரவு, நீதித்துறை மீளாய்வு உத்தரவுகளை வெளிப்படையாக அங்கீகரித்தல் தொடர்பான பிரிவுகளில் திருத்தங்களை மேற்கொள்ளுதல், நீண்ட கால தடுப்புக் காவலில் வைக்கப்படுவதைத் தவிர்ப்பதற்காக குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான வழக்குகளை விரைவாகத் தீர்த்தல், சுதந்திரத்துக்கு இடையூறு விளைவிக்கும் பிரிவுகளை இரத்துச் செய்தல், நீதிவான்கள் மற்றும் நீதித்துறை மருத்துவ அதிகாரிகளை அணுகுவதற்கான விதிகளை வெளிப்படுத்துதல் மற்றும் அறிமுகப்படுத்துதல், தடுப்புக் காவலில் உள்ள காலத்தில் துஷ்பிரயோகம் மற்றும் சித்திரவதைகளைத் தடுத்தல், குடும்பத்துடன் தொடர்புகொள்வதற்கான உரிமை, நீண்ட கால கைதிகளுக்கு பிணை வழங்குதல் மற்றும் வழக்குகளை நாளாந்தம் விசாரணை செய்தல் போன்ற பிரிவுகளிலான திருத்தங்கள் உள்ளடங்கும்.

நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சருக்கு ஆலோசனை வழங்குவதற்கு பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் 13ஆவது பிரிவின் கீழ் ஆலோசனை சபையொன்றை ஸ்தாபிப்பதையும் அமைச்சர் குறிப்பிட்டார். பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுப்புக் காவல் உத்தரவு அல்லது கட்டுப்பாட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட எவருக்கும் அந்த உத்தரவை மறுபரிசீலனை செய்யக் கோருவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும், 2021ஆம் ஆண்டு ஜூன் மாதம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தண்டனை அனுபவித்து வந்த 16 விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப்பட்டதுடன், பயங்கரவாதச் சட்டத்தின் கீழான குற்றச்சாட்டின் கீழ் நீண்டகாலமாக நீதிமன்றக் காவலில் உள்ள கைதிகளை விடுதலை செய்வதற்கான சட்ட மற்றும் நிர்வாக நடைமுறைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதன்படி, 2022 ஜனவரி 13 நிலவரப்படி மேலும் 13 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் சட்டமா அதிபரால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ள திரு. ஹிஜாஸ் ஹிஸ்புல்லா தொடர்பான வழக்கின் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்தும் வெளிநாட்டு அமைச்சர் குறிப்பிட்டார்.

குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு பிணை வழங்குவதை எதிர்க்கப் போவதில்லை என சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றில் அறிவித்துள்ளார். தொல்பொருள் பாரம்பரிய முகாமைத்துவம் தொடர்பான ஜனாதிபதி செயலணி தொடர்பில், தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களின் பிரதிநிதிகள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

கிழக்கு, தெற்கு மற்றும் மத்திய மாகாணங்களுக்கு தான் மேற்கொண்ட விஜயங்கள் மற்றும் இலங்கையின் வடமாகாணத்திற்கான தனது எதிர்வரும் விஜயம் ஆகியன நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைந்து கொள்வதற்காக அரசாங்கம் ஏற்கனவே முன்னெடுத்துள்ள பல்வேறு நடவடிக்கைகள் மற்றும் மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்க முயற்சிகள் குறித்து கலந்துரையாடி கருத்துக்களைப் பெறுவதற்காக, அரசியல்வாதிகள், அரசாங்க அதிகாரிகள், புத்திஜீவிகள் மற்றும் கல்வியியலாளர்கள், அடிமட்டத்தில் உள்ள சிவில் சமூக அமைப்புக்களின் உறுப்பினர்கள் உட்பட பல்வேறு தரப்பினருடன் ஆலோசனையில் ஈடுபடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக தூதரகத் தலைவர்களுக்கு வெளிநாட்டு அமைச்சர் அறிவித்தார்.

நிலைமாறுகால நீதி, நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைதல் மற்றும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் திருத்தங்கள் ஆகிய துறைகளில் சம்பந்தப்பட்ட தேசிய நிறுவனங்கள் ஆற்றிய பணிகளை ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் ஹனா சிங்கர்-ஹம்டி பாராட்டினார். மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்காக இலங்கையுடன் இணைந்து செயற்படும் சர்வதேச சமூகத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த எகிப்தின் தூதுவர் மகேத் மொஸ்லே, பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதிலும் அதன் பின்விளைவுகளைக் கையாள்வதிலும் இலங்கை அடைந்துள்ள அற்புதமான சாதனைகளை சுட்டிக்காட்டினார்.

அரசின் பத்து பங்காளி கட்சி தலைவர்கள் எடுத்துள்ள தீர்மானம்

தற்போது இலங்கை எதிர்கொண்டுள்ள பாரிய நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு உதவும் வகையில் அரசாங்கத்திடம் பிரேரணை ஒன்றை சமர்ப்பிக்க அரசாங்கத்துடன் இணைந்துள்ள பத்து கட்சிகளின் தலைவர்கள் தீர்மானித்துள்ளனர்.

இலங்கையில் உள்ள இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிசி) தலைமையகத்தில் நடைபெற்ற அரசாங்கத்தின் பங்காளி கட்சிகளின் தலைவர்களின் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த பிரேரணையை நாளையதினம் அரசதலைவர் மற்றும் பிரதமரிடம் கையளித்த பின்னர் அதனை பகிரங்கப்படுத்தவும் கட்சித் தலைவர்கள் தீர்மானித்துள்ளனர்.

நாட்டின் உண்மை நிலையை மக்களிடம் மறைக்காமல் மக்களுக்கு உணர்த்த வேண்டும் எனவும் கட்சித் தலைவர்கள் சுட்டிக்காட்டினர்.

அத்துரலிய ரத்ன தேரர், நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, உதய கம்மன்பில , வாசுதேவ நாணயக்கார , அமைச்சர்களான வீரசுமண வீரசிங்க , டிரான் அலஸ் , கெவிந்து குமாரதுங்க , இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் கலாநிதி ஜி.வீரசிங்க  ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.