ஒழுக்காற்று காரணிகளின் அடிப்படையிலேயே சுசில் பதவி நீக்கம் – நாமல்

ஒழுக்காற்று காரணிகளை கருத்திற் கொண்டே பாராளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த இராஜாங்க அமைச்சு பதவியில் இருந்து நீக்கப்பட்டதாக இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

அத்துடன் மர்சித்துள்ள ஏனைய அமைச்சரவை அமைச்சர்கள் குறித்து எதிர்வரும் நாட்களில் உரிய தீர்மானம் எடுக்கப்படும். ரசாங்கம் எடுக்கும் தீர்மானங்களில் குறைப்பாடுகள் காணப்படலாம். றைகளை சுட்டிக்காட்டும் பொறுப்பு அனைத்து தரப்பினருக்கும் உண்டு.

அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் அரசாங்கத்தின் குறைகளை சுட்டிக்காட்ட முறையான வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.பொது இடங்களில் கருத்துரைக்கும் போது தவறான நிலைப்பாடுகள் தோற்றம் பெறும்.அமைச்சரவை உறுப்பினர்கள் மாத்திரமல்ல ஆளும் தரப்பின் உறுப்பினர்கள் அனைவரும் கூட்டுப்பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

Posted in Uncategorized

மாகாண சபை தேர்தல் தொடர்பில் பேச்சுவார்த்தை இல்லை – உதய கம்மன்பில

மாகாண சபை தேர்தலை நடத்துவது தொடர்பில் அரசாங்கத்தில் எவ்வித பேச்சுவார்த்தைகளும் இல்லை என அமைச்சரவை இணைப் பேச்சாளர் உதய கம்மன்பில இன்று (04) தெரிவித்துள்ளார்.

மாகாண சபை தேர்தலை நடத்துமாறு எந்தவொரு வௌிநாட்டின் அழுத்தமும் நாட்டிற்கு இல்லை என அமைச்சர் கூறியுள்ளார்.

எனது பதவி நீக்கம் பெரும் அரசியல் திருப்பு முனைக்கு வழிவகுக்கும் – சுசில் பிரேமஜயந்த

இராஜாங்க அமைச்சு பதவியில் இருந்து நீக்கப்பட்டமை எதிர்கால அரசியலுக்கு சிறந்த ஆசிர்வாதமாக அமையும். மக்கள் ஆதரவுடன் பாராளுமன்றிற்கு தெரிவானேன். ஒருமுறை கூட தேசிய பட்டியல் ஊடாக பாராளுமன்றம் செல்லவில்லை.

மூன்று ஜனாதிபதிகளின் நிர்வாகத்தின் கீழ் முக்கிய அமைச்சு பதவிகளை வகித்துள்ளேன். இராஜாங்க அமைச்சு பதவி நீக்கப்பட்டமை பெரியதொரு விடயமல்ல என முன்னாள் இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமயந்த குறிப்பிட்டார்.

மேலும் 20 ஆவது திருத்தத்தின் ஊடாக பிரதமரை நீக்கும் அதிகாரம் கூட ஜனாதிபதிக்கு உள்ளது.

எனவே அந்த தீர்மானத்தை சவாலுக்கு உட்படுத்த முடியாது என்றாலும் பெரும் அரசியல் திருப்பு முனைக்கு வழிவகுக்கும் என்பதில் ஜயமில்லை என்றும் குறிப்பிட்டார்.

தொலைநோக்கு கல்வி இராஜாங்க அமைச்சுக்கு நேற்று காலை வருகை தந்து வெளியேறுகையில் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஊடகவியலாளர்கள் வினவிய கேள்விக்கு அவர் வழங்கிய பதில் வருமாறு

கேள்வி ; பதவி நீக்கத்திற்கான காரணம் என்ன ?

பதில் ; தொலைநோக்கு கல்வி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சு பதவியில் இருந்து நீக்கபபட்டுள்ளேன் என்பதை அறிந்துக் கொண்டேன்.இது பெரியதொரு விடயமல்ல.2000ஆம் ஆண்டு பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டவுடன் அமைச்சு பதவி கிடைக்கப் பெற்றது.

3 நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிகளின் நிர்வாகத்தின் கீழ் முக்கிய அமைச்சு பதவிகளை வகித்துள்ளேன்.நான் சட்டத்தரணி நாளை முதல் தொழிற்துறை நடவடிக்கையில் ஈடுப்படுவேன்.

கேள்வி ; பதவி நீக்கம் உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதா ?

பதில் ; இல்லை பதவி நீக்கப்பட்டதாக காலையில் ( நேற்று) ஊடகங்கள் வாயிலாக அறிந்துக் கொண்டேன்.நிறைவேற்று துறை அதிகாரம் கொண்ட ஜனாதிபதி விரும்பிய ஒருவரை பதவிக்க நியமிக்கவும்,பதவி நீக்கவும் முடியும்.பதவி நீக்கத்திற்கான காரணம் கூற வேண்டிய அவசியம் தேவையில்லை.

கேள்வி ; பதவி நீக்கத்திற்கான காரணம் என்னவாக இருக்கும் என கருதுகிறீர்கள்?

பதில் ; கடந்த ஞாயிற்றுக்கிழமை சந்தைக்கு சென்றிருந்த வேளை ஊடகவியலாளர்கள் என்னிடம் மரக்கறிகளின் விலை வாழ்க்கை செலவு உயர்வு குறித்து வினவினார்கள்.பச்சை மிளகாய் ஒரு கிலோகிராம் 1200 ரூபாவிற்கு விற்கப்படுகிறது அதற்கான காரணம் என்ன என்று வினவினார்கள்.விவசாயத்துறை அமைச்சு தோல்வி,விவசாயத்துறை தொடர்பில் அரசாங்கத்தின் கொள்கை தோல்வி என மக்களின் தரப்பில் இருந்து கருத்துரைத்தேன்.

கேள்வி ; அமைச்சரவையில் உள்ள அமைச்சர்கள் அமைச்சர்கள் அரசாங்கத்தை விமர்சிக்கிறார்கள் .அவர்கள் ஏன் பதவி நீக்கப்படவில்லை ?

பதில் ; நான் சந்தையில் குறிப்பிட்ட விடயம் அமைச்சரவையில் பேசப்பட்டுள்ளது என்று கருதுகிறேன்.கல்வி தகைமைக்கு அமைய நலன்புரி தொழிலாளராக முடியாதவர்களுக்கு கல்வியின் பெறுமதி பற்றி தெரியாது.

கேள்வி ; உங்களை பதவி விலக்கி அரசாங்கம் எதனை செய்ய போகிறது ?

பதில் ; அரசாங்கத்திற்கு நான் சிரேஷ்ட அரசியல்வாதியாக இல்லாமலிருக்கலாம் ஆனால் நான் மக்களுக்கு சிரேஷ்ட அரசியல்வாதி.அரசியலில் எனக்கான கடமையினை முறையாக நிறைவேற்றியுள்ளேன்.பதவி நீக்கம் எதிர்கால அரசியலுக்கான ஆசிர்வாதமாக அமையும்.

கேள்வி ; ஜனாதிபதி இவ்வாறான தீர்மானத்தை எடுப்பார் என எதிர்பார்த்தீர்களா ?

பதில் ; அவ்வாறு தீர்மானம் எடுக்காமலிருந்தால் தான் பிரச்சினை.தற்போதைய பொருளாதார முகாமைத்துவத்திற்கமைய நாடு எதனை நோக்கி செல்கிறது என்பதை அறிய முடிகிறது.அது தொடர்பிலும், மக்கள் தொடர்பிலும் கருத்துரைப்பது அவசியமாகும்.மக்கள் எதிர்க்கொள்ளும் அடிப்படை பிரச்சினை குறித்து கவனம் செலுத்தவே மக்கள் எம்மை தெரிவு செய்கிறார்கள்.மக்களுக்காகவே கருத்துரைத்தேன்.

கேள்வி ; எதிர்கால அரசியல் எவ்வாறு அமையும்.

பதில் ; அரசியலில் இருந்து நான் புறக்கணிக்கப்படவில்லை.1991ஆம் ஆண்டு கோட்டை நகரசபையில் இருந்து சுதந்திர கட்சி ஊடாக எனது அரசியல் பயணம் ஆரம்பமானது.கூட்டணியின் செயலாளராக 11 வருடகாலம் பதவி வகித்துள்ளேன்.மூன்று நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிகளின் நிர்வாகத்தில் கூட்டணியை ஒழுங்குப்படுத்தியுள்ளேன்.தேர்தலில் போட்டியிட்டு மக்கள் ஆதரவுடன் பாராளுமன்றிற்கு தெரிவானேன்.ஒரு முறை கூட தேசிய பட்டியல் ஊடாக பாராளுமன்றம் செல்லவில்லை.என்றார்.

Posted in Uncategorized

பிறந்திருக்கும் புதுவருடத்திலாவது அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும்- அருட்தந்தை மா.சத்திவேல்

அரசியல் கைதிகளின் குடும்பங்கள் அனுபவிக்கும் துன்பங்களில் இருந்து மீட்சி அளிக்கவும், இன நல்லிணக்கத்தையும், சமாதானத்தையும் கருதி பிறந்திருக்கும் புதுவருடத்திலாவது அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் இலக்கு ஊடகத்தில் இருந்து தொடர்பு கொண்டு வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கரு த்து தெரிவிக்கையில்,

தென் ஆபிரிக்காவின் நிறவெறிக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் ,வெள்ளை மற்றும் கறுப்பு இன மக்களுக்கு இடையில் சமாதானத்தையும், பாதிக்கப்பட்ட கறுப்பு இனத்தவருக்கு அரசியல் நீதியையும், இரு இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்த உழைத்து வெற்றி கண்ட பேராயர் டெஸ்மன்ட் டுட்டு அவர்களின் இறுதி மரணச்சடங்கு பிறந்திருக்கும் புது வருடத்தின் முதல் நாளில் நடந்திருக்கிறது. அவர் சர்வதேசத்துக்கு விட்டு சென்ற நல்லிணக்க செயற்பாட்டைப் புதைக்கக் கூடாது. அது தொடர்வதற்கான செயற்பாட்டில் இலங்கை ஆட்சியாளர்கள் நாட்டம் கொண்டுள்ளனர் என்பதற்கு அடையாளமாக அரசியல் கைதிகளை விடுதலை செய்வது அவருக்கு செய்யும் கௌரவமாக அமைவதோடு அரசியல் நீதியை தேடிக் கொண்டிருக்கின்ற தமிழ் மக்களுக்கு எதிர்காலம் தொடர்பில் நம்பிக்கையையும் ஏற்படுத்தும். அரசியல் தீர்வுக்காக சர்வதேசத்தை நோக்கி தமிழ் மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்” என்றார்.

Posted in Uncategorized

புத்தாண்டில் இராணுவம் வகிக்கப்போகும் வகிபாகம் என்ன? ஆபத்தான சமிக்ஞைகள் என்கிறார் கலாநிதி தயான்

புத்தாண்டில் இலங்கை அரசியல், மற்றும் கட்டமைப்புக்களில் இலங்கை இராணுவம் வகிக்கப்போகும் வகிபாகம் தொடர்பான ஆபத்தான சமிக்ஞைகள் வெளிப்பட்டுள்ளன என்று கலாநிதி தயான் ஜயத்திலக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

1931 ஆம் ஆண்டிலிருந்து ஜனநாயக நாடாக அடையாளப்படுத்தி வரும் இலங்கையில் இராணுவம் வெளிப் படுத்தியுள்ள சமிக்ஞைகள் 2022 ஆம் ஆண்டு ஆபத்தான நிலைமைகளை நோக்கியதாக அமைந்துள்ளன. புத்தாண்டை முன்னிட்டு இராணுவத்தினது நாட்காட்டியும், நாட்குறிப்பும் முக்கிய பிரமுகர்கள் உள்ளிட் டவர்களுக்கு பகிரப்பட்டது. இதில் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவின் புகைப்படம் பொறிக் கப்பட்டு ஆங்காங்கே பல்வேறுபட்ட பொன்மொழிகளும், பழமொழிகளும் பதிப்புச் செய்யப்பட்டுள்ளன.

குறிப்பாக, பழமொழிகள் மற்றும் பொன்மொழிகள் சார்லஸ் டிக்கன்ஸ், மார்ட்டின் லூதர் கிங் போன்றவர்க ளினது பொன்மொழிகளும் காணப்படுகின்றன. ஆனால் வழக்கத்துக்கு மாறாக, “இலங்கை இராணுவம் வளமான மற்றும் நிலையான தேசத்தை உரு வாக்கி பராமரிக்கும் திறன் கொண்டது’ என்ற வாசகம் பதிப்புச் செய்யப்பட்டுள்ளது. இவ்விதமான வாசகத்தை சீனவோ, ராஷ்யாவோ வெளிப்படுத்தவில்லை. குறி;ப்பாக இராணுவமான மக் கள் சீனப் படையோ அல்லது ரஷ்யா இராணுவமோ கூட வெளிப்படுத்தியது கிடையாது.

அவ்வாறிருக்கையில், இலங்கை இராணுவம் முதன்முதலாக தேசத்தை பாதிப்பது உள்ளிட்ட விட யத்தைக் குறிப்பிட்டுள்ளது. இதுவரையில் இவ்வித மாக பிரஸ்தாபிக்காத இராணுவம் இப்போது தமது நிலைப்பாடுகளை வெளிப்படுத்துவதன் பின்னணியை கூர்ந்து அவதானிக்க வேண்டியுள்ளது. அதுநேரம், கிளிநொச்சிக்குச் சென்ற இராணுவத் தளபதி சவேந்திர சில்வா அங்கு புதிதாக நிறுவப்பட்ட கோப்ஸ் கட்டமைப்பினரைச் சந்தித்தபோது பசுமை விவசாயத்தை முன்னெடுத்துச் செல்வதற்கும் அது குறித்த விழிப்புணர்வுகளை விவசாயிகளுக்கு வழங்கு வதற்கும், இராணுவம் ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும் என்று கோரியுள்ளதோடு ஜனாதிபதி கோட் டாபய ராஜபக்வின் இலக்கை நோக்கி நகர்வதற்கு ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும் என்றும் உரை யாற்றி உள்ளார்.

இவ்விதமான நிலைமைகள் எல்லாம் அடுத்த ஆண்டு இராணுவம் எவ்விதமாகச் செயற்பட போகின் றது. அதன் வகிபாகம் என்ன என்ற சமிக்ஞைகளை தெளிவாக வெளிப்படுத்துவனவாக உள்ளது. அதே நேரம், ஜனநாயக நாடொன்றில் இராணுவத்தின் இவ் விதமான பிரதிபலிப்புக்கள் மிகவும் ஆபத்தானவை“ என்றார்.

Posted in Uncategorized

கறைபடிந்த வரலாற்றுத் தவறை மேற்கொள்ளத் துணைபோக வேண்டாம் – தமிழ் தேசிய மக்கள் முன்னணி

இனப்படுகொலை அரசின் பிரதிநிதிகளை பட்டத்திருவிழாவுக்கு விருந்தினர்களாக அழைக்கும் முயற்சிக்கு கண்டனம் தெரிவிப்பதாக அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வல்வெட்டித்துறை மண்ணில் இதுவரை காலமும் தமிழர் பண்பாட்டைப் பிரதிபலிக்கும் வகையில், பட்டத்திருவிழா மிகச் சிறப்பாக நடாத்தப்பட்டு வந்திருந்தது.

வழமைக்கு மாறாக, இந்த ஆண்டு தமிழின விரோத சக்திகளின் வழிநடத்தலில், தமிழினத்தின் வாழ்வுரிமையைச் சிதைத்த, இனவழிப்பு அரசின் பிரதிநிதிகளை விருந்தினர்களாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அரச முகவர்களின் சதிமுயற்சிக்குள், ஏற்பாட்டுக் குழுவினரை சிக்க வைத்துள்ள இந்த செயற்பாடானது தமிழின பண்பாட்டு அழிப்பின் தொடர் முயற்சி என்றும் அவர்கள் சாடியுள்ளனர்.

தமிழர் வரலாற்றில் பின்னிப்பிணைந்த பாரம்பரிய நிகழ்வான பட்டத்திருவிழாவில், இவ்வாறான கறைபடிந்த வரலாற்றுத் தவறை மேற்கொள்ளத் துணைபோக வேண்டாம் என ஏற்பட்டு குழுவிடம் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மைச்சரவை அரசியலமைப்புக்கு முரணானது – ஒமல்பே சோபித தேரர்

தற்போதைய அரசாங்கத்தின் அமைச்சரவை அரசியலமைப்புக்கு முரணானது என ஒமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.

எம்பிலிப்பிட்டியவில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அரசியலமைப்பின் 20வது திருத்தச் சட்டத்தின் கீழ் அமைச்சர்களாக பதவிப் பிரமாணம் செய்யாதவர்கள் தமது பதவிகளில் செயற்பட முடியாது என குறிப்பிட்டார்.

தற்போதைய நிதியமைச்சர் மாத்திரமே 20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் கீழ் பதவிப்பிரமாணம் செய்துள்ளதாக தேரர் குறிப்பிட்டார்.

எனவே புதிய அரசியலமைப்பு திருத்தத்தின் கீழ் சத்தியப் பிரமாணம் செய்யாதவர்களுக்கு தமது பதவிகளில் செயற்பட அதிகாரம் இல்லை எனவும் சோபித தேரர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை கெரவலபிட்டிய மின்னுருப்பதி நிலையம், துறைமுக நகர ஒப்பந்தங்கள் மற்றும் கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தை வெளிநாட்டுக்கு கையளித்தமை உள்ளிட்ட அனைத்தும் அரசியலமைப்புக்கு முரணானவை என குறிப்பிட்டார்.

Posted in Uncategorized

இந்தியாவில் இருந்து நாங்கள் இங்கு வரவில்லை – பாராளுமன்ற உறுப்பினர் எஸ் சிறிதரன்

இந்தியாவிலிருந்து நாங்கள் இங்கு வரவில்லை. எங்களிலிருந்துதான் இந்தியாவில் சென்று திருமணம் செய்த வகைகளால் எங்களிற்கும் இந்தியாவிற்கும் அந்த தொப்புள் கொடி உறவு உள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் எஸ் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

இந்த புதிய ஆண்டியே புதிய இலட்சினை மற்றும் புதிய கொடியுடன் ஆண்டினை தொடங்கியிருக்கின்றீர்கள். ஒரு இனத்தினுடைய கொடி என்பது மிக முக்கியமானது. ஒரு இனம் தேசிய இனமா அல்லது இன குழுவா அல்லது அவர்கள் வெறுமனே பேசுகின்ற சிறிய அளவிலான குழுவாகவே புாய்விடுவார்களா என்றெல்லாம் உலகத்திலே பெரும் ஆய்வுகள் உள்ளது.

இரண்டாவது உலகப்போர் முடிந்ததற்கு பிற்பாடுதான் உலகத்தினுடைய சுயநிர்ணய உரிமை தொடர்பில் பேசப்பட்டது. முக்கியமாக ஒரு நாடு ஐக்கிய நாடுகள் சபையில் அங்கத்துவம் உள்ள நாடாக இருந்தால் அந்த நாட்டுக்குள் இன் சுயவுரிமை உள்ள நாடு பிரிய முடியாது. ஏனெனில் ஐக்கிய நாடுகள் சபையில் அங்கத்துவம் பெற்றிருந்தால் அதுதான் அவர்களின் உயநிர்ணய உரிமை.

அவர்களின் தாயகம் அதுதான். அந்த நாட்டுக்குள்ளேயே அவர்கள் அடங்கிக்கொள்ள வேண்டும். இது உலக பந்திலே பெரும் சர்ச்சைகளை கொண்டு வந்தது. பல்வேறுபட்ட மொழி பேசுகின்ற மக்கள் வாழ்கின்ற, பல காலாச்சாரம் உள்ள, பல தேசிய இனங்களை கொண்ட நாடுகள் உலகத்தில் உள்ளது.

இலங்கையில் மரபுவழி தாயக அடைப்படையில் இனத்தின் அடையாளத்தை கொண்டவர்கள் தமிழர்கள். எங்களிற்கான மரபுவழி தாயகம், பூர்வீக வரலாற்றுவழி நிலம் எங்களிற்கு உண்டு. நாங்கள் வந்தேறு குடிகள் அல்ல. நாங்கள் இந்தியாவிலிருந்து வந்தவர்கள் அல்லது இந்திய தொப்புள்கொடி உறவுகள் என சிலர் வித்தியாசமாக பார்க்கின்றார்கள்.

எங்களிலிருந்துதான் இந்தியாவில் சென்று திருமணம் செய்தவகைகளால் எங்களிற்கும் இந்தியாவிற்கும் அந்த தொப்புள் கொடி உறவு உள்ளது. ஈழத்து மண்ணிலே நாங்கள் பஞ்ச ஈச்சரங்களை வைத்து இல்கையில் முதல் தோன்றிய மூத்த குடிகளாக நாங்கள் வாழ்ந்தவர்கள்.

ஆகவே எங்களிற்கான இந்த நில அடையாளம், நாங்கள் இன்று பேசுகின்ற செம்மொழியும் எமக்கான அடையாளமாகும். உலகத்தில் இன்று வாழுகின்ற எல்லா மொழிகளிற்கும் தாய் மொழியான 6 மொழிகளில் மெ்மொழியான தமிழ் மொழியும் உள்ளது. அந்த மொழியை அடிப்படையாகக்கொண்ட இனம் நாங்கள்.

ஆகவே எங்களிற்கான மொழி அடையாளம் நிலையானதும், நீடித்து நிலைக்ககூடியதும், அழிக்கப்படமுடியாததுமான மொழி அடையாளத்தைக்கொண்டவர்கள் நாங்கள். எங்களிற்கான உடை, பண்பாடு, காலாச்சாரம், தொடங்குகின்ற முறை, பண்டிகைகளை கொண்டாடுகின்ற முறை எல்லாவற்றிலும் எமக்கு ஒரு ஒழுங்கு முறை உண்டு.

அந்த ஒழுங்குமுறைகளு்மு, நெறிப்படுத்தலும் எங்களுக்கென்றொரு அடையாளமாக கொள்ளப்படுகின்றது. அதனால்தான் மொழி, பண்பாடு கொண்ட தமிழ்த் தேசிய இனம் இந்த மண்ணிலே ஒரு அடையாளத்தை கொடுத்திருக்கின்றது.

அதே அடையாளம் கரைச்சி பிரதேச சபை இழந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் நீங்கள் இன்று உங்களுக்கென்று ஒரு கொடியை நிலையானதாக வரைந்திருக்கின்றீர்கள். கொடியோடு சேர்ந்து உங்களிற்கான இலச்சினை திருத்தப்பட்டிருக்கின்றது. ஒரு நிலையான இலச்சினை வரையப்பட்டிருக்கின்றது. குறித்த பணி மிகப்பெரிய உள்ளதமான பணி என அவர் இதன்போது தெரிவித்தார்.

பைடனுக்கான தமிழர்கள், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம்

சீனர்களைத் தீவில் இருந்து வெளியேற்றும் வகையில், தமிழர்களின் இறையாண்மையை மீட்டெடுக்க அமெரிக்காவுடன் ஒத்துழைக்குமாறு பிரதமர் மோடியிடம் பேசுமாறு பைடனுக்கான தமிழர்கள் அமைப்பினர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

கடிதத்தின் நகல் இதோ:

Re: வடகிழக்கு இலங்கையில் தமிழர்களின் இறையாண்மை, சாத்தியமான சீன அச்சுறுத்தலில் இருந்து பாதுகாக்கும்.

டிசம்பர் 28, 2021

முதல்வர் மு.க.ஸ்டாலின்
தமிழக முதல்வர் இல்லம்
25/9, சித்தரஞ்சன் சாலை
செனோடாப் சாலை,
ஆழ்வார்பேட்டை,
சென்னை – 600018, தமிழ்நாடு, இந்தியா

அன்பான மதிப்புக்குரிய முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு,

உலகிலேயே தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே ஒரு தமிழ்த் தலைவராக திரு.ஸ்டாலின், தமிழர் தாயகமான வடகிழக்கு இலங்கையில் சீனர்கள் சீனக் ஊடுருவல் நிறுத்த மோடியைப் பயன்படுத்த வேண்டும்.

இலங்கையில் துன்பப்படும் தமிழர்களுக்கு வழிகாட்டவும் உதவவும் இலங்கையில் உள்ள தமிழர்கள் தமிழ்நாட்டின் தலைமையை நம்பியிருக்கிறார்கள். தமிழ்நாட்டுத் தமிழர்கள் இலங்கையில் உள்ள தமிழர்களுக்குத் தேவைப்படும்போது பலமுறை உதவியதை தமிழர்கள் மறப்பதில்லை.

அண்மையில் கொழும்புக்கு அருகில் மீட்கப்பட்ட துறைமுக நகரத்தை கையகப்படுத்திய சீனர்கள் இலங்கையில் காலடி எடுத்து வைத்துள்ளனர். அதற்கு முன்னர் அம்பாந்தோட்டை துறைமுகத்தின் மீது கட்டுப்பாட்டை அவர்கள் பெற்றனர். இப்போது இந்தியாவிற்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையில் அமைந்துள்ள மூன்று தீவுகளில் சீனர்கள் தங்களை உட்பொதித்து, யாழ்ப்பாணத்திலுள்ள பருத்தித்துறையைக் கைப்பற்றுவோம் என்று அச்சுறுத்தியுள்ளனர்.

சீனர்கள் தமிழ்நாட்டிலிருந்து வெகு தொலைவில் இல்லை, நெடுந்தீவில் 46 கிலோமீட்டர் தொலைவில் உள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் உள்ள சீனர்கள் தமிழ்நாட்டிற்கும் முழு தென்னிந்தியாவிற்கும் உளவியல் அச்சுறுத்தலையோ, உடனடியான பாதிப்பையோ, ஆபத்தையோ அல்லது வலியையோ கொண்டு வருவார்கள். இது பொருளாதாரத்தையும் அன்றாட அமைதியான வாழ்க்கையையும் பாதிக்கும்.

சீன அரசாங்கம் இரக்கமற்ற மற்றும் சர்வாதிகாரமானது. இந்த நேரத்தில் சீனர்கள் தமிழர் பகுதிகளின் மறுபக்கம், சிங்களவர்கள் பகுதிக்குள் தள்ளுவது நல்லது.

வடகிழக்கில் இருந்து சீனர்களைத் தள்ளிவிடுவதன் மூலம், வடகிழக்கு இந்தியாவிற்கும் சிங்கள-சீன இலங்கைக்கும் இடையில் ஒரு இடையகமாக மாறும். இதன் மூலம் இந்தியா நேரடியாக தங்கள் நிலப்பகுதியை பாதுகாக்க முடியும்.

அதைச் செய்ய, வடக்கு கிழக்கில் வாழும் தமிழர்களின் இறையாண்மையை அங்கீகரிக்க அமெரிக்காவுக்கு இந்தியா உதவ வேண்டும்.

தமிழர் தாயகத்தை இந்தியா அங்கீகரிப்பதன் மூலம் போர்த்துக்கேய படையெடுப்பிற்கு முன்பிருந்த 1619ஆம் ஆண்டிற்குச் சென்றுவிடுமோ என்ற அச்சம் தீர்ந்துவிட்டது என்ற முடிவுக்கு சிங்களம் வந்துவிடும்.

மகா வம்சம், சிங்களப் புராணம், சிங்கள மூதாதையர்கள் காட்டு விலங்கு சிங்கங்களால் பிறந்தார்கள் என்று கூறுகிறது. தமிழர்கள் பூர்வீகக் குடிகளாக இருந்தபோது அவர்களின் மூதாதையர்கள் இந்த தீவுக்கு வந்தாலும், புதிதாக குடியேறியவர்களுக்கு தமிழர்கள் தீங்கு செய்யவில்லை என்றாலும், இந்த தீவு சிங்கள பௌத்தர்களுக்கு சொந்தமானது என்று அதே புராணம் சிங்களவர்களுக்கு கூறியது.

இளவரசர் விஜன் தீவுக்கு வருவதற்கு முன்பு தமிழர்கள் இருந்தார்கள் என்பதை நிரூபிக்க, கிமு 177 இல் இரண்டு தமிழ் மன்னர்கள் அநுராதபுரத்தில் ஆட்சியைக் கைப்பற்றி இருபத்தி இரண்டு ஆண்டுகள் ஆட்சி செய்தனர் என்பதற்கு ஒரு வரலாற்று சான்று உள்ளது, அதைத் தொடர்ந்து பத்தாண்டுகளுக்குப் பிறகு மற்றொருவர் ஏலரா. மிக நீண்ட காலம் – நாற்பத்தி நான்கு ஆண்டுகள்[3] அதிகாரத்தில் தன்னைத் தக்க வைத்துக் கொண்டவர்.

எனவே இந்த மகா வம்சம், சிங்களப் புராணங்களே தமிழர்களின் இறையாண்மையை சிங்களவர்கள் விரும்பாததற்குக் காரணம்.

இலங்கையில் உள்ள தமிழர் பிரதேசங்களில் சீன படையெடுப்பு இறுதியில் தமிழகத்திலும் பரவும். சீனர்கள் உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரம், அவர்கள் யாரையும் வாங்க முடியும்.

இது தமிழ்நாட்டின் தமிழ் கலாச்சாரத்தையும் வரலாற்றையும் அழித்துவிடும். சீனப் படையெடுப்பு சீன மக்களை காளான்கள் போல் பெருக்கியது. அவற்றை அகற்றுவது கடினமாக இருக்கும்.

எனவே, தமிழர்களின் இறையாண்மைக்காக அமெரிக்காவுடன் இணைந்து செயல்படத் தவறினால், இந்தியா எதிர்கொள்ளும் ஆபத்து குறித்து முதல்வர் ஸ்டாலின் புதுடெல்லி சென்று விளக்கமளிக்க வேண்டும், இது தீவில் நடக்கும் அனைத்து சீன நாடகங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும்.

தமிழ் ஈழமும், தமிழகமும் இந்திய அரசியல் ஸ்திரத்தன்மைக்கும், இறையாண்மைக்கும் பாதிப்பை ஏற்படுத்தாது என்பதை முதல்வர் ஸ்டாலின் விளக்க வேண்டும். தமிழீழம் கொசோவோவின் மாதிரியாக இருக்கும், இந்திய அரசியலில் ஒருபோதும் தலையிடாது, தமிழர்களின் இறையாண்மையைப் பெற அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்றினால் நாங்கள் இந்தியாவுக்கு விசுவாசமாக இருப்போம்.

செர்பியாவில் இருந்து கொசோவோ சுதந்திரம் பெற்ற பிறகு, கொசோவோவில் உள்ள அல்பேனியர்களும், அல்பேனியாவில் உள்ள அல்பேனியர்களும் தங்களைச் சுற்றியுள்ள எந்த நாட்டையும் அச்சுறுத்தியது இல்லை, மேலும் அல்பேனியாவுடன் இணைந்து பெரிய அல்பேனிய அரசை உருவாக்க முயற்சிக்கவில்லை என்பதற்கு ஒரு உதாரணத்தை பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் விளக்க வேண்டும்.

ஒரு புதிய நாடு எப்போதும் எல்லைகளைத் தீர்ப்பதற்கு ஒரு சிறிய போர் இருக்கும். தமிழீழம் மற்றும் சிங்களர் இலங்கைக்கும் இதேதான் நடக்கும்.. இந்தப் போர் சீனர்களை இலங்கையை விட்டு துரத்தும். தமிழ்ப் புலிகள் சிங்களவர்களுடன் போரிட்ட போது இலங்கைத் தீவிற்குள் எந்த நாடும் வரவில்லை என்பது நம் அனைவருக்கும் நினைவிருக்கிறது.

தமிழ் ஈழத்தை அங்கீகரித்து சீன படையெடுப்பில் இருந்து இந்தியாவை காக்க முதல்வர் ஸ்டாலின் தலைமை தாங்குவார் என நம்புகிறோம்.
நன்றி.

உண்மையுள்ள,
பைடனுக்கான தமிழர்கள்

சுட்டுக்கொல்லப்பட்ட 5 மாணவர்களின் 16 வது நினைவஞ்சலி தினம்

2006 ஆம் ஆண்டு திருகோணமலை கடற்கரைக்கு முன்பாக சுட்டுக்கொல்லப்பட்ட 5 மாணவர்களின் 16 வது நினைவஞ்சலி தினம் நேற்று (02) மாலை அனுஷ்டிக்கப்பட்டது.

திருகோணமலை கடற்கரைக்கு முன்பாக காந்தி சிலை சுற்று வட்டத்தில் இவ்வாறு சுட்டுக் கொலை செய்யப்பட்ட மாணவர்களின் உறவினர்கள் நண்பர்கள் மற்றும் திருகோணமலை மாவட்ட உணர்வாளர்களின் பங்களிப்புடன் அமைதியான முறையில் விளக்கேற்றி மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

இவ்வாறு படுகொலை செய்யப்பட்ட திருகோணமலை கோணேஸ்வரா இந்துக் கல்லூரியின் 5 மாணவர்கள் உள்ளடங்களாக 7 மாணவர்கள் சுடப்பட்டு 5 மாணவர்கள் ஸ்தலத்திலேயே உயிரிழந்த நிலையில் 2 மாணவர்கள் உயிர் தப்பியிருந்தனர்.

அன்றைய நாள் திருகோணமலை மண்ணில் கருப்பு தினமாக அனுஷ்டிக்கபட்டிருந்தது.

இவ்வாறு உயிரிழந்த 5 மாணவர்களும் 2005 ஆம் ஆண்டு உயர்தரத்தில் பரீட்சை எழுதி பெறுபேறுக்காக காத்திருந்த வேளையில் திருகோணமலை நகரை அண்டிய கடற்கரைக்கு முன்னால் இவ்வாறு சுட்டுக் கொலை செய்யப்பட்டனர்.

இவ்வாறு மனிதாபிமானமற்று படுகொலை செய்யப்பட்ட மாணவர்களின் பெற்றோர்களினால் வழக்கு தொடரப்பட்டு சந்தேகத்தின் பேரில் இலங்கை பாதுகாப்புப்படையின் படை வீரர்கள் கைது செய்யப்பட்டு போதிய சாட்சியங்கள் இல்லை என விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.

இவ்வாறு படுகொலை செய்யப்பட்ட மாணவர்களில் ஒருவரின் தந்தையான வைத்தியர் மனோகரன் என்பவரினால் ஐக்கிய நாடுகள் சபை வரை கொண்டு செல்லப்பட்ட போதிலும் 16 வருடங்கள் கடந்த நிலையில் இவ்வாறு படுகொலை செய்யப்பட்ட மாணவர்களுக்கான சரியான நீதி கிடைக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.