அடுத்த ஆண்டுகளில் பாரிய கடன் நெருக்கடியைச் சந்திக்கப்போகும் இலங்கை!

புதிய வெளிநாட்டு உதவிகள் மற்றும் கடன்களை பெற்றுக்கொள்ள முடியாத நிலைமைக்கு இலங்கை தள்ளப்பட்டுள்ள காரணத்தினால், 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் இலங்கை அரசாங்கம் தனது வெளிநாட்டுக் கடன்களை செலுத்துவதில் பாரிய நெருக்கடி நிலைமையை எதிர்கொள்ளவுள்ளதாகவும், 2022ம் ஆண்டு முதல் 2026ம் ஆண்டு வரையான காலப்பகுதிக்குள் கடன்கள் மற்றும் கடனுக்கான வட்டியென வெளிநாட்டு மொத்த நாணயக்கடனாக 26 பில்லியன் டொலர்களை இலங்கை அரசாங்கம் செலுத்த வேண்டி வரும் என சர்வதேச தர மதிப்பீட்டு நிறுவனமான ‘ஃப்ட்ச் ரேட்டிங்’ (Fitch Ratings) நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

அத்தோடு இலங்கையை தமது தரவரிசையிலிருந்து ஒரு படி குறைத்துள்ளதாகவும், அதற்கமைய ‘சி.சி.சி’ தரப்படுத்தலில் இருந்து ‘சி.சி’ தரப்படுத்தலுக்கு இலங்கை பின்தள்ளப்படுவதாகவும் அறிவித்துள்ளது. கொவிட் -19 வைரஸ் பரவல் மூலமாக தாக்கங்களின் பின்னர் இலங்கையின் அந்நிய செலாவணி பற்றாக்குறையினால் இலங்கை இந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டில் 1.5 வீத வீழ்ச்சியை அறிவித்துள்ள நிலையில், தற்போது குறித்த நிறுவனம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இலங்கையை தரவரிசையில் பின்தள்ள அவர்கள் கூறியுள்ள காரணமானது, அந்நிய செலாவணியில் ஏற்பட்ட வீழ்ச்சி காரணமாக, உணவு, எரிபொருள் மற்றும் மருந்து ஆகியவற்றிற்கு தட்டுப்பாடு காணப்படுவதாகவும், அதேபோல் இலங்கையின் அன்னிய செலாவணி கையிருப்பானது, இலங்கை மத்திய வங்கியின் அதிக இறக்குமதி கட்டணம் மற்றும் வெளிநாட்டு நாணய தலையீடு ஆகியவற்றின் காரணமாக தமது இறுதி மதிப்பீட்டிற்கு அமைய எதிர்பார்த்ததை விடவும் மிக மோசமாக குறைவடைந்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளதுடன், அந்நியச் செலாவணி கையிருப்பு ஆகஸ்ட் மாதத்திலிருந்து தொடர்ச்சியாக சுமார் 2 பில்லியன் அமெரிக்க டொலர்களினால் குறைவடைந்துள்ளதுடன், நவம்பர் மாதத்தின் இறுதியில் இது 1.6 பில்லியன் அமெரிக்க டொலர்களாக குறைவடைந்துள்ளது.

ஒரு மாதத்திற்கும் குறைவான தற்போதைய வெளிப்புறக் கொடுப்பனவுகளுக்கு (CXP) சமமானதாக காணப்படுகின்றது எனவும், ஒப்பீட்டளவில் இது 2020 ஆம் ஆண்டின் இறுதியில் இருந்து சுமார் 4 பில்லியன் அமெரிக்க டொலர்களினால் அந்நியச் செலாவணி கையிருப்பில் வீழ்ச்சியைக் வெளிப்படுத்தியுள்ளது என்பதையும் ‘ஃப்ட்ச் ரேட்டிங்’ நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், புதிய வெளிநாட்டு உதவிகள் மற்றும் கடன்களை பெற்றுக்கொள்ள முடியாத நிலைமையில் இலங்கை உள்ள காரணத்தினால், 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் இலங்கை அரசாங்கம் தனது வெளிநாட்டுக் கடன்களை செலுத்துவதில் பாரிய நெருக்கடி நிலைமை இருக்கும் என்பதையும் தாம் அவதானித்துள்ளதாக குறித்த நிறுவனம் கூறியுள்ளதுடன், தற்போதுள்ள நிலைமையில் இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு கடந்த நவம்பர் மாத இறுதியில் 1.58 பில்லியன் டொலர் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், 2022ம் ஆண்டு ஜனவரி மாதம் 500 மில்லியன் டொலரையும், 2022ம் ஆண்டு ஜுலை மாதம் 1.0 பில்லியன் டொலரையும் மீள செலுத்த வேண்டியுள்ள காரணத்தினால் இலங்கைக்கு இது பாரிய சவாலை ஏற்படுத்தும் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளது.

அதேபோல், 2022ம் ஆண்டு முதல் 2026ம் ஆண்டு வரையான காலப்பகுதிக்குள் கடன்கள் மற்றும் கடனுக்கான வட்டியென வெளிநாட்டு மொத்த நாணயக்கடனாக 26 பில்லியன் டொலர்களை இலங்கை அரசாங்கம் செலுத்த வேண்டி வரும் எனவும் அந்த நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்திய நிவாரணப்பொதி, கட்டார் மத்திய வங்கியுடனான பரஸ்பர பரிமாற்றல் வசதி அடிப்படையிலான கடன், பிராந்திய ஒத்துழைப்புகள் மூலமாக நாணய பரிமாற்றல், சீன வங்கியின் கடன் வசதிகளை பெற்றுக்கொண்டாலும் கூட 2022 ஆம் ஆண்டில் முழுமையான கடன்களை அடைக்க போதுமான வேலைத்திட்டம் இல்லாதமை அரசாங்கத்திற்கு சவாலாக இருக்கும் என தாம் கருதுவதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதேபோல் இலங்கை தனது தேசிய வருவாயை கூட்டிக்கொள்ளும் துறைகளிலும் பாரிய நெருக்கடிகளை சந்திக்க நேர்ந்துள்ளத்து. குறிப்பாக கொவிட் -19 வைரஸ் தொற்றுக்கு பின்னர் இலங்கையின் பிரதான வருவாய் துறையான சுற்றுலாத்துறை போன்றன வீழ்ச்சி கண்டுள்ளன. 2021 ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் பற்றாக்குறை 5.7 வீதமாக காணப்பட்ட நிலையில், 2022 ஆம் ஆண்டில் இது 2.1 வீதத்தால் மேலும் குறைவடைவதுடன், 2022 ஆம் ஆண்டில் 4 வீதமாக பற்றாக்குறை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக கூறியுள்ளது.

Posted in Uncategorized

இனப்பிரச்சினைக்குத் தீர்வு கண்டால் மட்டுமே நாட்டுக்கு எதிர்காலம் உண்டு!

“தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு கண்டால் மட்டுமே இந்நாட்டுக்கு எதிர்காலம் உண்டு. இன ஐக்கியம் இல்லாவிட்டால் ஒருபோதும் நாட்டை அபிவிருத்தி நோக்கி அழைத்துச்செல்ல முடியாது.”

– இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது, அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்திக்கொள்வதற்கு தமிழ் பேசும் கட்சிகள் ஒன்றிணைந்துள்ளமை தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“தமிழ், முஸ்லிம் மக்களுடன் நாம் எவ்வளவு சகோதரத்துவத்துடன் வாழ்கின்றோம் என்பதில்தான் இந்த நாட்டின் வளர்ச்சி தங்கியுள்ளது. இன ஐக்கியம் இல்லாவிட்டால் எந்தவொரு நாட்டையும் கட்டியெழுப்ப முடியாது. 1956 இல் தனிச்சிங்கள மொழி சட்டம் கொண்டுவரப்பட்டு எமது நாட்டில் அழிவுக்கான பாதை ஆரம்பித்துவைக்கப்பட்டது. ஒரு மொழியென்றால் இரு நாடுகள், இரு மொழிகளென்றால் ஒரு நாடு என அன்றே கொல்வின் ஆர்.டி.சில்வா எடுத்துரைத்தார். அவர் கூறியது போன்று இங்கு நடந்தது.

சிங்கப்பூரின் தந்தையென போற்றப்படும் லீகுவான், முதலில் இன ஐக்கியத்தையே கட்டியெழுப்பினார். சிங்கப்பூரில் 75 வீதம் சீனர்கள் வாழ்ந்தாலும் மலேசிய மொழியில் தேசிய கீதம் எழுதப்பட்டது. இந்தியருக்கு வெளிவிவகார அமைச்சு பதவி வழங்கப்பட்டது. இப்படிதான் இனங்களுக்கிடையில் நம்பிக்கையை ஏற்படுத்தி, இன ஐக்கியம் மூலம் சிங்கப்பூரை லீ குவான் கட்டியெழுப்பினார்.

ஆனால், எமது நாட்டில் இனங்களுக்கிடையில் பிளவை ஏற்படுத்தினர். அதனால்தான் நாடு முன்னேறவில்லை. எனவே, இனியாவது பொது இணக்கப்பாட்டுக்குவந்து பேச்சு நடத்தி, பிரச்சினையைத் தீர்க்காவிட்டால் இந்த நாட்டுக்கு எதிர்காலம் இல்லை. இதனை நான் 70 முதல் வலியுறுத்தி வருகின்றேன். அதற்காகக் குண்டுத் தாக்குதலும் நடத்தினர். இன்றும் அதையே சொல்கின்றேன்” – என்றார்.

அடையாளப் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட வைத்தியர்கள் தீர்மானம்!

24 மணித்தியால அடையாளப் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாளைய தினம்(திங்கட்கிழமை) மன்னார், திருகோணமலை, நுவரெலியா, இரத்தினபுரி மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் இந்த அடையாளப் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படவுள்ளது.

காலை 8 மணி முதல் 24 மணித்தியாலங்களுக்கு இந்த அடையாளப் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படவுள்ளது.

பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டாலும், அவசர சிகிச்சைப் பிரிவுகளின் நடவடிக்கைகள் முன்னெடுக்கடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

43 பேரின் விடுதலையை வலியுறுத்தி வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக ராமேஸ்வரம் மீனவர்கள் அறிவிப்பு!

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 43 பேரை விடுதலை செய்ய கோரி நாளை முதல் ராமேஸ்வரம் மீனவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

நேற்று ராமேஸ்வரத்தில் இருந்து 400க்கும் அதிகமான விசைப்படகுகளில் மீன்பிடி அனுமதி சீட்டு பெற்ற மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள்  சென்றனர்.

மீனவர்கள்  நேற்று சுமார் 9 மணியளவில் நெடுந்தீவுக்கு தென்கிழக்கே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அப்பகுதியில் ரோந்து பணியியல் ஈடுபட்டு கொண்டிருந்த இலங்கை கடற்படையினர்  மீன்பிடிக்க சென்ற சக்தி, பிரபு, காளிமுத்து, குமார் உள்ளிட்ட 43 மீனவர்களை படகுடன்  கைது செய்து யாழ்ப்பாண மாவட்ட மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.

பின்னர் மீனவர்களுக்கு பரிசோதனை செய்து யாழ்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் சிறையில் அடைக்கப்படவுள்ளனர்.

இதனை கண்டித்து இன்று ராமேஸ்வரம் விசை படகு மீனவர்கள் மீன் பிடி துறைமுகத்தில் உள்ள  மீன்பிடி அனுமதி சீட்டு வழங்கும் அலுவலகத்தில் அவசர ஆலோசனை கூட்டம் நடத்தினர்.

கூட்டத்தில் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள  43 ராமேஸ்வரம் மீனவர்களையும் படகுடன் விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி நாளை முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் செய்ய முடிவு செய்தனர்.

மேலும் ராமேஸ்வரம் மத்திய பேருந்து நிலையம் எதிரே சிறைபிடித்து செல்லப்பட்ட மீனவ குடும்பத்தினருடன்  ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தவும் முடிவு செய்துள்ளனர்.

மீனவர்களின் இந்த திடீர் வேலை நிறுத்தப்போராட்டத்தால் சுமார் 800க்கும் மேற்பட்ட மீன் பிடி விசைப்படகுக் கடற்கரையில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளது.

மேலும் இந்த வேலை நிறுத்தப்போராட்டத்தால் 50 ஆயிரம் மீனவர்களும் ஒரு இலட்சம் மீன் பிடி சார்பு தொழிலாளர்களும் வேலையிழந்துள்ளனர்.

மாகாண சபை தேர்தல் ஒத்திவைக்கப்படாது என்கிறது அரசாங்கம்!

மாகாண சபை தேர்தலினை ஒத்திவைக்கும் தீர்மானம் இல்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

கெலிஓயா பகுதியிலுள்ள விகாரை ஒன்றில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அமைச்சர் தினேஷ் குணவர்தன இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

மாகாண சபைத் தேர்தலை ஒத்திவைக்கும் யோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Posted in Uncategorized

13வது திருத்தம் தமிழர்களுக்கு எந்தப் பாதுகாப்பையும் வழங்கவில்லை – காணாமல் போனவர்களின் உறவுகள்!

13வது திருத்தம் தமிழர்களுக்கு எந்தப் பாதுகாப்பையும் வழங்கவில்லை என வவுனியாவில் கடந்த 1767 வது நாளாக தொடர் போராட்டத்தினை முன்னெடுத்துள்ள தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.

இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “கடந்த 74 வருடங்களாக ஒற்றையாட்சி அரசில், தமிழர்கள் பல உரிமைகளை இழந்தனர் மற்றும் ஒரு அரசியல் ஆதாயம் பெறவில்லை. ஆக்கிரமிப்பு மற்றும் ஒடுக்குமுறையுடன் யுத்தம் மற்றும் இனப்படுகொலையின் தொடர்ச்சியின் பின்னர், தமிழர்கள் வடக்கு கிழக்கில் ஒரு தமிழ் இனமாக வாழ்வதற்கு மூன்று அடிப்படை கட்டமைப்புகள் தேவை.

பாதுகாப்பான தாயகம் வேண்டும், கொலைகள், கடத்தல், பயங்கரவாதச் சட்டம், நில அபகரிப்பு, தமிழர்களின் கலாச்சாரத்தைப் சீரழிப்பு போன்றவற்றிலிருந்து தமிழர்களுக்குப் பாதுகாப்பு தேவை. உளவுத்துறையினரால் ஆதரிக்கப்படும் போதைப்பொருள் மற்றும் கும்பல் வன்முறையில் இருந்து எங்கள் இளைய தலைமுறையைக் காப்பாற்ற வேண்டும்.

அத்துடன் தமிழர்களுக்குப் பாதுகாக்கப்பட்ட தாயகம் வேண்டும். சிங்களவர்களிடமிருந்து நமது வடக்கு கிழக்குப் பாதுகாக்கப்பட வேண்டும், கொடூரமான இராணுவத்துடன் எங்கள் நிலத்தைக் கைப்பற்றி, அவர்களின் சொந்த வரலாற்றின் பொய்யான அல்லது சூழ்ச்சியின் பெயரால், சிங்களப் புத்திஜீவிகளின் பெளத்த அடிப்படை வாத பயங்கரவாதத்தை நிறுத்த வேண்டும்.

திரும்ப பெறமுடியாத அரசியல் தீர்வு, சிங்கள அரசால் பறிக்க முடியாத அரசியல் தீர்வு தமிழர்களுக்குத் தேவை. எமது அரசியல் உரிமைகள் பலவற்றை இலங்கை பறித்ததை நாம் பார்த்திருக்கின்றோம்.

உதாரணமாக, 1944 இல், சோல்பரி அரசியலமைப்பின் 29 (2) வது சரத்தின் மூலம் தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு ஒரு அரசியலமைப்பு பாதுகாப்பு வழங்கப்பட்டது, 1972 இலங்கை அரசியலமைப்பிலிருந்து ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவால் தமிழர்களுக்கான அரசியலமைப்பு பாதுகாப்பு அழிக்கப்பட்டது.

13 திருத்தத்தின்படி, இலங்கை வடக்கு கிழக்கு இணைப்பு, பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை நிராகரித்தது. பல பாடசாலைகள், மருத்துவமனைகள் மற்றும் பல நிறுவனங்கள் கொழும்பு அரசாங்கத்தால் மாகாண சபையிடமிருந்து எடுக்கப்பட்டன. எந்த ஒரு அரசியலமைப்பு ஏற்பாடுகளையும் சிங்களவர்கள் ⅔ பெரும்பான்மையுடன் எப்போது வேண்டுமானாலும் எங்கும் எடுக்க முடியும் என்பதை இவை அனைத்தும் காட்டுகின்றன.

எனவே உலகம் இலங்கையில் ஒரு முறை மட்டுமே அரசியல் தீர்வுக்கு வழி வகுக்கும், 13வது திருத்தத்திற்குப் பதிலாக, திரும்பப் பெற முடியாத, பாதுகாப்பான மற்றும் பாதுகாக்கப்பட்ட தீர்வு தேவை என்பதை உலகிற்கு உணர்த்த வேண்டும்.

செல்வம் அடைக்கலநாதன் சகல கட்சிகளையும் கூட்டி 13வது திருத்தத்தை முன்வைப்பது ஏன்? 13வது திருத்தம் 1987 இல் வந்தவுடன் இறந்துவிட்டது. அதுமட்டுமல்லாமல் இந்தியா 13வது திருத்தத்தை பயன்படுத்தி இலங்கையை கட்டுப்படுத்த மாத்திரம் பயன்படுத்தியது. இந்தியா 13 ஐ நடைமுறைப்படுத்த நினைத்ததில்லை, வெறும் பேச்சு மாத்திரமே. செல்வம் அடைக்கலநாதன் மற்றும் அவரது பேச்சாளர் சுரேன் குருசாமி மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை.

வவுனியா நெடுங்கேணியில் சிங்களவர்களுக்கு 4000 உறுதி பத்திரங்களை தனது நட்பு ரணிலின் அரசாங்கம் வழங்கிய போது செல்வம் என்ன செய்தார், பிரதிநாடாளுமன்ற குழுக்களின் தலைவராக இருக்கும் போது, அடைக்கலநாதன், ரணில் அரசாங்கத்தை விமர்சித்ததில்லை. தமிழர் தாயகத்தில் 1000 பௌத்த விகாரைகள் கட்டுவதற்கு வரவு செலவுத் திட்டத்தில் கோடிக்கணக்கான ரூபாய்களை ஒதுக்கியதற்கு ஆதரித்து வாக்களித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினரையும் நாங்கள் நம்பவில்லை. ஒரு எம்.பி எதிரியிடம் பணம் வாங்கினால், தயவுசெய்து அவர்களை நம்ப வேண்டாம். 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்த பல சக்தி வாய்ந்த நாடுகள் மற்றும் ஐ.நா. ஆகியன முயற்சித்தன.

அதை இந்தியா ஒருபோதும் செயல்படுத்தாது. 13வது திருத்தத்தை இலங்கையை கட்டுப்படுத்தும் துரும்பாக மட்டுமே பயன்படுத்தும். எல்லாவற்றிற்கும் மேலாக, மேற்கூறிய 3 காரணங்களுக்காக 13 வது திருத்தம் தமிழர்களுக்கு பயனற்றது.13வது திருத்தத்திற்கு பதிலாக, போஸ்னியா பாணியிலான பேச்சுவார்த்தைதான் எமக்கு தேவை.

எனவே அனுபவமிக்க அரசியலமைப்பு அறிஞர்களைக் கொண்டு அரசியல் மத்தியஸ்தம் செய்யுமாறு அமெரிக்காவை கேட்டு கொள்கிறோம். தமிழர்கள் விரும்பும் பரஸ்பர இணக்கமான தீர்வுகள் மட்டுமே என்ற முடிவுக்கு அனைவரும் வருவார்கள் என நம்புகிறோம். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், பாதிக்கப்பட்ட தமிழ் மக்களாகிய நாம் ஒரு வாக்கெடுப்பை கேட்கிறோம்.“ எனக் குறிப்பிட்டுள்ளனர்.

இந்தியா இல்லாத தீர்வு ?

-யதீந்திரா-

கடந்த வாரம் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையிலான சந்திப்பொன்று இடம்பெறுவதாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால்இ சம்பந்தனின் வேண்டுகோளுக்கு இணங்க குறித்த சந்திப்பு பிற்போடப்பட்டிருக்கின்றது. சந்திப்பு பிற்போடப்பட்டமை தொடர்பில் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுடன் கலந்துரையாடப்படவில்லை. கடந்த ஒன்றரை வருடங்களாகஇ இவ்வாறானதொரு சந்திப்பிற்காக கூட்டமைப்பு காத்துக்கிடந்தது. இந்திய தூதுவரை சந்திக்கும் சந்தர்பங்களிலெல்லாம்இ சம்பந்தன்இ இந்திய பிரதமரை சந்திப்பதற்கான நேரத்தை ஒதுக்கித்தருமாறு வேண்டுகோள்களை முன்வைத்திருந்தார். இந்த அடிப்படையில்தான்இ இந்திய தூதரகம்இ நீண்ட நாட்களாக இவ்வாறானதொரு சந்திப்பிற்கான முற்சியை மேற்கொண்டுவந்தது. பிரதமர் மோடிஇ இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர் மற்றும் இந்திய வெளியுறவுச் செயலர் ஹர்ஸ் வர்தன் ஆகியோர்இ புதுடில்லியில் இருக்கும் தருணமொன்றிற்காக இந்திய தூதரகம் காத்திருந்தது. இந்த பின்புலத்தில்தான்இ கூட்டமைப்பின் புதுடில்லி பயணத்திற்கான திகதியும் திட்டமிடப்பட்டது. ஆனால் இவ்வாறானதொரு முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பைத்தான் சம்பந்தன் சாதாரணமாக புறம்தள்ளியிருக்கின்றார்.

சம்பந்தன் ஏன் இந்த சந்திப்பை பிற்போட்டார்? சம்பந்தன் இதற்கு மூன்று காரணங்களை கூறியிருக்கின்றார். வரவு செலவுத்திட்டம் தொடர்பான விவாதத்தில் பங்குகொள்ள வேண்டும்இ பாஸ்போர்ட் காலாவதியாகிவிட்டதுஇ மாவை சேனாதிராசாவின் மகனின் திருமணம் இடம்பெறவுள்ளது. ஒரு பிராந்திய சக்தியான இந்தியாவின் பிரதமரை சந்திப்பதற்கு கிடைத்த வாய்ப்பை தவிர்ப்பதற்காக சம்பந்தன் கூறியிருக்கும் காரணங்கள்தான் இவைகள்! வரவு செலவுத்திட்ட விவாதங்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் போதுஇ நாட்டின் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச புதுடில்லியில் கலந்துரையாடல்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். பசில் ராஜபக்சவை விடவும் சம்பந்தனுக்கு வரவு செலவுத்திட்டம் முக்கியமான ஒன்றா? ஒரு வேளை வரவு செலவுத்திட்டம் முக்கியமானதென்றால்இ ஏனைய இரண்டு காரணங்களை சம்பந்தன் குறிப்பிட்டிருக்க வேண்டியதில்லை. ஒரு இனத்தின் எதிர்காலம் தொடர்பான விடயத்தின் போதுஇ மாவை சேனாதிராசாவின் மகனின் திருமணத்தை சம்பந்தன் தொடர்புபடுத்தியிருக்கின்றார். இந்திய பிரதமருடனான சந்திப்பை பிற்போடுவதற்காகஇ சம்பந்தன் குறிப்பிட்டிருக்கும் மூன்று காரணங்களும்இ நகைச்சுவைக்குரியது என்பதைஇ புரிந்துகொள்வற்கு அரசியல் அறிவு தேவையில்லை. இந்த நகைச்சுவைக்காகஇ நிச்சயம்இ இந்திய தூதரக அதிகாரிகள் சிரித்திருப்பார்கள்.

தமிழர் பிரச்சினையில் இந்தியா மீளவும் தலையீடு செய்வதை சம்பந்தன் தவிர்க்க விரும்புகின்றாரா? சம்பந்தனின் அண்மைக்கால நடவடிக்கைகள் இப்படியானதொரு கேள்விக்கான அவசியத்தை ஏற்படுத்துகின்றது. இலங்கைக்கு விஜயம் செய்யும் இந்திய உயர் அதிகாரிகள் வழமைபோல் கூட்டமைப்பை சந்தித்துச் செல்கின்றனர் ஆனால்இ கூட்டமைப்போ இந்தியாவை நோக்கிச் செல்லவில்லை. அவ்வாறு செல்ல வேண்டுமென்று கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் கோரும் போதெல்லாம்இ அதனை சம்பந்தன் தடுக்கின்றார். சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த சந்தர்ப்பத்தில்இ ஒரு முறை கூட புதுடில்லி செல்லவில்லை. ஒரு காலத்தில் அமிர்தலிங்கம் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போதுஇ அவர் எவ்வாறு புதுடில்லியுடன் உரையாடியிருந்தார். அவருக்கு இந்திராகாந்தி எத்தகைய கௌரவத்தை வழங்கியிருந்தார் என்பது வரலாறு. இது பற்றி அமிர்தலிங்கம் எழுத்திலும் பதிவு செய்திருக்கின்றார். ஆனால் சம்பந்தனோஇ சிங்களவர்களை காரணம் காட்டிஇ புதுடில்லிக்கான பயணத்தை தவிர்த்துவருகின்றார். மகிந்த ராஜபக்ச இந்தியாவிற்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்ற மறுத்த போதுஇ புதுடில்லி சென்று உரையாடுவோம் என்னும் கோரிக்கையைஇ அப்போது கூட்டமைப்பின் அங்கமாக இருந்த ஈ.பி.ஆர்.எல்.எப் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் முன்வைத்திருந்தார். அவ்வாறு நாம் செய்தால் சிங்களவர்கள் கோபிப்பார்கள் – குழம்புவார்கள்இ என்னும் காரணத்தை கூறிஇ சம்பந்தன் அதனை தட்டிக்கழித்தார்.

ரணில்-மைத்திரி ஆட்சியில்இ பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள்இ புதுடில்லி செல்வதற்கான யோசனையை முன்வைத்த போது – அப்போதும்இ கருமங்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன – இப்போது நாம் அங்கு சென்றால் தென்னிலங்கையில் பதட்டங்கள் ஏற்படுமென்று கூறி அதனையும் சம்பந்தன் தட்டிக்கழித்தார். இப்போது இந்திய பிரதமர் மோடியுடனான சந்திப்பை பொறுப்பற்ற காரணங்களை கூறி பிற்போட்டிருக்கின்றார்.

ரணில்-மைத்திரி கூட்டரசாங்கமும் கூட்டமைப்பும் மிகவும் நெருக்கமாக செயற்பட்டிருந்தது. தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வொன்றை காணமுடியுமென்பதில் சம்பந்தன் நம்பிக்கை கொண்டிருந்தார். அந்த அடிப்படையிலேயே புதிய அரசியல் யாப்பு முயற்சிகள் இடம்பெற்றிருந்தன. புதிய அரசியல் யாப்பு வருவதற்கான வாய்ப்பு இல்லையென்பதை சிலர் எதிர்வு கூறியிருந்தனர். புதிய அரசியல் யாப்பு வருவதற்கான வாய்ப்பில்லை – இந்த ஆடம்பரமான சொல்லாடல்கள் அனைத்தும் ஒரு கட்டத்துடன் முடிவுக்குவந்துவிடும் என்பதை இந்தக் கட்டுரையாளரும் பல்வேறு சந்தர்பங்களில் சுட்டிக்காட்டியிருந்தார். ஆனால் சம்பந்தன் மற்றும் சுமந்திரன் ஆகியோர் முற்றிலும் உள்நாட்டு நகர்வுகள் மூலம் பிரச்சினைகளை தீர்த்துவிட முடியுமென்று நம்பினர்.

ஆனால் இறுதியில் எதிர்பார்த்தது போன்றேஇ புதிய அரசியல் யாப்பு முயற்சிகள் புஸ்வானமாகியது. விமர்சனங்கள் இருப்பினும் கூடஇ சில முயற்சிகள் இடம்பெற்றது உண்மைதான். ஆனால் இப்போது நிலைமைகள் தலைகீழாகிவிட்டது. அமெரிக்க பயணத்தை தொடர்ந்து – அமெரிக்காவினதும் இந்தியாவினதும் கூட்டு அழுத்தத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளில் தாங்கள் ஈடுபட்டிருப்பதாகஇ சுமந்திரன் தெரிவித்திருந்தார். ஜனவரி மாதமளவில்இ அமெரிக்காஇ அதன் கொள்கை நிலைப்பாட்டை அறிவிக்குமென்றும் சுமந்திரன் எதிர்வு கூறுகின்றார். இவ்வாறானதொரு பின்னணியில்தான் – சம்பந்தன்இ இந்தியாவிற்கு செல்வதை வேண்டுமென்றே தவிர்த்திருக்கின்றார். அவ்வாறாயின்இ அமெரிக்காவின் கொள்கை நிலைப்பாட்டை அறிந்த பின்னர்இ புதுடில்லிக்கு செல்ல முயற்சிக்கின்றாரா? அல்லது இந்தியா இல்லாமல் ஒரு தீர்வை எதிர்பாக்கின்றாரா? கோட்டபாய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்தின் புதிய அரசியல் யாப்பு முற்சியின் கீழ்இ தமிழ் மக்களுக்கு நியாயமானதொரு அரசியல் தீர்வு கிடைக்குமென்று சம்பந்தன் எதிர்பார்க்கின்றாரா?

தமிழ் மக்களின் அரசியல் போராட்டத்தில் இந்தியா ஒன்றே அரசியல் தீர்வு தொடர்பில் உறுதியான நிலைப்பாட்டை வெளிப்படுத்திவருகின்றது. இலங்கையின் உடனடி அயல்நாடென்னும் வகையில்இ இந்தியா எப்போதும் இலங்கையின் விவகாரங்களில் தலையிடும் ஆற்றலை கொண்டிருக்கின்றது. இந்த அடிப்படையில்தான்இ இலங்கையின் இன முரண்பாட்டிற்குள்இ ஒரு சமரச முயற்சியாளராக இந்தியா தலையீடு செய்தது. முன்னைநாள் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகரான எம்.கே.நாராயணின் வார்த்தையில் கூறுவதானால் – புவியியல் நிலைமையும் வரலாறும் அவ்வாறானதொரு நிலைப்பாட்டை நோக்கி இந்தியாவை தள்ளியிருந்தது. இந்தியாவின் சமரச முயற்சியின் விளைவாக வந்ததுதான் மாகாண சபை முறைமை. அந்த மாகாண சபை முறைமையை தொடர்ந்தும் வைத்திருப்பதா அல்லது நீக்குவதா என்னுமடிப்படையில்தான்இ புதியதொரு அரசியல் யாப்பு தொடர்பில் விவாதிக்கப்படுகின்றது.

 

தற்போதைய தென்னிலங்கை ஆட்சியாளரை பொறுத்தவரையில் தமிழர் பிரச்சினையென்பது ஒரு உள்நாட்டு விவகாரம். இதில் இந்தியாவோ வேறு எவரோ தலையீடு செய்யவேண்டியதில்லை. இந்தியாவிற்கான தூதுவர் மிலிந்த மொறகொடஇ இந்து பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலில்இ இதனை வெளிப்படையாகவே கூறியிருக்கின்றார். அதாவதுஇ அரசியல் தீர்வென்பது முழுக்க முழுக்க உள்நாட்டு விவகாரமாகும். இதன் மூலம் அவர் இந்திய தலையீட்டை முற்றிலுமாக மறுதலிக்கின்றார். அவர் சமர்ப்பித்த மூலோபாய அறிக்கையிலும் தமிழர் பிரச்சினை தொடர்பில் பேசப்படவில்லை. இது தொடர்பில் பேராசிரியர் சூரிய நாராயணன் இந்தியன் எக்ஸ்பிரசில் எழுதிய கட்டுரையில் விவாதித்திருந்தார். சிங்கள ஆட்சியாளர்கள் தமிழர் பிரச்சினையில் இந்தியாவின் பங்கை புறம்தள்ள முற்படுவது போன்றுதான்இ இப்போது சம்பந்தனும் செயற்படுகின்றாரா? தமிழர்களுக்கான அரசியல் தீர்வு முற்றிலும் ஒரு உள்நாட்டு விவகாரம் என்பதுதான் சம்பந்தனதும் நிலைப்பாடா?

இந்திய-இலங்கை ஒப்பந்தத்திற்கு பின்னர்இ அசியல் தீர்வு தொடர்பில் இடம்பெற்ற எந்தவொரு முயற்சியும் இதுவரையில் வெற்றிபெறவில்லை. ஏனெனில் அந்த முயற்சிகள் எவற்றிலும் இந்தியாவின் பங்களிப்பு இருந்திருக்கவில்லை. நோர்வேயின் மத்தியஸ்த்த முயற்சியில் இந்தியாவிற்கு எந்தவொரு பங்களிப்பும் இருக்கவில்லை. இந்தியாவை கோபப்படுத்திவிடக் கூடாதென்னும் முன்னெச்சரிக்கையுடன்இ எரிக் சொல்ஹைய்ம் விடயங்களை புதுடில்லிக்கு கூறிக் கொண்டிருந்ததை தவிரஇ இந்தியாவின் எந்தவொரு பங்களிப்பும் ஒஸ்லோ பேச்சுவார்த்தையில் இருந்திருக்கவில்லை. நோர்வேயின் மத்தியஸ்த்தம் என்பது அடிப்படையில் ஒரு மேற்குலக மத்தியஸ்தமாகவே இருந்தது.

இதன் பின்னர் இடம்பெற்ற பிரதானமான தீர்வு முயற்சி ரணில்-மைத்திரி ஆட்சிக் காலத்தில் இடம்பெற்றிருந்தது. ஒரு புதிய அரசியல் யாப்பின் ஊடாக தமிழ் மக்களின் பிரச்சினையை தீர்க்கலாம் என்பதே சம்பந்தனின் திட்டமாக இருந்தது. இதன் போதும் இ;ந்தியா பார்வையாளராகவே இருந்தது. சம்பந்தனை பொறுத்தவரையில்இ இந்தியாவை சம்மந்தப்படுத்தினால்இ சிங்களவர்கள் கோபிப்பார்கள். ஆனால் இந்த முயற்சியும் வெற்றிபெறவில்லை. இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் அறுவடையான மாகாண சபை முறைமையை இந்தியா தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்ற நிலையில்தான்இ அதனை முற்றிலுமாக புறம்தள்ளும் வகையில் புதிய அரசியல் யாப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இது தொடர்பில் சம்பந்தன் ஒரு நாகரீகத்திற்காக கூடஇ இந்தியாவின் ஆலோசனைகளை கோரியிருக்கவில்லை.

விடயங்களை உற்று நோக்கினால் ஒரு விடயம் மட்டும் துருத்திக் கொண்டு தெரிகின்றது. தமிழர் பிரச்சினையில் மேற்கொள்ளப்பட்ட ஒரேயொரு விடயம் மட்டுமே இதுவரையில் நடைமுறைக்கு வந்திருக்கின்றது. இந்திய-இலங்கை ஒப்பத்தத்தின் அடிப்படையிலான மாகாண சபை முறைமை ஒன்றுதான். அதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட எந்தவொரு முயற்சியும் இதுவரையில் வெற்றிபெறவில்லை. ஏனெனில் அந்த முயற்சிகள் எவற்றிலும்இ இந்தியாவின் பங்களிப்பு இருந்திருக்கவில்லை. இது தமிழர் தலைமைகளுக்கு கூறும் செய்தி என்ன?

த.தே.கூ பதிவு செய்யாமல் இருக்க முடியாது: டெலோவின் செயலாளர் நாயகம்

இனியும் தமிழ் தேசிய கூட்டமைப்பு பதிவுசெய்யப்படாமல் இருக்கமுடியாது என்பதில் தமிழ் ஈழ விடுதலை இயக்கம் உறுதியாகஉள்ளது, அதே நேரம்,  தமிழ்தேசிய கூட்டமைப்பு ஒரு தனிமனிதனின் தலைமைத்துவத்திற்குள் இல்லாமல் இரு இணைத்தலைமை உருவாக்கப்படவேண்டும் என்பதிலுமு; உறு தியாக உள்ளது என்று  தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் அசயலாளர் நாயகமும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் உள்ள அவரது அலுலகத்தில் இன்று (18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டத்தில் கலந்துகொண்டதற்காக இரண்டு பொலிஸ் நிலையம் ஊடாக வழக்குகள் பொத்துவில் நீதிமன்றில் தொடரப்பட்டிருந்தது. பொத்துவில் பொலிஸாரும் திருக்கோவில் பொலிஸாரும் இரண்டு வேறுபட்ட வழக்குகளை போட்டிருந்தார்கள்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்களுக்கான வழக்காக அது தெரியவில்லை. ஏற்கெனவே திட்டமிடப்பட்டு 32 பெயர்கள் அடங்கிய ஒரே பெயர்ப்பட்டியல் கொடுக்கப்பட்டு அவர்களுக்கு எதிராக இந்த வழக்கு தொடரப்பட்டது. இரண்டு பொலிஸ் நிலையத்திலும் அதேபெயர்கள் உள்வாங்கப்பட்டுள்ளது.

ஆனால் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பிரபலமான சிலருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படவில்லை. ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளாத சிலருக்கு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது .இதில் இன்னுமொரு விசேடம் என்னவென்றால் செய்தி சேகரிக்க வந்த ஊடகவியலாளர்களுக்கு எதிராகவும் அங்கு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த நாட்டில் உள்ள சிறுபான்மை மக்கள் அவர்களது உரிமைகளை கேட்டுபோராடும்போது அவர்களை நசுக்குவதற்காக போராட்டம் நடைபெறுவதற்கு முன்பாகவே சிலரது பெயர்களை தெரிந்தெடுத்து அவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல்செய்யப்படுகின்றது. சிறுபான்மை மக்களை நீதித்துறையின் ஊடாக முன்னெடுக்கப்படும் அடக்குமுறையாகவே நாங்கள் பார்க்கின்றோம்.

சட்டவாக்கத்துறை ஒழுங்கில்லையென்பது சபாநாயகர் தலைமையில் கூடிய பாராளுமன்ற குழுக்கூட்டத்தில் அடுத்த ஆண்டுக்கான சபை அமர்வு 11ஆம் திகதி கூடுவது என தீர்மானித்திருந்தும் ஜனாதிபதி தனது அதிகாரத்தினை பயன்படுத்தி பாராளுமன்ற கூட்டத்தொடரை 18ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளார்.இதன் ஊடாக சட்டவாக்கத்துறையும் சீரில்லாமல் உள்ள நிலையே உள்ளது.

நிர்வாகத்துறையினை எடுத்துக்கொண்டாலும் இந்த நாட்டில் மிக மோசமான நிர்வாகம் இருக்கின்றது என்பது அண்மையில் மட்டக்களப்பு மாநகரசபையில் ஆணையாளர் நியமனங்களில் இருந்தே நிர்வாகத்துறை சீர்கேடான நிலையிலிருக்கின்றது என்பது இதன்மூலம் வெளிப்படையாக தெரிகின்றது.

ஜனாதிபதியின் செயலாளரால் தான் இந்த நாட்டில் நிர்வாகம் சிர்குலைந்திருக்கின்றது. நாடு எதிர்நோக்கும் கஷ்டமான சூழ்நிலைகள் அனைத்திற்கும் காரணம் ஜனாதிபதியின் செயலாளர் கொடுக்கும் ஆலோசனைகள் தான் என்ற ரீதியில் அவரை மாற்றுங்கள் அல்லது தன் பதவியை இராஜனாமா செய்யப் போவதாக நாட்டின் ஜனாதிபதியின் சகோதரரும், அமைச்சருமான சமல் ராஜபக்ஷ அவர்கள் உள்ளிட்ட சிரேஷ்ட அமைச்சர்கள் வேண்டுகொள் விடுத்துள்ளார்கள்.

தமிழ் தேசிய கூட்டமைப்பினைப் பொறுத்த வரை 20வருடங்களையும் தாண்டி சென்றுகொண்டிருக்கின்றது. தமிழ் தேசிய கூட்டமைப்பு இதுவரையில் பதியப்படாத நிலையிலுள்ள ஒரு அரசியல் கூட்டாகவே இருக்கின்றது. இது மிகவும் துரதிர்ஸ்டவசமானது.

மலையக கட்சிகள் ஒன்றிணைந்து ஒரு முன்னணியை உருவாக்கியிருந்தார்கள். மூன்று வருடத்துக்குள்ளே அவர்கள் அதனை ஒரு அரசியல்கட்சியாக பதிவுசெய்துள்ளார்கள்.

அந்தவகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவராக சம்பந்தர் ஐயா தொடர்ச்சியாக இருந்துவருகின்றார். தற்போது பத்திரிகை ஊடாக அறியக்கூடியதாகவுள்ளது சம்பந்தர் ஐயா அவர்கள் திருகோணமலை பாராளுமன்ற உறுப்புரிமையினை இராஜினாமா செய்யப்போவதாக அறியக்கூடியதாகவுள்ளது.

இது எந்தளவுக்கு உண்மையென்று தெரியாவிட்டாலும் அப்படியொரு நிலைமையேற்பட்டால் பாராளுமன்ற குழுக்களின் தலைவராக இருப்பவர் சம்பந்தன் ஐயா, பாராளுமன்ற உறுப்பினர் பதவி வலிதற்றதாகும்போது தலைமை பொறுப்பையும் இழப்பார்.

இருந்தும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமை பொறுப்பிலிருந்து விலத்தவேண்டிய தேவையில்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமை வகிப்பவர் பாராளுமன்ற உறுப்பினராகயிருக்கவேண்டும் என்ற நியதியில்லை.

அவர் விரும்பி தமிழ் தேசிய கூட்டமைப்பின் பதவியை துறப்பாரானால் தமிழ் தேசிய கூட்டத்தின் ஆரம்பத்திலிருந்து அங்கம் வகிகும் கட்சி என்ற அடிப்படையில் தமிழீழ விடுதலை இயக்கம் ஒரு உறுதியான நிலைப்பாட்டைக்கொண்டுள்ளது. இனியும் தமிழ் தேசிய கூட்டமைப்பு பதியப்படாமலிருக்கமுடியாது என்றார்.

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினை துறக்க தயாராகும் இரா.சம்பந்தன்?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினை இராஜினாமா செய்வது குறித்து ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மருத்துவர்களின் ஆலோசனைகளிற்கு அமையவே அவர் இந்த தீர்மானங்களை எடுத்துத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும் தற்போது வரையில் அது பேச்சுமட்டத்திலேயே காணப்படுவதாகவும் கூறப்படுகின்றது.

இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினை இராஜினாமா செய்தாலும், கூட்டமைப்பின் தலைவராக அவர் தொடர்ந்தும் நீடிப்பார் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை, இரா.சம்பந்தனின் நாடாளுமன்ற வெற்றிடத்திற்கு யார் நியமிக்கப்படவுள்ளார் என்ற தகவல்கள் எவையும் இதுவரையில் வெளியாகவில்லை என்பதுக் குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

கூட்டணி சார்பாக ஊடகங்களுக்கு அறிக்கைகள் விடுவதை அரவிந்தன் நிறுத்திக் கொள்ள வேண்டும் : ஆனந்தசங்கரி

தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பாக ஊடகங்களுக்கு அறிக்கைகள் விடுவதை அரவிந்தன் நிறுத்திக் கொள்ள வேண்டும் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி  தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் இன்று வெளியிடப்பட்ட ஊடக அறிக்கை ஒன்றிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டதாவது,

தமிழர் விடுதலைக் கூட்டணியின் சிரேஸ்ட உபதலைவர் என்று தன்னைத் தானே பிரகடனப்படுத்திக் கொண்டு ஊடகங்களுக்கு அறிக்கைகள் விடுவதை அரவிந்தன் அவர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் அவரை எமது கட்சி சிரேஸ்ட உப தலைவராக தெரிவு செய்யவில்லை என்பதை ஊடகங்களுக்கு தெரிவித்துக்கொள்கின்றேன்.

ஆயுட்கால உறுப்பினர் பட்டியல் இன்று இல்லை. இரு தடவை கட்சி பிளவுபட்டு ஆயுட்கால உறுப்பினர் பட்டியல் காலவதியாகிவிட்டது.

இவ்வாறு கூறித்திரிவது கூட அரவிந்தனின் தந்திரங்களில் ஒன்றாகும். இலங்கையில் தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட அவல நிலைமைகளை கருத்தில் கொண்டு அரசியல் ரீதியாக எமது மக்கள் ஒன்றிணைக்கப்பட வேண்டும் என்று அரவிந்தன் சொல்லும் அளவிற்கு அரசியல் தெரியாதவனல்ல.

அரவிந்தன் பிறப்பதற்கு 15 வருடங்களுக்கு முன்பாகவே அரசியலுக்கு வந்தவன். மிகச்சிறந்த அரசியல் தலைவர்களுடன் நாடாளுமன்றத்தில் அங்கம் வகித்தவன். கிளிநொச்சி தொகுதியில் என் கால் படாத இடமே கிடையாது. என்னுடைய அரசியல் பின்னணியும் வரலாறும் தெரியாமல் கருத்துக் கூறுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

2018ம் ஆண்டு வரை லண்டனில் இருந்து விட்டு எமது மக்களின் அவலநிலை தெரியாமல் அரசியல் பேசுகின்றார். தற்போதுள்ள அரசியல் யதார்த்தநிலையை நன்கு புரிந்து கொண்டுதான் நான் சமீபத்தில் “அந்நிய நாடுகளை தலையிட கோருவது மேலும் ஆபத்தை விளைவிக்கும்” என்று ஊடக அறிக்கையில் தெரிவித்திருந்தேன். அதனை விளங்கிக் கொள்ளாத அவர் தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பாக அறிக்கை விடுவதை வன்மையாகக் கண்டிக்கின்றேன்.

தமிழர் விடுதலைக் கூட்டணி உருவாகிய காலம் தொட்டு, தந்தை செல்வாவுடன் இணைந்து அவர் மறையும் வரை தமிழ் மக்களின் உரிமைக்காக குரல் கொடுத்து, அவர் மறைந்த பின்பும் அவரின் வழியில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக இன்று வரை தமிழ் மக்களின் ஒற்றுமைக்காகவும் அவர்களின் உரிமைக்காகவும் ஜனநாயக ரீதியில் போராடிக்கொண்டு வருகின்றேன்.

எங்கிருந்தோ வந்து விட்டு தற்போது தமிழ் மக்களின் உரிமைக்காக குரல் கொடுப்பது நகைப்பைத் தருகின்றது. பாவம் அவரது அரசியல் அறிவு அவ்வளவுதான்.

இல்லாத ஒரு பதவியை தனக்கு தரப்பட்டது என்று பொய்களைக் கூறி எமது கட்சி உறுப்பினர்களை குழப்பத்தில் ஆழ்த்தி கட்சிக்குள் உட்பூசலை உருவாக்க வேண்டாம் என கேட்டுக்கொள்கின்றேன்.

இது அவரின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் என குறித்த ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.