உத்தேச நிகழ்நிலை காப்புச் சட்டமூலத்தினூடாக மக்களின் கருத்து வெளியிடும் உரிமை, உண்மையை கண்டறியும் உரிமை என்பன மட்டுப்படுத்தப்படுகின்றன என கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
நாட்டின் ஒற்றையாட்சியை நடாத்திச்செல்லும் இவ்வாறான முயற்சிகள் தோற்கடிக்கப்பட வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
2023 ஆம் ஆண்டுக்கான சிக்னீஸ் விருது வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டபோதே கொழும்பு பேராயர் இதனை கூறினார்.
சமூக ஊடகங்களை அரசாங்கம் கட்டுப்படுத்த வேண்டும் எனும் போர்வையில் மக்கள் கருத்து வெளியிடுதல், உண்மையை கண்டறியும் உரிமைகள் மட்டுப்படுத்தப்படுவதாக இந்த சட்டமூலம் முன்வைக்கப்பட்டுள்ளமை தெளிவாகின்றது என அவர் குறிப்பிட்டார்.
நாட்டை சர்வாதிகாரத்திற்கு இட்டுச்செல்லும் இவ்வாறான முயற்சிகளை முறியடிக்க வேண்டியது அரசியல், மக்கள் சார்பான ஊடகங்களின் கடமையாகும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
நீர்ப்பாசன அமைச்சராக பவித்ரா வன்னியாரச்சியும் இளைஞர் விவகார விளையாட்டுத்துறை அமைச்சராக ஹரின் பெர்னாண்டோவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் நேற்று (27) பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.
நடிகர் அஜித் நடித்த ”சிட்டிசன்” என்ற படத்தில் ”அத்திப்பட்டி”என்ற கிராமத்துக்கு நேர்ந்த கதியே இன்னும் 50 வருடங்களுக்கு பின்னர் மன்னார் தீவுக்கும் ஏற்படும்.
மன்னார் தீவு இருந்ததற்கான அடையாளங்களையே இல்லாமல் செய்யும் பணிகளை அவுஸ்திரேலியாவின் நிறுவனமும் ,அரசும் கனிய மணல் அகழ்வாராய்ச்சி என்ற பெயரில் மன்னார் தீவில் முன்னெடுக்கிறது.
மக்களின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் முன்னெடுக்கப்படும் இந்த அகழ்வாராய்ச்சியை உடனடியாக நிறுத்த வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (27) இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் சுற்றாடற்றுறை மற்றும் வனஜீவராசிகள், வனவிலங்குகள் பாதுகாப்பு அமைச்சுக்கான செலவுத்தலைப்பு மீதான விவாதத்தில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது,
மன்னார் தீவில் கனிய மணல் அகழ்வு அல்லது கனிய மணல் அகழ்வாராய்ச்சி என்ற பெயரில் அவுஸ்திரேலியாவின் டைட்டானியம் சாம்ஸ் லிமிட்டெட் என்ற நிறுவனம் அங்கு அகழ்வுப்பணிகளை முன்னெக்கிறது.
மன்னார் தீவு மக்களின் விருப்பத்துக்கு மாறாக, அவர்களின் எதிர்ப்பையும் மீறி மன்னார் மாவட்டம் ஒரு காலத்தில் முற்றாக கடலுக்குள் மூழ்கக் கூடியவாறு இந்த கனிய மணல் அகழ்வு நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கான திட்டமிடல்கள் அரசின், அரச நிறுவனங்களின் ஆதரவோடு டைட்டானியம் சாம்ஸ் லிமிட்டெட் நிறுவனத்தின் துணை நிறுவனங்களோடு சேர்ந்து முன்னெடுக்கப்படுகின்றன.
மன்னார் மாவட்ட மக்கள் இந்த அகழ்வாராய்ச்சி பணியை நிறுத்தக்கோரி பாரிய ஆர்ப்பாட்டங்களை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் அரசு அபிவிருத்தி என்ற பெயரில் அல்லது அங்கே கனிய மணல் இருப்பதை உறுதிப்படுத்துவதற்காக இந்த ஆராய்ச்சிகளை தொடர்ந்து மேற்கொள்கின்றது.
இதனூடாக அங்குள்ள சாதாரண மக்களை ஏமாற்றி சுமார் 2000 முதல் 3000 ஏக்கர் வரையான காணிகளை அந்த மக்களின் வறுமைஇ அவர்களின் அறியாமையை பயன்படுத்தி அவர்களிடம் விலை பேசி ஏறக்குறைய மன்னார் தீவில் மட்டும் 2600 மில்லியன் ரூபாவுக்கு காணிகள் வாங்குவதற்கான நடவடிக்கைகள் இந்த அமைப்புக்களினால் முன்னெடுக்கப்படுகின்றன.
ஆழ்துளை கிணறுகள் மூலமாக இந்த அகழ்வாராய்ச்சி பணிகள் ஆரம்பிக்கப்பட்டு தற்போது நிறுத்தப்பட்டாலும் அது தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுகின்றன.
சுமார் 40 அடி ஆழத்தில் இந்த அகழ்வாராய்ச்சிப்பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இது ஒருகட்டத்தில் நிச்சயமாக நன்னீரும் கடல் நீரும் கலந்து குடிநீர் பிரச்சினை ஏற்படுவதற்கான நிலையை உருவாக்குகின்றது.
இதனால் மன்னார் தீவு மக்கள் மிகப்பெரிய ஆபத்தை எதிர்நோக்கியுள்ளனர். அரசு எந்த வகையில் இதற்கான அனுமதியை வழங்கியது என்பதுவே எமது கேள்வி.
தென்னிந்திய நடிகர் அஜித் நடித்த ”சிட்டிசன்”என்ற படத்தில் ”அத்திப்பட்டி”என்ற கிராமமே காணாமல் போகும். அரசியல்வாதிகள் அதிகாரிகள் ஆகியோரின் ஊழல் மோசடியால் இந்த கிராமம் அழிந்தது.
கிராமத்திலிருந்து மக்களை வெளியேற்றி தமது சொந்த நலன்களுக்காக அரசியல்வாதிகள் அந்தக் கிராமத்தை முற்றாக்கக்கடலுக்குள் அமிழ்த்தி விட்டு செய்த ஒரு காரியம்தான் தற்போது மன்னார் தீவிலும் நடக்கின்றது.
இன்னும் ஒரு 50 வருடங்களுக்கு பின்னர் மன்னார் தீவு அங்கு இருக்காது .அப்படி ஒரு தீவு இருந்ததற்கான அடையாளங்களையே இல்லாமல் செய்கின்ற திட்டத்திற்கு இந்த சுற்று சூழல் அமைச்சும் அரசும் உடந்தையாக இருக்கின்றன.
அரச அதிகாரிகளும் அது அரசின் உத்தரவு, மேலிட உத்தரவு எனக்கூறிக்கொண்டு வாய்மூடி மௌனிகளாக இருக்கின்றனர்.இந்த திட்டங்களை மன்னார் தீவு மக்கள் விரும்பவில்லை. மீன் வளம் இல்லாது போகும் என மீனவர்கள் கூறுகின்றனர். எனவே இந்த அகழ்வாராய்ச்சி பணிகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.மன்னார் தீவு காப்பாற்றப்பட வேண்டும் என்றார்.
பிரித்தானியாவில் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் மிகவும் உணர்வுபூர்வமாக அனுஷ்ட்டிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
தமிழர் வரலாற்று மையத்தில் மாவீரர் நாள் சிறப்பு நிகழ்ச்சிகள் பல்லாயிரக்கணக்கான மக்களுடன் உணர்வுபூராவாக அனுஷ்ட்டிக்கப்படுகின்றது.
தமிழ் இளையோர் அமைப்பு செயற்பாட்டாளர்களினால் கொடிவணக்கம் நிகழ்த்தப்பட்டதைத் தொடர்ந்து ஈகைச்சுடருக்கான ஆயத்த மணி ஒலி எழுப்பப்பட்டு தாயக மண்ணுக்காக தம் உயிரை ஈந்த மாவீரர்களுக்கு அகவணக்கம் செலுத்தப்பட்டது.
கல்லறைகளுக்கு முன்பாக மாவீரர் குடும்பத்தை சேர்ந்த உறவுகளால் தமிழர் வரலாற்று மைய கண்ணீரில் மூழ்கியது. தொடர்ந்து தமிழீழ எழுச்சிப் பாடல்களும் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.
மாவீரர் நாள் 2023 ஆண்டிற்க்கான பொதுசுடரினை வட கிழக்குப் பகுதியில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் நீண்ட காலப் பணியாளரான அப்பன் என்று அழைக்கப்படும் செல்லையா கனகரத்தினம் அவர்கள் ஏற்றிவைத்தார்கள்.
தொடர்ந்து மாவீரர் நாள் 2023ம் ஆண்டிற்க்கான பிரித்தானியத் தேசியக் கொடிஇளையோர் அமைப்பு செல்வி பார்பரா ராஜன் அவர்கள் ஏற்றிவைத்தார்கள்.
மாவீரர் நாள் 2023ம் ஆண்டில் தமிழீழத் தேசியக் கொடியினை பிரித்தானியத் தமிழர் ஒருங்கமைப்புக் குழுவின் பொறுப்பாளர் திரு. ஆனந் அவர்கள் ஏற்றிவைத்தார்கள்.
பிரிகேடியர் சொர்ணம் அவர்களின் புதல்வன் பிரபாநந்தன் அவர்கள் ஈகைச் சுடரினை ஏற்றி வைத்தார்கள். ஆயிரக்கணக்கான மக்கள் சுடர் ஏந்தி மலர்வணக்கத்தினை செலுத்தினார்கள்.
வடக்கு, கிழக்கில் உள்ள எட்டு மாவட்டங்களிலும் உள்ள மாவீரர் துயிலுமில்லங்களில் தடைகளை தாண்டி மாவீரர் நாள் நினைவேந்தல் நேற்று உணர்வெழுச்சியுடன் அனுஷ்டிக்கப்பட்டது.
யாழ்ப்பாணத்தில் கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம், கொடிகாமம் மாவீரர் துயிலுமில்லம், எள்ளங்குளம் மாவீரர் துயிலுமில்லம், உடுத்துறை மாவீரர் துயிலுமில்லம், சாட்டி மாவீரர் துயிலுமில்லத்திலும் கிளிநொச்சி மாவட்டத்தில் கனகபுரம் மாவீரர் துயிலுமில்லம், முழங்காவில் மாவீரர் துயிலுமில்லம், தேராவில் மாவீரர் துயிலுமில்லம் ஆகியவற்றில் நினைவேந்தல் மிகவும் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றன. இதேவேளை, முல்லைத்தீவு மாவட்டத்தில், முல்லைத்தீவு கடற்கரை, இரட்டைவாய்க்கால், தேவிபுரம், களிக்காடு, கொக்குத்தொடுவாய், சுதந்திரபுரம், அளம்பில், வன்னி விளான்குளம், முள்ளியவளை, ஆலங்குளம், இரணைப்பாலை, முள்ளிவாய்க்கால் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மாவீரர் துயிலுமில்லங்களிலும் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன.
மன்னார் மாவட்டத்தின் ஆட்காட்டி வெளி, பெரிய பண்டிவிரிச்சன், முள்ளிக்குளம் துயிலுமில்லங்களிலும், வவுனியா மாவட்டத்தில் ஈச்சங்குளம் துயிலுமில்லத்திலும் நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.
கிழக்கு மாகாணத்தினைப் பொறுத்த வரையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மாவடிமுன்மாரி, தரவை, தாண்டியடி, வாகரை கண்டலடி ஆகிய மாவீரர் துயிலுமில்லங்களிலும், திருகோணமலை மாவட்டத்தின் சம்பூர் ஆலங்குளம் துயிலுமில்லத்திலும், அம்பாறை கஞ்சிக்குடிச்சாறு துயிலுமில்லத்திலும் நினைவேந்தல் இடம்பெற்றது.
இதேவேளை, இறுதி நிமிடத்தில் உட்புகுந்த பொலிஸாரின் அராஜகத்துக்கு மத்தியில் மட்டக்களப்பு தரவையில் நினைவேந்தல் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது. அங்கு நுழைந்த பொலிஸார் சிவப்பு மற்றும் மஞ்சள் நிறக்கொடிகளை அறுத்தெறிந்தனர்.
கிளிநொச்சி மாவட்டத்தில் கனகபுரம், முழங்காவில், தேராவில் மாவீரர் துயிலுமில்லங்களில் மாவீரர் தின நிகழ்வுகள் இடம்பெற்றது. இதன்போது மாவீரர்களின் உறவுகள், பொது மக்கள் என பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு அஞ்சலி செலுத்தினர்.
இதனால் வரலாறு காணாத வகையில் இன்றைய தினம் மக்கள் திரண்டமையால் கடும் வாகன நெரிசலும் சுமார் 2 மணிநேரத்திற்கு மேலாக காணப்பட்டது.
கிளிநொச்சி – கனகபுரம்கிளிநொச்சி – கனகபுரம்கிளிநொச்சி – முழங்காவில்
யாழ்ப்பாணம் – கோப்பாய்
கோப்பாய் – யாழ்ப்பாணம்கோப்பாய் – யாழ்ப்பாணம்
யாழ்ப்பாணம் கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் முன்பாக ,மாவீரர் நாளான இன்றைய தினம் உணர்வெழுச்சியுடன் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் இராணுவ கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையில் துயிலும் இல்லத்திற்கு முன்பாக உள்ள காணி ஒன்றில் அஞ்சலி நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில், நினைவேந்தல் இடம்பெற்றது.
கொடிகாமம்
கொடிகாமம் – யாழ்ப்பாணம்கொடிகாமம் – யாழ்ப்பாணம்
யாழ்ப்பாணம் – கொடிகாமம் மாவீரர் துயிலுமில்லத்தில் மாவீரர் தின நிகழ்வுகள் நேறறு மாலை முன்னெடுக்கப்பட்டன. அகவணக்கத்தைத் தொடர்ந்து ஈகச்சுடரை மாவீரர்களான கப்டன் ரசியன், மேஜர் ரெஸ்ரார்,மேஜர் வண்ணன் ஆகியோரின் தாயாரும் மற்றும் மாவீரர் குமரர் மற்றும் சந்திரன் ஆகியோரின் சகோதரியும் ஏற்றி நினைவேந்தலை ஆரம்பித்து வைத்திருந்தார். அதனைத் தொடர்ந்து மாவீரர்களின் உறவுகள் மற்றும் பொதுமக்களால் பொதுச்சுடர்கள் ஏற்றி வைக்கப்பட்டன. நிகழ்வில் மாவீரர்களின் பெற்றோர், சகோதரர்கள்,உறவுகள், சமூக ஆர்வலர்கள்,அரசியல் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பெருந்திரளானவர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியிருந்தனர்.
எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லம் – யாழ்ப்பாணம்
எள்ளங்குளம்-யாழ்ப்பாணம்எள்ளங்குளம்-யாழ்ப்பாணம்
வடமராட்சி எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லம் முன்பாக ,மாவீரர் நாளான இன்றைய தினம் உணர்வெழுச்சியுடன் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லம் இராணுவ கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையில் துயிலும் இல்லத்திற்கு அருகில் உள்ள காணி ஒன்றில் அஞ்சலி நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பிரதான ஈகச்சுடரினை கடற்கரும்புலி மாவீரர் தமிழினியின் தந்தையார் முத்துலிங்கம் சிவப்பிரகாசம் ஏற்றி வைத்தார்.
சாட்டி மாவீரர் துயிலும் இல்லம்
சாட்டி – தீவகம்சாட்டி – தீவகம்
யாழ்ப்பாணம் – தீவகம், சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர்களுக்கு உணர்வெழுச்சியுடன் அஞ்சலி செலுத்திப்பட்டது. ஆரம்பத்தில் மாவீரர்களின் பெற்றோர், மற்றும் உறவினர்கள் சாட்டி மாதா தேவாலயத்தில் இருந்து அழைத்து வரப்பட்டனர். தொடர்ந்து பொது ஈகச்சுடர் முன்னாள் போராளியும், இரண்டு மாவீரர்களின் தந்தையுமான வி.கந்தசுவாமியினால் ஏற்றப்பட்டது.
வல்வெட்டித்துறை கம்பர் மலை
வல்வெட்டித்துறை – கம்பர்மலை
வல்வெட்டித்துறை கம்பர்மலையில் உள்ள தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முதல் மாவீரர் சங்கரது நினைவாலயம் முன்பாக மாவீரர் நினைவேந்தல் இடம்பெற்றது. மாவீரர்களின் உறவுகள் கலந்துகொண்டு சுடரேற்றி அகவணக்கம் செலுத்தி அஞ்சலி செலுத்தினர்.
முல்லைத்தீவு இரட்டைவாய்க்கால்
முல்லைத்தீவு – இரட்டைவாய்க்கால்
இரட்டைவாய்க்கால் மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் நாள் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது. பொதுச்சுடரினை இரண்டு மாவீரர்களின் தந்தையான தனபாலசிங்கம் ஏற்றி வைக்க ஏனைய உறவுகளுக்கு அவர்களது உறவுகள் சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர்.
முல்லைத்தீவு கடற்கரை
முல்லைத்தீவு – கடற்கரை
முல்லைத்தீவு கடற்கரையில் மாவீரர்களின் பெற்றோர்கள் உறவினர்கள், முன்னாள் போராளிகள், பொதுமக்கள் என பெருந்திரளானவர்கள் உணர்வுபூர்வமாக ஒன்று திரண்டு உயரிய இலட்சியத்திற்காக தங்களின் இன்னுயிர்களை தியாகம் செய்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் தினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு கடற்கரையில் மாலை 6.05 மணிக்கு மணியோசை எழுப்பப்பட்டு, அகவணக்கம் செலுத்தப்பட்டு பின்னர் பிரதான பொதுச் சுடரை கடற் கரும்புலி மேஜர் நிதர்சன் அவர்களின் தாயார் ஏற்றி வைக்க ஏனைய சுடர்களை மாவீரர்களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களால் ஏற்றி வைக்கப்பட்டது.
வவுனியா ஈச்சங்குளம் மாவீரர் துயிலும் இல்லம்
வவுனியா – ஈச்சங்குளம்வவுனியா – ஈச்சங்குளம்
வவுனியாவில் பிரதான மாவீரர் துயிலும் இல்லம் அமைந்துள்ள ஈச்சங்குளம் பகுதியில் 561 ஆவது இராணுவ தலைமையகம் அமைந்திருப்பதால் அதற்கு அருகாமையிலுள்ள மைதானத்தில் நினைவேந்தல்கள் இடம்பெற்றன. இதன் போது மணி ஒலிக்கப்பட்டு, ஈச்சங்குளம் துயிலும் இல்லத்தின் பிரதான ஈகச்சுடரினை மேஜர் உமாசங்கர் மற்றும் கப்டன் கஜலக்சுமி ஆகியோரின் தாயார் வள்ளிப்பிள்ளையால் ஏற்றி வைக்கப்பட்டது. இதனையடுத்து நினைவேந்தலில் கலந்து கொண்ட மாவீரர்களின் பெற்றோர்களால் சுடர் ஏற்றி நினைவேந்தல் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவடிமுன்மாரி
மட்டக்களப்பு – மாவடிமுன்மாரிமட்டக்களப்பு – மாவடிமுன்மாரி
மட்டக்களப்பு மாவட்டம் மாவடி முன்மாரி மாவீரர் துயிலுமில்லத்தில் மக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். மட்டக்களப்பு மாவட்டம் கொக்கட்டிச் சோலைப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடிமுன்மாரி மாவீரர் துயிலுமில்லத்தில் திங்கட்கிழமை மாலை 6.05 மணிக்கு கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு ஈகைச் சுடர் ஏற்றி அஞ்சலி சொலுத்தினர். குறித்த மாவீரர் துயிலும் இல்லத்தைச் சூழ பொலிசார் அவர்களது கடமையில் ஈடுபட்டிருந்துடன் அவ்வப்போது நிகழ்வை குழப்பும் வகையில் ஏற்பாட்டாளர்களுடன் தர்க்கத்திலும் ஈடுபட்டிருந்ததுடன், கலந்து கொண்டிருந்த பொது மக்கள் மற்றும் ஊடகவியலாளர்களையும் பொலிசார் அவர்களது கைபேசியில் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
மட்டக்களப்பு – வாகரை
மட்டக்களப்பு- வாகரைமட்டக்களப்பு- வாகரை
மட்டக்களப்பு வாகரையில் உணர்வெழுச்சியுடன் மாவீரர் தின நிகழ்வுகள் நேற்று இடம்பெற்றன.
மன்னார் – பண்டிவிரிச்சான் மாவீரர் துயிலுமில்லம்
மன்னார் – பண்டிவிரிச்சான்மன்னார் – பண்டிவிரிச்சான்மன்னார் – பண்டிவிரிச்சான்
மன்னார் பண்டிவிரிச்சான் மாவீரர் துயிலும் இல்லத்தில் ஒன்று திரண்ட மக்கள் சுடரேற்றி உணர்வுபூர்வமாக தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தினர். பொதுச் சுடர் ஏற்றப்பட்ட பின் மாவீரர்களின் உறவுகள் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.இதன் போது மாவீரர்களின் உறவுகள் அருட்தந்தையர்கள்,அருட் சகோதரிகள்,அரசியல் பிரதிநிதிகள் என ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.
ஆட்காட்டிவெளி
மன்னார் – ஆட்காட்டிவெளிமன்னார் – ஆட்காட்டிவெளி
மாவீரர் தினத்தையொட்டி மன்னார் ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் சிவப்பு, மஞ்சள் கொடிகள் பறக்க விட்டு உணர்வு பூர்வமாக மாவீரர் நினைவு தினம் இன்றைய தினம் நேற்று மாலை நினைவு கூரப்பட்டது. தமிழ் தேசிய விடுதலைக்காக தனது மகனை கரும்புலியாக வழங்கிய தந்தை பொதுச் சுடரை ஏற்றி எழுச்சி பூர்வமாக நினைவேந்தலை ஆரம்பித்து வைத்தார் .
திருகோணமலை
திருகோணமலை மாவட்டம் சம்பூர் ஆலங்குளம் துயிலும் இல்லத்தில் மாவீரர் நாள் நினைவேந்தல் பொலிஸாரால் தடுக்கப்பட்ட நிலையில், சம்பூர் பத்திரகாளி கோவில் முன்றலில் அனுஷ்டிக்கப்பட்டது.
வீரர் தினநிகழ்வுகளில் கலந்துகொள்பவர்களை அரசதரப்பினர் படமெடுப்பதை தடுப்பதற்காக சர்வதேச சமூகம் தனது கண்காணிப்பாளர்களை அந்த பகுதிக்கு அனுப்பவேண்டும் என உண்மை மற்றும் நீதிக்கான சர்வதேச திட்டத்தின் நிறைவேற்று பணிப்பாளர் ஜஸ்மின் சூக்கா வேண்டுகோள் விடுத்துள்ளார்
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது.
2009 மே மாதம் முடிவிற்கு வந்த உள்நாட்டு யுத்தத்தின் போது இழைக்கப்பட்ட யுத்த குற்றங்கள் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களிற்கு காரணமானவர்களை எந்த வகை பொறுப்புக்கூறலிற்கும் உட்படுத்துவதில் இலங்கை அரசாங்கம் தோல்வியடைந்துள்ளமை இலங்கையில் தண்டனையின் பிடியிலிருந்து விலக்களிக்கப்படுவதை ஆழமாக்கியுள்ளது.
யுத்தம் முடிவிற்கு வந்திருக்கலாம் ஆனால் இலங்கையிலும் வெளிநாடுகளிலும் தமிழர்கள் ஒடுக்குமுறைக்குள்ளாக்கப்படுவது தொடர்கின்றது.
பாதுகாப்பு படையினர் தொடர்ந்தும் இழைத்துவரும் வன்முறைகள் தனிநபர்களையும் குடும்பங்களையும் பாதிப்பதுடன் மாத்திரமல்லாமல் கூட்டுசகவாழ் நம்பிக்கை பாரம்பரியம் போன்றன கட்டி எழுப்பப்படும் சமூககட்டுமானத்தையும் அழிக்கின்றது.
விடுதலைக்கான தமிழர்களின் போராட்டத்தின் போது உயிரிழந்தவர்களை நினைவுகூருவதற்கான குடும்பங்களின் நியாயபூர்வமான உரிமைகளை இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் மீறிவருகின்றது.
2014ம் ஆண்டு முதல் பலவருடங்களாக எனது அமைப்பு இலங்கையில் சித்திரவதைகளுக்கு உள்ளாகி அங்கிருந்து தப்பியோடியவர்களின் வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளது – இதன் போது அவர்கள் நினைவேந்தலில் கலந்துகொண்டவேளை அவர்களை படமெடுத்த இலங்கையின் புலனாய்வு பிரிவினர் பின்னர் அவர்களிற்கு வீடுகளுக்கு சென்று அவர்கள் அச்சுறுத்தியுள்ளமை தெரியவந்துள்ளது.
நாங்கள் சந்தித்த ஒருவர் 2022 நவம்பர் ஏழாம் திகதி வடபகுதியில் மயானத்தில் உரையாற்றியுள்ளார்- புதிய ஜனாதிபதி அவ்வாறான நிகழ்வுகளிற்கு அனுமதியளித்துள்ளதால் அவ்வாறான நிகழ்வுகளில் கலந்துகொள்வது பாதுகாப்பானது என அவர் கருதியுள்ளார்,
எனினும் சில நாட்களின் பின்னர் அவரது கருத்துசுதந்திரம் நடமாடும் சுதந்திரம் ஆகியவற்றை மீறும் விதத்தில் அவரை கைது செய்து சித்திரவதை செய்துள்ளனர் அவர் தனது புதிதாக பிறந்த குழந்தையையும் வளர்ச்சியடைந்து வந்த வர்த்தகத்தையும் விட்டு இலங்கையிலிருந்து தப்பிவெளியேறியுள்ளார்.
இவ்வாறான விசாரணைகளின் போது பாதுகாப்பு படையினர் இந்த நினைவுகூரல்களிற்கு யார் வழங்குவது என கேள்வி கேட்கின்றனர் –
நினைவேந்தல்களை ஏற்பாடு செய்வதும் கலந்துகொள்வதும் வெறும் எதிர்ப்பின் செயற்பாடுகள் மட்டுமல்ல இந்த பயங்கரமான போரில் தப்பிய அனைவராலும் உணரப்பட்ட மிக ஆழமான தனிப்பட்ட துரயத்தின் வெளிப்பாடுகள் ஆகும்.
அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் வன்முறைக்கு பலியானவர்களின் குடும்பத்தவர்களும் வன்முறைக்கு பலியானவர்களே மேலும் அவர்கள் காணாமல்போதல் சித்திரவதை அல்லது தங்கள் அன்புக்குரியவர்களின் இழப்பு போன்றவற்றை அனுபவித்தவர்கள்.
அவர்கள் உயிர்பிழைத்துள்ள போதிலும் தண்டனையின்மை மற்றும் குற்ற உணர்ச்சியின் பெரும் தடையை எதிர்கொள்கின்றனர்.
உயிர்பிழைத்தவர்கள் உண்மை மற்றும் நீதிக்கான அவர்களது போராட்டத்தில் இறந்தவர்களையும் காணாமல்போனவர்களையும் தொடர்ந்தும் நினைவுநினைவு கூருவது ஒரு தார்மீக மற்றும் சமூக பொறுப்பு என கருதுகின்றனர்.
நவம்பர் 27 ம் திகதி குடும்பத்தவர்கள் மற்றும் நண்பர்களை இழந்தவர்கள் மாத்திரம் அவர்களை நினைவுநினைவு கூருவதில்லை,மாறாக முழுசமூகமும் தியாகத்தையும் கூட்டுதுயரத்தையும் நினைவுகூருகின்றது.
பல ஆண்டுகளாக வெளிநாடுகளில் தப்பிப்பிழைத்த தமிழர்களின் குழுக்கள் இறந்தவர்களை தனிப்பட்ட மற்றும் பொது இடங்களில் நினைவுகூரும் உரிமையை மீட்டெடுப்பதை நாம் காண்கிறோம். செயல்பாட்டில் அவர்கள் உயிர்வாழ்வது மற்றும் சாட்சியமளிப்பதன் அர்த்தம் என்ன என்று போராடுகிறார்கள். வருங்கால சந்ததியினருக்கு நினைவாற்றலை உயிர்ப்புடன் வைத்திருப்பதற்காக அவர்கள் தங்கள் தனிப்பட்ட துன்பங்களை மட்டுமல்ல தங்கள் சமூகங்களின் துன்பங்களையும் வெளிப்படுத்த புதிய வழிகளைக் காண்கிறார்கள்.
எந்த அடக்குமுறையும் நினைவுநினைவு கூருவதற்கான மக்களின் தேவையை தடுத்து நிறுத்தப்போவதில்லை ,குறிப்பாக அது உங்களின் குழந்தை அல்லது பெற்றோருக்கானதாகயிருந்தால்.
சித்திரவதையிலிருந்து உயிர்தப்பிய ஒருவர் பூசாவில் தடுத்துவைக்கப்பட்டிருந்தவேளை தானும் தனது நண்பர்களும் நவம்பர் 27 ம் திகதி மெழுகுதிரியை ஏற்றுவதற்காக அதிகாலையில் எழுந்ததை நினைகூர்ந்திருந்தார்.
சிறைப்பாதுகாவலர்கள் பழிவாங்குவார்கள் என தெரிந்திருந்தும் அவர்கள் அதனை செய்தனர்.
அவர்களுக்கு உள்ள இறுதிகௌரவம் அதுவே அது மிகவும் பெருமதியானது.
போரிலிருந்து உயிர்பிழைத்தவர்கள் நினைவேந்தல் நிகழ்வுகளில் கலந்துகொள்ளும்போது துக்கத்தை வெளிப்படுத்தி காயங்களை ஆற்ற முடியாத நிலையில் காணப்படுகின்ற சூழலில் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க உண்மையை கண்டறியும் ஆணைகுழுவை நிறுவது பற்றி பேசுகின்றார்.
உயிர்பிழைத்தவர்கள் அந்த ஆணைக்குழுவிடம் சென்று சாட்சியமளிக்கப்போவதில்லை.
உண்மை ஆணைக்குழு நம்பிக்கை மிக்கதாக காணப்படவேண்டும் வெற்றியளிக்கவேண்டும் என்றால் ஜனாதிபதி அரசவன்முறைகள் முடிவிற்கு வரும் என்பதையும் நவம்பர் 27 ம் திகதி நிகழ்வுகள் கண்காணிக்கப்படாது என்பதையும் அதில் கலந்துகொள்பவர்கள் அவற்றை ஏற்பாடு செய்தவர்கள் பழிவாங்கப்படமாட்டார்கள் என்பதையும் உறுதி செய்யவேண்டும்.
இந்த ஒடுக்குமுறைகள் இடம்பெறுகின்ற வேளை சர்வதேச சமூகம் அமைதியாகயிருக்ககூடாது சீருடை அணியாதவர்கள் படங்களை எடுப்பதை உறுதி செய்வதற்காக சர்வதேச கண்காணிப்பாளர்களை அனுப்பவேண்டும் எனஜஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்.
வடக்கு, கிழக்கு உள்ளிட்ட 11 மாவட்டங்களில் 1985 ஆம் ஆண்டுக்கு முன்னர் மக்கள் வாழ்ந்ததாக அடையாளப்படுத்தப்படும் அனைத்து இடங்களையும் அவர்களுக்கே மீள வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்பு அமைச்சர் பவித்ராதேவி வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.
வடக்கு கிழக்கு மக்களின் காணி விவகாரம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனினால் முன்வைக்கப்பட்ட கருத்துக்கு பதிலளிக்கும் வகையிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“எங்களுடைய வரைபடத்தில் வடக்கு, கிழக்கு உள்ளிட்ட 11 மாவட்டங்களில் 1985 ஆம் ஆண்டுக்கு முன்னர் மக்கள் வாழ்ந்த காணிகள் இருந்தால் அதனை அடையாளப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளோம்.
ஜனாதிபதியின் ஆலோசனையின் படி நான் சமர்ப்பித்துள்ள அமைச்சரவை பத்திரத்துக்கு அமைய அந்த படங்களை மக்களுக்கே மீள வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம்.
அதற்கமைய, எனது அமைச்சின் செயலாளர் மற்றும் வனஜீவசாரிகள் திணைக்களத்தின் செயலாளர் நாயகம் ஆகியோர் அந்தந்த மாவட்டங்களுக்கு விஜயம் செய்துள்ளனர்.
மாவட்டங்களுக்கு விஜயம் செய்துள்ள இவர்கள் 1985 ஆம் ஆண்டுக்கு முன்னர் மக்கள் வாழ்ந்த இடங்கள் எவை என்பது குறித்து முழுமையான தகவல்களை பெற்றுக்கொண்டுள்ளனர்.
அந்த தகவல்களுக்கு அமைய இறுதி அறிக்கையும் தற்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையை ஜனாதிபதி செயலாளரின் தலையிலான குழுவிடம் சமர்ப்பித்து, அதனூடாக காணி ஆணையாளரிடம் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம்.
பின்னர் அந்த காணிகளை பிரதேச செயலாளரிடம் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுப்போம்.
இதனைத் தொடர்ந்து உரிய காணியை, காணி உறுதி பத்திரத்துடன் மக்களிடம் வழங்குவோம்” என அவர் மேலும் தெரிவித்தார்.
விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவை உடன் அமுலுக்கு வரும் வகையில் அமைச்சர் பதவி மற்றும் ஏனைய பதவிகளில் இருந்து நீக்கி ஜனாதிபதி கடிதம் அனுப்பியுள்ளார்.
அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி செயலகத்திற்கு சென்றிருந்த போதே விளையாட்டுத்துறை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கும் கடிதம் கையளிக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவை கூட்டத்தில் கலந்து கொள்ள அழைக்கப்பட்ட பிறகு முதல் முறையாக அமைச்சர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
தனது உயிருக்கு ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் அதற்கு ஜனாதிபதியும் சாகல ரத்நாயக்கவும் பொறுப்பு கூற வேண்டும் என விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“ஜனாதிபதி ஐக்கிய நாடுகள் ஒன்றியத்திற்கு சென்று கூறுகின்றார் ஊழல் மோசடிகளை ஒழிக்க வேண்டும் என்று.
அதற்காக செயற்படுகின்ற என்னை வேறு விதமாக சித்தரிக்க முயற்சிக்கின்றார்கள்.
பணம் கொடுத்து என்னை கொலை செய்ய முயற்சிப்பார்கள்.
அவ்வாறு இல்லையெனின் போதைபொருள் கடத்தல்காரராக சித்திரிக்க முயற்சிப்பார்கள்.
ஒரு அமைச்சராக உள்ள என்னுடைய பாதுகாப்பில் அரசியல் மற்றும் நீதித்துறையின் தலையீடுகள் தொடர்பில் நான் கவலையடைகின்றேன்.
இது அரசியலில் ஒரு புதிய பிளவாக இருக்க வேண்டும். அதில் என் உயிர் போய்விடலாம். நான் நெடுஞ்சாலையில் கொல்லப்படலாம்.
அது நாளையா, இன்றோ அல்லது நாளை மறுநாளோ என்று எனக்குத் தெரியவில்லை. ஜனாதிபதி மற்றும் அதற்கு சாகல ரத்நாயக்க பொறுப்பேற்க வேண்டும்.
ஆனால் இந்த 134 வாக்குகளை அவருக்கு அளித்தது அவர் ஜனாதிபதியாகி எம்மைப் பழிவாங்குவதற்காகவா என்ற கேள்வி எழுந்துள்ளது.
எனக்கு வாழ்வதற்கான உரிமையை பெற்றுத் தாருங்கள். வேறு நாடுகளுக்கு அடைக்கலம் கோரி செல்ல நான் தயாராக இல்லை.
கிரிகெட் பிரச்சினை தற்போது முடிவடையவில்லை என்றால் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் நிச்சயமாக இந்த பிரச்சினையை முடிப்பேன்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.