தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் 12 வது தேசிய மாநாட்டில் தலைவராக செல்வம் அடைக்கலநாதன் மீண்டும் ஏகமனதாக தெரிவானார் 

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் பனிரெண்டாவது(12) தேசிய மாநாடு இன்று வவுனியா மாவட்டத்தில் மதியம் 2:30 மணிக்கு வோர்ஸ் மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த மாநாட்டில் எட்டு மாவட்டங்களில் இருந்தும் கலந்து கொண்ட பொதுக்குழு உறுப்பினர்களினால் மத்திய குழு உறுப்பினர்கள், தலைமை குழு உறுப்பினர்கள் உட்பட கட்சி நிர்வாகிகளின் தேர்வு நடைபெற்றது.

இத் தேர்வுகளில் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவராக கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அவர்கள் தெரிவு செய்யப்பட்டார்.

கட்சியின் உப தலைவராக திரு குருசுவாமி சுரேந்திரன் அவர்கள் தெரிவு செய்யப்பட்டார்.

செயலாளர் நாயகமாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் தெரிவு செய்யப்பட்டார்.

மேலும் கட்சியின் நிதிச் செயலாளராக திரு கமலவிஜிந்தன் அவர்களும், தேசிய அமைப்பாளராக திரு செந்தில்நாதன் மயூரன் அவர்களும், நிர்வாகச் செயலாளராக திரு பரமலிங்கம் நித்தியானந்தன் அவர்களும் இளைஞரணிச் செயலாளராக திரு தியாகராஜா பிரபாகரன் அவர்களும் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார்கள்.

செயலாளர் அறிக்கை, நிதிச்செயலாளர் அறிக்கை மற்றும் தலைவர் உரையுடன் உப தலைவரால் கட்சியின் மாநாட்டு பிரகடனமும் வெளியிடப்பட்டது.