தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் மறைந்த தலைவர் சிறீ சபாரத்தினரம் கல்வி கற்ற யா/கல்வியங்காடு செங்குந்தா இந்துக் கல்லூரிக்கு உதவி கையளிப்பு
யாழ்ப்பாணம் கல்வியங்காட்டில் அமைந்த செங்குந்தா இந்து கல்லூரிக்கு போட்டோ கொப்பி இயந்திரம் மற்றும் பயன்பாட்டிற்கு ஏற்றவாறு கூரை செப்பனிடப்பட்டு அரங்கமும் கையளிக்கப்பட்டது.
மாணவர்களுக்கான வினாத்தாள்கள் அச்சிடவும் மற்றும் கல்வித் தேவைகளுக்காக போட்டோ கொப்பி இயந்திரம் ஒன்று பாடசாலை சமூகத்தினால் கோரிக்கை விடுக்கப்பட்டதை அடுத்து சுரேந்திரன் குருசுவாமியால் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையினால் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் அவர்களுடைய பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஊடாக இந்த உதவி திட்டங்கள் இன்று பாடசாலைக்கு கையளிக்கப்பட்டன.
இந்நிகழ்வில் ரெலோ சார்பில் அதன் உப தலைவர் குருசுவாமி சுரேந்திரன் அவர்களும் யாழ் மாவட்ட செயலாளரும் முன்னாள் யா/ மாநகர சபை பிரதிமேயர் துரைராஜா ஈசன் அவர்களும் கலந்து கொண்டனர்.
தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்தில் முதல் முதல் தொடங்கப்பட்ட இயக்கமாக, தலைவர் தங்கதுரை தளபதி குட்டிமணி ஆகியோர் உட்பட பல போராளிகள் ஒன்றிணைந்து உருவாக்கியது தமிழ் ஈழ விடுதலை இயக்கம்.
அவர்களின் கைதுக்கு பின்னர் இந்த மாபெரும் தொன்மை வாய்ந்த இயக்கத்தை தலைமை தாங்கியவர் மறைந்த தலைவர் சிறீ சபாரத்தினம். அவர் செங்குந்தா பகுதியைச் சேர்ந்தவரும் இந்த பள்ளிக்கூடத்தின் பழைய மாணவரும் ஆவார்.
அவர் நினைவாகவே இந்த உதவி திட்டம் பாடசாலைக்கு வழங்கி வைக்கப்பட்டது.
தலைவர் சிறீ சபாரத்தினம் காலத்தில் மிகப் பெரிய பலமான கட்டமைப்பு கொண்ட விடுதலை இயக்கமாக ரெலோ திகழ்ந்தது.
இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் பின்னர் ரெலோ ஒரு ஜனநாயக அரசியல் கட்சியாக மாற்றம் பெற்று வடக்கு கிழக்கு முழு மாவட்டங்களிலும் செல்வாக்கு செலுத்தும் அரசியல் கட்சியாக பயணித்துக் கொண்டிருக்கிறது.
தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உட்பட கிட்டு, செல்லக்கிளி, சாள்ஸ் அன்ரனி ஆகியோரோடு விடுதலைப் புலிகளால் போற்றப்படும் பல தளபதிகள் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் உறுப்பினர்கள் என்பது வரலாறு.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு பொழுது இந்த வரலாறுகள் நினைவு கூரப் பட்டன.