பல்கலைக்கழக மாணவர்கள்மீது பயங்கரவாதிகள் என்ற முத்திரை குத்தப்படுகிறது . அரசாங்கத்துக்கு எதிராக ஜனநாயக ரீதியில் போராட்டம் நடத்தும் பல்கலைக்கழக மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தினால், இலங்கையில் மீண்டுமொரு விடுதலை போராட்டம் உருவாகும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) வினோ நோகராதலிங்கம் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் பொதுஜன பெரமுனாவிலிருந்து பிரிந்தவர்கள் தேர்தலை நடத்துமாறு கோரிக்கை விடுப்பது அவர்களின் சுயநல அரசியலுக்காகவே எனவும் அரசியல் இருப்பை தக்கவைப்பதற்காகவே அவர்கள் செயற்படுகின்றனர் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் இன்றைய அமர்வில் உரையாற்றிய வினோ நோகராதலிங்கம், அரசாங்கத்தின் பலவீனத்தை பயன்படுத்தி பதவி ஆசையை நிறைவேற்ற முயற்சிப்பது பச்சோந்தி தனமான செயல் என்று தெரிவித்தார்.