முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, முள்ளியவளை பொலிஸ் பிரிவுகள் தனிமைப்படுத்தலில்

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, முள்ளியவளை ஆகிய பொலிஸ் பிரிவுகள் தனிமைப்படுத்தப்படவுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதன்படி குறித்த 3 பொலிஸ் பிரிவுகளும் இன்று இரவு 11 மணி முதல் தனிமைப்படுத்தப்படவுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, மே 18 முள்ளிவாய்க்கால் தமிழின பேரவலத்தின் நினைவேந்தலை கொவிட் 19 சுகாதார விதிகளை பின்பற்றி நினைவுகூர முடியும் எனவும் பயங்கரவாத நடவடிக்கைகளை தூண்டாத வகையிலும் கவனத்தில் கொண்டு நினைவேந்தலை மேற்கொள்ள வேண்டும் என திருத்திய கட்டளையை வெளியிட்டு முல்லைத்தீவு நீதிமன்றம் இன்று மதியம் தீர்ப்பை வழங்கியிருந்தது.

இந்நிலையில் நாளை 18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்படவுள்ளதாக இதன் ஏற்பாட்டுக்குழுவினரால் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இவ்வாறு குறித்த பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இறுக்கமான சுகாதார நடைமுறைகளுடன் சகலவகையிலும் நினைவேந்துவோம் – ரெலோ தவிசாளர் நிரோஷ்

சுகாதார நடைமுறைக்கு உட்பட்டு நினைவேந்தலுடன் மரநடுகை, இரத்ததானத்தினையும் நாம் முன்வந்து மேற்கொள்ள வேண்டும் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) யாழ் மாவட்ட அமைப்பாளரும் வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளரும் ஆன தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

வழமையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அரச மற்றும் இராணுவ நெருக்கடிகளுக்குள்ளும் அச்சுறுத்தல்களுக்குள்ளுமே மேற்கொள்கொள்ளப்பட்டு வருகின்றது. இந் நிலையில் இம் முறை சுகாதார நெருக்கடி நிலையும் எம்மை நிர்க்கதிக்குள் தள்ளியுள்ளது.

கொரோனாவைக் கூட தனது மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்காத போக்கிற்கு சாதகமாக அரசாங்கம் பயன்படுத்துகின்றது என்பதை பொலிஸார் தொடுக்கும் வழக்குகள் வாயிலாக புரிந்து கொள்ள முடிகின்றது. யுத்த தர்மங்களுக்கும் மனிதாபிமானச் சட்டங்களுக்குப் புறம்பாகவே திட்டமிட்டு எமது மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டார்கள்.

இவ்வாறாக படுகொலை செய்யப்பட்டவர்களை நினைவு கொள்வதற்கு சகல உரிமைகளும் அங்கீகாரங்களும் எமக்கு உள்ளது. நினைவு கொள்;வதற்கான உரிமையினை அதி சுகாதார பொறுப்புணர்வுடன் மேற்கொள்ளவேண்டும் என்பதே இன்றைய தேவை.

கோவிட் தொற்று தொடர்பாக உலகம் ஒவ்வொருவரிடமும் எதிர்பார்த்துள்ள பொறுப்புணர்வை நிலைநாட்டி நினைவேந்துவதே எமது இனத்தின் கௌரவத்தினையும் பொறுப்புணர்வினையும் இயம்புவதாக அமையும்.

இலங்கையில் கொரோனாச் செயலணி இராணுவ மயப்படுத்தப்பட்ட ஒன்றாக உள்ள நிலையில் அதன் அறிவிப்புக்கள் பற்றிய கேள்விகள் நம்மிடையே உள்ளபோதும் துறைசார் வைத்தியத் துறையினர் நிலைமைகளின் விபரிதத்தினை எமக்கு உறுதிப்படுத்தியுள்ளனர். மருத்துவத்துறையின் அறிவிப்புக்களுக்கு நாம் மதிப்பளிக்க வேண்டும்.

எமது மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட படுகொலைகளுக்கு தசாப்தங்கள் கடந்துள்ள போதும் இலங்கை அரசு பொறுப்புச் சொல்லவில்லை. மாறாக நினைவேந்தல் உரிமையைக் கூட கேள்விக்குட்படுத்துவதிலேயே அது கரிசனை கொள்கின்றது.

எமக்கு எதிரான படுகொலைகளுக்கும் மிலேச்சத்தனமான மனித உரிமை மீறல்களுக்கும் நீதிவழங்கப்படாமை மீளவும் இவ்வாறான நிகழ்வுகள் உள்நாட்டிலும் வேறு நாடுகளில் கூட ஒடுக்கு முறைகளை எதிர்கொள்ளும் இனங்களுக்கு எதிராக எதுவும் மேற்கொள்ளப்படாது உத்தரவாதத்தினை கூட இல்லாமல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

தமிழ் இனப்படுகொலையை உலகநாடுகள் ஏற்றுக் கொள்ள ஆரம்பித்துள்ளன – ரெலோ இளைஞர் அணித் தலைவர் சபா குகதாஸ்

ஈழத் தமிழர்களுக்கு 2009 ஆண்டு முள்ளிவாய்க்கால் மண்ணில் இலங்கை அரசபடைகளால் மேற்கொள்ளப்பட்ட அதியுச்ச படுகொலைகளை தமிழ் இனப்படுகொலை என உலக நாடுகளின் மக்கள் பிரதிநிதிகளின் மன்றங்கள் ஏற்றுக் கொள்ளவும், தீர்மானங்களாக நிறைவேற்றவும், சட்டமூலங்களாகவும் நிறைவேற்றவும் ஆரம்பித்துவிட்டன இது நீதி வேண்டிப் போராடும் ஈழத் தமிழர்களுக்கு கிடைத்த முதற் கட்ட வெற்றியாகும் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் இளைஞர் அணித் தலைவரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

முதலாவது தமிழ் இனப்படுகொலைத் தீர்மானம் வடக்குமாகாண சபையில் 10/02/2015 ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. பின்னர் தமிழர் தாயகத்தில் உள்ளூராட்சி மன்றங்களில் நிறைவேற்றப்பட்டன.

அடுத்த கட்டமாக ஈழத் தமிழர்களின் தொப்புக் கொடி உறவான தமிழகத்தில் 2015/09/16 தமிழக சட்டசபையில் அன்றைய முதலமைச்சர் ஐெயலலிதா அம்மையாரால் முள்ளிவாய்க்காலில் நடைபெற்றது, “தமிழ் இனப்படுகொலை தான்” என ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு முன் 2014/05/25 தமிழக முதல்வர் ஐெயலலிதா அவர்களினால் சட்டசபையில் ஈழத் தமிழர்களுக்கு நிரந்தரத் தீர்வாக ஒரு பொது வாக்கெடுப்பு நடாத்த வேண்டும் என்ற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

ஐக்கிய நாடுகள் சபையில் வீட்டோ அதிகாரம் உடைய நாடான பிரான்சில் 08/04/201 இவ்றி_சூர்_சென் (ivry-sur-seine) நகரசபையிலும், 13/02/2021 பாரிஸ் பொபினி நகரசபையிலும், 11/02/2021 திரான்சி(Drancy) நகரசபையிலும் தொடர்ச்சியாக தமிழ் இனப்படுகொலைத் தீர்மானங்கள் மூன்று சபைகளிலும் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. அத்துடன் சுயநிர்ணய உரிமைக்கான பொதுவாக்கெடுப்பும் நடாத்த வேண்டும் என்ற தீர்மானங்களும் பிரான்ஸ் நகரசபைகளில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கனடாவில் ஒன்ராறியோ மாநில சட்டசபையில் தமிழ் சட்டமன்ற உறுப்பினர் விஐய் தணிகாசலம் அவர்களால் கொண்டுவரப்பட்ட தமிழ் இனப்படுகொலை வரலாற்றை மாணவர்களுக்கு கற்பிக்கும் முகமாக மே மாதத்தில் இனப்படுகொலை வாரம் என்ற 104 இலக்க சட்டமூலம் 06/05/2021 ஒன்ராறியோ சட்டசபையில் ஏகமனதாக மூன்றாம் வாசிப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது ஒன்ராறியோவில் வாழும் 350,000 தமிழர்களுக்கும் ,ஈழத் தமிழர்களுக்கும் கிடைத்த வெற்றியாகும்.

ஆகவே ஈழத் தமிழர்களுக்கு நடந்தது இனப்படுகொலை தான் என்பதை உலக நாடுகள்  இனி வரும் நாட்களில் ஏற்றுக் கொள்ளுவதற்கான நல்ல சகுணம் உருவாகியுள்ளது. அத்துடன் இனப்படுகொலை நடந்தமைக்கான போதிய ஆதாரங்கள் ,சாட்சியங்கள் இருக்கின்றபோது பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதி நிச்சயமாக கிடைக்கும் என்றும் இனப்படுகொலை நடந்த 12 ஆண்டில் கொல்லப்படட அனைத்து உறவுகள் மீதும் சபதம் செய்வோம்”என்றார்.

புதிதாக பல கிராம சேவகர் பிரிவுகள் முடக்கப்பட்டன

நாட்டின் 10 மாவட்டங்களின் பல கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் இன்று (17) முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.

அதற்கமைய, மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட
150C கிராம உத்தியோகத்தர் பிரிவின்
நெசவு நிலைய வீதி
வேலாப்பொடி வீதி
கண்ணகி அம்மன் ஆலய வீதி மற்றும்
150B கிராம சேவகர் பிரிவின்
வாவிக்கரை வீதி,
அப்புகாமி வீதி ஆகிய பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட
கிண்ணியா,
பெரிய கிண்ணியா,
குட்டிகரச்சி,
அஹுதர் நகர்,
பெரியாற்றுமுனை,
மாலிந்துறை,
ரஹுமானியா நகர்,
சின்ன கிண்ணியா,
மாஞ்சோலை,
கட்டையாறு,
குறிஞ்சாக்கேணி,
முனைச்சேனை ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

குருநாகல் மாவட்டத்தின் கிரியுல்ல பொலிஸ் பிரிவுற்குட்பட்ட
ஹமன்கல்ல,
நாரங்கொட,
பட்டபொதெல்ல,
மல்கமுவ,
தொடம்பொத்த,
நாராங்கமுவ,
வத்கேதர,
கட்டுகம்பொல,
கவுடுமுன்ன,
ஹமனாகொடை,
வேத்வே,
மும்மானா,
மாஹரகம,
கீழ் மெத்தேபொல,
மேல் மெத்தேபொல,
கோந்துருவாவல,
மாஹின்கமுவ,
சியம்பலாவலானை,
போபிட்டிய,
மேல் லப்(B)பல,
கீழ் லப்(B)பல,
மத்கேம,
வெல்லேவ ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் முடக்கப்பட்டன.

கம்பஹா மாவட்டத்தின் பியகம பொலிஸ் பிரிவின் கீழுள்ள பியகம வடக்கு கிராம சேவகர் பிரிவு முடக்கப்பட்டது.

இரத்தினபுரி மாவட்டத்தின் கஹவத்த பொலிஸ் பிரிவின்
நுகவெல மேற்கு,
உடஹவுபே நுகவெல கிழக்கு,
எந்தான,
மடலகம ஜனபதய மற்றும்
இறக்குவானை பொலிஸ் பிரிவின்
பனாப்பிட்டிய தெற்கு,
பனாப்பிட்டிய வடக்கு,
கப்பெல,
மியனவிட்ட மேற்கு ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டன.

காலி மாவட்டத்தின் எல்பிட்டிய பொலிஸ் பிரிவின் பட்டுவன்ஹேன மற்றும் வல்அம்பகல கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் முடக்கப்பட்டன.

அம்பாறை மாவட்டத்தின் பதியத்தலாவ பொலிஸ் பிரிவின் கெஹெல்உல்ல கிராம சேவகர் பிரிவின் கடுபகஹர கிராமம் முடக்கப்பட்டது.

களுத்துறை மாவட்டத்தின் இங்கிரிய பொலிஸ் பிரிவின்
ரய்கமவத்தை கீழ்பிரிவு,
ரய்கம்புர,
ரய்கம் ஜனபதய மற்றும் அகலவத்தை பொலிஸ் பிரிவின் வெதிகந்த கிராமம் முடக்கப்பட்டது.

மாத்தளை மாவட்டத்தின் யட்டவத்த பொலிஸ் பிரிவின் வல்பொல மற்றும் அலவத்தை கிராமம் ஆகியன தனிமைப்படுத்தப்பட்டன.

நுவரெலியா மாவட்டத்தின் நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட
வென்ச்சர்,
இன்ஜஸ்ட்ரீ,
டிலரி மற்றும்
பொகவந்தாவ பொலிஸ் பிரிவின்
கேர்கஸ்வேல்ட்,
போகவானை,
லொய்னொன்,
கொட்டியாகல,
பொகவந்தலாவை
ஹட்டன் பொலிஸ் பிரிவின் Nfield ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் முடக்கப்பட்டன.

Posted in Uncategorized

தேர்தல் சீர்திருத்தம் – தமிழ், முஸ்லிம் பிரதிநிதித்துவங்களை குறைக்க இடமளிக்க முடியாது!

ஒட்டுமொத்த இலங்கைவாழ் தமிழர், முஸ்லிம் ஜனத்தொகையில், வடக்கு கிழக்குக்கு வெளியே 50 விகித தமிழரும், 65 விகித முஸ்லிம்களும், தென்னிலங்கை மாவட்டங்களில் சிதறி வாழ்கிறார்கள். இன்றைய விகிதாசார தேர்தல் முறைமை அடாத்தாக மாற்றப்பட்டு உத்தேச கலப்பு முறைமை கொண்டுவரப்பட்டால், எமது மக்களின் பிரதிநிதித்துவங்கள் சரிபாதிக்கு மேல் பாராளுமன்றத்திலும், மாகாணசபைகளிலும் குறைந்து விடும்.

அதேபோல், அம்பாறையில் தமிழரும், மட்டக்களப்பில் முஸ்லிம்களும் வெற்றிபெறுவதுகூட கடினமாகிவிடும். திருகோணமலையிலும், வன்னியிலும் கூட இன்றுள்ள ஒழுங்கு மாறும் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார்.

இன்று நடைபெற்ற தேர்தல்முறை தெரிவுக்குழுவின் முதற்கூட்டத்தின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வௌியிட்ட மனோ கணேசன் மேலும் கூறியதாவது, இன்று ஆரம்பமான தேர்தல் முறைமை சீர்திருத்த தெரிவுக்குழு கூட்டம் சம்பிரதாய முறைபடி கூடி கலைந்தது. இனி வரும் காலங்களில் இதன் வீச்சு அதிகரிக்கும். அரசாங்கம் தனது பங்காளி கட்சிகள் மத்தியில் முன்வைத்த பிற்போக்கு தேர்தல் முறைமை சீர்திருத்த யோசனைகள் இன்று முன்வைக்கப்படவில்லை.அவரை கிடப்பில் போடப்பட்டுள்ளன என்று அரசாங்க உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆகவே, அரசாங்க யோசனகளை நாம் உள்வாங்கி, தனித்தமிழ் தொகுதிகளை, தனி முஸ்லிம் தொகுதிகளை எல்லை மீள் நிர்ணயம் செய்து உருவாக்குவோம் என கூறுவது ஒரு வெறுங்கனவு. இதற்கு தென்னிலங்கையில் நுவரேலியா மாவட்டத்துக்கு வெளியே இடமில்லை.

ஒருபோதும், பெரும்பான்மை கட்சிகளும், பெரும்பான்மை அதிகார வர்க்கமும், தனித்தமிழ் தொகுதிகளை நுவரேலியா மாவட்டத்துக்கு வெளியே உருவாக்க உடன்படாது. அடுத்தது, பல அங்கத்தவர் தொகுதிகளையும், நிலத்தொடர்பற்ற தனித்தமிழ் தொகுதிகளையும் புதிதாக உருவாக்க இடமில்லை. உண்மையில் இப்படி தனித்தமிழ், தனி முஸ்லிம் தொகுதிகளை உருவாக்க நில பரப்பும், தமிழ், முஸ்லிம் ஜன அடர்த்தியும்கூட இடமளிக்காது.

அதேபோல், தொகுதி முறையும், பட்டியல் முறையும் கலந்த கலப்பு தேர்தல் முறையின் கீழ், நேரடி தொகுதி முறையில் போட்டியிட்டு வெற்றிப்பெற முடியாவிட்டால், பட்டியலில் இடம் கிடைக்கும் என இவர்கள் கூறுவார்கள். இதுவும் நடக்காத காரியம்.

பெரும்பான்மை கட்சிகள் ஒருபோதும் நேர்மையாக நடக்காது. ஆகவே, பெரும்பான்மை கட்சிகளுடன் கூட்டு சேர்ந்து போட்டியிட்டு, அவர்களுக்கு சிதறி கிடக்கும் தமிழ், முஸ்லிம் வாக்குகளை வாங்கி கொடுத்து விட்டு, பிறகு பட்டியலில் நியமனம் கிடைக்கும் என எதிர்பார்ப்பது இலவுகாத்த கிளியின் கதையாகி விடும்.

இன்று வடக்கு கிழக்குக்கு வெளியே ஒன்பது (9) தமிழ் எம்பீக்களும், இருபத்திஐந்து (25) தமிழ் மாகாணசபை உறுப்பினர்களும், ஏழு (7) முஸ்லிம் எம்பீக்களும், பதினெட்டு (18) முஸ்லிம் மாகாணசபை உறுப்பினர்களும் தெரிவாகின்றார்கள்.

இந்நிலையில் தேர்தல் முறையை மாற்ற கிளம்பும் அரசுக்கு, அரசின் உள்ளே இருக்கும் தமிழ், முஸ்லிம் கட்சிகளும், 20ம் திருத்தத்துக்காக அரசு பக்கம் தாவிய சிறுபான்மை எம்பீக்களும் சில கோரிக்கைகளை முன்வைக்க வேண்டும். கேள்விகளை எழுப்ப வேண்டும்.

இன்றைய முறையில், இன்று கடைசியாக மாகாணசபைகளில், பாராளுமன்றத்தில், இருக்கின்ற தமிழ், முஸ்லிம் பிரதிநிதித்துவங்களை குறைந்தபட்ச அளவுகோலாக கொண்டு, மாற்று யோசனையை தரும்படி பெரும்பான்மை கட்சிகளை கூட்டாக எழுத்து மூலம் கோர வேண்டும். பட்டியல் நியமனங்களை ஒருபோதும் கணக்கில் எடுக்க முடியாது என்பதையும் அறிவிக்க வேண்டும்.

தேர்தல் சீர்திருத்தை கோருவது அரசாங்கம்தான். ஆகவே இது தொடர்பான நியாயமான யோசனைகளை முன்வைக்க வேண்டியது அரசாங்கமே ஆகும். ஆகவே இது தொடர்பான பந்தை நாம் அரசாங்க பக்கத்துக்கு அடித்து அனுப்ப வேண்டும்.

மாறாக, நாமே தொகுதி முறைமையை ஏற்றுக்கொண்டு, 60:40 என்றும், 70:30 என்றும் மாற்று யோசனைகளை ஆரம்பத்திலேயே முன் வைப்பது முறையாகாது. இதுபற்றிய தெளிவும், அனுபவமும் அற்ற ஒருசிலரின் யோசனை முன்மொழிவுகள், நமது இனத்தை நிரந்தர அபாயத்தில் போட்டு விடும்.

அனைவரும் ஏற்றுக்கொள்ளும் நியாயமான முறைமையை முன்வைக்க அரசாங்கத்தால் முடியாவிட்டால், இன்றைய அதே விகிதாசார முறைமையை அடிப்படையாக கொண்டு, ஜனத்தொகைக்கு ஏற்ப, இன்றைய தேர்தல் மாவட்டங்களை, இரண்டு, மூன்றாக பிரிக்கும், “வலய தேர்தல் முறைமை” யை நாம் மாற்று யோசனையாக முன் வைக்க வேண்டும்.

இது புதிதல்ல. ஏற்கனவே, நமது அரசியலமைப்பில் 14ம் திருத்தமாக கொண்டுவந்து விட்டு நடைமுறைப்படுத்தாமல் விடப்பட்டதாகும். இது எமது அரசியல் இருப்பு தொடர்பான பிரச்சினை. தமிழ், முஸ்லிம் மக்களின் நியாயமான பிரதிநிதித்துவங்களை ஒழிக்க ஒருதலைபட்சமாக பெரும்பான்மை அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமாயின் அது உச்சகட்ட பேரினவாதம். ஆகவே இந்த தேர்தல் முறைமை சீர்திருத்தம் என்ற விடயம் தொடர்பில், தமிழ், முஸ்லிம் கட்சிகள் மத்தியில் ஒருமித்த கருத்து உருவாக வேண்டும்.

பேரினவாதத்துக்கு அடிபணிந்து, எமது இனத்தின் பிரதிநிதித்துவங்களை விட்டுக்கொடுத்து விட்டோம், என்ற எதிர்காலத்தின் பழிச்சொல்லுக்கு நாம் ஆளாக கூடாது. அடாவடியான தேர்தல் முறை மாற்றத்துக்கு அரசாங்கம் தயாராகுமானால், அதற்கு எதிராக தேசிய, சர்வதேசிய போராட்டங்களை முன்னெடுக்க, நாம் தயாராக வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை கொரோனா சுகாதார விதிகளை பின்பற்றி நினைவுகூர முடியும்: நீதிமன்றம் தீர்ப்பு..!

முள்ளிவாய்க்கால் தமிழின பேரவலத்தின் நினைவேந்தலை கொவிட் 19 சுகாதார விதிகளை பின்பற்றி நினைவுகூர முடியும் எனவும் பயங்கரவாத நடவடிக்கைகளை தூண்டாத வகையிலும் கவனத்தில் கொண்டு நினைவேந்தலை மேற்கொள்ள வேண்டும் என திருத்திய கட்டளையை வெளியிட்டு முல்லைத்தீவு நீதிமன்றம் சற்றுமுன்னர் தீர்ப்பை வழங்கியுள்ளது. இந்த வழக்கின் மீதான ஒரு தெளிவான திருத்திய கட்டளை வழங்கப்படும் என மன்று தெரிவித்துள்ளது.

கடந்த 13 ஆம் திகதி முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றால் 27 பேருக்கு எதிராக முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை மேற்கொள்ள தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. முல்லைத்தீவு மாவட்டத்தின் 7 பொலிஸ் பிரிவுகளால் 27 பேருக்கு எதிராக முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை மேற்கொள்ள தடைவிதிக்குமாறு கோரி முல்லைத்தீவு நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு தடையுத்தரவு பெறப்பட்டிருந்தது.

இந்த வழக்கின் மீது இன்றையதினம் நகர்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளபட்ட போதே இந்த திருத்திய கட்டளையை ஆக்கி முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி எஸ் .சரவணராஜா முன்பாக இந்த வழக்கு விசாரணைகள் இன்று இடம்பெற்றது. இந்த வழக்கில் சிரேஸ்ட சட்டதரணி அன்டன் புனிதநாயகம் நடராஜர் காண்டீபன் , கனகரத்தினம் சுகாஸ் ,சுதர்சன் எஸ் தனஞ்சயன் உட்பட முல்லைத்தீவு நீதிமன்றின் ஏனைய சட்டதரணிகளும் முன்னிலையாகி தமது வாதங்களை முன்வைத்திருந்தனர்.

இதன் பின்னர் நீதிமன்று ஏற்கனவே வெளியிட்ட கட்டளை மீதான திருத்திய வெளியீடை இன்று வெளியீடுவதாக கட்டளையில் தெரிவித்துள்ளதோடு முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை சுகாதார விதிகளை கடைபிடித்து மேற்கொள்ளலாம் எனவும் பயங்கரவாத செயற்பாடுகளை தூண்டாத வண்ணம் மேற்கொள்ளவேண்டும் எனவும் நீதிமன்று கட்டளை ஆக்கியுள்ளது .

Posted in Uncategorized

துறைமுக நகர சட்டமூலம் குறித்த நீதிமன்ற தீர்மானத்தை பாராளுமன்றில் கையளிக்க நடவடிக்கை

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பிலான உயர் நீதிமன்றத்தின் தீர்மானம், சபாநாயகரினால் எதிர்வரும் 18 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

Posted in Uncategorized

வௌிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு சுகாதார விதிமுறைகளுக்கமைய சுற்றுலா மேற்கொள்ள அனுமதி

நாட்டிற்கு வருகை தந்துள்ள வௌிநாட்டு சுற்றுலாப் பயணிகள், சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைவாக “Bio Bubble” முறைமையின் கீழ் சுற்றுலா மேற்கொள்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படுவதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்தது.

வவுனியா நைனாமடுப் பகுதியில் ஆக்கிரமிப்பிற்கு தயாராகும் தொல் பொருள் திணைக்களம்

வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட நைனாமடு கிராமசேவகர் பிரிவின் கோடாலிபறிச்சான் காட்டுப்பகுதியில் விகாரையுடன் தொடர்புடைய இடிபாடுகள் இருப்பதாக தெரிவித்து வவுனியா பிராந்திய தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளால் அண்மையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நைனாமடுவில் அமைந்துள்ள ஒதுக்கப்பட்ட காட்டுப்பகுதியில் சுமார் 8 பாறைக்கோபுரங்களைக் கொண்ட ஒரு கட்டிட அமைப்பு, பாறைத்துருவ அடித்தளத்தைக் கொண்ட அமைப்புகள், 5 மீட்டர் உயரமுள்ள தூண் ஆகிய இடிபாடுகளை பார்வையிட்ட இராணுவத்தினர் இது தொடர்பாக தொல்பொருள் திணைக்களத்திற்கு தெரியப்படுத்தியுள்ளனர்.

அதற்கமைய வவுனியா மாவட்ட தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளால் குறித்த பகுதி அண்மையில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. எனினும் இது தொடர்பாக குறித்த பகுதியின் கிராமசேவகருக்கோ,அல்லது கிராம மக்களிற்கோ எந்த தகவலும் தெரியப்படுத்தப்படவில்லை.

அங்கு பௌத்தவிகாரையுடன் தொடர்புடைய தொல்பொருள் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தொல்பொருட் திணைக்களத்தின் பணிப்பாளர் தெரிவித்துள்ளதுடன், குறித்த பகுதி வர்த்தமானி அறிவுப்புச்செய்யப்பட்டு, தொல்பொருள் அகழ்வுப்பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே நெடுங்கேணி வெடுக்குநாறி மலையில் ஆக்கிரமிப்பை ஏற்ப்படுத்தியுள்ள தொல்பொருட் திணைக்களம் தமிழ்மக்களின் பூர்வீக பிரதேசமான நைனாமடுவில் மீண்டும் ஒரு ஆக்கிரமிப்பினை முன்னெடுப்பதற்கு தயாராகிவருகின்றமை மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்ப்படுத்தியுள்ளது

திருகோணமலையில் மேலும் ஐந்து கொரோனா மரணங்கள்!

இன்று ஞாயிற்றுக்கிழமை(16) முற்பகல்-10 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் திருகோணமலை மாவட்டத்தில் ஐந்து பேர் கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்துள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஏ.ஆர்.எம். தௌபீக் தெரிவித்தார்.

இந்த நிலையில் நோய் அறிகுறிகள் காணப்படுகின்ற போதிலும் பொதுமக்கள் வைத்தியசாலைகளுக்குச் சென்று தங்களைப் பரிசோதனைக்கு உட்படுத்தத் தயங்குவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறித்த காலப்பகுதியில் 55 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானதாக திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை தெரிவித்துள்ளது.

இதேவேளை, திருகோணமலை மாவட்டத்தில் இந்த மாதத்தின் இதுவரையான காலப்பகுதியில் 709 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized