அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் முன் வைக்கப்பட்டுள்ள பட்ஜட் என்பது பார்வைக்கு நன்றாகவும் அழகாக இருந்தாலும் அது எங்களுடைய மக்களை சென்றடையுமா? ஒழுங்காக நடைமுறைக்கு வருமா போன்ற பல்வேறு கேள்விகள் எங்கள் மத்தியில் உள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
இன்று வெள்ளிக்கிழமை (17) மன்னார் ரெலோ அலுவலகத்தில் இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார் .
அவர் மேலும் தெரிவிக்கையில்,
என்னை பொருத்த மட்டில் வரவு செலவு திட்டம் என்பது இப்போது வாசிக்கப்பட்டிருக்கிறது அதிலே சலுகைகள் அறிவிக்கப்பட்டிருக்கிறது உதாரணமாக 10 ஆயிரம் ரூபாய் அரச ஊழியர்களுக்கு விவசாயிகளுக்கு மீனவர்களுக்கு ஒட்டுமொத்தமாக எல்லாருக்கும் அறிவிக்கப்பட்டிருக்கின்றது.
அடுத்த முக்கியமான விடயம் மாகாண சபைகள் பல்கலைக்கழகங்களை உருவாக்கலாம் என்ற விடயமும் முன்வைக்கப்பட்டிருக்கின்றது. இது ஒரு மிகச் சிறந்த தீர்மானம். ஆனால் இது ஒரு காகித பூவாகத்தான் நான் பார்கின்றேன்.
ஏன் என்றால் பொருளாதார ரீதியிலே பின்தங்கி இருக்கிற ஒரு நாட்டிலே இந்த பத்தாயிரம் கொடுப்பனவு என்பதை பார்க்கின்ற போது வரி விதிப்பு என்பது ஜனவரி மாதமே வர இருக்கிறது ஆகவே அவர்களுடைய சம்பள உயர்வு என்பது நான் நினைக்கின்றேன் மார்ச் மாதத்துக்கு பின்னரே கிடைப்பதற்கான வாய்ப்பு இருக்கின்றது ஆகவே இந்த வரியை கட்டுவதற்கு இந்த பத்தாயிரம் ரூபாய்க்கு மேலே செலுத்துவதற்கு வாய்ப்பு இருக்கிறது.
மேலும் மாகாண சபை தேர்தல் நடைபெறவில்லை மாகாண சபைகளுக்களுக்கு பல்கலைக்கழகம் உருவாக்குவதற்கான அதிகாரம் தொடர்பில் சொல்லப்பட்டிருக்கின்றது.
காணாமல் போன உறவுகளுக்கு கொடுக்கின்ற தொகை உயர்த்தப்பட்டிருக்கின்றது என்று அன்றைக்கு ஜனாதிபதி வாசித்தார் என்னை பொருத்தமட்டிலே அதை ஏற்றுக் கொள்ள முடியாது.
ஏனென்றால் அந்த மக்கள் போரிலே தங்களுடைய உறவுகளை கண்முன்னாலே ஒப்படைத்து நியாயம் கேட்கின்ற,பல வருடங்களாக போராடிக்கொண்டு இருக்கின்ற மக்களாக இருக்கிறார்கள்.
அந்த மக்களின் பிரச்சினைகளை நிவாரணத்தின் மூலம் நிவர்த்தி செய்யலாம் என்பது ஏற்றுக்கொள்ள முடியாது ஆகவே சலுகைகள் என்பது என்னும் முழுமையாக நடைமுறைப்படுத்துவதாற்கான வாய்ப்புகள் என்னை பொருத்தவரை குறைவாக தான் இருக்கின்றது.
அந்தந்த நேரத்திலே வாசிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுகின்ற போது முக்கியமாக விவசாயிகளுக்கு மீனவர்களுக்கு மக்களுக்கு இன்னும் அரசு ஊழியர்களுக்கு இப்படியான சலுகைகள் நடைமுறைப்படுத்தப்படுகின்ற பட்சத்தில் நாங்கள் அதை வரவேற்க முடியும்.
அது நடைமுறைபடுத்தும் வரையில் எங்களா கருத்துக்கள் தெரிவிக்க முடியாது இருப்பினும் என்னை பொருத்தவரையில் இந்த வரவு செலவு திட்டம் என்பது என்னை பார்வைக்கு நன்றாக இருந்தாலும் அழகாக இருந்தாலும் அது எங்கள் மக்களை சென்றடையுமா அல்லது இந்த பத்தாயிரம் வரிகட்டுவதற்கே சரியாகிவிடுமா என்ற கேள்விகள் இருப்பதாகவும் மொத்ததில் இந்த பட்ஜட் ஒரு அழகான காகித பூ மாத்திரமே என அவர் தெரிவித்துள்ளார்.