கொரோனா தடுப்பூசிகளுக்காக 80.5 மில்லியன் டொலர் நிதியுதவி: உலக வங்கியும் நிதி அமைச்சும் ஒப்பந்தம்

நாட்டிற்கு தேவையான கொரோனா தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதற்காகவும் விநியோகிப்பதற்காகவும் 80.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை வழங்க உலக வங்கியும் நிதி அமைச்சும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.

தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையை மேலும் வலுப்படுத்துவதே இதன் நோக்கமாகும்

இலங்கை சார்பில் நிதி அமைச்சின் செயலாளரும் உலக வங்கி சார்பில் இலங்கைக்கான வதிவிட பணிப்பாளரும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.

இலங்கையின் அவசரத் தேவை மற்றும் சுகாதாரத்துறைக்கு முன்னுரிமை வழங்க உலக வங்கி உதவி புரியும் என உலக வங்கியின் இலங்கைக்கான வதிவிட பணிப்பாளர் இதன்போது கூறியுள்ளார்.

Posted in Uncategorized

பெரும்பான்மை இனத்தின் மேலாதிக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் பொதுபலசேனா – அமெரிக்கா அறிக்கை

சிங்கள பௌத்த பெரும்பான்மை இனத்தின் மேலாதிக்கத்தை ஊக்குவித்து, வலுப்படுத்தும் வகையில் பொதுபலசேனா அமைப்பு செயற்பட்டு வருவதாக ஐக்கிய அமெரிக்காவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

ஐக்கிய அமெரிக்காவின் இராஜாங்கத் திணைக்களத்தினால் 2020 ஆம் ஆண்டிற்கான சர்வதேச மதச்சுதந்திரம் தொடர்பான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கையில் செயற்பட்டுவரும் சிவில் சமூகக்குழுக்களால் வெளியிடப்பட்டுள்ள கருத்துக்களின்படி, சமூகவலைத்தளங்களில் மதரீதியான சிறுபான்மையினரை இலக்குவைத்து வெறுப்புணர்வுப் பிரசாரங்களும் கருத்துக்களும் பதிவேற்றம் செய்யப்படுகின்றன என்றும் அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

அதேவேளை பொதுபலசேனா போன்ற பௌத்த தேசியவாத அமைப்புக்கள், சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை வலுப்படுத்தும் வகையில் தீவிரமாகப் பிரசாரம் மேற்கொண்டுவருவதுடன் ஏனைய சிறுபான்மை இனங்களை இழிவுபடுத்தும் விதத்திலும் செயற்பட்டு வருவதனை ஊடக அறிக்கைகள் மற்றும் சிவில் அமைப்புக்களின் கருத்துக்கள் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது. எனினும் முஸ்லிம் மற்றும் தமிழ் சமூகத்திற்கு எதிராக வெறுப்புணர்வைப் பரப்புவோருக்கு எதிராக உரிய அதிகாரிகள் எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்றும் அவ்வமைப்புக்கள் கூறுகின்றன.

கடந்த ஆண்டின் மார்ச் – ஜுன் மாதத்திற்கு இடையிலான காலப்பகுதியில் சமூகவலைத்தளங்களில் பரப்பப்பட்ட வெறுப்புணர்வுக்கருத்துக்கள் தொடர்பில் அரச சார்பற்ற அமைப்பொன்றினால் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி இலங்கையின் தேசியமொழிகள் மூன்றிலும் (சிங்களம், தமிழ், ஆங்கிலம்) பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கும் வெறுப்புணர்வுப் பதிவுகளில் 58 சதவீதமானவை முஸ்லிம் சமூகத்தை அல்லது இஸ்லாமிய மதத்தைத் தாக்குவதாகவே அமைந்துள்ளன. அதேபோன்று 30 சதவீதமானவை கிறிஸ்தவ மதத்தையும் 5 சதவீதத்திற்கும் குறைவானவை தமிழ் இனம் அல்லது இந்து மதத்தைத் தாக்கும் வகையில் அமைந்துள்ளன.

அதேபோன்று சிங்களமொழியில் மாத்திரம் செய்யப்பட்டுள்ள பதிவுகளை அடிப்படையாகக்கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், 79 சதவீதமான பதிவுகள் முஸ்லிம் இனத்தையோ அல்லது இஸ்லாமிய மதத்தையோ தாக்கும் வகையில் அமைந்துள்ளன. தமிழ்மொழியில் செய்யப்பட்டுள்ள பதிவுகளில் 46 சதவீதமானவை தமிழ்ச்சமூகத்தைச் சேர்ந்த கிறிஸ்தவர்களையும் 35 சதவீதமானவை இஸ்லாமியர்களையும் தாக்கும் விதமாக அமைந்துள்ளன.

முஸ்லிம் வைத்தியரான ஷாபி சிகாப்தீன் என்பவரால் சிங்களப்பெண்களுக்கு கட்டாயக் கருத்தடை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இடம்பெற்ற விசாரணையில் 76 மருத்துவப் பணியாளர்கள் குறிப்பிட்டனர். அவ்வாறு கருத்தடை மேற்கொள்ளப்பட்டுள்ளமைக்கான ஆதாரங்கள் தொடர்பில் மருத்துவ நிபுணர்களால் ஆராயப்பட்டதுடன், இந்த வழக்கு இன்னமும் நிலுவையிலேயே உள்ளது என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதுடன் முஸ்லிம் சமூகத்தை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட மேலும் சில சம்பவங்கள் தொடர்பிலும் கூறப்பட்டிருக்கிறது.

தேர்தல் முறைமை தொடர்பான விசேட தெரிவுக்குழுவில் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் புறக்கணிப்பு

தேர்தல் முறைமை தொடர்பான பாராளுமன்ற விசேட தெரிவுக்குழுவில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர்கள் உள்வாங்கப்படாமை தொடர்பில் கல்முனையில் நேற்று (13) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கப்பட்டது.

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர்கள் தெரிவுக்குழுவில் உள்வாங்கப்படாமை தமக்கு கவலையளிப்பதாக அக்கட்சியின் உறுப்பினரும் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான ஆரிஃப் சம்சுதீன் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமிடம் நியூஸ்ஃபெஸ்ட் வினவியது.

இந்த விடயம் தொடர்பில் முறைப்பாடு பதிவு செய்துள்ளதாகவும் தமது கட்சியின் உறுப்பினரை உள்ளடக்குமாறு சபாநாயகரிடம் கோரிக்கையை முன்வைத்துள்ளதாகவும் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

தேர்தல், வாக்கெடுப்பு முறை மற்றும் சட்டதிட்டங்களில் ஏற்படுத்த வேண்டிய மறுசீரமைப்பை அடையாளம் காண்பதற்கான பாராளுமன்ற விசேட தெரிவுக்குழுவின் தலைவராக சபை முதல்வர் அமைச்சர் தினேஸ் குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

நிமல் சிறிபால டி சில்வா, பேராசிரியர் G.L.பீரிஸ், பவித்ராதேவி வன்னியாராச்சி, டக்ளஸ் தேவானந்தா, விமல் வீரவன்ச, M.U.M. அலி சப்ரி, ஜீவன் தொண்டமான், அநுர திசாநாயக்க, கபீர் ஹசிம், R.M.மத்தும பண்டார, மனோ கணேசன், M.A.சுமந்திரன், மதுர விதானகே மற்றும் சாகர சாரியவசம் ஆகியோர் தெரிவுக்குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.

திருகோணமலை மாவட்ட சிவில் அமைப்புகள் முள்ளிவாய்க்கால் நினைவாக மே 18 எழுத்து பொறிக்கப்பட்ட சிரட்டைகள் வழங்கி வைப்பு!

திருகோணமலை மாவட்ட சிவில் அமைப்புகளின் ஒன்றியத்தின் (Union of Civil Societies – Trincomalee District) ஊடாக, “அகரம் மக்கள் மய்யம்” அமைப்பின் ஒருங்கிணைப்பில், நேற்று வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இறுதி யுத்தத்தில் படுகொலை செய்யப்பட்ட எமது இரத்தச் சொந்தங்களை நினைவு கூரும் முகமாக “முள்ளிவாய்க்கால் நினைவு” வாரத்தின் முதலாம் நாளாகிய நேற்று, திருக்கோணமலை மக்கள் வீடுகளில் விளக்கேற்றி அஞ்சலி செய்துள்ளனர்.

எதிர்கால சந்ததியினருக்கு முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவு தினத்தை நடத்தி செல்வதற்காகவும், திருக்கோணமலை இளைஞர்களால் “முள்ளிவாய்க்கால் கஞ்சியினை” நினைவு கூரும் வகையில் அடையாளமாக சிறிதளவு அரிசி உள்ளிட்ட மற்றும் சிட்டி விளக்குடன் கூடிய “மே 18” பொறிக்கப்பட்ட சிரட்டைகள் கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளை பேணி வீடுகளுக்கு வழங்கி வைக்கப்பட்டது.

Posted in Uncategorized

மட்டக்களப்பில் 24 மணித்தியாலத்தில் 44 பேருக்கு கொரோனா : 6 வீதிகள் முடக்கம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலத்தில் 44 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன் கிரான்குளம் பிரதேசத்திலுள்ள கிரான்குளம் கிராமசேவகர் பிரிவு சி, மற்றும் பி பிரிவுகளில் உள்ள 6 வீதிகள் இன்று வியாழக்கிழமை (13) தனிமைப்படுத்தப்பட்டு முடக்கப்பட்டுள்ளது என மாவட்ட அரசாங்க அதிபர் கணவதிப்பிள்ளை கருணாகரன் தெரிவித்தார்.

மாவட்ட கொரோனா தடுப்பு செயலணி கூட்டம் இன்று மவட்டசெலகத்தில் இடம்பெற்றது இதில் எடுக்கபட்ட தீர்மானம் தொடர்பாக ஊடகங்களுக்கு அறிவிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மட்டக்களப்பு பிரதேச செயலாளர் பிரிவில் 13 பேரும், ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவில் 7 பேரும், களுவாஞ்சிக்குடி பிரதேச செயலாளர் பிரிவில் 2 பேரும் காத்தான்குடி பிரதேசத செயலாளர் பிரிவில் 2 பேரும், மற்றும் பொலிசார் இராணுவத்தினர் உட்பட 13 பேர் உட்பட 44 பேருக்கு கடந்த 24 மணித்தியாலத்தில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை கிரான்குளம் கிராமசேவகர் பிரிவு சி பிரிவிலுள்ள நெசவு நிலைய வீதி, வேலாப்பொடி வீதி, கண்ணனி அம்மன் ஆலைய வீதியும், கிரான்குளம் கிராமசேவகர் பிரிவு பி பிரிவிலுள்ள லோக்றோட் வீதி, விதானையார் வீதி, அப்புகாமி வீதிகள் ஆகிய வீதிகள் தனிமைப்படுத்தப்பட்டு முடக்கப்பட்டுள்ளன.

நாளாந்தம் கொரோனா தொற்று அதிகரித்துவருகின்றது எனவே பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே செல்வதை தவிர்த்து சுகாதார நடைமுறைகளை பேணி அவதானமாக செயற்படுமாறு பொதுமக்களிம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Posted in Uncategorized

யாழில் 58 பேர் உள்ளடங்கலாக வட மாகாணத்தில் மேலும் 74 பேருக்கு கொரோனா

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 58 பேர் உள்பட வடக்கு மாகாணத்தில் மேலும் 74 பேருக்கு கோரோனா தொற்று உள்ளமை இன்று வியாழக்கிழமை (மே 13) கண்டறியப்பட்டுள்ளது என்று மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடம் மற்றும் பல்கலைக்கழக ஆய்வுகூடம் என்பவற்றில் 853 பேரின் மாதிரிகள் இன்று பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 58 பேரும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 3 பேரும் கிளிநொச்சி மாவட்டத்தில் 8 பேரும் வவுனியா மாவட்டத்தில் 2 பேரும் மன்னாரில் இருவரும் என வடக்கு மாகாணத்தில் அனைத்து மாவட்டங்களிலும் 74 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவு வைத்தியசாலை தனிமைப்படுத்தல் பிரிவில் சேர்க்கப்பட்ட ஒருவருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் சுகாதார உத்தியோகத்தர் ஒருவருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

மாங்குளம் வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில் சேர்க்கப்பட்ட இருவருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

கிளிநொச்சி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட 3 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. தருமபுரம் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட ஒருவருக்கு தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

கரைச்சி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 4 பேருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர்கள் நால்வரும் வீதி சீரமைப்பு பணியில் ஈடுபடும் பணியாளர்கள்.

வவுனியா மாவட்ட வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில் 2 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் சுகாதார உத்தியோகத்தர்கள்.

வவுனியா சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஒருவருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

மன்னார் பொது வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில் சேர்க்கப்பட்ட இருவருக்கு கோரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் வைத்தியசாலைகளில் சேர்க்கப்பட்ட 18 பேருக்கும் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளில் 39 பேருக்கும் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் ஒருவருக்கும் என 58 பேருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட 6 பேருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று உள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பருத்தித்துறை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட 6 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

சாவகச்சேரி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட 5 பேருக்கும் தெல்லிப்பழை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட ஒருவருக்கும் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 7 பேருக்கு கோரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் ஒரு குழந்தையும் அடங்குகின்றார். இந்தியாவிலிருந்து தப்பித்து யாழ்ப்பாணம் வந்த நால்வர் குருநகரில் சுயதனிமைப்படுத்தப்பட்டனர். அவர்களில் ஒரு குழந்தைக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கரவெட்டி பிரதேச சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 11 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் நெல்லியடி வெதுப்பகத்தின் ஊழியர்கள்.

தெல்லிப்பழை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 21 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

அவர்கள் அனைவரும் தையிட்டி கிராமத்தில் திருமண நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டவர்கள். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் திருமண நிகழ்வுக்கு தடை என அறிவிக்கப்பட்ட பின் இரகசியமாக இந்த திருமண நிகழ்வை நடத்தியுள்ளனர்” என்றும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

முள்ளிவாய்க்காலில் நினைவேந்தல் நிகழ்வை நடத்த தடை உத்தரவு

முல்லைத்தீவு மாவட்டத்தில் இறுதி யுத்தத்தில் அநியாயமாக கொல்லப்பட்ட மக்களை நினைந்து முள்ளிவாய்க்காலில் ஆண்டு தோறும் மே 18 ஆம் திகதி நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்று வருகிறது.

இந்நிலையில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் அமைந்த பகுதியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பினால் பொது நினைவுக்கல் ஒன்றினை நடுகை செய்ய கொண்டு சென்றவேளை பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து தடுத்துள்ளதுடன் குறித்த நினைவுகல் இரவோடு இரவாக காணாமல் போயுள்ளதுடன் நினைவுத்தூபியும் சேதப்படுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மக்கள் பிரதிநிதிகள் பலர் தங்கள் கண்டனங்களை வெளிட்டுள்ளார்கள்.

இந்நிலையில் முள்ளிவாய்க்கால் பகுதியில் நினைவேந்தல் நிகழ்வு செய்வதற்கோ மக்கள் கூடுவதற்கோ முல்லைத்தீவு பொலிஸார் நீதிமன்ற தடை உத்தரவினை பெற்றுள்ளார்கள்.

கொரோனா நிலையினை கருத்தில் கொண்டு 16 ஆம் திகதி தொடக்கம் 22 ஆம் திகதி வரை முள்ளிவாய்க்கால் பகுதியில் எந்த நிகழ்வும் நடத்தகூடாது மக்கள் கூடக்கூடாது பொது இடத்தில் வைத்து நினைவுகூர கூடாது என்றும் இந்த தடை உத்தரவினை முல்லைத்தீவு பொலிஸார் நீதிமன்றில் வழக்கு சமர்ப்பித்து அதற்கான அனுமதியினை பெற்றுள்ளார்கள்.

முல்லைத்தீவு பொலிஸ் பிரிவினை சேர்ந்த து.ரவிகரன், ம.ஈஸ்வரி, பீற்றர் இளஞ்செழியன், க.விஜிந்தன், ச.விமலேஸ்வரன் ஆகியோரின் பெயர் குறிப்பிட்டு நீதிமன்ற தடை உத்தரவு பெறப்பட்டுள்ளது.

ஏ.ஆர் 418 / 21 வழக்கு இலக்கத்தின் கீழ் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற தடை உத்தரவினை பெற்று உரியவர்களிடம் ஒப்படைக்கவுள்ளதாக முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்துள்ளார்கள்.

Posted in Uncategorized

19, 20 ஆம் திகதிகளில் கொழும்பு துறைமுக நகர் சட்டமூலம் தொடர்பான விவாதம்

கொழும்பு துறைமுக நகர விசேட பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான விவாதத்தை இம்மாதம் 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இன்று நடைபெற்ற பாராளுமன்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

புத்த பிக்குகளின் இராச்சியமாக இந்த நாடு மாறியுள்ளது முள்ளிவாய்க்காலில்- ரெலோ தலைவர் செல்வம்

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி உடைக்கப்பட்டுள்ளமை மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தின் ஏனைய நிலமைககள் தொடர்பில் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் அவர்கள் திருடப்பட்ட உடைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு இடத்தினை பார்வையிட்டுவிட்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்..

அவர் நினைவுத்தூபி உடைக்கப்பட்ட இடத்திலிருந்து ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்.. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் உடைக்கப்பட்டுள்ளது எங்கள் மக்கள்துன்பங்களை நினைவுகூருகின்ற நினைவுத்தூபியாக புனித இடமாக பார்க்கப்பட்டுள்ளது படையினரின் அடாவடித்தனங்கள் பொலீசாரின் மேற்பார்வையுடன் உடைக்கப்பட்டுள்ளது என்பதை வெளிப்படையாக காணக்கூடியதாக இருக்கின்றது.

எங்கள் பங்குத்தந்தையர்கள் நேற்று ஆரம்பிக்கின்ற நாளாக நினைவுச்சின்னத்தினை நாட்டுவதற்காக வந்தபோது படையினர் குவிக்கப்பட்டு அதனை செய்யவேண்டாம் என பொலீசார் அறிவித்துள்ளார்கள்.

அதன்பின்னர் நினைவுத்தூபி உடைக்கப்பட்டுள்ளது ஆகவே படையினர் அந்த நினைவுத்தூபியினை உடைத்துள்ளார்கள் என்பதை வெளிப்படையாக சொல்கின்றேன்.இதில்இருந்து தெரிகின்றது இந்த தேசதம் இரண்டாக உள்ளது சிங்களதேசம் தமிழ்தேசம் என இரண்டாக இருக்கின்றது என்பது தெட்டத்தெளிவாக தெரிகின்றது.

குருந்தூர்மலையில் புத்தபிக்குகள்,படையினர் புடைசூழ பிரித் ஓதப்பட்டு விழாக்கோலம் போட்டது போல் காட்சியளித்தது இராணுவத்தளபதி சொல்கின்றார் நினைவேந்தலை வீடுகளில் செய்யவேண்டும் என்று சொல்கின்றார்கள் இன்றில் இருந்து 17 ஆம் திகதி தொடக்கம் கொரோனா வைரஸ்சினை நிறுத்துவதற்காக நாடு முடக்கப்படுகின்றது.

புத்த பிக்குகள் தமிழர் பிரதேசத்தில் வந்து பெரியளவில் பிரித் ஓதுகின்றார்கள் படையினர் குவிக்கப்பட்டு சுகாதார முறைப்படி அவர்கள் எப்படி செயற்பட்டிருக்கமுடியும் அங்கு சட்டம் வேறையாக இருக்கின்றது.

எங்கள் பங்குத்தந்தைகள் இங்கு வந்து நினைவுத்தூபியினை செப்பனிடவரும் போது தடுக்கப்படுகின்றார்கள் காரணம் வைரஸ்தொற்றுக்கான நடவடிக்கை என்று .
இதில் தெரிகின்றது இந்த நாடு புத்த பிக்குகளின் இராச்சியமாக இந்த நாடு மாறிஇருக்கின்றது இதனை விட இரண்டு நாடுகளாக இலங்கை இருக்கின்றது தமிழர்களின் பிரதேசத்தில் எதுவும் நடக்கலாம் சிங்கள பிரதேசங்களில் மிகவும் நேர்த்தியான முறையில் அவர்களின் செயற்பாடுகள் இருக்கின்றது.

ஆகவே புத்த பிக்குகள்,இராணுவம்,பொலீசார் தமிழ்பிரதேசங்களில் எதுவும் செய்யலாம் சட்டம் ஒழுங்கு என்பது இங்கு மறுக்கப்பட்டுள்ளது.

ஆகவே தமிழர்கள் பூர்வீகம் உடைக்கப்படுகின்ற சிதைக்கப்படுகின்ற ஒரு நிலையினை இந்த அரசாங்கம் கொண்டிருக்கின்றது என்பதை உறுதியாக இந்த நேரத்தில் உணர்த்த முடியும் ஆகவே எங்கள் மக்கள் எங்கள் கட்சிகள் ஒன்றிணையவேண்டும்.

இதற்காக போராடவேண்டும் எங்கள் தேசத்தினை நிலத்தினை காப்பாற்ற நாங்கள் முனைப்புடன் செயற்படவேண்டும் என்று படுகொலைசெய்யப்பட்ட மக்களின் அவல ஓலங்கள் ஜ.நாவினை தட்டியது எங்கள் கட்சிகளின் மனங்களையும் தட்டவேண்டும் பொதுமக்களின் மனங்களையும் தட்டவேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மிலேச்சத் தனத்தின் உச்ச வடிவம் இனப்படுகொலையின் மறுவடிவம் – ரெலோ வன்மையாகக் கண்டிக்கிறோம்

மிலேச்சத் தனத்தின் உச்ச வடிவம்,இனப்படுகொலையின் மறுவடிவம்

மரணித்த மக்களை நினைவு கூரும் சின்னங்களை அழிக்கும் கொடுமை உலக நாகரீகத்தில் எங்கும் இல்லாத ஈனச் செயல்.

வெட்கப் படவேண்டியது. கண்டிக்கப்பட வேண்டியது.

முல்லைத்தீவில் முள்ளிவாய்க்காலில் அமைக்கப்பட்ட, 2009 மே 18 இல் முடிவடைந்த இனவழிப்பு கொடிய யுத்தத்தில் உயிர்நீத்த பல்லாயிரக்கணக்கான ஈழத் தமிழ் ஆத்மாக்களை வருடா வருடம் நினைவு கூர அமைக்கப் பட்ட நினைவுச் சின்னம் நேற்று 12 மே 2021 மானிடத்தை மதிக்காத மனித விலங்குகளால் சேதமாக்கப் பட்டுள்ளமையை தமிழ் ஈழ விடுதலை இயக்கம் வன்மையாகக் கண்டிக்கிறோம்.