வலி,வடக்கு உயா்பாதுகாப்பு வலயத்திலிருந்து சுமாா் 108 ஏக்கா் காணி விடுவிக்கப்பட்டது

யாழ்.தெல்லிப்பழை பிரதேச செயலா் பிாிவிற்குட்பட்ட வலி,வடக்கு உயா்பாதுகாப்பு வலயத்திலிருந்து சுமாா் 108 ஏக்கா் காணி 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று விடுவிக்கப்பட்டுள்ளது.

பலாலி – அந்தனிபுரத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை நடைபெற்ற நிகழ்வில் காணி விடுவிப்புக்கான உத்தரவு பத்திரத்தினை யாழ்.மாவட்ட இராணுவ தளபதி பாதுகாப்பு படைகளின் கட்டளை தளபதி மேஜா் ஜெனரல் சுவா்ண போதோட்ட யாழ்.மாவட்டச் செயலா் அம்பலவாணனா் சிவபாலசுந்தரனிடம் கையளித்துள்ளாா்.

காங்கேசன்துறை – மத்தி (ஜே 234) – 50.59 ஏக்கா் / மயிலிட்டி – வடக்கு (ஜே 246) – 16.55 ஏக்கா் /தென்மயிலை (ஜே 240) – 0.72 ஏக்கா்/ பலாலி – வடக்கு (ஜே 254) – 13.033 ஏக்கா்/ நகுலேஷ்வரம் (ஜே 226) -28 ஏக்கா், மேற்படி கிராம சேவகர் பிரிவுகளில் மொத்தமாகஇராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்த 80 ஏக்கர் காணியும், கடற்படையின் கட்டுப்பாட்டில் இருந்த 28 ஏக்கர் காணியுமாக 108 ஏக்கர் காணி மிக நீண்ட காலத்தின் பின்னா் மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மீள்குடியேற்றத்திற்காக 130 குடும்பங்கள் பதிவுகளை மேற்கொண்டுள்ளன.

மேலும் இன்று விடுவிக்கப்பட்டுள்ள 108 ஏக்கர் காணியில் 13 ஏக்கர் அரச காணியாகும் இந்த காணி யாழ்.வலிகாமம் வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து 5 இடம்பெயர்ந்தோர் முகாம்களில் தங்கியிருக்கும்
75 குடும்பங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படவுள்ளது. மொத்தமாக 205 குடும்பங்கள் பயன்பெறவுள்ளன.

மீள்குடியேற்றப்படும் மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்க ஐனாதிபதி பணித்துள்ளார்.

இன்றைய நிகழ்வில் அமைச்சா் டக்ளஸ் தேவானந்தா, நாடாளுமன்ற உறுப்பினா்களானஅங்கஜன் இராமநாதன்மற்றும் ஜனாதிபதியின் செயலாளா் இ.இளங்கோவன்,பிரதம செயலாளா், யாழ்.மாவட்டச் செயலா், யாழ்.மாவட்ட உதவி அரசாங்க அதிபா், மேலதிக அரசாங்க அதிபா் (காணி), தெல்லிப்பழை பிரதேச செயலா் மற்றும் பொதுமக்கள், படையினா, பொலிஸாா் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனா்.

ஜனாதிபதியின் வரவு செலவுத் திட்ட உரை 30 ஆம் திகதி!

2022 ஆம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட வரவு செலவுத் திட்ட உரை எதிர்வரும் 30 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த உரையை நிகழ்த்தவுள்ளார்.

இதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 31, செப்டம்பர் 1 மற்றும் 2 ஆம் திகதி விவாதம் நடத்தப்பட்டு வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.

கடந்த நவம்பர் மாதத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அரசாங்கத்தின் மொத்த செலவீனமாக 2,796.44 பில்லியன் ரூபா நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

எனினும் தற்போது முன்வைக்கப்பட்டுள்ள ஒதுக்கீட்டுச் திருத்தச் சட்டமூலத்தில் அந்தத் தொகை 479.43 பில்லியன் ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

பாரிய திட்டத்தை கைவிட்டு இலங்கையில் இருந்து நகரும் சீனா!!

யாழ்ப்பாணம் – தீவகத்தில் மேற்கொள்ளப்படவிருந்த சூரிய சக்தி மின்நிலைய திட்டத்தை சீனா இடைநிறுத்தியுள்ளது.

இலங்கையில் உள்ள சீனத் தூதரகம் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் இந்தத் தகவலைப் பதிவு செய்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் நெடுந்தீவு, அனலைதீவு மற்றும் நயினாதீவு ஆகிய இடங்களில் இந்தச் சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையங்களை அமைப்பதற்கான வேலைத் திட்டத்தைச் சீனா முன்னெடுக்கவிருந்ததுடன், இதற்கான அமைச்சரவை அனுமதியும் வழங்கப்பட்டிருந்தது.

இது தொடர்பாக இந்தியா தனது கரிசனையை வெளியிட்டுள்ளதுடன், தமிழ் அரசியல் கட்சிகளும் இதற்கு கடும் எதிர்ப்பினை வெளிப்படுத்தின.

தற்போது இந்த வேலைத்திட்டம் சம்பந்தமாக மூன்றாம் தரப்பு ஒன்றிலிருந்து எழுந்துள்ள பாதுகாப்புக் கரிசனை கருதி, இத்திட்டம் இடைநிறுத்தப்படுவதாக சீனா அறிவித்துள்ளது.

இதேவேளை, இதே மாதிரியான 12 தீவுகளில் கலப்பு மின்னுற்பத்தி மையங்களை அமைக்கும் வேலைத் திட்டம் ஒன்றுக்காக மாலைதீவு அரசாங்கத்துடன் கடந்த 29ஆம் திகதி சீனாவின் நிறுவனம் ஒன்று ஒப்பந்தம் கைச்சாத்திட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பட்ஜட்டுக்கு ஆதரவா..? எதிர்ப்பா..?? கம்மன்பில வீட்டில் 11 கட்சிகள் மந்திராலோசனை

வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவளிப்பதா – அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகள் நாளை -15- ஆலோசனை , அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும்11 சிறு கட்சிகள் நாளை 15ம் திகதி அமைச்சர் உதய கம்மன்பில வீட்டில் மீண்டும் சந்தித்து கலந்துரையாட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவினால் சமர்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டம் குறித்து ஆராயவே இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவு வழங்குவதா இல்லையா என்ற தீர்மானமும் இக்கூட்டத்தில் எடுக்கப்படவுள்ளதாக தெரியவருகிறது

இன விகிதாசாரத்தை மாற்றி அமைக்கும் செயற்பாட்டுக்கு எதிராக கண்டனம்

வவுனியா வடக்கில் இன விகிதாசாரத்தை மாற்றியமைக்கும் செயற்பாட்டுக்கு எதிராக எதிர்வரும் வெள்ளிக் கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்படவுள்ளது.

வவுனியா, பழைய பேரூந்து நிலையம் முன்பாக எதிர்வரும் வெள்ளிக்கிழமை தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் ஏற்பாட்டில் குறித்த கண்டன ஆர்ப்பாட்டம் இடம்பெறவுள்ளது.

மதவாச்சியில் உள்ள 1330 சிங்கள குடும்பங்களை வவுனியா வடக்கு பிரிவில் இணைத்து இன விகிதாசரத்தை மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தே குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெறவுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னனி தெரிவித்துள்ளது.

தமிழ் மக்களின் நிலத்தையும், இருப்பையும் காக்க தமிழ் மக்களை இவ் ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிணையுமாறும் தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized