நலிவுற்ற நிலையிலுள்ள சமூகங்களுடன் நேரடியாகப் பணியாற்றுவதற்கு அதிக முக்கியத்துவம் வழங்க எதிர்பார்ப்பு

இலங்கையில் நலிவுற்ற நிலையிலுள்ள சமூகங்கள் மற்றும் குடும்பங்களுக்கு உதவும் வகையில் அவர்களுடன் இணைந்து நேரடியாகப் பணியாற்றுவதற்கு அதிக முக்கியத்துவம் வழங்கியிருப்பதாக ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி செயற்திட்டத்தின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி அசூஸா குபோட்டா தெரிவித்துள்ளார்.

பொருளாதார நெருக்கடியை அடுத்து நாட்டிலுள்ள வறிய மற்றும் பின்தங்கிய சமூகப்பிரிவினர் வருமான வீழ்ச்சி, உணவுப்பாதுகாப்பின்மை, போசணை குறைபாடு உள்ளிட்ட பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுத்துவருகின்றனர். இவ்வாறானதொரு பின்னணியில் அவர்களுக்கு உதவுவதை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்பட்டுள்ள செயற்திட்டம் குறித்துத் தெளிவுபடுத்துகையிலேயே அசூஸா குபோட்டா மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதுபற்றி அவர் மேலும் கூறியதாவது,

அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சி மற்றும் சமூகங்களுக்கு இடையில் பரந்துபட்ட வகையில் மீளெழும் தன்மையைக் கட்டியெழுப்பல் ஆகியவற்றை இலக்காகக்கொண்டு இலங்கையில் நலிவுற்ற நிலையிலுள்ள சமூகங்கள் மற்றும் குடும்பங்களுடன் நேரடியாக இணைந்து பணியாற்றுவதற்கு நாம் அதிக முக்கியத்துவம் வழங்கியிருக்கின்றோம். அதனைச் செய்வதற்கு நாம் பல்வேறு தரப்பினருடன் ஒன்றிணைந்து செயலாற்றவேண்டும்.

அதன்படி, ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி செயற்திட்டமும் இலங்கையில் இயங்கிவரும் ஹிர்டரமனி ஆடை உற்பத்தி நிறுவனமும் இணைந்து முன்னெடுக்கவிருக்கும் உதவிச்செயற்திட்டத்தின் ஊடாக சுமார் 100 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பயனடையும். குறிப்பாக அக்குடும்பங்கள் பழங்கள் மற்றும் மரக்கறிகளைப் பயிரிடுவதற்கு அவசியமான ஒத்துழைப்பு வழங்கப்படுவதுடன், அதனூடாக அக்குடும்பங்களின் வருமானம் மற்றும் போசணைசார் தேவைகள் பூர்த்திசெய்யப்படும் என்று குறிப்பிட்டார்.

தமிழ் சிவில் சமூகக் குழுக்கள் இமயமலைப் பிரகடனத்தை நிராகரிப்பு

தமிழ் சிவில் சமூக குழுக்கள் தமிழ் குறைகளை நிவர்த்தி செய்யாததற்காக “இமயமலை பிரகடனத்தை” நிராகரிக்கின்றன என பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் வேலன் சுவாமிகள் தெரிவித்தார்.

குறித்த விடயம் தொடர்பாக இன்று அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது.

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

தமிழ் பல்கலைக்கழக மாணவர்கள், காணாமல் போனோர் குடும்பங்கள் உட்பட பாதிக்கப்பட்ட குழுக்கள், சமய குழுக்கள், தொழிற்சங்கங்கள், கல்விமான்கள் மற்றும் பலர் அடங்கிய தமிழ் சிவில் சமூக குழுக்கள் சங்காவின் சிறந்த இலங்கை (SBSL) மற்றும் உலகத் தமிழ் மன்றம் (SBSL) மற்றும் உலகளாவிய தமிழ் மன்றம் (இமயமலை பிரகடனத்தை” கூட்டாக நிராகரித்துள்ளன. GTF).

இமயமலைப் பிரகடனத்தை (“பிரகடனம்”) ஆர்வத்துடன் படித்தோம். ஆனால், சுதந்திரத்திற்குப் பிறகு தமிழர்கள் அனுபவித்து வரும் வேதனைகள் மற்றும் வேதனைகள் மற்றும் தமிழர்களின் குறைகளையும், வேதனைகளையும் முற்றிலும் புறக்கணித்ததற்காக ஏமாற்றமடைந்தோம்.

வெளிப்படையாக, பௌத்த மதகுருமார்களுக்கு தமிழர்களின் குறைகள் பற்றி தெரியாது, ஏனெனில் அவர்கள் தமிழர் பகுதிகளுக்கு வெளியே சிங்களவர்களிடையே வசிப்பதால், நாம் என்ன கடந்து வந்தோம், தொடர்ந்து கடந்து வருகிறோம்.

பதினான்கு வருடங்களுக்கு முன்னர் யுத்தம் முடிவடைந்த பின்னர், P2P (பொதுவில் முதல் பொலிகண்டி வரை) போன்ற வெகுஜன பேரணிகள் மூலம் நேரடியாக எமது குறைகளை வெளிப்படுத்தியுள்ளோம். பாதுகாப்புப் படையினரின் மிரட்டல் மற்றும் தாக்குதல்களுக்கு மத்தியிலும் சுமார் அரை மில்லியன் தமிழர்கள் இணைந்து தமிழ்ப் பகுதிகளில் ஐந்து நாள் அணிவகுப்பை P2P வழிநடத்தியது. தமிழ்ப் பல்கலைக்கழக மாணவர்களும், காணாமல் போனவர்களின் குடும்பங்கள் போன்ற பாதிக்கப்பட்ட குழுக்களும் தமிழர்களின் குறைகளை வெளிப்படுத்தும் வகையில் ஏராளமான போராட்டங்கள், உண்ணாவிரதப் போராட்டங்கள் மற்றும் ஊர்வலங்களை நடத்தினர். அவர்களின் குறைகள் எதுவும் இந்த “பிரகடனத்தில்” கவனிக்கப்படவில்லை. பதினான்கு ஆண்டுகளுக்கு முன்னர் யுத்தம் முடிவடைந்த பின்னர் தமிழர்களால் வெளிப்படுத்தப்பட்ட பின்வரும் தமிழ்க் குறைகளை உங்கள் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறோம்.

1.போருக்கு முந்தைய 1983 நிலைகளுக்கு தமிழர் பகுதிகளில் ஆயுதப் படைகளின் இருப்பைக் குறைத்தல். யுத்தம் முடிவடைந்து பதினான்கு வருடங்களுக்கு மேலாகிவிட்டது, ஆனால் மே 2009 இல் போரின் உச்சக்கட்டத்தில் இருந்ததைப் போலவே மோசமான இராணுவப் புலனாய்வுப் பிரிவு உட்பட பாதுகாப்புப் படைகளின் பிரசன்னம் பராமரிக்கப்பட்டு வருகிறது. அமைதிக் காலத்தில் பொதுமக்கள் மத்தியில் அவர்களின் இருப்பு இனப்படுகொலை மற்றும் தமிழ்ப் பெண்களை பாதுகாப்புப் படையினரால் பெருமளவிலான கற்பழிப்பு உள்ளிட்ட கடுமையான அட்டூழியக் குற்றங்களை எதிர்கொண்ட தமிழர்களுக்குப் பல பாதுகாப்பு மற்றும் சமூகப் பிரச்சினைகளை உருவாக்குகிறது.

2. சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு (ICC) இலங்கையைப் பார்க்கவும்: போர் முடிவடைந்து பதினான்கு ஆண்டுகள் கடந்துவிட்டன, ஆனால் ஒரு பாதுகாப்புப் படை அதிகாரியோ அல்லது அரசியல் தலைவரோ நீதியை எதிர்கொள்ளவில்லை – ஐ.நா உள் ஆய்வு அறிக்கையின்படி, சுமார் எழுபதாயிரம் தமிழர்கள் 2009 இல் நடந்த போரின் இறுதி ஆறு மாதங்களில் கொல்லப்பட்டனர். மேலும், குழந்தைகள் மற்றும் குழந்தைகள் உட்பட ஆயிரக்கணக்கான தமிழர்கள் காணாமல் போனார்கள். மனித உரிமைகளுக்கான ஐ.நா உயர்ஸ்தானிகர் உட்பட பல ஐ.நா அதிகாரிகளின் கோரிக்கையின்படி இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு (ஐ.சி.சி) பரிந்துரைக்குமாறு நாங்கள் கோருகிறோம்.

3. புராதன இந்து இடங்கள் உட்பட இந்துக் கோவில்களை அழிப்பதை நிறுத்தவும், பௌத்தர்கள் யாரும் வசிக்காத தமிழ் பகுதிகளில் புத்த கோவில்கள் கட்டுவதை நிறுத்தவும்.

4. தமிழர் பிரதேசங்களில் அரச அனுசரணையுடன் சிங்களக் குடியேற்றங்களை நிறுத்துதல் மற்றும் தமிழர் நிலங்களை அபகரிப்பதை நிறுத்துதல்.

5. நீடித்து வரும் தமிழர் மோதலைத் தீர்க்க சர்வதேச அளவில் வாக்கெடுப்பு நடத்தவும்: சுதந்திரம் பெற்றதில் இருந்து நீடித்து வரும் தமிழர் மோதலுக்கான அடிப்படைக் காரணம் அர்த்தமுள்ள அரசியல் தீர்வு இல்லாததுதான். இந்த மோதலின் விளைவாக 1958, 1977, 1983 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளில் தமிழர்கள் பெருமளவில் கொல்லப்பட்டனர். தமிழ்த் தலைவர்களுக்கும் சிங்கள மேலாதிக்க அரசாங்கங்களுக்கும் இடையிலான பல ஒப்பந்தங்கள் ஒருதலைப்பட்சமாக அடுத்தடுத்த அரசாங்கங்களால் ரத்து செய்யப்பட்டன மற்றும் இந்தியா மற்றும் நோர்வேயின் சர்வதேச மத்தியஸ்தம் கூட தோல்வியடைந்தது. உலகெங்கிலும் உள்ள பல நாடுகளில் உள்ளதைப் போலவே, ஜனநாயக ரீதியில் அரசியல் தீர்வைக் காண்பதற்கு சர்வதேச அளவில் பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று தமிழர்கள் பலமுறை கோரிக்கை விடுத்துள்ளனர் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வடமாகாண ஆளுநருடன் வெளிநாட்டு தூதுவர்கள் சந்திப்பு

சுவிட்சர்லாந்து, ஜப்பான் ஆகிய நாடுகளின் தூதுவர்களும், தென்னாப்பிரிக்கா உயர்ஸ்தானிகரும் வடமாகாண ஆளுநரை சந்தித்தனர்.

சுவிட்சர்லாந்து நாட்டின் இலங்கைக்கான தூதுவர் சிறி வோல்ட் (Dr. Siri Walt), ஜப்பான் நாட்டின் இலங்கைக்கான தூதுவர் மிசுகொஷி ஹிடேகி (MIZUKOSHI Hideaki) மற்றும் தென்னாபிரிக்காவின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் சாண்டைல் எட்வின் ஷால்க் (Sandile Edwin Schalk) ஆகியோர் வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸை நேற்றிரவு சந்தித்து கலந்துரையாடினர்.

யாழ்ப்பாணத்திலுள்ள ஆளுநரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இந்த சிநேகபூர்வ கலந்துரையாடல் நடைபெற்றது.

வடமாகாணத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்கள், நல்லிணக்க செயற்பாடுகள், மாகாணத்தில் எதிர்நோக்கப்படும் சவால்கள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் சிநேகபூர்வ சந்திப்பில் கலந்துரையாடப்பட்டது.

பிரபாகரனை நேருக்கு நேர் எதிர்கொண்ட தலைவர் நானே – போர் வெற்றிக் கோஷம் எழுப்பிய மஹிந்த

“தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை நேருக்கு நேர் எதிர்கொள்ள எந்தவொரு முன்னாள் ஜனாதிபதியும் முன்வரவில்லை. ஆனால், நான்தான் அவரை நேருக்கு நேர் எதிர்கொண்டேன்.”– இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

“எனது ஆட்சிக் காலத்தின் பின்னரான காலப்பகுதியில், இலங்கையை ஆட்சி செய்த வேறு எந்தவொரு ஜனாதிபதியும் போரை எதிர்நோக்க வேண்டிய நிலை ஏற்படவில்லை” – என்றும் அவர் குறிப்பிட்டார்.

கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தேசிய மாநாட்டில் உரையாற்றிய போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இலங்கையைக் கடந்த 2005 ஆம் ஆண்டு நான் ஏற்றுக்கொள்ளும் போதும் எமது கட்சி மீது பலர் சேறு பூசினார்கள். எனினும், நாடு இரண்டாகப் பிளவுபடுவதைத் தடுக்குமாறு மாத்திரமே அன்று மக்கள் எம்மிடம் கோரினார்கள்.

முப்பது வருட ஆயுதப் போரில், தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனை எந்தவொரு ஜனாதிபதியாலும் எதிர்கொள்ள முடியவில்லை.சில ஜனாதிபதிகள் போரை நிறுத்துமாறு கோரி பிரபாகரனுக்கு ஆயுதங்களையும் வழங்கினார்கள்.

அந்த ஜனாதிபதி யார் என்று நான் கூற மாட்டேன். இவ்வாறான போரை எனக்குப் பின்னர் வந்த இலங்கையின் மற்ற ஜனாதிபதிகள் எதிர்நோக்கும் நிலையை நாம் உருவாக்கவில்லை. சிங்கள, தமிழ், முஸ்லிம் உள்ளிட்ட அனைத்து மக்களும் சமாதானமாக வாழக்கூடிய நிலையை நாம் ஏற்படுத்தினோம்.

கடந்த 2009 ஆம் ஆண்டு போர் நிறைவடைந்த போது, குழந்தைகளாக இருந்தவர்கள், தற்போது போர் என்றால் என்ன என்று தெரியாத வாழ்க்கையை வாழ்கின்றார்கள்.

எனினும், மக்களை ஏமாற்றி தங்கள் அரசியல் நோக்கங்களுக்காகச் செயற்படும் தரப்பினர் இன்றும் இருக்கின்றார்கள்.இவ்வாறானவர்கள் சர்வதேசத்தின் வலைகளில் சிக்கி எமது சொந்த நாட்டைப் பாதிப்படைய செய்கின்றார்கள்.

எமது கட்சியின் ஆட்சிக் காலத்தில் காணப்பட்ட பொருளாதார நிலை குறித்து தற்போதும் பலர் கருத்துக்களை முன்வைக்கின்றார்கள்.எம்மைக் குற்றவாளிகளாக வெளிக்காட்டும் முயற்சிகளில் பலர் ஈடுபடுகின்றார்கள்.

2005 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதிக்குள் நாம் நாட்டின் பொருளாதாரத்தை 6 வீதத்தால் வளர்ச்சியடையச் செய்திருந்தோம்.இந்தநிலையில், இலங்கையைச் சரியான பாதையில் கொண்டு செல்ல சரியானதொரு அரசியல் வழிநடத்தல் தேவை.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மிகக் குறுகிய காலத்தில் நாட்டில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியிருந்தது. இலங்கை நாட்டை யாருடைய சொந்தத் தேவைக்காகவும் பிளவுபட நாம் இடமளிக்க மாட்டோம்.அனைத்து சவால்களையும் எதிர்நோக்கக்கூடிய ஒரே நாடு இலங்கை என்பதை சொல்வதில் நான் பெருமிதம் கொள்கின்றேன்.

எமக்குள்ள மக்கள் ஆணையுடன் எதிர்வரும் நாள்களில் நடைபெறவுள்ள தேர்தல்களில் நாம் போட்டியிடுவோம். பாரிய வெற்றியையும் அடைவோம். எமது வெற்றிப் பயணத்தில் பங்கேற்க பல அரசியல் கட்சிகள் ஆர்வமாகக் காத்திருக்கின்றன.” – என்றார்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மஹிந்த ராஜபக்‌ஷ நியமனம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய மாநாடு கொழும்பில் இடம்பெற்றுள்ளது.

இந்நிகழ்வு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ மற்றும் கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்க்ஷ ஆகியோரின் தலைமையில் வெள்ளிக்கிழமை (15) பிற்பகல் சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்றது.

இதன்போது பொதுஜன பெரமுன உறுப்பினர்களின் இணக்கப்பாட்டுடன் கட்சியின் தலைவராக மஹிந்த ராஜபக்‌ஷ நியமிக்கப்பட்டார்.

மஹிந்த ராஜபக்‌ஷவின் பெயரை காமினி லொகுகே முன்மொழிந்தார். அதனை ஜோன்ஸ்டன்  பெர்ணான்டோ  வழிமொழிந்தார்.

ஜனவரியில் இலங்கை வரும் மற்றுமொரு சீன ஆராய்ச்சிக் கப்பல்

சீனாவின் சி யான் 6ஆராய்ச்சி கப்பல் தனது ஆராய்ச்சிகளை முடித்துக்கொண்டு டிசம்பர் 2ம் திகதி சிங்கப்பூர் திரும்பிய பின்னர் இலங்கையின் துறைமுகத்திலும் மாலைதீவிலும் தனது மற்றுமொரு கப்பல் தரித்து நிற்பதற்கு அனுமதிக்குமாறு சீனா கொழும்பிடம் வேண்டுகோள் விடுத்தது.

2024 ஜனவரி ஐந்தாம் திகதிமுதல் மே மாதம் வரை தனது கப்பல் தென்இந்திய சமுத்திரத்தில் ஆராய்ச்சியில் ஈடுபடுவதற்கான அனுமதியை சீனா கோரியுள்ளது.

இந்தியா ஏற்கனவே தனது எதிர்ப்பை இலங்கைக்கும் மாலைதீவிற்கும் தெரிவித்துள்ளதுடன் சீன கப்பல் இனிமேல் இந்து சமுத்திரத்தில் இராணுவநோக்கங்களிற்காக ஆராய்ச்சியில் ஈடுபடுவதற்கு அனுமதிக்ககூடாது என வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஜியாங் யாங் கொங் 3 என்றகப்பல் தென்சீனாவின் சியாமென் கரையோர பகுதியில்தரித்து நிற்கின்றது இந்த நாடுகளிடம் அனுமதியை பெற்ற பின்னர் மலாக்கா நீரிணை ஊடாக பயணிக்கும்.

2016 தயாரிக்கப்பட்ட இந்த கப்பல் நவீன கண்காணிப்பு ஆராய்ச்சி சாதனங்களை தொழில்நுட்பங்களை கொண்டுள்ளது.

இந்தியாவின் கடும் எதிர்ப்பிற்கு மத்தியில் ரணில்விக்கிரமசிங்க அனுமதி வழங்கிய சீனாவின் சியான் 6 கப்பல் இலங்கையின் விசேட பொருளாதார வலயத்திலும் தென்இந்திய சமுத்திரத்திலும் ஆராய்ச்சிகளில் ஈடுபட்ட பின்னர் நவம்பர் 20 ம் திகதி மலாக்க நீரிணையிலிருந்து வெளியேறியது.

கொழும்புதுறைமுகத்திற்குள் ஒக்டோபர் 25 ம் திகதி நுழைவதற்கு முன்னர்சென்னையிலிருந்து 500 கடல் மைல் தொலைவில் இந்த கப்பல்காணப்பட்டது.

சீனாவின் ஏவுகணை கண்காணிப்புமற்றும் ஆராய்ச்சி கப்பல்களிற்கு இலங்கை அனுமதி வழங்குவது குறித்தும் , தற்போது மாலைதீவில் உள்ள சீனா சார்பு அரசாங்கம் குறித்தும் இந்தியா கரிசனைகளை கொண்டுள்ளது.

கடல்சார் ஆராய்ச்சி என்ற பெயரில் இந்த கப்பல்கள் இந்தியாவை வேவு பார்ப்பதற்காக பயன்படுத்தப்படுவதாக இந்தியா கரிசனை கொண்டுள்ளது.

கடந்த வருடம் ஜூலை மாதம் 21ம் திகதி இலங்கை ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டவேளை இந்திய பிரதமர் இது குறித்த தனது கரிசனைகளை பகிர்ந்துகொண்டார். இந்தியாவின் மூலோபாய கரிசனைகளிற்கு இலங்கை மதிப்பளிக்கவேண்டும் எனஅவர் வேண்டுகோள் விடுத்தார்.

சீன கடற்படை மூன்று விமானம்தாங்கி கப்பல்கள் அணுவாயுத நீர்மூழ்கிகள் ஏவுகணைகளை அழிக்கும் நாசகாரிகள் போன்றவற்றை பெற்றுகொண்டு தனது கடல்சார் வளங்களை வேகமாக அதிகரித்து செய்துவருகின்றது.

கம்போடியா முதல் செங்கடல் வரை பல கடற்படை தளங்களை அமைப்பதன் மூலம் சீனா இந்து சமுத்திரத்தில் தனது காலடியை விரிவுபடுத்துகின்றது.

கீரிமலை ஜனாதிபதி மாளிகை அளவீட்டுப்பணி மக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டது

யாழ்ப்பாணம் – கீரிமலை ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள பகுதியை நகர அபிவிருத்தி அதிகார சபையிடம் கையளிக்கும் நோக்கில் இன்று வெள்ளிக்கிழமை (15) அளவீடுகள் செய்வதற்கு நில அளவை திணைக்களம் வருகை தந்தது.

இந்நிலையில், குறித்த காணி அளவீட்டுக்கு அப்பகுதி மக்கள் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டனர். அத்துடன் காணியினை வழங்க முடியாது என கடிதம் எழுதி கையொப்பமிட்டு வழங்கினர். இந்நிலையில் நில அளவை திணைக்களம் அங்கிருந்து திரும்பிச் சென்றது.

தெல்லிப்பளை பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள நகுலேஸ்வரம் (ஜே/226), காங்கேசன்துறை (ஜே/233) கிராம சேவகர் பிரிவுகளில் 12.0399 ஹெக்டயர் ( 29 ஏக்கர்) நிலம் அளவீடு செய்வதற்கு திட்டமிடப்பட்டிருந்தது.

ஆழ்வான்மலையடி, வேலர்காடு, புண்ணன்புதுக்காடு, பத்திராயான் மற்றும் புதுக்காடு, சோலைசேனாதிராயன் என அழைக்கப்படும் பகுதிகளிலேயே இந்த நில அளவீடு இடம்பெறவுள்ளது என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த அளவீட்டு பணிக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் நில அளவை திணைக்களம் திரும்பிச் சென்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் நீதியான தேர்தலை நடாத்துவதற்கு அமெரிக்கா ஆதரவு

இலங்கையில் ஊழல் மோசடிகள் தொடர்பில் பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதற்கும், சுதந்திரமானதும், நியாயமானதுமான தேர்தலை நடாத்துவதற்கும் தாம் எப்போதும் ஆதரவளிப்பதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பேச்சாளர் மத்தியூ மில்லர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க செனெட் சபையின் உறுப்பினர்களான பென் கார்டின், ஜிம் ரிச், ராஜா கிருஷ்ணமூர்த்தி மற்றும் பில் ஜோன்ஸன் ஆகியோர் இணைந்து இலங்கையில் ஊழலை இல்லாதொழித்தல் மற்றும் நீதியை அடைதல் ஆகியவற்றை முன்னிறுத்திய பொதுமக்களின் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதையும், ஜனநாயகத்தை வலுப்படுத்துவதையும் இலக்காகக்கொண்ட இருகட்சித் தீர்மானமொன்றை செனெட் சபையில் முன்மொழிந்துள்ளனர். இத்தீர்மானத்தில் இலங்கை மக்களின் ஜனநாயக ரீதியான மற்றும் பொருளாதாரத்தை மையப்படுத்திய அபிலாஷைகளை ஈடேற்றுவதற்கு அமெரிக்கா ஒத்துழைப்பு வழங்குமென உறுதியளிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று ஊழலை இல்லாதொழித்தல், மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நீதியையும் பொறுப்புக்கூறலையும் உறுதிப்படுத்தல், உள்ளுராட்சிமன்ற மற்றும் மாகாணசபைத் தேர்தல்களை மேலும் தாமதமின்றி சுதந்திரமானதும் நியாயமானதுமான முறையில் நடாத்துதல் ஆகியவற்றை நிறைவேற்றுவதன் ஊடாக இலங்கை அரசாங்கம் நாட்டுமக்களின் உரிமைகளுக்கு மதிப்பளிக்கவேண்டும் எனவும் அத்தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

‘இலங்கை மக்கள் அரசியல், பொருளாதார மற்றும் மனிதாபிமான நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்திருப்பதுடன், அவை மக்கள் மத்தியில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. அத்தோடு அரசாங்கத்தின் ஊழல் மோசடிகள், முறையற்ற நிதி நிர்வாகம், சட்ட ஆட்சியை உறுதிப்படுத்துவதில் தோல்வி, சீனாவிடமிருந்து பெற்ற மிகையான கடன்கள் போன்றவை இந்த நெருக்கடியை மேலும் தீவிரப்படுத்தியுள்ளன. இருப்பினும் ஊழலையும், தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்கையும் முடிவுக்குக்கொண்டுவருவதற்குரிய போதிய நடவடிக்கைகளை அரசாங்கம் இன்னமும் முன்னெடுக்கவில்லை. அதேபோன்று தேர்தல்களை நடாத்துவதில் நிலவும் தொடர் தாமதம் நாட்டின் ஜனநாயகத்தை வலுவிழக்கச்செய்துள்ளது. இந்த நெருக்கடிக்குக் காரணமானவர்களில் பலர் உள்நாட்டுப்போர் இடம்பெற்ற காலப்பகுதியில் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுக்கு எதிரான பல்வேறு மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர்’ எனவும் அமெரிக்க செனெட் உறுப்பினர்கள் முன்மொழிந்திருக்கும் தீர்மானத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இவ்வாறானதொரு பின்னணியில் நேற்று முன்தினம் வொஷிங்டனில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இத்தீர்மானத்தை மேற்கோள்காட்டி ஊடகவியலாளர் ஒருவரால் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அமெரிக்க இராஜாங்கத்திணைக்களத்தின் பேச்சாளர் மத்தியூ மில்லர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

கேள்வி – அமெரிக்க செனெட் வெளியுறவு குழுவினால் முன்மொழியப்பட்டிருக்கும் இருகட்சித் தீர்மானத்தில் ‘ஊழலை இல்லாதொழித்தல், மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நீதியையும் பொறுப்புக்கூறலையும் உறுதிப்படுத்தல், உள்ளுராட்சிமன்ற மற்றும் மாகாணசபைத் தேர்தல்களை மேலும் தாமதமின்றி சுதந்திரமானதும் நியாயமானதுமான முறையில் நடாத்துதல் ஆகியவற்றை நிறைவேற்றுவதன் ஊடாக இலங்கை அரசாங்கம் நாட்டுமக்களின் உரிமைகளுக்கு மதிப்பளிக்கவேண்டும்’ என வலியுறுத்தப்பட்டுள்ளது. இது பற்றிய உங்களது கருத்து என்ன?

பதில் – ஊழல் மோசடிகள் தொடர்பில் பொறுப்புக்கூறலை உறுதிசெய்தல் மற்றும் சுதந்திரமானதும், நியாயமானதுமான தேர்தலை நடாத்துதல் என்பவற்றுக்கு நாம் எப்போதும் ஆதரவளிப்போம்.

முன்னாள் தவிசாளர் நிரோஷ்க்கு எதிரான நிலாவரை வழக்கு சட்ட மா அதிபரின் ஆலோசனை கிடைக்காமையினால் ஒத்திவைப்பு

யாழ். நிலாவரையில் தொல்லியல் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளைத் தடுத்ததன் மூலம் அரச கருமங்களுக்கு வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் தடை ஏற்படுத்தினார் என தொடரப்பட்ட வழக்கில் சட்டமா அதிபரின் ஆலோசனை கிடைப்பதில் தாமதம் நிலவுவதால் எதிர்வரும் ஆண்டின் யூன் மாதம் 12 ஆம் திகதிக்கு வழக்குத் தவணை ஒத்திவைக்கப்பட்டது.

இன்றைய தினம் (15.12.2023) வெள்ளிக்கிழமை மல்லாகம் நீதிமன்றில் வழக்கு தவணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட போது சட்டமா அதிபரின் கிடைக்கப்பெறவில்லை என அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.

இந் நிலையில் எதிர்வரும் ஆண்டின் யூன் மதம் 12 ஆம் திகதிக்கு வழக்குத் தவணையினை நீதிபதி ஒத்திவைத்தார்.

கடந்த 2021 ஆண்டின் ஆரம்பத்தில் தொல்லியல் திணைக்களமும் இராணுவத்தினரும் இணைந்து நிலாவரை கிணறு அமைந்துள்ள வளாகத்தில் பௌத்த விகாரை அமைப்பது போன்று சந்தேகத்திற்கு இடமான முறையில் அத்திபாரம் வெட்டும் முயற்சியில் ஈடுபட்டபோது, அதனை வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் தவிசாளர் தடுத்திருந்தார். அதனைத் தொடர்ந்து தொல்லியல் திணைக்களத்தினர் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் பெருமளவானவர்களுடன் நிலாவலைப் பகுதிக்கு வருகை தந்து தமது அரச கருமத்திற்கு தொடர்ந்தும் தடை ஏற்படுத்திவருகின்றார் என அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.

இதனையடுத்து பொலிஸ் அதிகாரிகள் இருதரப்பினையும் அழைத்து சமரச முயற்சி என்ற போர்வையில் –  தொல்லியல் திணைக்களம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்குள் தவிசாளர் தலையிடக் கூடாது என வலியுறுத்தினர். எனினும் இன நல்லிணக்கத்தினை பாதிக்கும் வகையில் சட்டவிரோதமாக மேற்கொள்ளப்படும் பௌத்த சிங்கள மயமாக்கத்திற்கு தன்னால் இடமளிக்க முடியாது என வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் நிரோஷ் வெளியேறியிருந்தார்.

அதனைத் தொடர்ந்து அவருக்கு எதிராக தொல்லியல் திணைக்களத்தின் அரச கருமங்களுக்கு தடை ஏற்படுத்துகின்றார் எனக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு அவ் வழக்கில் சட்டமா அதிபரின் ஆலோசனை பெறப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இவ்வருட ஆரம்பத்திலும் நிலாவரையில் பௌத்த வழிபாட்டிடம் ஒன்றை இராணுவத்தினர் அமைத்த நிலையில் அது வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத்தவிசாளர் நிரோஷ் உள்ளிட்டவர்களின் எதிர்ப்பின் காரணமாக அகற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் டென்மார்க் முதலீட்டை அதிகரிக்க நடவடிக்கை

பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும் டென்மார்க் தூதுவர் ஃப்ரெடி ஸ்வெயினுக்கும் இடையிலான சந்திப்பொன்று வியாழக்கிழமை (14) அலரி மாளிகையில் இடம்பெற்றது.

இலங்கைக்கும் டென்மார்க்கிற்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் மற்றும் அபிவிருத்தி ஒத்துழைப்பு தொடர்பான கருத்துக்களை  பரிமாறிக் கொள்வதற்காக இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

புதுடில்லியில் வசிக்கும் டென்மார்க் தூதுவர் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகளை வழங்கக்கூடிய கோபன்ஹேகனில் உள்ள ஒரு பெரிய டென்மார்க் நிறுவனமான ஜி.பி.வி இன் இலத்திரனியல் உற்பத்தி தொழிற்சாலையை இலங்கையில் திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டதாக தெரிவித்தார்.

டென்மார்க்கில் பல முதலீட்டாளர்கள் எரிசக்தி துறை, ஆழ்கடல் மீன்பிடி, இயந்திர படகு, உற்பத்தி மற்றும் ஏனைய திட்டங்களில் முதலீடு செய்ய தயாராக இருப்பதாக அவர் கூறினார்.

நாட்டின் தற்போதைய பொருளாதார வளர்ச்சி, சர்வதேச நாணய நிதியத்தின் நிதிப் பொதியின் முன்னேற்றம் உள்ளிட்டவை குறித்து டென்மார்க் தூதரிடம் பிரதமர் தெரிவித்தார்.

முதலீட்டை ஊக்குவிப்பதன் மூலம் டென்மார்க் இலங்கையின் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கும் நன்றி தெரிவித்த பிரதமர் பொருளாதாரத்தை புத்துயிர் பெறச்செய்வதற்கான இலங்கையின் முயற்சிகளுக்கு ஆதரவளிக்க பரிஸ் கழகத்தின் உறுப்பினர் என்ற முறையில் வழங்கிய ஆதரவை நினைவு கூர்ந்தார்.

கொள்கலன் ஊக்குவிப்பு மையமாக இலங்கையின் கப்பல் போக்குவரத்தை  விரிவுபடுத்துவதற்கான முயற்சி குறித்தும் அவர்கள் கலந்துரையாடினர்.

இலங்கையில் கறுவா மற்றும் ஏனைய வாசனைப் பொருட்களின் ஏற்றுமதியை அதிகரிப்பதற்கான வசதிகளை டென்மார்க் வழங்குமாறும் பிரதமர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த நிகழ்வில் பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க மற்றும் டென்மார்க் தூதரக அதிகாரி ருச்சி டி சில்வா ஆகியோர் கலந்துகொண்டனர்.